petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - பிரனாய் தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி/ 1-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் பிரனாய் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது – அறிவிப்பு
சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியீடு மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:37 (IST) 27 Aug 2023மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர் தான் - உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர் தான். சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 20:29 (IST) 27 Aug 2023வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு ஸ்டாலின் பாராட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் பிரிவில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
- 19:25 (IST) 27 Aug 2023ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்
ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம் கிடைத்துள்ளது.
- 19:11 (IST) 27 Aug 2023சமீபத்தில் நடைபெற்ற மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் - உதயநிதி ஸ்டாலின்
சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்தது. மாநாடு நடத்தியவர்களுக்கு ஏன் அந்த மாநாடு நடைபெற்றது என்றே தெரியவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 18:29 (IST) 27 Aug 2023நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு: மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “கல்வித்துறையில் தமிழ்நாடு செய்துவரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:02 (IST) 27 Aug 2023ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி, சௌமியா மற்றும் சந்தியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளன.
- 17:52 (IST) 27 Aug 2023நிலவில் நரேந்திர மோடி இறங்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ்
நிலவில் லேண்டரை இஸ்ரோ தரையில் நிறுத்தியது. நரேந்திர மோடி நிறுத்தவில்லை. இஸ்ரோவை பாஜக பிரசார கருவியாக பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹீவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
- 17:49 (IST) 27 Aug 2023புதிய கட்சி தொடங்கப்போகும் ஓ.பி.எஸ்
முன்னாள் முதல் அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 16:52 (IST) 27 Aug 2023தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
- 16:37 (IST) 27 Aug 2023அ.தி.மு.க மாநாடு குறித்து ஓ.பி.எஸ் கிண்டல் கேள்வி
மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க மாநாடு குறித்து கருத்து கேட்ட போது, புளியோதரை எப்படி இருந்ததோ அப்படிதான் மாநாடு இருந்தது என்று கிண்டலாகக் கூறினார்.
- 16:19 (IST) 27 Aug 2023ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதியுதவி
திருச்சியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
- 15:55 (IST) 27 Aug 2023நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது லேண்டர் - இஸ்ரோ தகவல்
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை சந்திரயான் 3 லேண்டர் ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழத்தில் லேண்டரின் 10 சென்சார் கருவிகள்மூலம் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
- 15:44 (IST) 27 Aug 2023வடசென்னை படத்துக்கு தேசிய விருது அறிவித்திருக்கலாம் - ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
- 15:42 (IST) 27 Aug 2023இனி கோடநாடு வழக்கை திசை திருப்ப முடியாது - ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி
ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி: “இனி கொடநாடு வழக்கை திசை திருப்ப முடியாது இ.பி.எஸ்-க்கு கொலை வழக்கு புதுசு இல்ல” என்று சார்ஜ் சீட் ஆதாரத்துடன் தெரிவித்தார்.
- 15:03 (IST) 27 Aug 2023ரூ.25 லட்சம் நிதியுதவி
திருச்சியில் ரோந்து பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் ஸ்ரீதர் குடும்பத்திற்கு, மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்
- 15:01 (IST) 27 Aug 2023எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி
மதுரை ரயில் தீ விபத்து ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்துள்ளது; 10 நாட்களாக அவர்கள் பயணித்த நிலையில், ஒரு ரயில்வே நிலையத்தில் கூட உரிய சோதனை நடத்தப்படவில்லை - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி
- 14:58 (IST) 27 Aug 2023மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க நம் திராவிட மாடல் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது;
விளையாட்டுத்துறையில் சாதிக்கத்துடிக்கும் நம் மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளுக்கு இந்த உயரிய ஊக்கத்தொகை பெரிதும் கைகொடுக்கும்;
தேசிய அளவில் சாதிக்கும் மாற்று திறன் கொண்ட வீரர் - வீராங்கனையர்கள், பன்னாட்டு அளவிலும் பதக்கங்களை குவிக்க தமிழ்நாடு அரசு துணை நிற்கும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவு
- 14:53 (IST) 27 Aug 202313 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:52 (IST) 27 Aug 2023சென்னை திரும்பினார் ஸ்டாலின்
டெல்டா மாவட்டங்களில் 4 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
- 14:17 (IST) 27 Aug 2023வட கொரியா அரசு ஒப்புதல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த தங்களது குடிமக்கள் நாடு திரும்ப வட கொரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- 13:48 (IST) 27 Aug 2023ஓணம் பண்டிகை- வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு
