Advertisment

Tamil news today : தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

Tamil news today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Nov 15, 2022 09:24 IST
New Update
Tamil news today : தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

பெட்ரோல்டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை இன்று

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வருகிற 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைக்கு தலா ரூ. 1,000 நிவாரணம் வழங்க உத்தரவு . கனமழை பாதிப்பு காரணமாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. • 22:38 (IST) 15 Nov 2022
  மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை (நவம்பர் 16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  நாளை நடைபெறும் கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் • 22:31 (IST) 15 Nov 2022
  தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் 4வது தூணாக விளங்குகின்றன. நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். • 20:44 (IST) 15 Nov 2022
  காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் இடையே மோதல்; 3 பேருக்கு காயம்

  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரை மாற்றம் செய்யக்கோரி மாலை முதல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த ஜோஸ்வா ராபர்ட், டேனியல் உட்பட 3 நபர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. • 20:31 (IST) 15 Nov 2022
  காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் இடையே மோதல் - போலீஸ் குவிப்பு

  சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளில் இரு தரப்பினர் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. • 20:24 (IST) 15 Nov 2022
  பிரியாவின் நம்பிக்கை வார்த்தை; இதயம் நொறுங்கிப்போனேன் - ஜி.வி. பிரகாஷ்

  தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியா, இறப்பதற்குமுன், என் கேம் என்னை விட்டு போகாது; திரும்ப வருவேன் என்று ஸ்டேட்டஸ் வைத்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன், பிரியாவின் கடைசி வார்த்தைகள் நம்பிக்கை.நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். “இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை justiceforpriya” என்று பதிவிட்டுள்ளார். • 18:59 (IST) 15 Nov 2022
  ராமநாதபுரம்.. உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  ராமநாதபுரத்தில் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

  திங்கள்கிழமை (நவ.14) இரவு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  அவர்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். • 18:48 (IST) 15 Nov 2022
  சென்னை அணியில் பிராவோக்கு கல்தா

  ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இருந்து மேற்கிந்திய வீரர் பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

  தோனி, ராயுடு, சேனாபதி, ருதுராஜ் உள்ளிட்டோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். • 18:37 (IST) 15 Nov 2022
  காங்கிரஸிற்கு வாக்கு சேகரிக்கும் ஜடேஜா சகோதரி

  பாஜக வேட்பாளராக ரவீந்திர ஜடேஜா மனைவி போட்டியிடும் தொகுதியில், ஜடேஜாவின் சகோதரி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். • 18:15 (IST) 15 Nov 2022
  4 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய மனைவி

  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவரை, கள்ளக் காதலனுடன் இணைந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டுத் தோட்டத்தில் புதைத்த மனைவியை போலீசார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கைதுசெய்தனர். • 17:59 (IST) 15 Nov 2022
  டிச.29 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

  ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி டிச.29ஆம் தேதி காலை 10 மணிக்கு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். • 17:47 (IST) 15 Nov 2022
  குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

  தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்துவரும் நிலையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. • 17:32 (IST) 15 Nov 2022
  கரூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

  கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கப்பட்ட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  விஷ வாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். • 17:16 (IST) 15 Nov 2022
  மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

  மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. • 17:16 (IST) 15 Nov 2022
  மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

  மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. • 17:04 (IST) 15 Nov 2022
  குன்னூர் ரயில் பாதையில் மண் சரிவு

  குன்னூர் ரயில் பாதையில் மண் சரிந்த நிலையில், மலை ரயில் சிறிது நேரம் தாமதமானது. ரயில் ரோட்டில் அப்படியே நின்றது. • 16:58 (IST) 15 Nov 2022
  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் மீட்பு; அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது • 16:32 (IST) 15 Nov 2022
  நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு மீண்டும் ஜாமின்

  ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் மீண்டும் ஜாமின் வழங்கியது. நவம்பர் 15ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில் மீண்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது • 16:13 (IST) 15 Nov 2022
  வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்; டி.ஜி.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு

  வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி, நெல்லை முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்தது

  மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது • 15:56 (IST) 15 Nov 2022
  நடிகர் கிருஷ்ணா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

  நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும் என தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார் • 15:42 (IST) 15 Nov 2022
  பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு

  ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேசினர் • 15:17 (IST) 15 Nov 2022
  ஐ.பி.எல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர் கிரண் பொல்லார்ட் ஓய்வு

  ஐ.பி.எல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர் கிரண் பொல்லார்ட் ஓய்வை அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படப் போவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார் • 15:16 (IST) 15 Nov 2022
  கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் – ஐகோர்ட் அனுமதி

  கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

  மாணவி ஸ்ரீமதி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி சூறையாடப்பட்டு மூடப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது • 15:01 (IST) 15 Nov 2022
  நீதிமன்றம் உத்தரவு

  கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • 14:34 (IST) 15 Nov 2022
  இபிஎஸ் நாளை ஆய்வு

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார். மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நேரில் ஆய்வு செய்கிறார். • 14:04 (IST) 15 Nov 2022
  ஸ்டாலின் ஆலோசனை

  ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். • 14:03 (IST) 15 Nov 2022
  மு.க.ஸ்டாலின் கடிதம்

  டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் கோரி, மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். • 13:32 (IST) 15 Nov 2022
  5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • 13:14 (IST) 15 Nov 2022
  பிரியா உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு

  தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது. • 12:57 (IST) 15 Nov 2022
  கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

  தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்

  கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் பணியிடை நீக்கம் - மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவு • 12:26 (IST) 15 Nov 2022
  பிரியாவின் வீடு முன்பு போலீசார் குவிப்பு

  காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின் உயிரிழந்த பிரியாவின் உடலை எடுத்துச் செல்ல போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு

  சென்னை, வியாசர்பாடியில் பிரியாவின் வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிப்பு • 12:26 (IST) 15 Nov 2022
  மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை

  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான சம்பவம்

  விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது

  இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக பார்க்க கூடாது.

  தவறு செய்த மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் • 12:00 (IST) 15 Nov 2022
  அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் - ஸ்டாலின்

  குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் - 'சுகாதார மாநாடு 2022'ஐ தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு • 11:52 (IST) 15 Nov 2022
  பிரேத பரிசோதனை நிறைவு

  தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பிரேத பரிசோதனை நிறைவு • 11:52 (IST) 15 Nov 2022
  பிரியா மரணம் - டிடிவி தினகரன் இரங்கல்

  தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

  இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் - டிடிவி தினகரன் • 10:22 (IST) 15 Nov 2022
  தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு .

  நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு . நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். • 09:56 (IST) 15 Nov 2022
  ஜி20 உச்சி மாநாடு

  இந்தோனேசியாவின் பாலி தீவில் 17வது ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு உக்ரைன் போரால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் . • 09:56 (IST) 15 Nov 2022
  தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

  பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் • 09:34 (IST) 15 Nov 2022
  பாபுவின் தந்தை காலமானார்

  பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment