Advertisment

Tamil news today : சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Nov 21, 2022 08:31 IST
Tamil news today : சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்,  செவிலிமேடு பகுதியில் நின்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.  ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல மீன்வளத்துறை வலியுறுத்தல்



  • 21:59 (IST) 21 Nov 2022
    ஜல்ஜீவன் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சாதனை

    ஜல்ஜீவன் திட்டத்தில் இந்திய அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 288 ஊராட்சிகளில் 1,88,320 குடிநீர் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.



  • 20:41 (IST) 21 Nov 2022
    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் மரணம்

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் காலமானார். சென்னை, அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.



  • 19:45 (IST) 21 Nov 2022
    சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது

    கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில், இன்று காலை தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணி நகர தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 18:57 (IST) 21 Nov 2022
    விஜய் படத்தில் கமல்ஹாசன்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்கும் என்பது நினைவு கூரத்தக்கது.



  • 18:42 (IST) 21 Nov 2022
    யானை தாக்கி பெண் உயிரிழப்பு.. பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்

    கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறுதல் சொல்ல சென்ன அப்பகுதி பாஜக எம்.எல்.ஏவை அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் உயிரிழந்த நிலையில் தாமதமாக சென்றதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.



  • 18:34 (IST) 21 Nov 2022
    கரூரில் கள்ளநோட்டு விநியோகம்... இருவர் கைது

    கரூரில் கள்ள நோட்டு விநியோகம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் இந்தப் பணத்தை ஆன்லைன் மூலமாக மாற்ற முயன்றுள்ளனர்.



  • 18:33 (IST) 21 Nov 2022
    ரயிலின் வேகம் அதிகரித்து சோதனை

    சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில் வேகத்தை 130 கிலோ மீட்டராக அதிகரித்து தெற்கு ரயில்வே சோதனை செய்தது.



  • 18:29 (IST) 21 Nov 2022
    ரயிலின் வேகம் அதிகரித்து சோதனை

    சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில் வேகத்தை 130 கிலோ மீட்டராக அதிகரித்து தெற்கு ரயில்வே சோதனை செய்தது.



  • 18:29 (IST) 21 Nov 2022
    ராமேஸ்வரம்-குமரி ரயில் மாற்றம்

    ராமேஸ்வரம் குமரி ரயில் இரவு 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது.



  • 18:28 (IST) 21 Nov 2022
    ராம ஜெயம் கொலை வழக்கு.. விசாரணை அறிக்கை தாக்கல்

    திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கில் போலீசார் விசாரணை அறிக்கையை 2 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 18:09 (IST) 21 Nov 2022
    பொருளாதார இடஒதுக்கீடு.. மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு

    பொருளாதார இடஒதுக்கீடு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அதில், “₹2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ₹8 லட்சம் வருவாய் பெறும் பொருளாதார நலிவுற்ற பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந்தாதா எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.



  • 17:35 (IST) 21 Nov 2022
    சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை

    காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

    தற்போது சென்னையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.



  • 17:31 (IST) 21 Nov 2022
    ராம ஜெயம் கொலை வழக்கு.. விசாரணை அறிக்கை தாக்கல்

    திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கில் போலீசார் விசாரணை அறிக்கையை 2 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:23 (IST) 21 Nov 2022
    திமுக மீது அவதூறு.. சைபர் க்ரைமில் புகார்

    கட்டெரும்பு என்ற பெயரில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக குறித்தும், கருணாநிதி, மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புவதாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • 16:58 (IST) 21 Nov 2022
    அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க அரசாணை வெளியீடு

    அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சத்துணவில் ஒரு முட்டை வழங்கப்பட்ட நிலையில், மேலும் இரு முட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்ட சத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துமாவு, பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது



  • 16:30 (IST) 21 Nov 2022
    ராஜீவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு; மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு ஏற்கனவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது



  • 16:22 (IST) 21 Nov 2022
    முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 29ம் தேதி அரியலூர் பயணம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி அரியலூர் செல்கிறார். அரியலூர், பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார், மேலும், கங்கைக்கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளையும் பார்வையிடுகிறார்



  • 15:57 (IST) 21 Nov 2022
    254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை - பச்சையப்பன் அறக்கட்டளை

    பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் 254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி முதல்வர்கள் விளக்க மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது



  • 15:46 (IST) 21 Nov 2022
    அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; நவம்பர் 30க்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

    அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணையை நவம்பர் 30க்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பதில் மனு தாக்கல் செய்யவும் ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 15:28 (IST) 21 Nov 2022
    2026ல் பா.ம.க தலைமையில் ஆட்சி அமைப்போம் - அன்புமணி ராமதாஸ்

    2026ல் பா.ம.க தலைமையில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் என சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • 14:37 (IST) 21 Nov 2022
    செஞ்சிலுவை சங்கம் முறைகேடு வழக்கு

    செஞ்சிலுவை சங்க முறைகேடு வழக்கில் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 14:37 (IST) 21 Nov 2022
    நிலநடுக்கம்

    இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் 300 பேர் படுகாயம் அடைந்தனர்.



  • 13:47 (IST) 21 Nov 2022
    சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:47 (IST) 21 Nov 2022
    சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு

    மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது



  • 13:21 (IST) 21 Nov 2022
    தமிழ்நாடு அணி உலக சாதனை

    விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது.



  • 13:21 (IST) 21 Nov 2022
    பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா

    பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.



  • 12:59 (IST) 21 Nov 2022
    தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி வீரர் ஜெகதீசன் 250 ரன்கள் குவித்து அபாரம் .

    LIST A கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் (277) எடுத்து சாதனையை படைத்தார் ஜெகதீசன்



  • 12:58 (IST) 21 Nov 2022
    ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த விவகாரம்

    காயம் அடைந்த ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    மைசூரில் தங்கி இருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் பறிமுதல்

    சர்க்யூட், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர், ஆதார் கார்டு, சிம்கார்டுகள், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்து தடயவியல் சோதனை

    உபா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஷாரிக் தேடப்பட்ட குற்றவாளி



  • 12:25 (IST) 21 Nov 2022
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - அமைச்சர் தகவல்

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்

    வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு



  • 12:24 (IST) 21 Nov 2022
    தமிழக கிரிக்கெட் அணி தொடக்க வீரர்கள் சாதனை

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியின் தொடக்க வீரர்கள் சாதனை

    முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் எடுத்து சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி சாதனை



  • 12:23 (IST) 21 Nov 2022
    கவனக்குறைவே காரணம்; சிகிச்சை முறையில் தவறு இல்லை

    மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மருத்துவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 12:22 (IST) 21 Nov 2022
    மின் கம்பியை மிதித்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

    கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

    தரம் இல்லாத மின்கம்பியால் விபத்து நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு



  • 12:08 (IST) 21 Nov 2022
    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

    தென்காசி மாவட்டம் தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு.

    வனப்பகுதியில் மயங்கி விழுந்த 40 வயது யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

    தொடர்ந்து முயற்சித்தும் யானை உயிரிழந்ததால் வனத்துறையினர் சோகம்



  • 12:07 (IST) 21 Nov 2022
    14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

    இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

    கடந்த 14ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேர் கைது



  • 12:07 (IST) 21 Nov 2022
    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

    திருச்சி காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தடை

    மாற்று பாதையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    சாலையில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

    போக்குவரத்து நெரிசலால் பணிக்கு செல்வோர் கடும் அவதி



  • 12:06 (IST) 21 Nov 2022
    12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

    ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

    அனுமதி கோரி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் மனு

    திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையுடன் 12 பேரும் இன்று ஆஜராகின்றனர்



  • 12:06 (IST) 21 Nov 2022
    ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ இன்று விசாரணை

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த விவகாரம்

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஷாரிக்கிடம் என்ஐஏ இன்று விசாரணை

    செல்போனில் ஷாரிக் அடிக்கடி பேசி வந்த நபர்களிடமும் விசாரணை



  • 12:05 (IST) 21 Nov 2022
    'மெட்ராஸ் ஐ' பரவல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

    தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது.

    கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறி.

    குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும்

    தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்க வேண்டும்.

    டிசம்பர் 2வது வாரத்திற்கு பின் மெட்ராஸ் ஐ இருக்காது

    சென்னை, எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி



  • 11:13 (IST) 21 Nov 2022
    மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடக்கம்

    சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது

    வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு

    எம்.எல்.ஏ.க்கள், விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பு

    மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்புக்குழு அமைப்பு

    மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்



  • 10:24 (IST) 21 Nov 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

    சென்னை, தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆரூர்தாஸ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்



  • 09:34 (IST) 21 Nov 2022
    இங்கிலாந்து - ஈரான்

    FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள் மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து - ஈரான், இரவு 9.30 மணிக்கு செனகல் - நெதர்லாந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்கா - வேல்ஸ் ஆகிய அணிகள் மோதல்



  • 09:34 (IST) 21 Nov 2022
    வாரிசு

    பொங்கல் திருநாளுக்கு விஜய் நடித்த 'வாரிசு' படம் வெளியாவது உறுதி" செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் மீண்டும் அறிவிப்பு



  • 09:33 (IST) 21 Nov 2022
    நாளை மறுநாள் வரை மழை தொடரும்

    தமிழகத்தில் நாளை மறுநாள் வரை மழை தொடரும் என்று சென்னை, வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 09:32 (IST) 21 Nov 2022
    தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை காலை நெருங்கக்கூடும்

    சென்னையில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தமிழகம் - புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை காலை நெருங்கக்கூடும்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment