Advertisment

Tamil News highlights 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

15 December 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gas

IE Tamil LIVE Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 Tamil news updates 

நாடாளுமன்ற புகைக்குண்டு வீச்சு - 5வது நபர் கைது

நாடாளுமன்ற புகைக்குண்டு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது. டெல்லி துத்வா பாத் காவல் நிலையம் அருகே லலித்ஜா பிடிபட்டார். ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், லலித்ஜா என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 • Dec 15, 2023 21:59 IST
  உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

  வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியிருப்பதாவது: “மக்களவையினுள் வெளி ஆட்கள் அத்துமீறி நுழைந்து புகைக்குண்டு வீசுவதற்கு காரணமான பா.ஜ.க எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விளக்கம் கேட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வெட்கக் கேடானது. நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைப்பாடு, கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்வதுடன், விதி எண் 267-ன் கீழ் அவையில் அது குறித்து விவாதம் நடத்த அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். • Dec 15, 2023 20:25 IST
  4 மாவட்டங்களில் டிச.17-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் - உணவுத் துறை அறிவிப்பு 

   

  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. • Dec 15, 2023 20:10 IST
  கேப்டன் என்றால் அது தோனிதான்: கே.எல். ராகுல்


  மகேந்திர சிங் தோனி உடன் யாரையும் ஒப்பிட முடியாது; கேப்டன் என்றால் அது எம்.எஸ் தோனிதான் என கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
  மேலும் தலைவன் அல்லது கேப்டன் என்றால் அவரது பெயர்தான் முதலில் நினைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார். • Dec 15, 2023 18:57 IST
  பிறர் இடத்தில் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில் திமுக ஈடுபடக் கூடாது: அண்ணாமலை

  “திமுக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் ஈடுபட வேண்டும்; பிறர் இடங்களில் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில் ஈடுபடக் கூடாது.
  திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்த பின்னரும் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார். • Dec 15, 2023 18:38 IST
  ராஜஸ்தானில் நிதி நிலை மீட்கப்படும்; துணை முதல்வர் தியா குமாரி


  ராஜஸ்தான் துணை முதலமைச்சர் தியா குமாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிதி நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு இணையாக மாற்றத்தை கொண்டு வருவதிலேயே எங்கள் கவனம் இருக்கும்” என்றார். • Dec 15, 2023 18:16 IST
  மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம்


  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டுவந்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். • Dec 15, 2023 17:11 IST
  சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து

  சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது பணிமனைக்கு சென்ற ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு • Dec 15, 2023 17:10 IST
  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. பதவி பறிப்பு

  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்த்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி எம்.எல்.ஏ. பதவியை கோந்த் இழந்துவிட்டார் • Dec 15, 2023 16:15 IST
  பைக் சாகசம் செய்த 3 இளைஞர்கள் கைது

  பைக் சாகசம் - 3 இளைஞர்கள் கைது

  சென்னை, மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது பைக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி  • Dec 15, 2023 16:14 IST
  ரூ.6000 நிவாரணம் - முதல்வர் துவக்கி வைக்கிறார்

  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் பணி சென்னை, வேளச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் தொடங்கி வைக்கிறார் • Dec 15, 2023 15:39 IST
  காரைக்காலில் உள்ளூர் விடுமுறை

  காரைக்காலில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை • Dec 15, 2023 15:37 IST
  மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர் வடிவேலு 6 லட்சம் நிதி

  மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். • Dec 15, 2023 14:32 IST
  செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 13வது முறையாக நீட்டிப்பு

  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலமாக ஆஜரான செந்தில் பாலாஜி 13வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு • Dec 15, 2023 14:24 IST
  18-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் -இரு அவைகளும் 18ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு 

  எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு • Dec 15, 2023 14:24 IST
  18-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் -இரு அவைகளும் 18ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு 

  எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு • Dec 15, 2023 14:23 IST
  சென்னையில் மிதமான மழை

  வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

  ஆயிரம் விளக்கு, தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்யும் மழை

  சுமார் 10 நாட்களுக்கு பிறகு சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது  • Dec 15, 2023 14:01 IST
  டிச.16,17- ல் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் 

  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் டிச.16,17-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் • Dec 15, 2023 13:59 IST
  4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Dec 15, 2023 13:58 IST
  ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்பு

  ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சராக பஜன்லால் ஷர்மா பதவியேற்றார்

  பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்பு

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு • Dec 15, 2023 13:57 IST
  கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - 2 பேர் பலி

  கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

  கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக உள்ளது

  கேரளாவில் முதல்முறையாக ஜே.என் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிப்பு

  இந்த வகை கொரோனா என்பது வேகமாக பரவக்கூடியது என்பதால் சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது • Dec 15, 2023 13:19 IST
  வாச்சாத்தி வழக்கு - சிபிஐக்கு உத்தரவு

  வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு சிபிஐ பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு தண்டனை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தவர்கள் சரணடைவதில் இருந்து விலக்கு- உச்சநீதிமன்றம்  • Dec 15, 2023 13:18 IST
  பள்ளி மாணவி தற்கொலை: 5 ஆசிரியர்கள் மீது வழக்கு

  விழுப்புரத்தில், 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

  தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

  அரையாண்டு தேர்வில் காப்பி அடித்ததாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து டிசியைப் பெற்றுக் கொள்ள ஆசிரியர்கள் வற்ப்புறுத்தியதாக தகவல் • Dec 15, 2023 13:14 IST
  ஈபிஎஸ் ஆஜராக அறிவுறுத்த வேண்டும்: நீதிபதிகள்

  கொடநாடு வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்த வேண்டும்

  எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

  சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது - நீதிபதிகள் • Dec 15, 2023 13:12 IST
  எண்ணூர் எண்ணெய்க் கழிவு - உதயநிதி ஆய்வு 

  எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கலந்த இடத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு. சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன், செயலாளர் சுப்ரியா சாகு, மேயர் பிரியா, ராதாகிருஷ்ணன் ஆய்வு  • Dec 15, 2023 12:28 IST
  வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம்: நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் உடனடி தேவை - நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம் 

  வெள்ள நிவாரணம் உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்

  நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு

  நிவாரண தொகை ரூ.6000ஐ வங்கிக் கணக்கில் செலுத்த கோரியும், அதிகரிக்க கோரியும் மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு • Dec 15, 2023 12:28 IST
  வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம்: நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் உடனடி தேவை - நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம் 

  வெள்ள நிவாரணம் உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்

  நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு

  நிவாரண தொகை ரூ.6000ஐ வங்கிக் கணக்கில் செலுத்த கோரியும், அதிகரிக்க கோரியும் மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு • Dec 15, 2023 12:27 IST
  குரூப் 2, 2A முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

  குரூப் 2, 2A முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் -அமைச்சர் தங்கம் தென்னரசு • Dec 15, 2023 12:18 IST
  தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறை

  கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 


  ஐ.பி.எல்  சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரி பேசியதாக தோனி வழக்கு  • Dec 15, 2023 11:29 IST
  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

   தமிழகத்தில் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வருகிறது 10 நாட்களுக்கு முன் 7, 8 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 40 என அதிகரிப்பு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது நேற்று முன்தினம் 42 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தது. • Dec 15, 2023 11:26 IST
  வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு

  7 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். 16 பதவிகளுக்கு 124 பேர் போட்டி; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது • Dec 15, 2023 11:17 IST
  14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

  நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி முழக்கமிட்ட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்.  மக்களவை தொடங்கிய உடன் உள்ளே இருந்த சில உறுப்பினர்கள் இது தொடர்பாக முழக்கமிட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைப்பு.  • Dec 15, 2023 11:16 IST
  00 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

  பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் புதிய கடன் திட்டம் தொடக்கம். 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். தையூர் கட்டுமான கழக நிலையத்தில் 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சி காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். • Dec 15, 2023 11:15 IST
  ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் பயணம்

  ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் பயணம். மெட்ரோ ரயிலில் வரும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிச.3ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது புயல் காரணமாக டிசம்பர் 3ம் தேதி அதிக மக்கள் பயணம் செய்யாததால், டிச.17ல் பயணிக்க ஏற்பாடு • Dec 15, 2023 10:55 IST
  எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 5வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி

  எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 5வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  17ம் தேதிக்குள் கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  100க்கும் மேற்பட்ட படகுகளில் 450க்கும் அதிகமானோர் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் • Dec 15, 2023 10:55 IST
  எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 5வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி

  எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 5வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  17ம் தேதிக்குள் கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  100க்கும் மேற்பட்ட படகுகளில் 450க்கும் அதிகமானோர் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் • Dec 15, 2023 10:43 IST
  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் : லேசான மழைக்கு வாய்ப்பு

  “தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு“ தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் • Dec 15, 2023 10:29 IST
  சென்னை: பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரம்

  சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது  • Dec 15, 2023 10:14 IST
  பாகிஸ்தானில் நில அதிர்வு

  பாகிஸ்தானில் நில அதிர்வு; ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு - தேசிய நில அதிர்வு மையம் தகவல் • Dec 15, 2023 10:10 IST
  பிரணவ் ஜுவல்லரி மோசடி: பிரகாஷ் ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை

  பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் • Dec 15, 2023 10:09 IST
  தங்கம் விலை

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கும், ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனையாகிறது • Dec 15, 2023 10:09 IST
  நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் மேலும் 2 பேர் கைது

  நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் மேலும் 2 பேர் கைது மகேஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவால் கைது குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக தகவல் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் கைது • Dec 15, 2023 10:06 IST
  சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் கேன்கள்

  சபரிமலை செல்ல கூடுதல் பேருந்துகள் - கோரிக்கை.  "சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பம்பையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் இருந்தும் செல்லும் பக்தர்களின் உதவிக்காக 2 அதிகாரிகள் சபரிமலையில் பணியில் உள்ளனர். சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் கேன்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன" - அமைச்சர் சேகர்பாபு • Dec 15, 2023 09:00 IST
  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்

  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச.15) நடைபெறவுள்ளது; மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் • Dec 15, 2023 08:39 IST
  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சண்முகராஜ் என்பவர் உயிரிழப்பு

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சண்முகராஜ் (36) என்பவர் உயிரிழப்பு வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். வெம்பகோட்டை போலீசார் விசாரணை • Dec 15, 2023 08:38 IST
  எண்ணெய் கசிவு விவகாரம் - ஒடிசா குழு இன்று சென்னை வருகை

  எண்ணெய் கசிவு விவகாரம் - ஒடிசா குழு இன்று சென்னை வருகை.  சென்னை எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு - பாதிப்பு மற்றும் எண்ணெய் அளவு குறித்து ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு. இதுவரை 100 படகு மற்றும் 400 பணியாளர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் 36,800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றம் - தமிழக அரசு எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு வழிகாட்ட ஒடிசாவில் இருந்து சிறப்புக்குழு இன்று சென்னை வருகிறது.  • Dec 15, 2023 07:45 IST
  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா

  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா .3ம் நாள் பகல் பத்து உற்சவம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பாடு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளும் நம்பெருமாள். • Dec 15, 2023 07:44 IST
  20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ,கடலூர், விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment