Tamil News Live updates : Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
May 26, 2024 23:11 ISTவைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் - அன்புமணி
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ விரைவில் உடல் நலம் பெற்று பொதுவாழ்வைத் தொடர வேண்டும். வைகோ கலிங்கபட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
May 26, 2024 23:06 ISTதென் மாவட்டங்களில் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் - கிருஷ்ணசாமி
தென் மாவட்டங்களில் நடைபெறும் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அரை நூற்றாண்டு காலமாகவே சாதிய மோதல்கள் நடைபெற்று வருகிறது. தீபக் ராஜா கொலையை சுட்டிக்காட்டி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ள்ளார்.
-
May 26, 2024 22:57 ISTதிருப்பூரில் மதநல்லிணக்கம்: கோயில் கட்ட பள்ளிவாசல் நிலத்தை தானமாக அளித்த இஸ்லாமியர்கள்!
திருப்பூர் மாவட்டம், ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்காக பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் தானமாக வழங்கினர். இப்பகுதியில் ஏற்கனவே பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் ஏதும் இல்லாததால் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். தற்போது அங்கு விநாயகர் கோயில் கட்டப்பட்டு, இன்று குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து அசத்தினர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
-
May 26, 2024 22:54 ISTநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - கொளத்தூர் மணி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எச்சில் இலையில் படுத்து உருளுவது சரியே என்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.
-
May 26, 2024 18:37 ISTஒகேனக்கல்லில் அலை மோதும் சுற்றுலாப் பயணிகள்!
சுற்றுலா தளமான ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக காணப்பட்டனர்.
-
May 26, 2024 18:05 ISTநரியாக மாற விரும்பும் ஜப்பானின் இளைஞர்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜோகோ என்ற இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தன்னை நாயாக மாற்றிக் கொண்டார். தற்போது நரி அல்லது பாண்டா கரடியாக மாற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜோகோ நாயாக மாற ரூபாய் 12 லட்சம் வரை செலவழித்துள்ளார். -
May 26, 2024 17:45 ISTகர்நாடகாவில் ரவுடிகள் கும்பல் மோதல்
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் மே 20 அன்று, 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களால் திடீரென மோதல்; கார்களாலும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஒருவர் தற்செயலாக அக்காட்சியை வீடியோ எடுத்து X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது -
May 26, 2024 17:44 ISTகர்நாடகாவில் ரவுடிகள் கும்பல் மோதல்
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் மே 20 அன்று, 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களால் திடீரென மோதல்; கார்களாலும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஒருவர் தற்செயலாக அக்காட்சியை வீடியோ எடுத்து X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது -
May 26, 2024 17:00 ISTடெல்லி மருத்துவமனை தீ விபத்து- ராகுல் காந்தி இரங்கல்
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
-
May 26, 2024 16:39 ISTதமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம்
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம் என மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
-
May 26, 2024 16:23 ISTதிருச்சி: 3 நாளாகியும் நடவடிக்கை இல்லை!
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவின்போது (மே 23) கொள்ளிடம் பாலத்தின் நடுவே உள்ள சிமெண்ட் கட்டையில் பைக் ஓட்டி ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர். மூன்று நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென புகார் எழுந்துள்ளது.
-
May 26, 2024 16:07 ISTலேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துங்கள் – இ.பி.எஸ்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
-
May 26, 2024 15:38 ISTஅ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. எம்.எல்.ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
-
May 26, 2024 15:14 ISTரீமால் புயல்; விமான சேவைகள் ரத்து
ரீமால் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச என 394 விமானங்கள் இயங்காது என விமான நிறுவனங்கள் அறிவிப்பு அறிவித்துள்ளன.
-
May 26, 2024 14:52 ISTஇட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள் - திருமாவளவன்
நாம் சாதிக்கு எதிராக இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மத மற்றும் சாதி அடிப்படையில் இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழிவாங்குதல் நிறைந்த சமூகத்தில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் சமூக நீதி. சமூகநீதியை படிப்படியாக நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள். சமூக நீதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் அதற்கு எதிரானவர்கள் இடையே தான் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதட்டத்திற்கு உள்ளாகிறார் என காட்டுகிறது. ஜூன் 4-ம் தேதியோடு பிரதமர் மோடியின் முடிவடைய உள்ளது என சென்னையில் நடைபெற்ற 8-வது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்
-
May 26, 2024 14:32 ISTநாளை பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாளை பா.ஜ.க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பா.ஜ.க வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
May 26, 2024 14:07 ISTதிருச்சி அருகே வட்டாட்சியரின் அரசு வாகனம் மோதி ஒருவர் மரணம்
திருச்சி அருகே வட்டாட்சியரின் அரசு வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிகண்டம் யூனியன் அலுவலகம் எதிரே விபத்து நடந்த நிலையில், மதுபோதையில் இருந்த ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்தின் போது தாசில்தார் வாகனத்தில் இல்லை என கூறப்படுகிறது
-
May 26, 2024 13:58 ISTதமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
-
May 26, 2024 13:36 ISTவில்வித்தை: இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்
வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தல். தொடர்ந்து 3வது முறை தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி
-
May 26, 2024 13:22 ISTகுஜராத் தீ விபத்து: நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு
குஜராத் தீ விபத்து தொடர்பாக, அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு
33 பேர் உயிரிழந்த வழக்கை நாளை விசாரிக்கிறது, குஜராத் உயர்நீதிமன்றம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
தீ விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
-
May 26, 2024 12:45 ISTவைகோவுக்கு தோள்பட்டையில் காயம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம்- வைகோவின் மகன் துரை வைகோ தகவல்
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க இருந்த வைகோ
வைகோ தனது வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என துரை வைகோ பேச்சு
சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் துரை வைகோ தகவல்
-
May 26, 2024 12:28 ISTஅனைத்து தொகுதிகளிலும் அன்னதானம்: த.வெ.க அறிவிப்பு
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்
-
May 26, 2024 11:52 ISTஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்- ஸ்டாலின்
ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். "இந்தியா"வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்
சமூகநீதிக்கு எதிராக, மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது வன்மத்தைக் கக்குகிறார்கள்.
ஜூன் 3ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
-
May 26, 2024 11:51 ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பரக்காணி - வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி கொட்டும் தண்ணீர்
விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெள்ள நீரால், விவசாயிகள் பாதிப்பு
-
May 26, 2024 11:37 ISTபள்ளி திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளி திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள், பள்ளி திறப்பதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு "மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . திறந்தவெளி கிணறு இருக்கக்கூடாது, மின்சாதன பழுதுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
-
May 26, 2024 11:35 IST100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை எளிய நடுத்தர வாடகை தாரர்களுக்கும் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை எளிய நடுத்தர வாடகை தாரர்களுக்கும் கிடைக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் . அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், வாடகைதாரர்களுக்கு விலையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் "வாடகைதாரர் காலி செய்தால், அடுத்து வருபவர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க வசதியாக, மின் இணைப்பை துண்டிக்க கூடாது.
-
May 26, 2024 10:50 ISTராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு .கடல் நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும் நாட்டுப் படகுகள் - மீனவர்கள் அச்சம் காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தகவல் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்.
-
May 26, 2024 10:49 ISTசாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்
சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பைக் ஓட்டிச் சென்ற இளைஞர். திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீதுள்ள சாலையில் பரபரப்பு.
-
May 26, 2024 10:49 ISTகார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. ஒரு சிறுவன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு .விபத்தில் உயிரிழந்தவர்கள் சிக்கபல்லாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் மங்களூரில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க குடும்பத்துடன் சென்ற போது விபத்து உயிரிழந்த 6 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
-
May 26, 2024 10:17 ISTநெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது
நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது. தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது நவீன் மற்றும் முருகன் தப்பியோட முயற்சி கீழே விழுந்ததில் இருவரும் காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி .இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் பிடிபட்டு நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
May 26, 2024 09:21 ISTமகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.26 கோடி பறிமுதல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் தொழிலதிபரின் இடங்களில் 30 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அமலாகத்துறையினரின் 7 கார்களில் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற அதிகாரிகள்
-
May 26, 2024 09:01 IST6ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.2% வாக்குகள் பதிவு
6ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.2% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
-
May 26, 2024 08:55 ISTடெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பேர் உயிரிழப்பு .டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது .தீ விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தைகள் 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் இன்று உயிரிழந்ததாக தகவல். மீட்கப்பட்ட குழந்தைகளில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குழந்தைக்கு வென்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
-
May 26, 2024 08:53 ISTரீமால் புயல் வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வந்தது. இன்று காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கதேசம், சாகர்தீவு மற்றும் கேபுபாரா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது ரீமால் புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு.
-
May 26, 2024 08:12 ISTகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
8 நாட்களுக்கு பின் மெயின் அருவியில் அனுமதி =சுற்றுலா பயணிகள் உற்சாகம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் அனுமதி மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் அனுமதி
-
May 26, 2024 08:08 ISTநெய்வேலி அருகே இளைஞர் மரணத்தில் மர்மம் என உறவினர்கள் புகார்
நெய்வேலி அருகே இளைஞர் மரணத்தில் மர்மம் என உறவினர்கள் புகார் காவல் நிலையம் அருகே சடலமாக கிடந்ததால் குற்றச்சாட்டு. மது அருந்தியதாக வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் மரணம் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்.
-
May 26, 2024 08:06 ISTஇன்று ரேஷன் கடைகள் இயங்கும்
தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல்துறை அறிவிப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களை உரிய காலத்திற்குள் வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளது.
-
May 26, 2024 08:05 IST3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.