Advertisment

Tamil News Today Highlights: வெளுத்து வாங்கும் கனமழை: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
rain alert

IE Tamil News

பெட்ரோல் – டீசல் விலை : சென்னையில் 575வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை.

Advertisment

News Updates

ரூ.6000 வெள்ள நிவாரண நிதி பெற குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் . ரூ.6000 வெள்ள நிவாரண நிதி பெற குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். டோக்கன் கிடைக்கப் பெற்றவர்கள், குறிப்பிட்ட தேதி, நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் ரூ.6000 வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவம்

 சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 5ம் நாள் உற்சவம். மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில், நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் சேரும் வைபவம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 17, 2023 21:41 IST
    பாளையங்கோட்டையில் 30 செ.மீ மழைப் பொழிவு


    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 30 செ.மீ மழை  கொட்டித் தீர்த்துள்ளது. அதிகப்பட்சமாக மாஞ்சோலையில் 35 செ.மீ மழை பெய்துள்ளது.



  • Dec 17, 2023 21:40 IST
    பாளையங்கோட்டையில் 30 செ.மீ மழைப் பொழிவு


    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 30 செ.மீ மழை  கொட்டித் தீர்த்துள்ளது. அதிகப்பட்சமாக மாஞ்சோலையில் 35 செ.மீ மழை பெய்துள்ளது.



  • Dec 17, 2023 21:22 IST
    நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

     

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (டிச.18) காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், “4 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக் கூடும்” என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.



  • Dec 17, 2023 21:19 IST
    4 மாவட்டங்களில் கனமழை: அதிமுக தொண்டர்களுக்கு இ.பி.எஸ் உத்தரவு


    4 மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

    மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கழகத் தொண்டர்கள் களத்தில் நின்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் , தங்கள் சுய பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டு கழகத்தின் சார்பில் உரிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 



  • Dec 17, 2023 21:14 IST
    நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை: மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்


    நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் #NorthEastMonsoon அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

    அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Dec 17, 2023 21:09 IST
    திருச்செந்தூரில் மின் விநியோகம் நிறுத்தம்

     

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக திருச்செந்தூர் பகுதி முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுளளது.



  • Dec 17, 2023 21:07 IST
    4 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை


    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.



  • Dec 17, 2023 21:02 IST
    அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

     

    தென்காசியில் இருந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி செல்லும் 15க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.



  • Dec 17, 2023 21:00 IST
    அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

     

    கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை (டிச.18) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    அதேபோல், தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



  • Dec 17, 2023 21:00 IST
    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 வரை ரெட் அலர்ட்

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் நாளை காலை 8.30 அரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2023 20:59 IST
    தென் மாவட்டங்களில் கனமழை: 2.50 லட்சம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை எஸ்.எம்.எஸ் - தலைமை செயலாளர் பேட்டி

    அதிகாரிளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது: “தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சராசரியாக் 25 செ.மீ மழை பெய்துள்லது. 2.50 லட்சம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை எஸ்.எம்.எஸ் விடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 17, 2023 20:46 IST
    கனமழை: கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உதவி எண்கள் அறிவிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவசர உதவிகளுக்கு காவல்துறையைத் தொடர்புகொள்ள - 70103 63173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். நாகர்கோவில் மாநகராட்சியைத் தொடர்புகொள்ள - 04652  230984 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். அதே போல, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 0461 - 2340101 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். 9486454714 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2023 20:37 IST
    நெல்லையப்பர் கோவிலை சூழ்ந்துள்ள மழை நீர்


    திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழை காரணமாக நெல்லையப்பர் கோவிலை சுற்றி மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.



  • Dec 17, 2023 20:32 IST
    கன்னியாகுமரி அஞ்சுகிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது; வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு

    கன்னியாகுமரி அஞ்சு கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது; வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • Dec 17, 2023 20:29 IST
    கனமழை: தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

    தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய தென் மாவட்ட ஆட்சியர்கள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால், மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும்; பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்; பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்; அணைகளில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



  • Dec 17, 2023 20:25 IST
    நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் புகுந்த மழைநீர்; அகற்றும் பணி தீவிரம்

    நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் புகுந்த மழைநீரை முழுமையாக அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



  • Dec 17, 2023 20:24 IST
    கனமழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (18.12.2023) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2023 19:58 IST
    கேபி முனுசாமி தந்தை மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தந்தை பூங்காவன கவுண்டர் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.
    அவரது மரணத்தக்கு முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சிக் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Dec 17, 2023 19:48 IST
    சிவனின் ஒரு வீடு தமிழ்நாடு, மற்றொரு வீடு வாரணாசி: பிரதமர் மோடி

    “தமிழர்களுக்கும் வாரணாசிக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டில் இருந்து காசி செல்வது என்பது சிவப்பெருமானின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு செல்வதை போன்றது” என கன்னியாகுமரி-காசி சங்கமம் ரயிலை தொடங்கிவைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.



  • Dec 17, 2023 19:30 IST
    காசி சங்கமம் ரயிலை தொடங்கிவைத்த மோடி

     

    வாரணாசி - கன்னியாகுமரி இடையே காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



  • Dec 17, 2023 18:54 IST
    கன்னியாகுமரியில் கனமழை: நாகர்கோவிலில் மனோ தங்கராஜ் ஆய்வு

    கன்னியாகுமரியில் கனமழை பெய்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் ஆய்வு நடத்தினார். அப்போது, “ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் மழை பாதிப்பு குறைவாக உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.



  • Dec 17, 2023 18:52 IST
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு


    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக திங்கள்கிழமை (டிச.18) நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  



  • Dec 17, 2023 18:18 IST
    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 17, 2023 17:58 IST
    கனமழை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

    தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.



  • Dec 17, 2023 17:44 IST
    திருநெல்வேலியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (டிச.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது



  • Dec 17, 2023 17:38 IST
    நெல்லையில் தற்காலிக முகாம்கள் தயார்; மாநகராட்சி அறிவிப்பு

    நெல்லையில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை – 2

    தச்சநல்லூர் – 2

    மேலப்பாளையம் – 3

    பாளையங்கோட்டை - 2



  • Dec 17, 2023 17:35 IST
    தென்காசி மக்கள் கவனத்திற்கு; உதவி எண்கள் அறிவிப்பு

    தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1077 மற்றும் 04633 290 548 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • Dec 17, 2023 17:33 IST
    கன மழை எச்சரிக்கை; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கன மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



  • Dec 17, 2023 17:31 IST
    தொடர் கனமழை; 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

    தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். 4 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது



  • Dec 17, 2023 17:28 IST
    தென் தமிழகம் விரையும் பேரிடர் மீட்புக்குழுக்கள்

    தூத்துக்குடி, நெல்லை, நாகை மாவட்டங்களில் கனமழை காரணமாக தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுக்கள் தென் தமிழகம் விரைகிறது. நள்ளிரவுக்குள் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது



  • Dec 17, 2023 16:57 IST
    மழை வெள்ள பாதிப்பு; புகார் தெரிவிக்க நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொலைப்பேசி – 04652 230984

    வாட்ஸ் அப் - 9487038984



  • Dec 17, 2023 16:53 IST
    தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 17, 2023 16:32 IST
    திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழைக்கால அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1077

    மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1070

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி – 101 & 102

    மின்சார தொடர்பான புகார்களுக்கு – 94987 94987

    மழைக்கால நோய்கள் தொடர்பான உதவிக்கு – 104

    அவசர மருத்துவ உதவிக்கு - 108



  • Dec 17, 2023 16:27 IST
    தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு 30 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது, இதனால் 17,000 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. தென் தாமரை குளம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம் 134.6 அடியாக உள்ளது



  • Dec 17, 2023 16:13 IST
    கவனமா இருங்க மக்களே; தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை

    குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும். செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும். மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் நாளை காலை 50 செ.மீட்டரை தாண்டிவிடும். தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்



  • Dec 17, 2023 15:57 IST
    குற்றால அருவிகளில் குளிக்க தடை

    தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Dec 17, 2023 15:35 IST
    கனமழை; மதுரையில் தரையிறங்கிய விமானங்கள்

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மோசமான வானிலையால் தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது



  • Dec 17, 2023 15:07 IST
    பாளையம் கோட்டையில் பாய்ந்து ஓடும் வெள்ளம்

    திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், பாளையம் கோட்டை பகுதியில் சாலையில் ஒரு அடி அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



  • Dec 17, 2023 14:57 IST
    கூடன்குளம் பகுதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

    திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், கூடன்குளம் அருகே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



  • Dec 17, 2023 14:46 IST
    கனமழை எச்சரிக்கை; 3 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், இந்த 3 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது



  • Dec 17, 2023 14:41 IST
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 17, 2023 14:33 IST
    எண்ணெய் கலப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

    எண்ணூரில் எண்ணெய் கலப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500, படகுகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும்

    எண்ணெய் பாதித்த மீனவ கிராமங்களில் 2300க்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் சுமார் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு



  • Dec 17, 2023 14:33 IST
    ரெட் அலெர்ட்

    நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்



  • Dec 17, 2023 14:08 IST
    திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    அதிகனமழை காரணமாக பாதுகாப்பு கருதி பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளிலிருந்து மதியம் 2 மணிக்கு 14 ஆயிரம் கனஅடி நீரும், மாலை 4 மணிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்க இருப்பதால், திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2023 14:08 IST
    தென்காசி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

    பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம்;

    நீர் நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்;

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்;

    குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம்- தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவுறுத்தல்



  • Dec 17, 2023 13:36 IST
    இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை  ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.17) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Dec 17, 2023 13:34 IST
    திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிப்பு!

    Credit: Sun News Twitter



  • Dec 17, 2023 13:33 IST
    கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து முடக்கம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது.

    அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம். வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்கிறார்கள்



  • Dec 17, 2023 13:00 IST
    நாளையும் ஆரஞ்சு அலர்ட்

    தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • Dec 17, 2023 12:58 IST
    கனிமொழி எம்பி பேட்டி

    பாஜக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கான எந்த முன்னேற்றமும் இல்லை. விவசாயம் உள்ளிட்ட எல்லா தொழில்களின் வளர்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜாதி,மத வேறுபாடு பிரச்னைகளை தொடர்ந்து தூண்டி விட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழலை பாஜக அரசு உருவாக்கியுள்ளது;

    நிவாரண தொகை புயலால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுவதற்கே நிவாரணத்திற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாதவிடாய் காலங்களில் சில பெண்களால் வேலைக்கு செல்ல முடியும், சிலரால் செல்ல முடியாது; அதனால் யாருக்கு என்ன தேவையோ அதற்கேற்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும்- சென்னை, மைலாப்பூரில் கனிமொழி எம்பி பேட்டி



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment