பெட்ரோல்,டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் நீடிக்கிறது.
பண நீக்க நடவடிக்கை
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சொல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று. இன்றோடு 7 ஆண்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் இது பலதரப்பினரால் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
மழை நிலவரம்
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி என்பதால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு
- 22:36 (IST) 08 Nov 2022திருப்பூர் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; அறங்காவலர், வார்டன் கைது
திருப்பூர், விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், சேவலாயத்தின் அறங்காவலர் மற்றும் வார்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் கடந்த மாதம் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 22:33 (IST) 08 Nov 2022மதுரை மாநகராட்சி பணியின் போது மண்சரிந்து தொழிலாளி மரணம்; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்த பணியின் போது மண்சரிந்து சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். சக்திவேல் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 19:30 (IST) 08 Nov 2022TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 - தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
- 19:07 (IST) 08 Nov 202210% இடஒதுக்கீடு தீர்ப்பு; தி.மு.க சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை - துரைமுருகன்
10% இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக தி.மு.க சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் உள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்த நிலையில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திமுக முடிவு செய்துள்ளது.
- 18:42 (IST) 08 Nov 2022கல்வி தொடர்பாக மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது - தமிழக அரசு வாதம்
குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தி.மு.க எம்.எல்.ஏ. எழிலன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
- 18:21 (IST) 08 Nov 2022சேலத்தில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை விற்க முயற்சி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையின் உறவினர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் விற்பனை மற்றும் கருமுட்டை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கைதான இடைத்தரகருக்கு தொடர்பு என தகவல் வெளியாகியுள்ளது
- 18:00 (IST) 08 Nov 2022கடலூரில் பேருந்து நிழற்குடை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் மரணம்
கடலூர், விஜயமாநகரம் பகுதியில் பேருந்து நிழற்குடை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வினோத்குமார்(10) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழப்பை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்
- 17:40 (IST) 08 Nov 2022யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது – ராகுல் காந்தி
காங்கிரஸின் ஒற்றுமை இந்தியா யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டப்படி காஷ்மீரில் முடிவடையும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்
- 17:18 (IST) 08 Nov 2022ஜி20 அமைப்பு - புதிய லோகோ வெளியீடு
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். வரும் டிசம்பர் 1 முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ள நிலையில் லோகோ உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது
- 16:59 (IST) 08 Nov 2022போலி வங்கி நடத்திய கும்பல் கைது - சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பேட்டி
சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பேட்டி: ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது. போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.
- 16:57 (IST) 08 Nov 2022டெண்டர் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் வேலுமணி மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு
டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி மீதான வழக்குகளில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 15:47 (IST) 08 Nov 2022மாணவர்களுக்கு போக்சோ குறித்து கற்பியுங்கள் - கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது தொடரப்பட்ட வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் வழக்குகள் அதிகரிப்பதால் 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 14:59 (IST) 08 Nov 2022அனைத்து கட்சி கூட்டம்
10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 14:59 (IST) 08 Nov 2022படகில் இருந்து 300 பேர் மீட்பு
பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
- 14:03 (IST) 08 Nov 2022தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
சென்னை டைடல் பார்க் வளாகத்தில் நடைபெறும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில், மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 14:03 (IST) 08 Nov 202210 சதவீத இட ஒதுக்கீடு
10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. சமூக நீதி என்பது எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல என்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
- 14:00 (IST) 08 Nov 2022கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நவ.9 முதல் நவ.11 வரை வட மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நவ.10 முதல் 12 வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
- 13:30 (IST) 08 Nov 2022டிடிவி உடன் கூட்டணிக்கு தயார்.. ஓபிஎஸ் அறிவிப்பு
டிடிவி உடன் கூட்டணிக்கு தயார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
- 13:30 (IST) 08 Nov 2022கோவை கார் வெடித்த வழக்கு
கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, வரும் 22ம் தேதி மீண்டும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
- 13:01 (IST) 08 Nov 2022புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைக்கு சீல்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றி தற்காலிகமாக சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு
புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் அருகே பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் நடத்திய கடுமையான போராட்டத்தின் காரணமாக முடிவு
- 12:59 (IST) 08 Nov 202210% இட ஒதுக்கீடு விவகாரம்:சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, தலைமைச் செயலகத்தில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
- 12:46 (IST) 08 Nov 2022தஞ்சை பெரிய கோயில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி, தஞ்சை பெரிய கோயில் நடை அடைப்பு
மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்ட கோயில் நடை, இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.
இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.
- 12:19 (IST) 08 Nov 2022தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
சென்னை டைடல் பார்க் வளாகத்தில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- 12:19 (IST) 08 Nov 2022அனைத்து விசைப்படகு சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
- 12:18 (IST) 08 Nov 2022தினகரன் கூறியது வரவேற்கத்தக்கது - ஓ.பி.எஸ்
தேர்தல் கூட்டணி குறித்து தினகரன் கூறியது வரவேற்கத்தக்கது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயார் - ஓ.பி.எஸ்
- 11:05 (IST) 08 Nov 2022ஆபரண தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 38,064-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,758-க்கு விற்பனை
- 10:57 (IST) 08 Nov 2022கோவை கார் வெடித்த வழக்கில்: 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர். நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
- 09:45 (IST) 08 Nov 2022அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறை
இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவு
- 09:32 (IST) 08 Nov 202210% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காங்கிரஸ் வரவேற்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காங்கிரஸ் வரவேற்பு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தகவல்.
- 09:32 (IST) 08 Nov 2022நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும்
- 08:55 (IST) 08 Nov 20223 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் பாதாள சாக்கடை தோண்டும்போது ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த விவகாரம். ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.