/indian-express-tamil/media/media_files/W1VajaYrpJaoXfWKCrAb.jpg)
IE Tamil New Live
சென்னையில் 583-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 89.66% நீர் இருப்பு உள்ளது.செம்பரம்பாக்கம் - 87.79%,, புழல் - 91.03%, சோழவரம் - 71.88%, கண்ணன்கோட்டை - 100%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 25, 2023 22:27 IST
அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை
-
Dec 25, 2023 21:26 IST
திடீரென தீ பிடித்த கார் : சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு
அண்ணா சாலை: நந்தனம் அருகே சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு - நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த 4 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
Dec 25, 2023 20:55 IST
சென்னையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5 பேர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக தற்போது வரை பாதிப்பாளர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 139 ஆக அதிகரித்துள்ளது. 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். -
Dec 25, 2023 20:30 IST
தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பு: நாளை நிர்மலா சீதாராமன் ஆய்வு
தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு நடத்துகிறார். இவர், நாளை மதியம் 2:30 மணிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு நடத்த உள்ளார். இதற்காக இவர் இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். -
Dec 25, 2023 20:28 IST
பேடிஎம் ஊழியர்கள் பணிநீக்கம்
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கமயூனிகேசனில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். -
Dec 25, 2023 20:20 IST
சபரிமலையில் கட்டணமில்லா வைஃபை வசதி
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஜனவரியில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும்.
-
Dec 25, 2023 19:40 IST
'கிறிஸ்துமஸ் தினத்தில் ராணுவ வீரர்களை நினைவில் கொள்வோம்'- சந்திரசூட்
“கிறிஸ்துமஸ் தினத்தில் ராணுவ வீரர்களை நினைவில் கொள்வோம். நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது நமக்காக, கடுங்குளிரில் எல்லையில் காத்திருக்கும் ராணுவ வீரர்களை நினைவில் கொள்வோம். அவர்களுக்காக கிறிஸ்துமஸ் கீர்த்தனைகள் பாடுவோம்” என்றார்.
-
Dec 25, 2023 19:03 IST
தயாநிதி மாறன் பேச்சுக்கு பாஜகவுக்கு சாதகமாக அமையும்: ஜேடியூ தலைவர் கண்டிப்பு
“இந்தி நமது தேசிய மொழி. மகாத்மா காந்தி கூட சுதந்திரத்திற்குப் பிறகு இந்தி அலுவல் மொழியாக வேண்டும் என்று விரும்பினார். தயாநிதி மாறனின் கொச்சையான பேச்சுகளை கடுமையாக விமர்சிக்கிறோம். அவரது வார்த்தைகள் பிஜேபிக்கு சாதகமாக அமையும்” என ஒருங்கிணைந்த ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தலைவர் கேசி தியாகி கூறியுள்ளார்.
-
Dec 25, 2023 18:48 IST
இந்தியில் பெயர் சூட்டப்பட்ட குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
மத்திய பா.ஜ.க் அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். 1898-ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1860-ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்றும் 1872-ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சாக்ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Dec 25, 2023 18:24 IST
மத்திய பிரதேசம்: மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முதல்வர் மோகன் யாதவ், துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா உட்பட மாநில அமைச்சரவையின் பலம் 31 ஆக உயர்ந்துள்ளது.
-
Dec 25, 2023 18:16 IST
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மாநில அரசு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் - கேரளா ஐகோர்ட் உத்தரவு
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Dec 25, 2023 18:13 IST
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடியில் மின்பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குழும்பத்தினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2023 17:48 IST
தமிழ்நாடு: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 25, 2023 17:40 IST
'கலைஞர் 100' நிகழ்ச்சி சென்னை ரேஸ் கோர்ஸுக்கு மாற்றம்
'கலைஞர் 100' நிகழ்ச்சி சென்னை ரேஸ் கோர்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜன.6ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற இருந்தது.
ரஞ்சிக் கோப்பை போட்டி காரணமாக கருணாநிதி 100 விழா மாற்றப்பட்டுள்ளது. -
Dec 25, 2023 16:52 IST
சிதம்பரம் தீட்சிதர்கள் மீது போலீசில் புகார்
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சரண்யா போலீசில் புகார் அளித்தனர்
-
Dec 25, 2023 16:29 IST
1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்த பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனம் 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. AI பயன்பாட்டால் ஆட்குறைப்பு நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளது
-
Dec 25, 2023 16:06 IST
ராஜேந்திரனின் மறைவு பேரிழப்பு; காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி; ஸ்டாலின் உத்தரவு
மறைந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் மறைவு பேரிழப்பாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்
-
Dec 25, 2023 15:41 IST
தமிழக அரசு குளங்களை முறையாக பராமரித்திருக்க வேண்டும்; தமிழிசை
தென் தமிழகம் வருவதென்றால், எப்போதும் மகிழ்ச்சி தரும் ஆனால், இப்போது கவலையாக உள்ளது. பார்வையிட்ட பல இடங்களும், மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பல கண்மாய், குளங்கள் சேதம், குளக்கரையை முறையாக பராமரித்திருக்க வேண்டும். மத்திய அரசு, அவசர கால நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்கியுள்ளது என கனமழை பாதித்த நெல்லை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பின், தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்
-
Dec 25, 2023 15:26 IST
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் சீரமைக்கப்படும்; உதயநிதி
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் சீரமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் உறுதியளித்துள்ளார்
-
Dec 25, 2023 15:11 IST
மறைந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருக்கு அமைச்சர் மா.சு அஞ்சலி
மறைந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.
-
Dec 25, 2023 14:50 IST
திருச்செந்தூரில் தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தமிழ்நாடு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு போதுமான நிவாரண நிதி வழங்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.
மாநில அரசு நிவாரண நிதியை முறையாக கேட்கவில்லை.
மத்திய அரசிடம் நிதி உதவி கேட்பதற்கு வழிமுறை இருக்கிறது- திருச்செந்தூரில் தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி
-
Dec 25, 2023 14:49 IST
JN- 1 வகை கொரோனா குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை
தமிழகத்தில் JN- 1 வகை கொரோனா குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை. அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை- தமிழக சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம்
-
Dec 25, 2023 14:45 IST
சீரமைப்பு முடியும் வரை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்- நெல்லை மாநராட்சி ஆணையர்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் சீரடையும். சீரமைப்பு முடியும் வரை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
மழையால் பாதிக்கப்பட்ட 9 தலைமை நீரேற்று நிலையங்களில் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 6 நீரேற்று நிலையங்களை சீரமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது.
நெல்லை மாநராட்சி ஆணையர்
-
Dec 25, 2023 14:45 IST
திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
தேர்தலுக்கான கூட்டணி மற்றும் கட்சி விதிகள் உள்பட பல விவகாரங்கள் பற்றி பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்படவுள்ளன. எதிர்ப்பே இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!
-
Dec 25, 2023 13:59 IST
கோரம்பள்ளம் ஏரிக்கரை உடைப்பு சரிசெய்யப்பட்டது
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஏரிக்கரை உடைப்பு சரிசெய்யப்பட்டது. இரவு பகலாக நடைபெற்ற சீரமைப்பு பணியால் போக்குவரத்து சீரானது.
