scorecardresearch
Live

Tamil news today : மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு; நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு; நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.  மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன்  மழை பெய்தது.

கிரிக்கெட் இன்று

டி20 உலகக்கோப்பை, மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Live Updates
22:35 (IST) 13 Nov 2022
காஞ்சிபுரம் குன்றத்தூர் தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளகுன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் நாளை (14.11.2022) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

21:35 (IST) 13 Nov 2022
ஆந்திராவில் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தது இந்திய கடற்படையால் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20:38 (IST) 13 Nov 2022
இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க 10% இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் – பண்ருட்டி ராமச்சந்திரன்

இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20:36 (IST) 13 Nov 2022
சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

19:58 (IST) 13 Nov 2022
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து: சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள். குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தை காப்போம். அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களுக்கான உரிமைகளை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்த நாளில் உறுதி ஏற்கிறது என்று கூறினார்.

19:27 (IST) 13 Nov 2022
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழையால் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

19:01 (IST) 13 Nov 2022
இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் – பண்ருட்டி ராமச்சந்திரன்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31% இடஒதுக்கீட்டை 50%ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர். அதனை 9வது அட்டவணையில் சேர்த்து, அரசியலமைப்பு அங்கீகாரத்தை பெற்று தந்தார் ஜெயலலிதா. அந்த வழியில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்

18:29 (IST) 13 Nov 2022
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் First Single ‘APPATHA’ பாடல் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகிறது

18:00 (IST) 13 Nov 2022
மும்பை விமான நிலையத்தில் 61 கிலோ தங்க கட்டிகளை கடத்திய 7 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.32 கோடி மதிப்புள்ள 61 கிலோ தங்க கட்டிகளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

17:37 (IST) 13 Nov 2022
வைகை அணையில் இருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

வைகை அணையில் இருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மதுரை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

17:07 (IST) 13 Nov 2022
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழையானது தற்போது வரை, இயல்பை விட 16% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

16:35 (IST) 13 Nov 2022
கனமழை நிவாரணம்; ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க இ.பி.எஸ் வலியுறுத்தல்

கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகளை அனுப்பி பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுக்கான பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

16:13 (IST) 13 Nov 2022
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

15:58 (IST) 13 Nov 2022
பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் விரைவில் வெளியீடு?

2023ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2ஆம் பாகம் ஓரிரு மாதங்கள் முன்னதாகவே வெளியாகிறது எனக் கூறப்படுகிறது.

15:43 (IST) 13 Nov 2022
கணவருக்கு சூனியம் வைக்க முயன்றதாக மனைவி மீது வழக்கு

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் காதலனுடன் சேர்ந்து வாழ கணவனுக்கு சூனியம் வைக்க முயன்றதாக, மனைவி, அவரின் காதலன் மற்றும் சாமியார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கணவருக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

15:42 (IST) 13 Nov 2022
கணவருக்கு சூனியம் வைக்க முயன்றதாக மனைவி மீது வழக்கு

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் காதலனுடன் சேர்ந்து வாழ கணவனுக்கு சூனியம் வைக்க முயன்றதாக, மனைவி, அவரின் காதலன் மற்றும் சாமியார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கணவருக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

15:31 (IST) 13 Nov 2022
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

15:17 (IST) 13 Nov 2022
டி20 உலக கோப்பை.. இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 138 ரன்கள் தேவை. கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன.

14:59 (IST) 13 Nov 2022
அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் மண்ணில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. யார் பிரிந்து சென்றாலும், கட்சியை விட்டு விலகிச் சென்றாலும் கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

14:51 (IST) 13 Nov 2022
விக்கெட்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான் அணி!

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

தற்போது அந்த அணி 12.2 ஓவரில் 85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

14:37 (IST) 13 Nov 2022
சென்னை முகலிவாக்கம் பகுதியில் மேயர் ஆய்வு

சென்னை முகலிவாக்கம், திருவள்ளூர் நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் – மேயர், துணை மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

போரூர் ஏரியில் உபரி நீர் செல்வதற்கான பணிகள் நடப்பதால், உபரி நீர் இந்த பக்கமாக திரும்பியுள்ளது, மழை நீர் விரைந்து வெளியேற்றப்பட்டுவருகிறது

.

14:17 (IST) 13 Nov 2022
கள்ளக்குறிச்சி திருநாவலூர் ஏரி நிரம்பியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியது.

இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13:51 (IST) 13 Nov 2022
தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சை, கரூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 36 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:45 (IST) 13 Nov 2022
நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்

சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார்.

13:30 (IST) 13 Nov 2022
சென்னையில் தீப்பிடித்த புதை வட கேபிள்

சென்னை மயிலாப்பூர் ஆலிவர் சாலையில் மின்சார புதைவட கேபிள் எரிந்து புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அச்சமுற்றனர்.

இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, கேபிளை அப்புறுப்படுத்தி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

13:12 (IST) 13 Nov 2022
உலக கோப்பை இறுதி போட்டி.. பாகிஸ்தான் பேட்டிங்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது

13:00 (IST) 13 Nov 2022
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தினார்.

12:41 (IST) 13 Nov 2022
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 2187 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3675 கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டும், கடந்த 6 மணி நேரத்தில் 60 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது.

12:12 (IST) 13 Nov 2022
“அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது“

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எதிர்கொள்ள தயார்

எதிர்கட்சிகளின் விமர்சனங்களை விட பொதுமக்களின் பாராட்டு முக்கியம் – முதல்வர் ஸ்டாலின்

11:55 (IST) 13 Nov 2022
கொசு வலைகளை வழங்கிய ஸ்டாலின்

சென்னை, திரு.வி.க.நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு

பொதுமக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

11:18 (IST) 13 Nov 2022
முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழை பாதிப்பு, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். பல்லவன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்

10:53 (IST) 13 Nov 2022
சென்னையில் விட்டு விட்டு பெய்யும் தொடர் கனமழை

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் தொடர் கனமழை . மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் சுமார் 2 அடி வரை தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்.

10:46 (IST) 13 Nov 2022
தி ருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

தி ருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை. கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

10:18 (IST) 13 Nov 2022
தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும்

தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும். 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:14 (IST) 13 Nov 2022
மீண்டும் தொடங்கிய கனமழை

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை நேற்று மழை குறைந்த நிலையில் இன்று மீண்டும் தொடங்கிய கனமழை நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

09:13 (IST) 13 Nov 2022
வெள்ள நீரில் மிதக்கும் சீர்காழி

சீர்காழியில் 2வது நாளாக மழை நீர் வடியாத நிலை வரலாறு காணாத மழை-வெள்ள பாதிப்பு – தொடர் கனமழை – வெள்ள நீரில் மிதக்கும் சீர்காழி ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழை – குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

08:28 (IST) 13 Nov 2022
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது.

08:27 (IST) 13 Nov 2022
சென்னையில் கனமழை

சென்னை புறநகர் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது.

08:27 (IST) 13 Nov 2022
விமான சேவைகள் ரத்து

கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, விமான நிலையத்தில் கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

Web Title: Tamil news today live rain update dam update chennai rain