Advertisment

Tamil news today : சீர்காழி, தரங்கம்பாடி கனமழை:ரூ. 1,000 நிவாரணம்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Tamil news today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news updates

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடும் எதிர்க்கட்சி தலைவர்

மழை பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

முதல்வர் நிவாரணம் உதவி

மயிலாடுதுறை : சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து அக்‌ஷிதா என்ற குழந்தை உயிரிழப்பு . உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.



  • 20:51 (IST) 14 Nov 2022
    இந்தோனேசியா சென்றடைந்தார் மோடி

    பிரதமர் மோடி 17வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா சென்றடைந்தார்.



  • 20:12 (IST) 14 Nov 2022
    இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.



  • 19:24 (IST) 14 Nov 2022
    பைக்கில் சென்ற 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.



  • 19:24 (IST) 14 Nov 2022
    பைக்கில் சென்ற 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.



  • 19:03 (IST) 14 Nov 2022
    வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி

    சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.



  • 18:46 (IST) 14 Nov 2022
    மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

    புதுக்கோட்டையில் உள்ள திருப்புனவாசல் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற தென்னரசு மற்றும் அவரது சகோதரி 10ஆம் வகுப்பு பயின்ற காளிஸ்வரி ஆகிய இருவரையும் அவர்களது சித்தப்பா இளையராஜா தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்த நிலையில், மின்னல் தாக்கி மூவரும் உயிரிழந்தனர்.



  • 18:29 (IST) 14 Nov 2022
    மழை பாதிப்பு... குடும்ப அட்டைக்கு ரூ.1000 அறிவிப்பு

    தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 18:16 (IST) 14 Nov 2022
    சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.3.23 கோடி ஆகும். இந்தத் தங்கம் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.



  • 18:00 (IST) 14 Nov 2022
    ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடந்தது.

    இந்தப் பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    இந்தத் திருவிளக்கு பூஜை கோவில் திருப்பணிகள் பராமரிப்பு, கரோனா பாதிப்புகள் காரணமாக 6 ஆண்டுகள் நடைபெறவில்லை.



  • 17:46 (IST) 14 Nov 2022
    கட்டாய மதமாற்றம் மிக தீவிரமானது.. உச்ச நீதிமன்றம்

    கட்டாய மதமாற்றம் மிக தீவிரமானது என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.



  • 17:26 (IST) 14 Nov 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் இடி மழைக்கு தயாராகும் சென்னை

    சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பொழிய உள்ளது.



  • 17:26 (IST) 14 Nov 2022
    அதிமுக கூட்டணிக்கு தயார்.. டிடிவி தினகரன்

    திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    அப்போது இந்திய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒரு அணிலைப் போல் எங்களது பணி இருக்கும் என்றும் அவர் கூறினார்.



  • 17:19 (IST) 14 Nov 2022
    சென்னை.. மீன் தொட்டி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

    சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மீன் தொட்டி விழுந்ததில் 1.5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 17:01 (IST) 14 Nov 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் இடி மழைக்கு தயாராகும் சென்னை

    சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பொழிய உள்ளது.



  • 16:48 (IST) 14 Nov 2022
    மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்ஃபோனை ஒப்படைக்கவும்; பெற்றோருக்கு ஐகோர்ட் மீண்டும் உத்தரவு

    மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்ஃபோனை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீமதியின் பெற்றோருக்கு மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:36 (IST) 14 Nov 2022
    ஆவடியில் ரயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை

    திருவள்ளூர், ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை செய்துள்ளார். வகுப்பறையில் செல்போன் உபயோகித்ததற்கு ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது



  • 15:57 (IST) 14 Nov 2022
    சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி

    சென்னை, அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்னறை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. மீன் தொட்டியில் விளையாட்டு பொருள் விழுந்ததால் அதை எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளது



  • 15:40 (IST) 14 Nov 2022
    மீரா மிதுன் விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ்

    நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்



  • 15:12 (IST) 14 Nov 2022
    தாய் மாமாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

    திருவாரூர், நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். தாய் மாமாவின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்



  • 14:47 (IST) 14 Nov 2022
    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:06 (IST) 14 Nov 2022
    சென்னையில் மழை

    சென்னையில் இன்று காலை முதல் வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.



  • 13:46 (IST) 14 Nov 2022
    ஒபிஎஸ் வலியுறுத்தல்

    10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பி.எஸ். வலியுறுத்தி உள்ளார்.



  • 13:45 (IST) 14 Nov 2022
    மோடி இந்தோனேஷியா பயணம்

    17வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டார்.



  • 13:45 (IST) 14 Nov 2022
    மழைநீர் வடியவில்லை.. இபிஎஸ்

    சென்னை, கொளப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சென்னையில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என்பது பொய்யான தகவல். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியவில்லை என



  • 13:14 (IST) 14 Nov 2022
    நாராயணசாமி எதிர்ப்பு

    மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்; இல்லையென்றால் காங்கிரஸ் சார்பாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.



  • 13:00 (IST) 14 Nov 2022
    இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

    தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



  • 12:50 (IST) 14 Nov 2022
    சீர்காழியில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஸ்டாலின்

    மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 12:38 (IST) 14 Nov 2022
    மணப்பாக்கத்தில் இ.பி.எஸ் ஆய்வு

    சென்னை, மணப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



  • 12:35 (IST) 14 Nov 2022
    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கவலையில்லை - ஸ்டாலின்

    சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

    அமைச்சர்களை உடனடியாக அனுப்பி மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கவலையில்லை; அரசின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

    மக்கள் தெரிவித்த சில குறைகளும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 12:12 (IST) 14 Nov 2022
    மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகை அறிவிப்பு

    மழை பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

    குடிசை சேதம் - ரூ. 5000

    வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் - ரூ. 4800

    கான்கிரீட் கட்டடம் இடிந்திருந்தால் - ரூ. 95,000

    கால்நடைகளுக்கான நிவாரணத் தொகையையும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.



  • 12:08 (IST) 14 Nov 2022
    விடுதலை செய்யப்பட்ட நளினி, கணவர் முருகனுடன் சந்திப்பு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி, கணவர் முருகனுடன் சந்திப்பு

    திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கணவர் முருகனுடன் சந்திப்பு



  • 11:56 (IST) 14 Nov 2022
    உமையாள்பதி கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிடுகிறார்



  • 11:24 (IST) 14 Nov 2022
    சுற்றுலா வேன் கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி

    ஈரோடு: காசிபாளையம் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.

    8-ம் வகுப்பு பள்ளி மாணவன் கவினேஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.



  • 11:17 (IST) 14 Nov 2022
    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்

    நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு ரூ. 75,000 ஆக அதிகரிக்க வேண்டும்

    தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்



  • 10:48 (IST) 14 Nov 2022
    குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்

    குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்> திறந்த மனத்தோடு உலகை அணுகுவதும், கற்கும் ஆர்வமும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குழந்தைகளின் உலகில் அவர்கள் அச்சமின்றி உலவிடத் தேவையான பாதுகாப்பை உறுதிசெய்வோம் - குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • 10:30 (IST) 14 Nov 2022
    சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சென்னை திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை.



  • 10:29 (IST) 14 Nov 2022
    நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்

    மழை பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்



  • 10:27 (IST) 14 Nov 2022
    நேருவின் 134வது பிறந்தநாள்

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை



  • 10:27 (IST) 14 Nov 2022
    குமணன்சாவடி சாலையில் போக்குவரத்து நெரிசல்

    சென்னை, மாங்காட்டில் மழை விட்டு 2 நாட்கள் ஆகியும் வடியாத மழைநீர் கூடுதல் மோட்டார்களை வைத்து வெள்ளநீரை வெளியேற்றிவரும் அதிகாரிகள் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையில் போக்குவரத்து நெரிசல்



  • 10:26 (IST) 14 Nov 2022
    4 மாணவர்கள் காயம்

    விழுப்புரம், செஞ்சி அருகே தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 4 மாணவர்கள் காயம்



  • 09:42 (IST) 14 Nov 2022
    மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    கடலூர் , கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறியும் முதல்வர்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment