Advertisment

Tamil news Highlights: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 01 September 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

பெட்ரோல் டீசல் விலை

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு.

மதுரை – கோயம்புத்தூர்; நிரந்தரமாக நேரடி ரயில்

மதுரை - கோயம்புத்தூர் இடையேயான நிரந்தரமாக நேரடி ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. பயண நேரம் 30 நிமிடங்கள் குறைவதால் பொதுமக்கள் இதற்கு கூடுதல் வரவேற்பு அளிகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:13 (IST) 01 Sep 2022
    பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பிற பாடங்களைப் போல உடற்கல்விக்கும் சம முக்கியத்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது


  • 21:41 (IST) 01 Sep 2022
    அ.தி.மு.க கலவரம் தொடர்பாக 400 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு

    அதிமுக கலவரம் தொடர்பாக சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 21:16 (IST) 01 Sep 2022
    செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து; ஐகோர்ட் உத்தரவு

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 20:40 (IST) 01 Sep 2022
    கேரளாவில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

    கேரளா, கொச்சியில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கும், 3 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


  • 19:37 (IST) 01 Sep 2022
    திருச்செந்தூரில் திருப்பணி; முதல்வர் தொடங்கி வைக்கிறார்

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் திருப்பணியை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்


  • 19:26 (IST) 01 Sep 2022
    அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; ஐகோர்ட் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது


  • 19:10 (IST) 01 Sep 2022
    ஒணம் பண்டிகை 8ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    ஒணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 17ம் நாள் சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்


  • 18:22 (IST) 01 Sep 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு

    திமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

    அதிமுக பொதுக்குழு வழக்கில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது.


  • 18:20 (IST) 01 Sep 2022
    குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருட்கள் இந்தியாவுக்குள் வருகிறது - பொன்முடி பேட்டி

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி: “போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் விற்பனை தொடருகிறது. இது குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசும் காரணம்; ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; குஜராத் நீதிபதி ஒருவரே அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்; விற்பனையை தடுக்க முந்தரா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துமாறு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்” என்று கூறினார்.


  • 18:08 (IST) 01 Sep 2022
    போதை பொருள் இந்தளவு பரவியதற்கு காரணம் மத்திய அரசு தான்.- அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

    அமைச்சர் பொன்முடி: தமிழக அரசின் நடவடிக்கைகளால் ஒரே ஆண்டில் 152 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.2.88 கோடி மட்டுமே அபராதம்; திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் இந்தளவு பரவியதற்கு காரணம் மத்திய அரசு தான். வெளிநாட்டில் இருந்து தான் அதிகமாக போதை பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகம் என்று குற்றம் சாட்டினார்.


  • 17:48 (IST) 01 Sep 2022
    மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் சாட்சி - மோடி பேச்சு

    கேரளாவில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு: மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளர்.


  • 17:41 (IST) 01 Sep 2022
    உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் அரசாணை வெளியீடு

    முதல்வர் மு.க. ஸ்டாலின்: ஐ.ஐ.டி இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த பட்ஜெட்டில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


  • 17:29 (IST) 01 Sep 2022
    சென்னையில் திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


  • 17:28 (IST) 01 Sep 2022
    சென்னையில் திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


  • 16:41 (IST) 01 Sep 2022
    காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினுடன் பேசியது பெரிய வைரலாக பரவியது. அதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன் அண்ணாமலை எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • 16:40 (IST) 01 Sep 2022
    காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினுடன் பேசியது பெரிய வைரலாக பரவியது. அதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன் அண்ணாமலை எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • 15:55 (IST) 01 Sep 2022
    துணை வேந்தர்கள் நியமன மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

    தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து துணை வேந்தர்கள் நியமன மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேறியது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் மாற்றங்களை மசோதா முன்மொழிகிறது


  • 15:54 (IST) 01 Sep 2022
    கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது ஒத்திவைப்பு

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்வதாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருப்பதாலும் பாசனத்திற்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 15:48 (IST) 01 Sep 2022
    பூலித்தேவன் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு

    பூலித்தேவன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் வந்த போது எதிர்ப்பு தெரிவித்து தம்பதியினர் கோஷமிட்ட நிலையில், அவர்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கோஷமிட்டதாக தம்பதி விளக்கம் அளித்துள்ளனர்.


  • 15:47 (IST) 01 Sep 2022
    சென்னையில் பல இடங்களில் விட்டு விட்டு மழை

    சென்னை மாநகரில் 3 மணி நேரமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நுங்கம்பாக்கம், அடையாறு, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், புரசைவாக்கம், வியாசர்பாடி பகுதிகளில் மழை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.


  • 15:46 (IST) 01 Sep 2022
    காதலன் வீட்டில் தகராறு செய்த பெண் தட்டி கேட்ட காவலரை கடித்ததால் பரபரப்பு

    திருவொற்றியூர் அருகே திருமணத்திற்கு முன்பாக நகை, பணம் கேட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காதலன் வீட்டிற்கு வந்து தகராறில் பெண் தட்டி கேட்டதால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதை கேட்கவந்த தலைமை காவலரின் சட்டையை கிழித்த அந்த பெண் சண்டையிட்டு கையில் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


  • 15:43 (IST) 01 Sep 2022
    கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்ததால், உதிரி பாகங்கள் விழுந்து கார் நசுங்கி விபத்து

    திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் வாகன உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்ததால், உதிரி பாகங்கள் விழுந்து கார் நசுங்கியது. இதில் கார் ஓட்டுநர் வெளியே நின்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


  • 15:42 (IST) 01 Sep 2022
    இளைஞரை வெட்டி கொலை செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது

    செங்கல்பட்டு அருகே இரவில் மது அருந்தும் போது முகத்தில் டார்ச் அடித்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


  • 14:34 (IST) 01 Sep 2022
    முதுகலை ஆசிரியர் பணி

    முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவித்தபடி நாளை துவங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


  • 14:34 (IST) 01 Sep 2022
    சென்னையில் மழை

    சென்னையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், ராயப்பேட்டை, மெரினா உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.


  • 13:50 (IST) 01 Sep 2022
    நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி

    டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 58 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.


  • 13:48 (IST) 01 Sep 2022
    4,038 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

    சுகாதாரத்துறையில் நவம்பர் 15ம் தேதிக்குள் புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 13:23 (IST) 01 Sep 2022
    17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


  • 13:00 (IST) 01 Sep 2022
    4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

    டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்


  • 12:34 (IST) 01 Sep 2022
    விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளித்தவர் அண்ணா - அண்ணாமலை பேட்டி

    விநாயகர் சதுர்த்திக்கு முதன்முதலாக அரசு விடுமுறை அளித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணா

    சென்னை, தி.நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

    விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும் - அண்ணாமலை


  • 11:42 (IST) 01 Sep 2022
    பூலித்தேவரின் பங்களிப்பையும், வீரத்தையும் போற்றுவோம் - கனிமொழி ட்வீட்

    விடுதலைப் போரில், பூலித்தேவரின் பங்களிப்பையும், வீரத்தையும் போற்றுவோம். பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவு கூர்ந்து திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்


  • 11:34 (IST) 01 Sep 2022
    கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்

    சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்.

    பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமின் மனு மீது உத்தரவு


  • 11:33 (IST) 01 Sep 2022
    70 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

    திமுக ஆட்சியில் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    மனு அளிக்கும்போதே நிச்சயம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை மக்களின் முகத்தில் தெரிகிறது - மு.க.ஸ்டாலின்


  • 11:30 (IST) 01 Sep 2022
    திமுக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு செயல்படும் ஆட்சியல்ல - முதல்வர் ஸ்டாலின்

    திமுக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு செயல்படும் ஆட்சியல்ல. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் ஆட்சிதான் திராவிட ஆட்சி - முதல்வர் ஸ்டா


  • 10:29 (IST) 01 Sep 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.


  • 10:27 (IST) 01 Sep 2022
    தேசிய கொடி சீனாவிலிருந்து இறக்குமதி

    சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவில் தயாரித்த தேசிய கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது - சபாநாயகர் அப்பாவு


  • 10:25 (IST) 01 Sep 2022
    மாவீரன் பூலித்தேவருக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்.- பிரதமர் ட்வீட்

    மாவீரன் பூலித்தேவருக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். பூலித்தேவரின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று, அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவர் - பிரதமர் மோடி ட்வீட்


  • 09:18 (IST) 01 Sep 2022
    மிதமான மழை

    ராமநாதபுரம் : ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


  • 09:17 (IST) 01 Sep 2022
    மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் : ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு மற்றும் 5 பேர் படுகாயம்.


  • 08:33 (IST) 01 Sep 2022
    வெள்ள முன்னெச்சரிக்கை ஒத்திகை

    தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக்குழு சார்பில் வெள்ள முன்னெச்சரிக்கை ஒத்திகை. வரும் நாட்களில் கனமழை வரும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க பயிற்சி ஒத்திகை


  • 08:32 (IST) 01 Sep 2022
    புதிய மெட்ரோ வழித்தடத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்

    கேரளா, கொச்சியில் ரூ. 453 கோடி மதிப்பிலான புதிய மெட்ரோ வழித்தடத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.


  • 08:32 (IST) 01 Sep 2022
    'டாக்டர் ராதாகிருஷ்ணன்' விருது: 385 ஆசிரியர்கள் தேர்வு

    தமிழக அரசு வழங்கும் 'டாக்டர் ராதாகிருஷ்ணன்' விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு சார்பிலான விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வு.


  • 08:31 (IST) 01 Sep 2022
    டெல்லியில் மாநில அரசே மது விற்பனை

    தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்துகிறது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை.


  • 08:30 (IST) 01 Sep 2022
    ஜிடிபி வளர்ச்சி 13.5%ஆக உயர்வு

    நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 13.5%ஆக உயர்வு.


  • 08:29 (IST) 01 Sep 2022
    4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment