Advertisment

Tamil news today : கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 01 -11 -2022 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

Tamil news updates

Petrol and Diesel Price:

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாரம் கடும் மழை

நேற்று மற்றும் இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த சிலிண்டர் விலை

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068.5க்கு விற்பனை செயப்படுகிறது



  • 22:59 (IST) 01 Nov 2022
    சிலை கடத்தலில் ஈடுபட்ட 6 பேருக்கு சிறை

    அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



  • 22:57 (IST) 01 Nov 2022
    உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

    கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ், கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். விதிமீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என பல்கலைக்கழக மானிய குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 20:44 (IST) 01 Nov 2022
    தமிழ்நாட்டில் பா.ஜ.க வால் ஆட்டினால், ஒட்ட நறுக்குவோம் - திருமாவளவன் பேச்சு

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “தமிழ்நாட்டில் பா.ஜ.க வால் ஆட்டினால், ஒட்ட நறுக்குவோம். மற்ற கட்சிகள் இதை செய்கிறதோ இல்லையோ, வி.சி.க கண்டிப்பாக செய்யும். சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.” என்று கூறினார்.



  • 20:41 (IST) 01 Nov 2022
    அதிமுக ஆட்சியில் ரூ.10 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு; செல்வப்பெருந்தகை புகார்

    கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் முறைகேடாக வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.



  • 20:18 (IST) 01 Nov 2022
    சென்னை புழல் கேம்ப் பகுதியில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

    சென்னை புழல் கேம்ப் பகுதியில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில், 3 மாடி கொண்ட கட்டிடத்தில் தரைத்தளம், முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.



  • 19:34 (IST) 01 Nov 2022
    தமிழக ஆளுநரின் நச்சுத்தன்மையான சிந்தனைகள் அரசியலமைப்புக்கு விரோதமானது - சி.பி.எம் மத்தியக் குழு

    தமிழக ஆளுநரின் நச்சுத்தன்மையான சிந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஜனநாயக அமைப்புகள் அரசியல் சாசன சட்டத்தை காக்க ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு அறிவித்துள்ளது.



  • 19:30 (IST) 01 Nov 2022
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 18:54 (IST) 01 Nov 2022
    சென்னையில் அண்ணாமலை கைது

    சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

    பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சைதை சாதிக்-ஐ கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.



  • 18:29 (IST) 01 Nov 2022
    டிஜிட்டல் கரன்சி அறிமுகம்

    இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சியை சோதனை முறையில் அறிமுகம் செய்தது.

    இந்த டிஜிட்டல் ரூபாய் அடுத்த ஒரு மாதத்தில் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்.

    இதனை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



  • 18:21 (IST) 01 Nov 2022
    டிசம்பர் 18 சட்ட பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

    தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர 5 ஆண்டுக்கான சிலெட் (CLAT) நுழைவுத் தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.



  • 18:21 (IST) 01 Nov 2022
    சென்னையில் 100 சதவீத மின்விநியோகம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    சென்னையில் மின் விநியோகத்தில் எந்த வித பிரச்னையும் இல்லை. 100 சதவீத மின்விநியோகம் உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.



  • 18:18 (IST) 01 Nov 2022
    சிவகங்கையில் இளைஞர் நள்ளிரவில் கொலை

    சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீசார் 3 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆகாஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.



  • 18:13 (IST) 01 Nov 2022
    தமிழக அரசு சாதி, மதம் பார்க்காது.. சேகர் பாபு

    தமிழக அரசு சாதி மதம் பார்ப்பது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.



  • 17:49 (IST) 01 Nov 2022
    சென்னை ரங்கராஜபுரம், கணேசபுரம் சுரங்கபாதை மூடல்

    தொடர் மழையால் கணசபுரம், ரங்கராஜபுரம் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் மாற்று பாதைகளை போக்குவரத்து போலீசார் கேட்டுள்ளனர்.



  • 17:39 (IST) 01 Nov 2022
    இந்தி எதிர்ப்பு போராட்டம் தள்ளிவைப்பு?

    தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் இடங்களில் இந்தி திணிப்பு விளக்க பொதுக்கூட்டங்களை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    முன்னதாக திமுக சார்பில் நவ.4ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.



  • 17:03 (IST) 01 Nov 2022
    சிறு தவறுகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் மு.க. ஸ்டாலின்

    சிறு தவறுகள் கூட அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும், கவனத்துடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



  • 16:53 (IST) 01 Nov 2022
    நரபலி வழக்கில் பலியான ஒருவர் பத்மா என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி

    இரட்டை நரபலி வழக்கில் பலியான ஒருவர் பத்மா என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, இலந்தூரில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லின் நரபலி கொடுக்கப்பட்டனர். உடல்கள் அடையாளம் தெரியாததால் டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. இறந்த பத்மாவின் மகன் மற்றும் சகோதரியின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ரோஸ்லினின் மகளிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன



  • 16:40 (IST) 01 Nov 2022
    குஜராத் தொங்கு பாலம் விபத்து; பிரதமர் மோடி நேரில் ஆய்வு

    குஜராத். மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்



  • 16:37 (IST) 01 Nov 2022
    வெள்ள நீரில் சிக்கிய மாநகர பேருந்து - மீட்கும் பணி தீவிரம்

    சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழைவெள்ள நீரில் மாநகர பேருந்து சிக்கியதையடுத்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது



  • 16:22 (IST) 01 Nov 2022
    வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து

    சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வியாசர்பாடி ஜீவா பாலத்தின் கீழே வெள்ளத்தில் பயணிகளுடன் பேருந்து சிக்கிக் கொண்டது



  • 16:05 (IST) 01 Nov 2022
    ஆப்கன் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

    ஐசிசி டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கன் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது



  • 15:50 (IST) 01 Nov 2022
    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 15:39 (IST) 01 Nov 2022
    தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

    தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்பசாமி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் புதிதாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்



  • 15:29 (IST) 01 Nov 2022
    நியூசிலாந்து வெற்றிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

    டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து வெற்றிக்கு 180 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 73, ஹேல்ஸ் 52 ரன்கள் அடித்தனர்



  • 15:12 (IST) 01 Nov 2022
    10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள் சிம்லாவுக்கு சுற்றுலா

    10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள் சிம்லாவுக்கு சுற்றுலா செல்கின்றனர். மாணவர்களை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வழி அனுப்பி வைத்தார்.



  • 14:56 (IST) 01 Nov 2022
    கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் ஆய்வு

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்படும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா ஆய்வு செய்தனர்.



  • 14:56 (IST) 01 Nov 2022
    சல்மான் கானுக்கு 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு

    நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.



  • 14:15 (IST) 01 Nov 2022
    பருவமழை தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு

    044 2561 9204, 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 ஆகிய எண்களில் பருவமழை தொடர்பான புகார்களை அளிக்கலாம். 94454 77205 என்ற வாட்ஸ் அப் எண், 1913 மற்றும் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.



  • 13:10 (IST) 01 Nov 2022
    இலங்கை அணி வெற்றி

    ஐசிசி டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கன் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



  • 13:09 (IST) 01 Nov 2022
    சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:03 (IST) 01 Nov 2022
    டி 20 சூப்பர் 12 சுற்று : இங்கிலாந்து vs நியூசிலாந்து

    டி 20 சூப்பர் 12 சுற்று : இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.



  • 12:35 (IST) 01 Nov 2022
    மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களப்பணி

    சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என 15 மண்டலங்களின் 200 வார்டுகளில், மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களத்தில் பணியாற்றி வருகின்றனர்



  • 12:34 (IST) 01 Nov 2022
    சென்னை - குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

    சென்னை புதுப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

    வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறினாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்பு.



  • 12:30 (IST) 01 Nov 2022
    நடிகை ரம்பாவின் கார் விபத்து - உருக்கமான பதிவு

    நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்து

    விபத்தில் சிக்கிய அவர் மகள் மருத்துவமனையில் அனுமதி

    இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என உருக்கமாக ரம்பா பதிவிட்டுள்ளார்



  • 12:22 (IST) 01 Nov 2022
    கேரளாவில் 6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை

    கேரளாவில் நவம்பர் 4ம் தேதி வரை கனமழை தொடரும்

    6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்



  • 12:21 (IST) 01 Nov 2022
    ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன - அமைச்சர் செந்தில் பாலாஜி

    பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன - அமைச்சர் செந்தில் பாலாஜி



  • 12:14 (IST) 01 Nov 2022
    11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு

    திருச்சி 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜர்

    11 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி திட்டம்



  • 12:14 (IST) 01 Nov 2022
    மோர்பி பாலம் விபத்து: விசாரணை குழு அமைக்க மனு

    குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்

    ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரி பொதுநல மனு

    நவம்பர் 14ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • 11:48 (IST) 01 Nov 2022
    காதலன் கொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

    தமிழக கேரள எல்லையில் விஷம் கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி

    போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்

    வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசிய கிரீஷ்மா



  • 11:14 (IST) 01 Nov 2022
    சென்னையில் தொடர் மழை - வாகன ஓட்டிகள் அவதி

    சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி

    தொடர் மழையால் கிண்டி - கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்



  • 11:13 (IST) 01 Nov 2022
    தமிழக முழுவதும் மாநகர, நகர சபை கூட்டங்கள்

    உள்ளாட்சி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் மாநகர, நகர சபை கூட்டங்கள்

    பம்மல் நகர கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

    மதுரை மாநகர சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்



  • 10:50 (IST) 01 Nov 2022
    பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும்

    திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம், திருவண்ணாமலை,நீலகிரி,கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • 10:49 (IST) 01 Nov 2022
    பெண் உயிரிழப்பு

    சென்னை, புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் சாந்தி(46) என்ற பெண் உயிரிழப்பு



  • 10:12 (IST) 01 Nov 2022
    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று : இலங்கை-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு



  • 09:17 (IST) 01 Nov 2022
    சென்னை மழை நிலவரம்

    நேற்று காலை 8.30 மணி முதன் இன்று காலை 4 மணி நிலவரபடி சென்னை மழை நிலவரம் வில்லிவாக்கம் - 10 செமீ, சென்னை நுங்கம்பாக்கம் -7.2 செமீ, சென்னை நந்தனம் - 5 செமீ



  • 09:16 (IST) 01 Nov 2022
    ஆரஞ்சு அலர்ட்

    "தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்" தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • 08:29 (IST) 01 Nov 2022
    டிஜிட்டல் நாணயம்

    இந்தியாவின் முதல் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு



  • 08:29 (IST) 01 Nov 2022
    அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும்

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு . தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு



  • 08:28 (IST) 01 Nov 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

    வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்



  • 08:25 (IST) 01 Nov 2022
    பள்ளிகளுக்கு விடுமுறை

    நாகப்பட்டினம், திருவாரூர் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை



  • 08:24 (IST) 01 Nov 2022
    வெளுத்து வாங்கிய கனமழை

    சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment