/indian-express-tamil/media/media_files/gGuXvJ6J9agHfzXams48.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91 அடியை நெருங்கியது
கர்நாடகா: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 91 அடியை நெருங்கியது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 26, 2024 23:28 IST
கன்னியாகுமரியில் விமான நிலையம், ஹெலிகாப்டர் தளம்: எம்.பி.விஜய் வசந்த் கோரிக்கை
கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மத்திய விமான போக்குவத்து துறை அமைச்சர் ராம் மோகனை சந்தித்து காங்கிரஸ் எம்.பி.விஜய் வசந்த் கோரிக்கை மனு அளித்தார். இந்தியாவின் தென்கோடியில் விமான நிலையம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக அமையும். ஹெலிகாப்டர் தளம் அமைவது பேரிடர் காலங்களில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க உதவும் என்று கூறியுள்ளார்.
-
Jul 26, 2024 23:25 IST
ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் விளக்கு பூஜை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் ஆடி மாதம் 2ம் வெள்ளியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மன் பாடல்களை பாடி வழிபட்டனர்.
-
Jul 26, 2024 20:35 IST
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
டெல்லியில் நாளை நடைபெற உள்ள முதல் அமைச்சர்களுக்கான நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
-
Jul 26, 2024 19:58 IST
பூந்தமல்லி டூ பரந்தூர் மெட்ரோ - 1.74 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது!
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ₹1.74 கோடிக்கு கையெழுத்தானது. இந்த புதிய வழித்தடம் தோராயமாக 43.63 கிலோ மீட்டர் நீளத்திற்கு 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2024 19:57 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை பிரதீப்புடன் சேர்த்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Jul 26, 2024 19:35 IST
தாம்பரம் பணிமனை - ரயில் சேவையில் மாற்றம்
தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக.1 முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.
"திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால் - லோக்மான்ய திலக், ராமேஸ்வரம் - அயோத்தியா, ராமேஸ்வரம் பனாரஸ் உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது" 10 ரயில்களும், மாறாக அரக்கோணம் - செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2024 18:57 IST
அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
-
Jul 26, 2024 18:55 IST
நிலுவையில் 5 கோடி வழக்குகள்
நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 26, 2024 18:28 IST
தீ விபத்து தீயணைப்பின் போது ரூ. 27 லட்சம் செலவு - கோவை மாநகராட்சி ஆணையாளர்
“வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்தில், 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்தார்கள், எனவே ஒட்டுமொத்த செலவு ரூ.26.70 லட்சம். டீ, பழங்கள் மற்றும் உணவுக்காக ரூ.26.70 லட்சம் செலவு செய்யப்பட்டது என்பதை சரிபார்த்து விட்டு சொல்கிறேன்” என்று கோவை வெள்ளலூர் தீ விபத்து தீயணைப்பின் போது ரூ.27 லட்சம் செலவிடப்பட்டது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
Jul 26, 2024 18:28 IST
மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை தகவல்
நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படையால் 251 தமிழ்நாட்டு மீனவர்களும், பாகிஸ்தான் கடற்படையால் 7 தமிழ்நாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 251 மீனவர்களில் 183 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
Jul 26, 2024 18:09 IST
அந்தியோதயா விரைவு ரயில் ரத்து
ஆக.1 முதல் 14 தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2024 17:40 IST
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு உள்ளதாகக் கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jul 26, 2024 17:38 IST
ஜோ' திரைப்பட ஜோடி மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ஜோ' திரைப்பட ஜோடி ரியோ - மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
புதுமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்கியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கின்றன.
-
Jul 26, 2024 17:06 IST
கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் அதிகளவு தண்ணீர் திறப்பு
கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு நாளை மாலைக்குள் விநாடிக்கு 83,000 கன அடி தண்ணீர் வரும் என்பதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2024 16:29 IST
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jul 26, 2024 16:17 IST
ஐ-பேட் தயாரிப்பு பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
ஐ-போன்களைத் தொடர்ந்து ஐ-பேடுகளையும் தமிழகத்தில் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 ஆண்டு காலத்தில் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது
-
Jul 26, 2024 15:56 IST
ஒலிம்பிக் நடைபெறும் பிரான்ஸில் நாசவேலை
ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
-
Jul 26, 2024 15:29 IST
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி இடதுசாரிகள் மறியல் போராட்டம்
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும், மத்திய அரசு அலுவலகங்கள் முன் இடதுசாரிகள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்
-
Jul 26, 2024 15:03 IST
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் - கோவை நீதிமன்றம் உத்தரவு
பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jul 26, 2024 14:40 IST
கன்வார் யாத்திரை பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடும் விவகாரம்; இடைக்கால தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன்வார் யாத்திரை பாதையில் கடைகளின் உரிமையாளர்களின் பெயர்களை அலைபேசி எண்ணுடன் எழுதி வைக்க பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jul 26, 2024 14:18 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 74,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 86,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 11வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
-
Jul 26, 2024 13:44 IST
எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும்?
திருத்தப்பட்ட மனுவைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
-
Jul 26, 2024 13:32 IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 84,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
Jul 26, 2024 13:31 IST
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் இது நகரும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 26, 2024 13:31 IST
ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஷ்
#WATCH | ரோகிணி திரையரங்கில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகர் தனுஷ்!#SunNews | #RaayanFDFS | @dhanushkraja pic.twitter.com/J3WcGx3fn7
— Sun News (@sunnewstamil) July 26, 2024 -
Jul 26, 2024 13:31 IST
இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிப்பு செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு சிபிஎம், சிபிஐ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆகஸ்ட் 1ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு
-
Jul 26, 2024 13:30 IST
கள்ளச்சாராயம் வழக்கு தள்ளுபடி
கள்ளச்சாராயம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்பவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Jul 26, 2024 13:29 IST
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் (ஜூலை 27) கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 26, 2024 12:44 IST
அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள்: நீதிபதி
தெருக்களில் உள்ள சாதிப் பெயரை மாற்றியது போல, அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளிகள் சாதிப் பெயரில் இருக்கலாமா?
- கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து
-
Jul 26, 2024 12:09 IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,19,250 கன அடியாக அதிகரிப்பு
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மீண்டும் விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 1,19,250 கன அடியாக உள்ளது -
Jul 26, 2024 12:09 IST
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
மாநிலங்களவையில், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 26, 2024 12:00 IST
திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது: மு.க.ஸ்டாலின்
தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!
— M.K.Stalin (@mkstalin) July 26, 2024
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள்… https://t.co/3OAS4InRN9 -
Jul 26, 2024 11:59 IST
சென்னை மாநகர பேருந்துகளை இயக்க டெண்டர்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க டிரைவர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி டெண்டருக்கான இறுதி நாளாக அறிவிப்பு - அன்றைய தினம் டெண்டர் திறக்கப்படும். -
Jul 26, 2024 11:59 IST
கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
கிரிக்கெட்டில் அரசியல் எதுவும் நடைபெறவில்லை. வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பிசிசிஐ பார்ப்பதில்லை. பிசிசிஐ-ன் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகி உள்ளேன்.
- மதுரையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
-
Jul 26, 2024 11:22 IST
கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்
#WATCH | Ladakh: Prime Minister Narendra Modi meets the families of the heroes of Kargil War on the occasion of 25th #KargilVijayDiwas2024 pic.twitter.com/sFWZMGDIW6
— ANI (@ANI) July 26, 2024 -
Jul 26, 2024 11:07 IST
அக்னிபத் திட்டமானது ராணுவம் செய்த தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு: மோடி
“அக்னிபத் திட்டமானது ராணுவம் செய்த தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு... ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை. ராணுவத்தை இளமையாக மாற்றுவது, ராணுவத்தை தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பதுதான் அக்னிபாத்தின் குறிக்கோள். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான இத்தகைய உணர்ச்சிகரமான பிரச்சினையை அரசியலின் பாடமாக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தியவர்கள் இவர்கள்தான்.- மோடி
-
Jul 26, 2024 10:52 IST
வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை: பிரதமர் மோடி
"கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதன் அனைத்து ஒழுக்கக்கேடான மற்றும் வெட்கக்கேடான முயற்சிகளுக்காக தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், அதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் மற்றும் பினாமி போர்கள் மூலம் அதன் தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் இன்று நான் பேசுவது பயங்கரவாதத்தின் எஜமானர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் இடத்திலிருந்து! இந்த பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்களின் மோசமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது.- பிரதமர் மோடி
-
Jul 26, 2024 10:34 IST
தேசத்திற்காக செய்த தியாகங்கள் என்றும் அழியாதவை - பிரதமர் மோடி
கார்கில் விஜய் திவாஸ் ஷ்ரதாஞ்சலி சமரோவில் கலந்து கொண்டு பேசிய அவர், “தேசத்திற்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை இந்த நாள் நமக்கு சொல்கிறது” என்று கூறினார்.- பிரதமர் மோடி
-
Jul 26, 2024 10:32 IST
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா ரூ.257 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தபடி தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்பு.
-
Jul 26, 2024 10:07 IST
கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
விஜய் திவாஸின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களை பிரதமர் மோடி கவுரவித்தார்.
-
Jul 26, 2024 09:46 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்
-
Jul 26, 2024 08:54 IST
செப்.21ல் இலங்கை அதிபர் தேர்தல்
இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடக்கம் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் போட்டி என அறிவிப்பு.
-
Jul 26, 2024 08:36 IST
ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை" வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்து பதிலறிக்கை 2021 மே மாதம் முதல் பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2,443 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசு அனுமதி "குறிப்பாக, 1,226 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியும், 2 ஆண்டுகளாக ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை" "நில எடுப்புப் பணியிடங்களுக்கான இசைவு வழங்கப்படாததாலும் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடக்கம்"
-
Jul 26, 2024 08:22 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர் வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர் வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒகேனக்கலில் 11வது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
-
Jul 26, 2024 07:41 IST
இன்று கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி
25வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, இன்று கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி இமாச்சல் - லடாக்கை இணைக்கும் ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
-
Jul 26, 2024 07:19 IST
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவு
பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 26, 2024 07:18 IST
கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
உதகை, குந்தா ஆகிய 2 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை தொடர் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக அறிவிப்பு.
-
Jul 26, 2024 07:17 IST
சுனிதா பூமிக்கு திரும்புவதில் தாமதம்
நாசா, போயிங் நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து அளித்த செய்தியாளர் சந்திப்பில் தகவல் "ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணி நிறைவடையவில்லை" 7 நாள்களில் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில் 50 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்திலேயே உள்ளனர் பூமிக்கு திரும்பும் பயணம் ஏற்கெனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாகும் என நாசா தகவல் சோதனைகள் அனைத்தும் முடிந்து பூமிக்கு திரும்ப செப்டம்பர் முதல் வாரம் ஆகலாம் என்றும் தகவல்.
-
Jul 26, 2024 07:14 IST
கனமழை : நீலகிரி: உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.