-
Dec 25, 2023 13:54 IST
தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN-1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு JN-1 வகை கொரோனா பாதிப்பு உறுதி. அதிகபட்சமாக கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும் தொற்று உறுதி
-
Dec 25, 2023 13:36 IST
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Dec 25, 2023 13:26 IST
பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதியில் உதயநிதி ஆய்வு
கன மழையாலும் - பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
— Udhay (@Udhaystalin) December 25, 2023
அப்போது, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும்… pic.twitter.com/ZpQ7PDLWvg -
Dec 25, 2023 13:24 IST
பழைய காயல்- கணேசபுரம் பகுதியில் கனிமொழி ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பழைய காயல் - கணேசபுரம் பகுதியைப் பார்வையிட்டு, மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தேன். அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். pic.twitter.com/1zjjhGk3tB
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 25, 2023 -
Dec 25, 2023 12:52 IST
இ.டி உதவி இயக்குனருக்கு போலீசார் சம்மன்
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில், அமலாக்கத் துறை உதவி இயக்குனருக்கு மதுரை தல்லாகுளம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை செய்தபோது பணி செய்ய விடாமல் தடுத்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்.
-
Dec 25, 2023 12:48 IST
நெல்லை கனமழையில் இதுவரை 16 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு. நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 16 பேர் பலி. 1064 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,392 கோழிகள் பலி.
முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்
-
Dec 25, 2023 12:43 IST
ம.நீ.ம கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் X தளத்தில் வாழ்த்து
-
Dec 25, 2023 12:00 IST
தூத்துக்குடியில் தமிழிசை ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அதன் பின் மக்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
-
Dec 25, 2023 11:49 IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: அண்ணாமலை வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை X தளத்தில் வாழ்த்து
-
Dec 25, 2023 11:36 IST
வெள்ள மீட்பில் அரசியல் வேண்டாம் - உதயநிதி
அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுகின்றனர். இதில் அரசியல் வேண்டாம். தென்மாவட்டங்களில் முதலமைச்சர் அனைத்து நிவாரணப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
Dec 25, 2023 11:36 IST
வெள்ள மீட்பில் அரசியல் வேண்டாம் - உதயநிதி
அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுகின்றனர். இதில் அரசியல் வேண்டாம். தென்மாவட்டங்களில் முதலமைச்சர் அனைத்து நிவாரணப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
Dec 25, 2023 11:32 IST
வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை
-
Dec 25, 2023 11:32 IST
வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை
-
Dec 25, 2023 11:18 IST
நிவாரண தொகையை உயர்த்தி வழங்க இ.பி.எஸ் வலியுறத்தல்
எண்ணூரில் கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் வலியுறத்தல்
-
Dec 25, 2023 10:42 IST
தங்கம் விலை
தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு சென்னையில் அபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ.5,880க்கும், ஒரு
-
Dec 25, 2023 10:24 IST
கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து
தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்" - கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து.
சகிப்புத்தன்மை
— வைரமுத்து (@Vairamuthu) December 25, 2023
சகமனிதனை மதித்தல்
தன்னுயிர் போலவே
மண்ணுயிர் பேணுதல்
என்பனவெல்லாம்
நீதி மொழிகள் அல்ல;
ஏசு பெருமான்
வாழ்ந்து காட்டிய
வாழ்வியல் நெறிகள்
இந்த நெறிகளை
மதம் சார்ந்தும் வாழலாம்;
மதம் கடந்து
மனம் சார்ந்தும் வாழலாம்
தத்துவம் தந்த
உத்தமர் பிறந்தநாள்
வாழ்த்திக்கொள்ள… -
Dec 25, 2023 09:57 IST
1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைப்பு: சேகர் பாபு
|பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு . 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும் பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் - அமைச்சர் சேகர் பாபு
-
Dec 25, 2023 09:20 IST
ஜன.15ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு
ஜன.15ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு .ஜனவரி 15 தமிழ் புத்தாண்டு அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
-
Dec 25, 2023 08:55 IST
மேட்டூர் அணை நீர் இருப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,387 கனஅடியிலிருந்து 1,399 கனஅடியாக அதிகரிப்பு; குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றம்
-
Dec 25, 2023 08:09 IST
7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தி;ல் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தி;ல் மழைக்கு வாய்ப்பு
-
Dec 25, 2023 08:07 IST
தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்துமஸ்
தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் தூத்துக்குடியில் தேவாலயதில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.