scorecardresearch

Tamil news Highlights: கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி – கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 09-11- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Highlights: கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி – கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

பெட்ரோல்,டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் நீடிக்கிறது.

பொல்லாதவன்

பொல்லாதவன்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு பொல்லாதவன் படக்குழுவினர் சந்தித்திக்கொண்டனர்.

நிலநடுக்கம்

டெல்லி மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேபாளம், டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தின் போது வீடு இடிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியிலும் 15 வினாடிகள் நீடித்த நில அதிர்வு  உணரப்பட்டுள்ளது.

Live Updates
22:14 (IST) 9 Nov 2022
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்வளத்துறை இந்த தடையை அறிவித்துள்ளது

21:48 (IST) 9 Nov 2022
ஈரோடு மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை

முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

20:44 (IST) 9 Nov 2022
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை

கைது சட்டவிரோதமானது மற்றும் “சூனிய வேட்டை” என்று குறிப்பிட்டு, மும்பையின் வடக்கு புறநகர் பகுதியில் மறுவடிவமைப்பு திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. அமலாக்க இயக்குநரகம் (ED) “மிகவும் சாதாரணமாக” கைது செய்வதற்கான விதிவிலக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி நீதிமன்றம் கடுமையாகத் தாக்கியது.

20:18 (IST) 9 Nov 2022
கள்ளக்குறிச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்து மோதி மாணவர் மரணம்

கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்து மோதி மாணவர் உயிரிழந்துள்ளார். மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மோது மாணவர் மீது பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது

20:00 (IST) 9 Nov 2022
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி மீது முட்டைகள் வீச்சு

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மனைவி கமிலா மீது முட்டைகள் வீசப்பட்டுள்ளது. யார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இந்த முட்டைவீச்சு நடந்துள்ளது. வீசப்பட்ட முட்டைகள் மன்னர் சார்லஸ் மீது படாமல் கீழே விழுந்து உடைந்தது. முட்டை வீசிய நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

19:31 (IST) 9 Nov 2022
சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் – 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

19:10 (IST) 9 Nov 2022
தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்தேகம்

தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளார். தெலங்கானவில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுவதாக ஆளுநர் தமிழிசை புகார் கூறியுள்ளார். தேவையின்றி ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர். முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததில் இருந்து எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழிசை சந்தேகம் தெரிவித்துள்ளார்

18:36 (IST) 9 Nov 2022
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 15% ஆக குறைப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 25%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது

17:58 (IST) 9 Nov 2022
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்களின் விடுதலையை எதிர்த்த மேல்முறையீடு தள்ளுபடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்களின் விடுதலையை எதிர்த்த மேல்முறையீடு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அத்வானி உட்பட 32 பேரை, 2020ஆம் ஆண்டு லக்னோ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது

17:38 (IST) 9 Nov 2022
பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம்

பேஸ்புக் நிறுவனம் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் 13% ஆகும்.

15:33 (IST) 9 Nov 2022
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படை – ஐகோர்ட்

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

15:18 (IST) 9 Nov 2022
அரசாணை எண் 115 ஆய்வு வரம்புகள் ரத்து – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

அரசாணை 115 குறித்து அரசுப் பணியாளர் சங்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பணியாளர் சங்கங்களின் கருத்துகளை கேட்ட பின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் அரசாணை 115, அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்யும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

14:51 (IST) 9 Nov 2022
அனுராக் தாக்கூர் பேட்டி

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ​​ஆம் ஆத்மி கட்சி நீண்ட நாட்களுக்கு முன்பே கடையை மூடி விட்டது… பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. ஆனால் காங்கிரஸால் அதன் கணக்கைத் திறக்க முடியாது என்று கூறினார்.

14:37 (IST) 9 Nov 2022
மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

14:30 (IST) 9 Nov 2022
கள்ளக்குறிச்சி பள்ளி திறக்க அனுமதிக்க கோரி வழக்கு

கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி லதா கல்வி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் வழக்கில், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:12 (IST) 9 Nov 2022
வி.கே.சசிகலா வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணை 115ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

13:14 (IST) 9 Nov 2022
கனமழைக்கு வாய்ப்பு

11, 12ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

13:14 (IST) 9 Nov 2022
ஐசிசி டி20 உலகக்கோப்பை

ஐசிசி டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

13:01 (IST) 9 Nov 2022
சிபிஐ வழக்குப்பதிவு செய்ததாக பரவும் செய்தி தவறானது

சிபிஐ எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக பரவும் செய்தி தவறானது – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி

13:00 (IST) 9 Nov 2022
அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் – வானிலை மையம்

12:12 (IST) 9 Nov 2022
திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலினுள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் – இந்து அறநிலைத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்

11:56 (IST) 9 Nov 2022
அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் – தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் எச்சரிக்கை

11:56 (IST) 9 Nov 2022
ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா தேர்தலில் போட்டி?

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டி என தகவல்

11:44 (IST) 9 Nov 2022
2 மாதங்களில் 10 முறை கொலை முயற்சி – க்ரீஷ்மா வாக்குமூலம்

கேரள – தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த வழக்கு

2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்

சரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு க்ரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை

11:43 (IST) 9 Nov 2022
டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

சென்னையில் நவ.12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்

வாக்காளர் பெயர் நீக்கம், விவரங்கள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்துகொள்ள சிறப்பு முகாம்கள்

டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – சத்யபிரதா சாகு

11:43 (IST) 9 Nov 2022
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை – இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 27ஆம் தேதி கைதான மீனவர்களின் சிறை காவல் நிறைவடைந்த நிலையில் விடுவிப்பு

10:50 (IST) 9 Nov 2022
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு . குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

10:50 (IST) 9 Nov 2022
மாணவர் விடுதியில் ராகிங் புகார்

வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் புகார் . ஜூனியர் மாணவர்களை உள்ளாடையுடன் விடுதியை சுற்றி வரச் செய்ததாக வெளியான வீடியோ தண்ணீரை பீய்ச்சியடித்து ராகிங் கொடுமை – அதிர்ச்சி வீடியோ. ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

09:28 (IST) 9 Nov 2022
24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி . வரும் 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும்.

09:28 (IST) 9 Nov 2022
ளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மனு. திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

09:27 (IST) 9 Nov 2022
லான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்தது

395 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்றார் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா இன்க் நிறுவன பங்குகளை தொடர்ந்து விற்கும் முதலீட்டாளர்கள். எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்தது

Web Title: Tamil news today live rain update pm modi mk stalin