Advertisment

Tamil News Today Highlights: ரூ.6000 வெள்ள நிவாரண நிதி : குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

16 December 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai flood

Tamil News Updates

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Advertisment

 தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

 லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அடுத்த  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; படுகாயம் அடைந்த 20 பேர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு

செம்பரம்பாக்கம் - 88.97%, புழல் - 92.79%, பூண்டி - 98.82%, சோழவரம் - 69.75% , கண்ணன்கோட்டை - 100%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 • Dec 16, 2023 22:43 IST
  மிக்ஜாம் புயல் நிவாரணம் : சந்தேகங்களை தீர்க்க கட்டப்பாட்டு அறை திறப்பு

  மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது! கட்டணமில்லா தொலைபேசி எண்: 044 28592828 • Dec 16, 2023 21:13 IST
  சமூக வலைதள பக்கத்திலிருந்தும் வெளியேறும் லோகேஷ் கனகராஜ்

  நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், அப்படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளதால் அனைத்து சமூக வலைதள பக்கத்திலிருந்தும் சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு! தனது G Squad நிறுவனத்தின் முதல் படமாக, விஜய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘Fight Club’ படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பிற்காக நன்றியும் தெரிவித்துள்ளார் லோகேஷ்! • Dec 16, 2023 21:10 IST
  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு எப்போது அறிவிப்பு?

  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! • Dec 16, 2023 20:00 IST
  நாளை மார்கழி மாத பிறப்பு; ராமேஸ்வரம் திருக்கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறப்பு

  நாளை மார்கழி மாத பிறப்பை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது • Dec 16, 2023 19:44 IST
  தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

  தமிழகத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

  செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கரூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • Dec 16, 2023 19:01 IST
  மகளிர் உரிமைத் தொகை; ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும் - தங்கம் தென்னரசு

  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும். இதுவரை விண்ணப்பிக்காதாவர்களும் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் • Dec 16, 2023 18:11 IST
  நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க திட்டம்; வண்ண புகை வீச்சில் கைது செய்யப்பட்டவர்கள் பகீர் வாக்குமூலம்

  நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் தகவல் உடலில் தீப்பிடிக்காதவாறு ஜெல் ஒன்றை பூசிக்கொண்டு தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. ஜெல் கிடைக்காததால் கலர் புகை குண்டுகளை வாங்கி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது • Dec 16, 2023 18:01 IST
  புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவராக ஷியாம் கிருஷ்ணசாமி நியமனம்

  ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் முப்பெரும் விழாவில், அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக ஷியாம் கிருஷ்ணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் • Dec 16, 2023 17:35 IST
  நாடாளுமன்ற வண்ண புகை வீச்சு; கைது செய்யப்பட்ட 6-வது நபருக்கு 7 நாள் போலீஸ்

  நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6வது நபரான மகேஷ் குமாவத்திற்கு 7 நாள் போலீஸ் காவல் அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது • Dec 16, 2023 17:10 IST
  தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - அண்ணா பல்கலை

  தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார் • Dec 16, 2023 16:39 IST
  பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்!

  மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது.  மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

   

  பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களிடம்  மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 

   

  இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.

   

  காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. • Dec 16, 2023 16:37 IST
   குவைத் மன்னர் மரணம் 

   

   குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் (86) காலமானார். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது.   • Dec 16, 2023 16:24 IST
  மார்டன் தியேட்டர்சுக்கு நோட்டீஸ் 

   

  மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.  • Dec 16, 2023 16:23 IST
  சாத்தான்குளம்: ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம் - டி.எஸ்.பி ஆய்வு 

  சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரத்தில் சம்பவ இடத்தில் சாத்தான்குளம் டி.எஸ்.பி அருள் ஆய்வு செய்து விசாரணை செய்தார். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் தரையிறங்கியுள்ளது.  • Dec 16, 2023 16:20 IST
  'புதிய ஆசிரியர்களுக்கு  பணி நியமனம்' - அதிரடி உத்தரவு

   

  'புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது' என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

   

    • Dec 16, 2023 15:30 IST
  நலம் பெற்ற பாம்பு பிடி வீரர் 

   

  நாகப் பாம்பு தாக்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய பாம்பு பிடி வீரர் காஜா மொயிதின் நலம்பெற்று வீடு திரும்பினார். சிறுமுகையை சேர்ந்த காஜா மொயிதின், இரண்டு கைகளிலும் நாகப் பாம்பு கொத்தியிருந்த நிலையில் கடந்த 20 நாட்களாக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். • Dec 16, 2023 15:11 IST
  மிக்ஜாம் புயல் நிவாரணம்: 10 லட்சம் வழங்கிய ஜவாஹிருல்லா!

  மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  • Dec 16, 2023 15:09 IST
  சென்னையில் மழை!


  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  • Dec 16, 2023 15:08 IST
  தங்க நகை ஹால்மார்க்: ஐகோர்ட் உத்தரவு 

   

  தங்க நகை விற்பனையில் மாநில, மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விரிவான விசாரணைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது 

  இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என விருதுநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். கோரிக்கை முக்கியமானதாக இருப்பதால், வழக்கை விரிவான விசாரணைக்காக நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஒத்திவைத்தனர்.  • Dec 16, 2023 13:53 IST
  நாடாளுமன்ற சம்பவம் - ராகுல்காந்தி விமர்சனம்

  நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வினால் தான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் - ராகுல்காந்தி • Dec 16, 2023 13:52 IST
  ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய அமீர்

  மிக்ஜாம் புயல்,வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சம் காசோலையை முதல்வரிடம் வழங்கினார் இயக்குனரும் ,நடிகருமான அமீர் • Dec 16, 2023 13:51 IST
  பாம்பன் பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல் நீர்

  பாம்பன் பகுதியில், சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல்நீர். 

