Advertisment

Tamil News Highlights: சென்னை மெட்ரோ ரயில் நிலைய சாலையோர மக்கள் மக்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு

Tamil Nadu News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Metro trains, metro rail in trichy, metro rail in salem, metro rail in tirunelveli, nellai, Trichy Salem and Nellai Detailed Feasibility report submission, Feasibility report submission, திருச்சி, சேலம், நெல்லை மாநகர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை, சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிப்பு, Metro trains Trichy Salem and Nellai, Feasibility report submission

Tamil news

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு

 டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி.,க்கள், எம்.எல்..,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • May 19, 2024 21:59 IST
  மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த மக்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு

  சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் லேசான காயமடைந்தனர். சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. • May 19, 2024 21:49 IST
  பா.ஜ.க-வுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்; உ.பி. தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

  உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், 4-ம் கட்ட தேர்தலின்போது ஃபரூக்காபாத் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. • May 19, 2024 21:09 IST
  தரமில்லாத சோன் பப்டி: பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை

  பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் 2019-ம் ஆண்டு நடந்தது. பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழவே, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். • May 19, 2024 21:03 IST
  கோபி அருகே உள்ள நம்பியூரில் கன மழை; சந்தன நகரில் குளம் நிரம்பி உடைப்பு

  ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் பெய்த கன மழையால், சந்தன நகர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. குளத்தில் இருந்த தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால், சந்தனநகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. • May 19, 2024 20:50 IST
  கமல்ஹாசனின் இந்தியன்-2 முதல் பாடல் மே 22-ல் வெளியீடு - படக்குழு அறிவிப்பு

  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும்
  இந்தியன்-2 திரைப்படத்தின் முதல் பாடல் 
  மே 22-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. • May 19, 2024 19:59 IST
  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து

  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில்  விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  ஈரான் அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல், டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். • May 19, 2024 19:11 IST
  பா.ஜ.கவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? வைரல் வீடியோவால் பரபரப்பு


  உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் இளைஞர் ஒருவர் பா.ஜ.கவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ ஒன்று பரவிவருகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. • May 19, 2024 19:08 IST
  இராமநாதபுரத்தில் சந்தனக் கூடு ஊர்வலம்

   

  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவின் 850வது சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
  திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மே 31ஆம் தேதி அதிகாலை  நடைபெறுகிறது. • May 19, 2024 19:07 IST
  அஜித் குமார் படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸ்!

  ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் அஜித் குமார் நடிக்கும் கு் பேட் அக்லி திரைப்படம் 2025 ஜனவரி மாதம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. • May 19, 2024 17:58 IST
  மதுரையில் கன மழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்


  மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.
  மதுரை புதூரில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதியுற்றனர். • May 19, 2024 17:58 IST
  உத்தரப் பிரதேசத்தில் ராகுல் தேர்தல் பரப்புரை

   

  உத்தரப் பிரதேசத்தின் புல்பூர் பகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை செய்தார். • May 19, 2024 17:57 IST
  வோடபோன் 5ஜி சேவை

   

  இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் வோடபோன் 5ஜி நெட்வோர்க் சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. • May 19, 2024 17:13 IST
  'ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன்'- நரேந்திர மோடி

  ஜூன் 4ஆம் தேதி, புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். • May 19, 2024 16:26 IST
  குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.,யின் கொள்ளுப்பேரன்

  2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். இந்தநிலையில், குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.,யின் கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோகம் சம்பவம் நடந்துள்ளது.  • May 19, 2024 16:15 IST
  தமிழகத்தில் 4 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

  தமிழகத்தில் தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது • May 19, 2024 16:07 IST
  கும்மிடிபூண்டி சிப்காட்டில் பயங்கர தீவிபத்து

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட்டில் ரசாயனக் கழிவுகள் கொட்டிவைக்கும் இடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் • May 19, 2024 15:36 IST
  அஜித் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியீடு

  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் அப்டேட் இன்று மாலை 6.31 மணிக்கு வெளியாகிறது. • May 19, 2024 14:55 IST
  சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

  சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  • May 19, 2024 14:25 IST
  3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

  தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை • May 19, 2024 14:25 IST
  கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்

  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலத்தை முற்றுகையிட சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். • May 19, 2024 14:23 IST
  சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

  இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு வரும் நீர் தடுக்கப்படும். எனவே தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார் • May 19, 2024 14:17 IST
  வைகை ஆற்றில் அதிகரிக்கும் நீர்வரத்து

  வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  நீர்நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை • May 19, 2024 13:50 IST
  செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி

  மத அரசியல், சாதிய அரசியல், மொழி அரசியல் செய்யக்கூடாது என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த சட்டத்தையெல்லாம் பின்பற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சட்டத்துக்கு புறம்பாக பேசி வருகிறார். தற்போது வெறுப்பு அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்

  - சென்னை, ராயப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி • May 19, 2024 13:19 IST
  தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மே 21ம் தேதி வரை ரெட் அலர்ட்

  தமிழகத்தின் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் மே 21 வரை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. • May 19, 2024 13:15 IST
  ஆருத்ரா மோசடி வழக்கில் இருவர் கைது

  ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் கிளை நிறுவன உரிமையாளர் அருண்குமார் அவரது மனைவி கைது

  ஆவடியில் கிளை நிறுவனத்தை தொடங்கி ரூ.134 கோடி மோசடி செய்ததாக விசாரணையில் தகவல்

  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இயக்குனர்களில் ஒருவரான ரூசோ கைது செய்யப்பட்டார். • May 19, 2024 13:11 IST
  பாஜக அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு

  ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்அழைப்பு விடுத்த நிலையில் பாஜக தலைமை அலுவலகம் உள்ள டிடியு மார்க் பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது • May 19, 2024 13:10 IST
  தென்மேற்கு பருவமழை தொடங்கியது

  தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் • May 19, 2024 13:06 IST
  டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடல்

  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகம் செல்லும் மெட்ரோ நிலையம் மூடப்படுப்பட்டுள்ளது.

  டிடியு மார்க், ஐபி மார்க், மிண்டோ சாலை மற்றும் விகாஸ் மார்க் போன்ற சாலைகளை தவிர்த்து அதற்கேற்றவாறு பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. • May 19, 2024 12:51 IST
  சுற்றுலா பயணிகள் செல்ல தடை

  விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட  காட்டாற்று வெள்ளம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. • May 19, 2024 12:26 IST
  பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

  அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாஜக அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கெஜ்ரிவால் அறிவித்த நிலையில் பாஜக தலைமை அலுவலகம் செல்லும் வழி முழுவதும் மூடப்பட்டுள்ளது. • May 19, 2024 12:10 IST
  11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம்                                                              • May 19, 2024 11:56 IST
  தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை

  தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மே 15ம் தேதி அறிவுறுத்தப்பட்டது 8 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு நேற்றும், இன்றும் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

  மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை • May 19, 2024 11:09 IST
  மதுரை: 51 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 51 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்; காய்ச்சல் பரவலை தொடர்ந்து மதுரை நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது - மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல் • May 19, 2024 10:50 IST
  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் குளிக்க தடை

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால், கடலில் பக்தர்களுக்கு தடைவிதிப்பு . கடல் பாதுகாப்பு குழுவினரும், காவல்துறையினரும் கடலில் குளிக்கும் பக்தர்களை அறிவுரை கூறி அப்புறப்படுத்தி வருகின்றனர் .  • May 19, 2024 10:48 IST
  11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 19, 2024 10:23 IST
  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்து

  கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையில் மண் ஊறியிருந்ததால், திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற அரசு பேருந்து அதில் சிக்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.  • May 19, 2024 10:09 IST
  மே 22ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு

  வங்ககடலில் மே 22ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கன்னியாகுமரி, சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   • May 19, 2024 10:06 IST
  தமிழ்நாடு , கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

  தமிழ்நாடு,கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹேவில் மே 22-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் • May 19, 2024 10:04 IST
  தென்காசிக்கு ரெட் அலர்ட் - ஆட்சியர் அறிவுறுத்தல்

  தென்காசி மாவட்டத்திற்கு இன்றும் (மே19), நாளையும் (மே20) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது; பொதுமக்கள் கவனமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவுறுத்தல்.  • May 19, 2024 09:45 IST
  வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

  வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தகவல். இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை தொடர வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   • May 19, 2024 09:24 IST
  மேகமலை அருவிக்குச் செல்ல மேலும் 3 நாட்களுக்கு தடை

  தேனியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக மேகமலை அருவிக்குச் செல்ல மேலும் 3 நாட்களுக்கு தடை. மேகமலை அருவிக்குச் செல்ல 21ம் தேதி வரை தடை விதித்து  வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு.   • May 19, 2024 09:22 IST
  வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் தொடக்கம்

  சென்னை வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம். பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள். வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 22ம் தேதி திருக்கல்யாணம். • May 19, 2024 09:01 IST
  சென்னை: 100 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் சென்ற விலை உயர்ந்த பைக்குகளுக்கு அபராதம்

  சென்னை ஈ.சி.ஆரில் 100 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் சென்ற விலை உயர்ந்த பைக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலை 6:00 மணி அளவில் போலீசார் அதிரடி சோதனை.  • May 19, 2024 08:53 IST
  சின்ன சுருளி அருவிக்கு செல்ல 4 நாட்களுக்கு தடை

  ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு தேனி மாவட்டம் சின்ன சுருளி அருவிக்கு செல்ல 4 நாட்களுக்கு தடை : வனத்துறை அறிவிப்பு • May 19, 2024 07:55 IST
  மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் : குண்டு பாய்ந்து உயிரிழப்பு

  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பு.  இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . ரவி கிரண் உடல் பேருந்தில் கொண்டு வரப்பட்டு கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் வைத்து போலீசார் விசாரணை.  • May 19, 2024 07:53 IST
  சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை எதிரொலி. வைகாசி மாத பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று வனத்துறை அறிவ்ப்பு.  • May 19, 2024 07:53 IST
  8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  மழை பெய்ய வாய்ப்பு

  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment