Advertisment

Tamil news today :சென்னையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today :சென்னையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பக்தி

கார்த்திகை முதல் நாள் - தொடங்கும் ஐயப்ப விரதம் மாலை அணிவதற்கு கோவில்களில் குவியும் ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை செல்ல தயாராகும் பக்தர்கள் சபரிமலையில் நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

மழை விடுமுறை

சீர்காழியில் பெய்த கனமழையால்,  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். 



  • 21:47 (IST) 17 Nov 2022
    மேற்கு வங்கத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இள கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 20:45 (IST) 17 Nov 2022
    நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 6 பேரையும், விடுதலை செய்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 20:40 (IST) 17 Nov 2022
    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - விசாரணை அறிக்கை ஒப்படைப்பு

    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையிடம் விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்தது. அடுத்த கட்ட நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.



  • 20:18 (IST) 17 Nov 2022
    இலங்கையில் இருந்து 100 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி; வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 100 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கை கடற்படையின் செயலால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படும் என முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



  • 19:52 (IST) 17 Nov 2022
    சீர்காழி தாலுகாவில் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறைஅறிவித்துள்ளார்.



  • 19:26 (IST) 17 Nov 2022
    ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி ஆர்.ஆர். கோபால்ஜி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படவில்லை என்று

    மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு, சி.பி.ஐ-யிடம் மனு கொடுக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 18:49 (IST) 17 Nov 2022
    ஓய்வுபெற்ற டென்டீ (TANTEA) தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு

    தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளர் பங்களிப்புத் தொகையான ₨13.46 கோடியை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் ஓய்வு பெற்ற 677 பேருக்கு 573 வீடுகளுக்கான பணி நிறைவாகும் நிலையில் உள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • 17:56 (IST) 17 Nov 2022
    பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலரின் தகுதி நீக்கம் ரத்து

    பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர் சொக்கலிங்கத்தை தகுதி நீக்கம் செய்த அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர்களில் ஒருவராக தேர்வான சொக்கலிங்கம் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தகுதி நீக்கம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 17:44 (IST) 17 Nov 2022
    ஷ்ரத்தா கொலை வழக்கு - 5 நாட்கள் காவல்

    டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் ஆஃப்தாப்-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:58 (IST) 17 Nov 2022
    கேரளாவில் மண்ணில் புதைந்த தொழிலாளி - மீட்பு

    கேரளா, கோட்டயம் பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் அமைக்க குழி தோண்டும் போது மண்சரிந்து, மண்ணில் புதைந்த தொழிலாளரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்



  • 16:38 (IST) 17 Nov 2022
    சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்

    சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது



  • 16:23 (IST) 17 Nov 2022
    நவம்பர் 19-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு உத்தரவு

    வரும் சனிக்கிழமை(19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:17 (IST) 17 Nov 2022
    பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி – அண்ணாமலை அறிவிப்பு

    இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும் என பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • 15:53 (IST) 17 Nov 2022
    பிரியாவிற்கு அஞ்சலி செலுத்திய அண்ணாமலை, எல்.முருகன்

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிரியாவின் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார்



  • 15:31 (IST) 17 Nov 2022
    புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் டெண்டரை இறுதி செய்யக் கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக் கூடாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மின்துறை சான்றிதழ் பெற்றோர் நலசங்கம் மற்றும் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 15:15 (IST) 17 Nov 2022
    ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



  • 14:55 (IST) 17 Nov 2022
    சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் மறுப்பு!

    டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் மறுப்பு. அமலாக்கத்துறை தொடர்ந்த ஹவாலா மோசடி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:54 (IST) 17 Nov 2022
    கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தொழிலாளியின் உடல் மீட்பு!

    கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமலைப்பட்டியை சேர்ந்த கோபால் (36) என்பவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். 2 நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலத்தை யாரும் கவனிக்காத அவலம் ஏற்பட்டுள்ளது.



  • 14:20 (IST) 17 Nov 2022
    பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

    பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை மிக முக்கியமான ஒன்று. அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



  • 14:11 (IST) 17 Nov 2022
    வாரணாசி செல்லும் தமிழக பிரதிநிதிகள்!

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகள் வாரணாசி செல்கின்றனர். நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ரயிலை எழும்பூரில் கொடியசைத்து வழியனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.



  • 13:43 (IST) 17 Nov 2022
    சென்னையில் மெகா திட்டம் - முதல்வர் ஆலோசனை!

    ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் 11 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது. இதில், ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கும் வசதி குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார்.



  • 13:26 (IST) 17 Nov 2022
    'அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது' - ஐகோர்ட்டு உத்தரவு!

    தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் முறையான அனுமதி இன்றி தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலையை திறக்க கூடாது என்று நீதிபதிகள்

    உத்தரவிட்டுள்ளனர்.



  • 13:23 (IST) 17 Nov 2022
    3 நாட்களுக்கு மிதமான மழை!

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:06 (IST) 17 Nov 2022
    கனமழைக்கு வாய்ப்பு

    வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:05 (IST) 17 Nov 2022
    கனமழைக்கு வாய்ப்பு

    வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:43 (IST) 17 Nov 2022
    வெள்ள அபாய எச்சரிக்கை

    தேனி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 12:43 (IST) 17 Nov 2022
    ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.



  • 12:42 (IST) 17 Nov 2022
    வீராங்கனை உயிரிழந்த விவகாரம்

    தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், இனி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களை தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 11:47 (IST) 17 Nov 2022
    செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு

    அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:17 (IST) 17 Nov 2022
    சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்

    சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். விண்ணப்பித்த 4,366 மாணவர்களில் 4,092 பேர் தகுதி பெற்றுள்ளனர்.



  • 11:08 (IST) 17 Nov 2022
    பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா ரூ. 10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை பிரியா குடும்பத்தினரிடம் வழங்கினார் . நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான ஆணையும் வழங்கினார்.



  • 11:07 (IST) 17 Nov 2022
    முதல்வர் உறுதியளித்தார்

    பிரியா நினைத்ததை நீ சாதிக்க வேண்டும் என முதல்வர் கூறினார் - பிரியாவின் சகோதரர் தைரியமாக இருங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்



  • 09:00 (IST) 17 Nov 2022
    மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

    அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக, கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு .



  • 08:59 (IST) 17 Nov 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!



  • 08:58 (IST) 17 Nov 2022
    ல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி

    தமிழ்நாட்டின் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.



  • 08:56 (IST) 17 Nov 2022
    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு

    வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment