Advertisment

Tamil news today : பண நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட தினம் இன்று

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 07 Nov 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : பண நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட தினம் இன்று

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் நீடிக்கிறது.

டீ விலை உயர்வு  

பால் விலை உயர்வு எதிரொலியால், டீ விலை உயர்த்தப்போவதாக மாவட்ட காப்பி- டீ வர்த்தக சங்கம்  அறிவித்துள்ளது. இதனால் விலை ரூ.15 ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல் பிறந்தநாள்

இன்று நடிகர் கமல் ஹாசன் பிறந்த நாள். உலக நாயகன் என்று அழைக்கப்படும்
இவர் தற்போது நடிகராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


  • 20:56 (IST) 07 Nov 2022
    உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த புதுவை ஆளுனர் தமிழிசை

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன், தனது 3 ஆண்டுகள் செயல்பாடுகள் தொடர்பாக புத்தகத்தை வழங்கியுள்ளார்.


  • 19:09 (IST) 07 Nov 2022
    போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

    போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜமாலுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளிவைத்தார்.


  • 18:57 (IST) 07 Nov 2022
    15 மீனவர்களை மீட்கக் கோரி முதலமைச்சர் கடிதம்

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களை மீட்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


  • 18:39 (IST) 07 Nov 2022
    50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு... செந்தில் பாலாஜி தகவல்

    நவம்பர் 11ஆம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


  • 18:29 (IST) 07 Nov 2022
    ராமஜெயம் கொலை வழக்கு.. விசாரணை தள்ளிவைப்பு

    ராம ஜெயம் கொலை வழக்கில் சந்தேக நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டது.


  • 18:10 (IST) 07 Nov 2022
    திமுகவுக்கு எதிரான கூட்டணிக்கு நேசக் கரம் நீட்டுவோம்- டி.டி.வி. தினகரன்

    திமுகவை வீழ்த்த, திமுகவுக்கு எதிரான கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்.


  • 17:55 (IST) 07 Nov 2022
    சின்ன வெங்காயம் விலை கிடுகிடு

    சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் ரூ.100ஐ எட்டும் என அஞ்சப்படுகிறது.


  • 17:45 (IST) 07 Nov 2022
    உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்கதக்கதல்ல- முத்தரசன்

    ஒன்றிய அரசின் சட்ட திருத்தம் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது.

    பொருளாதாரம் என்பது நிரந்தரமானது அல்ல. அந்த வகையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.


  • 17:07 (IST) 07 Nov 2022
    கோவில்பட்டி அருகே விவசாயி வெட்டி கொலை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு இலந்தை குளத்தை சேர்ந்த 52 வயதான விவசாயி மாரியப்பன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 16:58 (IST) 07 Nov 2022
    தமிழக மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை

    இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைதான 15 ராமேஸ்வரம் மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 16:33 (IST) 07 Nov 2022
    அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை

    அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகின் No.1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அதிக கவனம் பெற்றவர் பிரக்ஞானந்தா. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு இந்த பரிந்துரையைச் செய்துள்ளது


  • 16:32 (IST) 07 Nov 2022
    17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது


  • 16:10 (IST) 07 Nov 2022
    அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை

    அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அதிக கவனம் பெற்றவர் பிரக்ஞானந்தா. இந்தநிலையில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது


  • 15:53 (IST) 07 Nov 2022
    செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்

    2023ஆம் ஆண்டுக்கான 10,11,12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்


  • 15:35 (IST) 07 Nov 2022
    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023

    ஏப்ரல் 6 – மொழிப்பாடம்

    ஏப்ரல் 10 – ஆங்கிலம்

    ஏப்ரல் 13 – கணிதம்

    ஏப்ரல் 15 – அறிவியல்

    ஏப்ரல் 20 – சமூக அறிவியல்


  • 15:35 (IST) 07 Nov 2022
    ஹேமந்த் சோரன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, சுரங்க ஊழல் வழக்கில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்குகள் பராமரிக்க முடியாதவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.

    இன்று தீர்ப்பு கூறும்போது, ​​இந்திய தலைமை நீதிபதி யு.யு லலித் மற்றும் நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் நாங்கள் அனுமதித்து, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜூன் 3, 2022 உத்தரவை ரத்து செய்துள்ளோம். இந்த பொது நல வழக்குகள் பராமரிக்க முடியாதவை.” என்று கூறினர்.

    ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்து, பொதுநல வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.


  • 15:26 (IST) 07 Nov 2022
    11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2023

    11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2023

    மார்ச் 14 – மொழிப்பாடம்

    மார்ச் 16 – ஆங்கிலம்

    மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம்

    மார்ச் 24 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

    மார்ச் 28 - வேதியியல், கணக்கியல், புவியியல்

    மார்ச் 30 - கணினி அறிவியல்

    ஏப்ரல் 5 - கணிதம், விலங்கியல்


  • 15:23 (IST) 07 Nov 2022
    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2023

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2023

    மார்ச் 13 – மொழிப்பாடம்

    மார்ச் 15 – ஆங்கிலம்

    மார்ச் 17 - கணினி அறிவியல்

    மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்

    மார்ச் 27 - கணிதம், விலங்கியல், வணிகவியல்

    மார்ச் 31 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

    ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கியல், புவியியல்


  • 15:01 (IST) 07 Nov 2022
    பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

    10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


  • 14:48 (IST) 07 Nov 2022
    விராட் கோலிக்கு விருது

    அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்தது.


  • 14:48 (IST) 07 Nov 2022
    சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம்

    சென்னை கோட்டூர்புரத்தில் விதிகளை மீறிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில், விதிமீறல்கள் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


  • 14:47 (IST) 07 Nov 2022
    சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம்

    சென்னை கோட்டூர்புரத்தில் விதிகளை மீறிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில், விதிமீறல்கள் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


  • 14:19 (IST) 07 Nov 2022
    மு.க.ஸ்டாலினுடன் எம்.பி. வில்சன் சந்திப்பு

    10% இட ஒதுக்கீடு வழக்கு தீர்ப்பு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினுடன், எம்.பி. வில்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


  • 13:31 (IST) 07 Nov 2022
    சமூக நீதி போராட்டத்திற்கு பின்னடைவு.. ஸ்டாலின்

    10% இட ஒதுக்கீடு வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 13:30 (IST) 07 Nov 2022
    தொழிலாளி உயிரிழப்பு

    மதுரை, கூடல் நகர் அருகே பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சக்திவேல் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.


  • 13:15 (IST) 07 Nov 2022
    கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 12:36 (IST) 07 Nov 2022
    மோர்பி பால விபத்து - வழக்குப்பதிவு

    குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

    மோர்பி பால விபத்து தொடர்பாக மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவு


  • 12:36 (IST) 07 Nov 2022
    10% இடஒதுக்கீடு - மாறுபட்ட தீர்ப்பு

    10% இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

    5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் ஆதரவு

    இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு


  • 12:36 (IST) 07 Nov 2022
    போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் அதிகரிப்பு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வழக்கு.

    மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

    அபராதம் அதிகரிப்பால் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகளுக்கு கடும் பாதிப்பு - மனு


  • 11:23 (IST) 07 Nov 2022
    அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கூறுகளை மீறவில்லை

    10 சதவீத இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கூறுகளை மீறவில்லை - நீதிபதி தினேஷ் மகேஸ்வரி

    10 சதவீத இடஒதுக்கீடு வேறுபாட்டை உருவாக்கவில்லை, ஒதுக்கீடு அளித்தது சரியே - நீதிபதி பேலா எம்.திரிவேதி


  • 11:22 (IST) 07 Nov 2022
    10% இட ஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம்

    5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 4 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பு - ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு


  • 10:26 (IST) 07 Nov 2022
    அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


  • 10:25 (IST) 07 Nov 2022
    வரும் 9ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 10:24 (IST) 07 Nov 2022
    கூட்டணிக்கு தயார்

    கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்


  • 10:24 (IST) 07 Nov 2022
    கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    கமல்ஹாசனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானி, மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


  • 09:22 (IST) 07 Nov 2022
    ரயில்கள் தாமதம்

    நெல்லைக்கு வரும் ரயில்கள் தாமதம் நெல்லைக்கு வரும் . அனைத்து ரயில்களும் சுமார் அரைமணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை தாமதம் சிக்னல் பிரச்சினை காரணமாக ரயில்கள் தாமதம் என தகவல்


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment