பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிரிக்கெட்
இலங்கை டி20 தொடருக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா நியமனம் செய்யபட்டுள்ளார். தொடரில் ரோகித், கோலி, கே. எல். ராகுலும் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது
விடிய விடிய வாகன சோதனை
சென்னையில் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கை; 115 தற்காலிக சோதனை மையம் அமைப்பு. புத்தாண்டு நெருங்குவதையொட்டி சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியகி உள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்
நேபாளத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ் உடல் சென்னை வந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சட்டத்துறை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி இ.பி.எஸ்.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதமரின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, மதுரை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓவியத்திற்காக ரத்தம் எடுப்பது பாதுகாப்பாக இல்லை. 'பிளட் ஆர்ட்' முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் இன்று இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மராட்டிய முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் சிறைச்சாலையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை இறையூரில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம், இரட்டை குவளைமுறை, கோயிலில் அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்
வீடியோகான் வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு சிபிஐ காவல் டிச.29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை புதன்கிழமை (டிச.28) வெளியானது.
அதன்படி, கல்லூரி உதவி பேராசிரியர்கள் 4 ஆயிரம் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 2024 ஜனவரியில் நடத்தப்படும்.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு 15,146 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் 23ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 11 பேர் தேசிய பாதுகாப்பு முகமை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் புத்தாண்டையொட்டி 45 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்கும் தேதி ஜன.9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் பொங்கல் பரிசினை ஜன.9ஆம் தேதி மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கிவைக்கிறார்.
இதற்காக ஜன.3 முதல் ஜன.8ஆம் தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் டோக்கன் வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கவுள்ளதால் அரசுக்கு ரூ.71 கோடி கூடுதல் செலவாகும்.
புதுக்கோட்டை, இறையூரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இரட்டைக்குவளை, கோவிலில் அனுமதிக்காதது, குடிநீரில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் வாகனம் ஓட்டுதல், அச்சுறுத்தும் வகையில் ஹாரன், சைலென்சர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது; நள்ளிரவில் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை ஜனவரி 1-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் சந்திப்பார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
பா.ஜ.க-வின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலை எதிர்ப்பதற்கு சரியான தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரஸை உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணி தேவை; தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்றும், புத்துயிர் பெற்று வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத் துறையும், அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பள்ளிகல்வித்துறை தயாராக உள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் விரைவில் குணமடைய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின்படி, நீட் விலக்கு மசோதா குறித்து உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் 2 துறைகள் வெவ்வேறான பதில் அளித்துள்ளது.
நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழக அரசு அனுமதி கோருவது தேசிய இறையாண்மைக்கு எதிரானதா என்று – உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் விலக்கு மசோதா இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கு எதிரானது இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி: “தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை விலக்கிக் கொள்ளப்படவில்லை; புதிய வகை கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை. பாதிப்புகள் குறையவில்லை எனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் BLOOD ART நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. மீறி அந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இது மிக முக்கிய பிரச்னை; குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள் ஆணையர், சமூக நீதி பிரிவு துண ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜே.பி. நட்டா திமுகவை விமர்சித்த நிலையில் குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்யும் கட்சியாக பாஜக இருந்து வருகிறது என டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
திரிபுராவில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது; IPFT கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர்.
பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். தேர்தல் பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் – மு.க.ஸ்டாலின்
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதால் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்குச் சென்றதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2 தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டாலும் தொண்டர்கள் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக உள்ளனர் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் கொரோனா உறுதி
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு ஜன. 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்
மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா
துபாயில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து ரூ.40,840-க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,105க்கு விற்பனை
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் வரும் ஜன.2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் – ஈபிஎஸ்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₨5,000 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற போலீசார் . ஜம்மு-காஷ்மீரில் டிரக் மூலம் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்
சீனாவில் இருந்து திரும்பிய 3 பேரை கண்காணித்து வருகிறோம் தாய், மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை. – அமைச்சர்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது; தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் மின் உற்பத்தி தொடக்கம் . கடந்த 25ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் .
பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக, வரும் 31ம் தேதிவரை பாம் செயல்படாது. இதனால் ரயில்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ. 147.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு; அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் தெரு நாய்கள் கடித்து சிறுமி உட்பட 8 பேர் காயம் – மருத்துவமனையில் அனுமதி
நே நேபாளம், உத்தராகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 4.7 மற்றும் 5.3 என பதிவாகி உள்ளது,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கும், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!