  கடல் புற்கள், பாறைகள் தெரியும் நிலையில், நாட்டு படகுகள் தரை தட்டி நிற்கும் காட்சி • Dec 16, 2023 13:36 IST
  வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு

  மத்தியக் குழு பாராட்டு-அண்ணாமலை விளக்கம்

  வெள்ள பாதிப்புகளை, தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு 

  பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்தியக் குழு மாநில அரசை குறை சொல்லமாட்டார்கள்.  வெள்ள நிவாரணமாக ரூ.10,000 வழங்க வேண்டும்  • Dec 16, 2023 13:23 IST
  3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Dec 16, 2023 13:22 IST
  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை
  நிரந்தமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  பெரியகுடியில் உள்ள எண்ணெய் குழாயில் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால் 2013ல் பணிகளை நிறுத்திய ஓ.என்.ஜி.சி.

  3 மாதங்களுக்கு முன் பெரியகுடி பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் தொடங்கிய ஓ.என்.ஜி.சி.

  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாய அமைப்பினர் எதிர்ப்பு

  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணறுகளை மூடும் பணிகளை தொடங்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் • Dec 16, 2023 13:22 IST
  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை
  நிரந்தமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  பெரியகுடியில் உள்ள எண்ணெய் குழாயில் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால் 2013ல் பணிகளை நிறுத்திய ஓ.என்.ஜி.சி.

  3 மாதங்களுக்கு முன் பெரியகுடி பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் தொடங்கிய ஓ.என்.ஜி.சி.

  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாய அமைப்பினர் எதிர்ப்பு

  39 நாட்களுக்குப் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணறுகளை மூடும் பணிகளை தொடங்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் • Dec 16, 2023 13:22 IST
  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு

  திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை
  நிரந்தமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  பெரியகுடியில் உள்ள எண்ணெய் குழாயில் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால் 2013ல் பணிகளை நிறுத்திய ஓ.என்.ஜி.சி.

  3 மாதங்களுக்கு முன் பெரியகுடி பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் தொடங்கிய ஓ.என்.ஜி.சி.

  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாய அமைப்பினர் எதிர்ப்பு

  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணறுகளை மூடும் பணிகளை தொடங்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் • Dec 16, 2023 13:01 IST
  சி.பி.சி.எல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

  சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

  சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பரபரப்பு அடங்குவதற்குள் தீ விபத்து. தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்  • Dec 16, 2023 12:51 IST
  பாஜக எம்.பி இடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு

  நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற டெல்லி போலீசார் முடிவு

  பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, அவரது தனி உதவியாளரிடம் விசாரணை நடத்த சிறப்பு பிரிவு காவல்துறை முடிவு • Dec 16, 2023 12:16 IST
  2011 தேர்தலுக்கு பின் எம்.எல்.ஏக்கள் துரோகம் செய்தனர்- பிரேமலதா

  2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது.  அதால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது -பிரேமலதா, தேமுதிக பொதுச்செயலாளர்  • Dec 16, 2023 12:14 IST
  அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்: பிரேமலதா

  அரசியலில் இருப்பதே சவால் தான்-குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்.

  அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்-அதற்கு உதாரணம் ஜெயலலிதா. 

  பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல. 

  விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்-பிரேமலதா விஜயகாந்த் • Dec 16, 2023 12:13 IST
  ஈரான் செல்ல இனி விசா தேவையில்லை

  இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என ஈரான் அரசு அறிவிப்பு.  • Dec 16, 2023 12:12 IST
  புழல் சிறையில் இருந்து தப்பிய ஓடிய கைதி பெங்களூரூவில் கைது

  புழல் பெண்கள் சிறையில் இருந்து தப்பிய ஜெயந்தி என்ற கைதி பெங்களூரூவில் கைது. பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் வைத்து புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! • Dec 16, 2023 11:26 IST
  பா.ஜ.க வெற்றி: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு இல்லை

  நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். 

  வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்

  ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

  3 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி அமைந்தாலும் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு இல்லை- ஸ்டாலின்  • Dec 16, 2023 10:47 IST
  தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மழை வெள்ள பாதிப்புகள் குறைய காரணம்

  அரசின் நடவடிக்கையால் பாதிப்புகள் குறைந்தது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மழை வெள்ள பாதிப்புகள் குறைய காரணம். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.  • Dec 16, 2023 10:47 IST
  தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ.5,790க்கும், ஒரு சவரன் ரூ.46,320க்கும் விற்பனை. • Dec 16, 2023 10:22 IST
  மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன்

  மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன். தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் 8வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்  • Dec 16, 2023 09:27 IST
  வேளச்சேரி ஏரிக்கரை பகுதியில் மழைக்கால சிறப்பு முகாம்

  சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி ஏரிக்கரை பகுதியில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமில் பங்கேற்பு • Dec 16, 2023 09:26 IST
  எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு வரை பரவி உள்ளது: மீனவர்கள் அச்சம்

  சென்னை எண்ணூர் கீரிக் பகுதியில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகள் தற்போது பழவேற்காடு வரை பரவி உள்ளது; மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதம் ஏற்படுத்தும் என மீனவர்கள் அச்சம் • Dec 16, 2023 08:24 IST
  தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் • Dec 16, 2023 08:23 IST
  வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி : பிரேமலதா விஜயகாந்த்

  பொதுச்செயலாளர் - பிரேமலதா விஜயகாந்த் நன்றி .தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார் • Dec 16, 2023 08:07 IST
  குற்றாலத்தில் அதிகாலை முதலே குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்

  தென்காசி : இன்று (டிச.16) வார விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் அதிகாலை முதலே குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்; அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்துAdvertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment