பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் வாழ்த்து
உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் 4வது தூணாக விளங்குகின்றன தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
வானிலை அறிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18ம் தேதி வலுப்பெறக்கூடும். கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. ஒரு படகு உட்பட 14 மீனவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறது.
கனமழை காரணமாக சீர்காழியின் பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், அந்த தாலுகாவில் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 17) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா உயிரிழந்தது குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி: “ஒரு விரும்பத் தகாத சம்பவம் நடந்துவிட்டது. ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம்; தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி, பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 2 வட்டாட்சியர்கள், நில சர்வையர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து நீங்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலக்கு ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரி மலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பூந்தமல்லிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு்ளது. மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் டிரான்ஸ்பார்மர் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளது
கரூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தொழிலாளரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற 2 தொழிலாளர்களின் குடும்பங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தையின் போது, அங்கிருந்த இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த இளைஞர்களை தாக்கி, போலீசார் அப்புறப்படுத்தினர்
திருச்சியில், பராமரிப்பு பணிக்கு சென்று திரும்பும்போது, ரயில் பாதையை விட்டு பயணிகள் ரயில் பெட்டி இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளை அனுப்பி உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
பயிர் காப்பீடு செய்வதற்கான கால அளவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம் போதாது, ரூ3,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அஜய் மக்கன் ராஜினாமா செய்துள்ளார்
மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது. தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்ததாக கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மயிலாடுதுறையில், காவிரிக்கரையில் காவிரி துலா உற்சவம் தொடங்கியது. இதில் பல்வேறு கோயில்களிலும் இருந்து சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளின.
அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு; மருத்துவர், செவிலியர்களின் வருகை, நோயாளிகளின் சிகிச்சைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.
வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 20ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ, ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். டிசம்பர் 1-ம் தேதி ஜி20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும்.
சீர்காழி அருகே நல்லூரில் மழை பாதிப்புகளை இபிஎஸ் ஆய்வு செய்தார்; மேலும் கனமழை பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் இபிஎஸ் கேட்டறிந்தார்
நிலவை ஆராய்ச்சி செய்ய ஆர்டிமிஸ்-1 ராக்கெட்டை, நாசா விண்ணுக்கு செலுத்தியது. ஏற்கனவே 2 முறை இந்த மிஷன் தேல்வியடைந்த நிலையில், 3வது முறையாக நடைபெற்ற முயற்சியில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒரு நிறுவனம் மீது வழக்குப்பதிவு
ஹிஜாவு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்
அவசர சட்டம் அமலுக்கு வரும்போது புதிதாக வழக்கு தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம், காடுகள் வளம்பெற வன விலங்குகள் அவசியம்
வன உயிரின பாதுகாப்பில் தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
வன உயிரின வளமை மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வனவிலங்குகளுக்கான மாநில வாரியத்தின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்
மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சட்டரீதியாக வழக்கு பதியப்பட்ட பிறகுதான் மாணவியின் உடலுக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது
மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால், காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தென்பெண்ணையாறு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனு
விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம்.
ஏன் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? வழக்கு விசாரணைக்கு வரும்போது ஏன் திடீர் நடவடிக்கை?
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காவில் ஒன்றாக விளங்கி வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர் . உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு “இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்” – இந்திய வானிலை ஆய்வு மையம்
பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகள் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம். மாணவி படித்த ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மெளன அஞ்சலி.