- 13:32 (IST) 27 Aug 2023பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் –சீமான்
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் –சீமான்
- 13:19 (IST) 27 Aug 2023தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் கைது
2019ம் ஆண்டில் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் சுமார் ₹150 கோடி வரை முறைகேடு நடந்த விவகாரத்தில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா சிபிசிஐடி போலீசாரால் கைது; நர்மதாவுக்கு உதவிய அவரது சகோதரியும் கைது
போலீசார் கைது செய்யக்கூடும் என்பதை அறிந்த நர்மதா, ஆந்திராவில் ஓராண்டாக தலைமறைவாக இருந்துள்ளார்
- 13:17 (IST) 27 Aug 20235 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் திருநாரையூரில் வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிவன், பார்வதி உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு;
சம்பவ இடத்திற்கு விரைந்த அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
- 13:16 (IST) 27 Aug 2023மதுரை ரயில் தீ விபத்து
மதுரை ரயில் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்;
தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும்;
விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருந்ததால், அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம்- தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.எம்.சவுத்ரி பேட்டி
- 12:56 (IST) 27 Aug 2023மோடி எதிர்த்து போட்டியிடுவேன் - சீமான்
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான்
- 12:56 (IST) 27 Aug 2023போலீஸ் உதவி மையத்தின் மின் இணைப்பை துண்டித்த ஊழியர்
ஆந்திராவில் ஹெல்மட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மின்வாரிய ஊழியருக்கு 135 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்
ஆவேசத்தில் பார்வதிபுரம் போலீஸ் உதவி மையத்திற்கு மின் இணைப்பை துண்டித்த ஊழியர்
- 12:32 (IST) 27 Aug 2023திசையன்விளை மருத்துவமனையில் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
சரியான நேரத்தில் பணிக்கு வராத மருத்துவமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
- 12:30 (IST) 27 Aug 2023மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை
பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை.
பாம்பு கடி மற்றும் நாய்க்கடி மருந்து இருப்பு குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
- 12:20 (IST) 27 Aug 2023சிறுவன் பலி- ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- 12:19 (IST) 27 Aug 2023அண்ணா நீச்சல் குளம் மூடல்
சென்னை, அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக அண்ணா நீச்சல் குளத்தை மூடுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல்
- 11:56 (IST) 27 Aug 2023சந்திரயான்-3 புதிய இந்தியாவின் அடையாளம் - மோடி
“சந்திரயான்-3 புதிய இந்தியாவின் அடையாளம்“ - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
சந்திரயான்-3 மிஷன் வெற்றி மிக பிரம்மாண்டமானது. புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம்.
இந்தியாவின் சந்திரயான்-3 மிஷன் பெண் சக்திக்கு நேரடி உதாரணம். இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சியடைவதை இனி யாரால் தடுக்க முடியும்?
- 11:43 (IST) 27 Aug 2023ரயில் விபத்து - 2வது நாளாக சோதனை
மதுரையில் ரயில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக 2வது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் உள்ள பேட்டரிகளின் வெப்பநிலை, பராமரிப்பு குறித்து சோதனை என தகவல்
- 11:20 (IST) 27 Aug 2023ஊழல் பற்றி பேச பிரதமருக்கு தகுதி உள்ளதா? - ஸ்டாலின்
ஊழல் பற்றி பேச பிரதமருக்கு தகுதி உள்ளதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் பற்றி பேச பிரதமருக்கு தகுதி உள்ளதா? மு.க.ஸ்டாலின் கேள்வி
- 10:25 (IST) 27 Aug 2023ஒன்றிய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது
சி.ஏ.ஜி. அறிக்கையால் ஒன்றிய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 10:20 (IST) 27 Aug 2023இந்தியாவை காப்பாற்றவே ‘இந்தியா’ கூட்டணி அமைந்துள்ளது இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்
இந்தியாவை காப்பாற்றவே ‘இந்தியா’ கூட்டணி அமைந்துள்ளது இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்; சர்வாதிகாரம் முற்றுப் பெற வேண்டும் மும்பையில் அடுத்து நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் - நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- 09:31 (IST) 27 Aug 2023முதல் முறையாக நடைபெறும் ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
கடலூர் சில்வர் பீச்சில் முதல் முறையாக நடைபெறும் ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஃபன் ஸ்ட்ரீட் சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்பு
- 09:28 (IST) 27 Aug 2023முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நகர் பகுதியில் நடைபயிற்சி பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
- 09:27 (IST) 27 Aug 2023104வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி இன்று உரை
டெல்லி, 104வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை
- 08:12 (IST) 27 Aug 2023தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- 08:11 (IST) 27 Aug 2023சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, வடபழனி, தி,நகரில் மழை ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் அதிகாலை கனமழை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.