பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2,434 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 225 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 776 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் 2023 – லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வெளியான 4 நாட்களுக்குள் ரூ200 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய அவதூறு நோட்டீசுக்கு பதில் இல்லை. அண்ணாமலை மீது வரும் 8ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் காஸிப்பூர் மக்களவை தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி. அப்துல் அன்சாரி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்ற வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மட்டும் 47 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. பயனாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடக்கியதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது
மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் வசூல் ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உள்ளது. ஜூலை 2017 இல் மறைமுக வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, இது ஒரு மாத வசூலில் உச்சபட்சமாகும்.
நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, ரூ.1,87,035 கோடியின் பிரிவு பின்வருமாறு: சி.ஜி.எஸ்.டி ரூ.38,440 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ.47,412 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ.89,158 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.34,972 கோடி உட்பட) மற்றும் செஸ் 12,025 கோடி ரூபாய்.
ஏற்காடு சுற்றுலா வந்த தந்தை மற்றும் மகள், நல்லூர் அருவியின் மீதிருந்து கால் தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ளனர்
நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வில்லிக்கு பதிலாக ஆர்சிபி அணியில் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக டேவிட் வில்லி விலகிய நிலையில் கேதர் ஜாத்வ் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 70 தமிழர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்
நிலைக்கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது அபராதம் என்ற தகவல் தவறானது. வீடுகளுக்கு நிலைக்கட்டணம் வசூலிக்க 2022 செப்டம்பர் 10 முதல் விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம். மல்யுத்த வீரர்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது” என்று கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அத்திப்பட்டு பகுதியில், உள்ள தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட கோவிந்தன், சுப்பராயலு என்ற 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 2 பேரின் உடல்களை கழிவுநீர் தொட்டியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியின் கடைசி பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது அம்மாநில காவல்துறை அதிகாரிகள் மேடையில் ஏறி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணியைக் கடந்து இசை நிகழ்ச்சி நடந்ததால் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காவல்துறையின் இந்த செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சிறுதொழில் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மோகா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஜெயஸ்ரீ இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை: “ஓ.பி.எஸ் புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உண்மையான உறுப்பினர்களுக்கு, விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். முறையான, நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது” உறுப்பினர்கள் யாரும் போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ள கூடாது” என்று அறிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கேழ்வரகு, கம்பு போன்ற உணவு தானிய வகைகளை பாக்கெட் செய்து கொடுத்தால் மாதம் ரூ.10,000 வருவாய் என முன்பணமாக ரூ.25,000 பெற்று பலரிடம் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த மேகா என்ற நிறுவன உரிமையாளர் மகாதேவ பிரசாத் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், செய்யூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது
சென்னை சேப்பாக்கத்தில் வரும் 6ம் தேதி சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான ஆன்லைன் மற்றும் கவுண்ட்டர் டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு துவங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire உள்ளிட்ட 14 அலைபேசி குறுஞ்செய்தி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள், தங்களின் ஆதரவாளர்களை தொடர்பு கொள்ள இந்த செயலிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் : காரியாபட்டி அருகே உள்ள மருத்துவக்கழிவு எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தீர்மானம் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் உள்ள 82 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மக்கள் நலம் காக்கும் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி, எதிர்த்து போட்டியிட்ட மன்னனை விட 150 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூரில் கனமழைக்கு வாய்ப்பு திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு
வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவச இலவசம்
தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் 5 கிலோ அரிசி இலவசம்
வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள்.
பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
கர்நாடகா தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் – கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி
ம.தி.மு.க 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, மதிமுக இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும்
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை
ம.தி.மு.கவை தி.மு.கவோடு இணைத்துவிடலாம் என திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், வைகோ விளக்கம்
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் மாலைக்குள் முடிவுகள் அறிவிப்பு
மண்டல மாநாடு, மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து இன்று ஆலோசனை செய்ய உள்ளோம்.
திருச்சி மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது- ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு . நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சந்திப்பு. சமீபத்தில் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சர்ச்சை ஆடியோ வெளியானதும் குறிப்பிடத்தக்கது
’12 மணி நேர வேலை சட்ட மசோதா அனைத்து தொழிற்சாலைகளுக்கானது அல்ல. தேர்தெடுக்கப்பட்ட சில தொழிற்சாலைக்கானது மட்டுமே. இந்த சட்ட திருத்த மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்கள் சில சந்தேகங்களை எழுப்பியதால் சட்ட திருத்தம் நிறுத்திவைக்கப்பட்டது. விட்டுக் கொடுப்பதை நான் என்றும் அவமானமாக கருதியதில்லை. அதை பெருமையாக கருதி கொள்கிறேன். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால் அதை திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்.- முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு . தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . மசோதா வாபஸ் குறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எழுத்துப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
| உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை . சிவப்பு சட்டை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் எனது மே நாள் நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே தின பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது. சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,021.50-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமில்லை
சென்னை, நாகை, கடலூர், தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை