/tamil-ie/media/media_files/uploads/2022/05/TNPSC.jpg)
Tamil news updates
இன்று தமிழக அரசின் குரூப்-1 பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடைபெறுகிறது. துணை ஆட்சியர், துணை பதிவாளர் உள்ளிட்ட 92 பணியிடங்களுக்கு, 3.22 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
- 23:55 (IST) 18 Nov 2022காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க காத்திருக்கிறேன் - மோடி
வாரணாசியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் நிகழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
- 21:38 (IST) 18 Nov 2022சென்னையில் இந்திய கடற்படை பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து; கர்ப்பிணி பெண் பலி
சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி லதா உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
கடற்படையை சேர்ந்த ஊழியர்கள் பொதுமக்களை தாக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 21:30 (IST) 18 Nov 2022சுங்கச்சாவடிகளில் 40% கட்டணம் குறைக்க முடிவு
தி.மு.க எம்.பி வில்சன் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு வாகனப்பதிவின் போதே சிறு கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றியமைக்க கோரி இருந்தார். நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடி கட்டணத்தை 40% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க எம்.பி வில்சன் கடிதத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்சரி தெரிவித்துள்ளார்.
- 20:59 (IST) 18 Nov 2022சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ. 21-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், நவம்பர் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 20:15 (IST) 18 Nov 2022மாமல்லபுரம் - நவம்பர் 19ம் தேதி கட்டணமின்றி பார்வையிடலாம் - தொல்லியல் துறை அறிவிப்பு
மாமல்லபுரம் புராதன சின்னங்களை நவம்பர் 19ம் தேதி ஒரு நாள் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
- 18:45 (IST) 18 Nov 2022பிபா உலக கோப்பை... மைதானங்களில் பீர் விற்க தடை
வளைகுடா நாடான கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளை முன்னிட்டு மைதானங்களில் பீர் உள்ளிட்ட ஆல்கஹால் பானங்கள் விற்பனை செய்ய கத்தார் நாடு தடை விதித்துள்ளது.
- 18:40 (IST) 18 Nov 2022அதிமுக தலைமையில்தான் கூட்டணி.. செல்லூர் ராஜூ
“வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக என்னும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு செல்ல தயாராக உள்ளது.
இதில் ஏறுபவர்கள் டெல்லிக்கு செல்லலாம்” என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்தத் தலைவருமான செல்லூர் ராஜூ கூறினார்.
- 18:40 (IST) 18 Nov 2022அதிமுக தலைமையில்தான் கூட்டணி.. செல்லூர் ராஜூ
“வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக என்னும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு செல்ல தயாராக உள்ளது.
இதில் ஏறுபவர்கள் டெல்லிக்கு செல்லலாம்” என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்தத் தலைவருமான செல்லூர் ராஜூ கூறினார்.
- 18:16 (IST) 18 Nov 2022கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெறக் கோரி கடிதம்
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பணி ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 17:54 (IST) 18 Nov 2022டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது
டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லியில் டிரைவராக வேலை பார்த்தபடி பாகிஸ்தான் உளவாளியாக அவர் செயல்பட்ட நிலையில் இன்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- 17:53 (IST) 18 Nov 2022டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது
டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லியில் டிரைவராக வேலை பார்த்தபடி பாகிஸ்தான் உளவாளியாக அவர் செயல்பட்ட நிலையில் இன்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- 17:43 (IST) 18 Nov 20222023 மார்ச் 15 கால்நடை மருத்துவர் பணிக்கு தேர்வு
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கு டிசம்பர் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- 17:24 (IST) 18 Nov 2022இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்.. நயினார் நாகேந்திரன்
இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும். அதிமுக பிரிந்து இருக்காமல் சேர்ந்து இருக்கும்போது மாபெரும் சக்தியாக விளங்கும். பாஜக, அதிமுக கூட்டணியில் பிரச்னை இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
- 17:01 (IST) 18 Nov 2022நாளை குரூப்1 முதல் நிலை தேர்வு
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 18 துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட காலியாகவுள்ள 92 பணிகளுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை (நவ.19) நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் எழுதுகின்றனர்.
- 16:42 (IST) 18 Nov 2022மாணவி பிரியா மரண வழக்கு மருத்துவர்கள் ஜாமின் மனு மீது விவாதம்
கால்பந்து வீராங்கனை பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை செய்த இருவரும் நன்றாக உள்ளனர் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும், வேண்டுமானால் சரண் அடையுங்கள் என்று நீதிபதி கூறியுள்ளார். ஆனால் சரணடைவதற்கு காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது, இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
- 16:40 (IST) 18 Nov 2022சென்னை பல்கலைகழக தேர்வுக்கான தேதி மாற்றம்
சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது நாளை குரூப்-1 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பல்கலை. துணைவேந்தர் கௌரி தகவல் தெரிவித்துள்ளார்.
- 16:11 (IST) 18 Nov 2022பிரியா மரணம் - மருத்துவர்கள் ஜாமின் கோரி மனு
கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்கள் 2 பேரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காவல் துறை 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தான் சம்பவம் நடந்துள்ளது விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்
- 15:25 (IST) 18 Nov 2022விரைவில் அதிமுக பொதுக்குழு : ஒ.பி.எஸ் தகவல்
அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் "உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்" "ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்" 'வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன்" என்றும் கூறியுள்ளார்.
- 15:24 (IST) 18 Nov 2022விரைவில் அதிமுக பொதுக்குழு : ஒ.பி.எஸ் தகவல்
அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் "உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்" "ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்" 'வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன்" என்றும் கூறியுள்ளார்.
- 15:23 (IST) 18 Nov 2022அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு நவ. 23ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்
- 15:22 (IST) 18 Nov 2022ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் கடிதம்
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இனிப்பு கடை வாசலில் கண்டெடுக்கப்பட்ட இந்த கடிதத்தை எழுதிய மர்மநபர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- 15:19 (IST) 18 Nov 20225 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானியம் தொடரும் - செந்தில்பாலாஜி
மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
- 15:18 (IST) 18 Nov 2022மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு
ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 15:17 (IST) 18 Nov 2022மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு
ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 13:40 (IST) 18 Nov 2022குரூப்-1 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!
நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ள நிலையில், குரூப்-1 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி உறுதி அளித்துள்ளது.
- 13:39 (IST) 18 Nov 2022இந்தியா vs நியூசிலாந்து: தொடர் மழை - ஆட்டம் ரத்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கவிருந்த வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் தொடர் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வருண பகவான் கடைசி வரை இரக்கம் காட்டவில்லை.
இவ்விரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மவுன்ட் மவுங்கானுய்யில் நடக்கிறது.
- 13:25 (IST) 18 Nov 2022அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு!
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை மரணம் என குற்றச்சாட்டு வைத்துள்ள உறவினர்கள், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்ட ஆண் குழந்தை எப்படி இறந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
- 13:21 (IST) 18 Nov 2022விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கரூரில் விஷவாயு தாக்கி 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 12:58 (IST) 18 Nov 2022மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 12:30 (IST) 18 Nov 2022அமைச்சர் பொன்முடி பேட்டி
சென்னை பல்கலைக்கழக தேர்வு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான தேர்வு உரிய முறையில் நடைபெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
- 11:46 (IST) 18 Nov 2022முதல் தனியார் ராக்கெட் விக்ரம் எஸ் விண்ணில் ஏவப்பட்டது
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் எஸ், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 83 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் மூன்று செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
- 11:29 (IST) 18 Nov 2022மோடி உரை
தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வர ஓய மாட்டோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எறு டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
- 11:29 (IST) 18 Nov 20226 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள்
6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகளை அடுத்தாண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- 11:28 (IST) 18 Nov 2022மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்
கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மரண வழக்கில், மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- 09:42 (IST) 18 Nov 2022கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது . நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
- 09:41 (IST) 18 Nov 2022ரயிலை நிறுத்தி தீ அணைக்கப்பட்டது
அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து . ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி தீ அணைக்கப்பட்டது
- 09:41 (IST) 18 Nov 2022அரசியலில் இருந்தே விலகுவேன்
ஆந்திராவில், தெலுங்குதேச கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலில் இருந்தே விலகுவேன் - ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.