Advertisment

Tamil News Breaking Highlights: இஸ்ரேலில் அதிகரிக்கும் போர் பதற்றம்: 24 மணி நேர உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Israel carries out airstrikes in Lebanon Hezbollah hits back Tamil News

பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் 198-வது  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஜம்முவில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 

ஜம்மு-காஷ்மீரில்  40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

  • Oct 01, 2024 23:58 IST
    இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

    ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் ஈரான் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.



  • Oct 01, 2024 21:46 IST
    அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

    உணவு ஒவ்வாமை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 01, 2024 20:44 IST
    அமெரிக்காவில் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில் சாமி சிலை கண்டுபிடிப்பு

    காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 8 கோடி மதிப்புள்ள சாமி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் சோமாஸ்கந்தர் சில இருப்பது தெரியவந்துள்ளது. சிலை கடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு சிலையை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



  • Oct 01, 2024 19:41 IST
    எனது அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலமடைய விழைகிறேன் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் நலமடைய விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 01, 2024 19:40 IST
    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு தமிழக அரசால், காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்படுள்ளது.



  • Oct 01, 2024 19:00 IST
    நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொதுநல வழக்குகளை தவிர்க்கலாம்; ஐகோர்ட்

    அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பித்தால் அதை யாரும் பின்பற்றப்போவது இல்லை. எனவே நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதை தவிர்க்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது



  • Oct 01, 2024 18:57 IST
    திருப்பதி லட்டு தொடர்பான எஸ்.ஐ.டி விசாரணையை நிறுத்தி வைத்துள்ளோம் - ஆந்திர மாநில டிஜிபி

    திருப்பதி லட்டு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தி வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எங்களது குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியதுடன், சிலரிடம் வாக்குமூலம் பெற்று ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது என ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ் தெரிவித்துள்ளார்



  • Oct 01, 2024 18:32 IST
    நெல்லையில் இயல்பைவிட அதிக மழை

    தென்மேற்கு பருவமழை இந்தாண்டு நெல்லையில் அதிகளவில் பதிவாகி உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Oct 01, 2024 18:22 IST
    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

    சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Oct 01, 2024 18:04 IST
    தமிழக அமைச்சரவைக் கூட்டம் 8ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்புக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்க உள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது



  • Oct 01, 2024 17:58 IST
    பருவமழை கூடுதலாக பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

    இந்த ஆண்டு பருவமழை கூடுதலாக பெய்யும். வடகிழக்கு பருவமழை வடதமிழ்நாட்டில் அதிகமாகவும், தென்தமிழ்நாட்டில் குறைவாகவும் இருக்கும். அக்டோபர் 3 ஆவது வாரத்தில் பருவமழை தொடங்கும் என வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.



  • Oct 01, 2024 17:42 IST
    எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் பணியாற்றும் 15,000 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அதிர்ச்சி

    எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் பணியாற்ற கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 15,000 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது வரை மத்திய அரசு நிதி வழங்காததால், செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை 



  • Oct 01, 2024 17:13 IST
    ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்புவார் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

    ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Oct 01, 2024 16:58 IST
    கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே, அரசுகள் பயன்படுத்தி வருகிறது – ஐகோர்ட் கருத்து

    கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே, அரசுகள் பயன்படுத்தி வருகிறது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன



  • Oct 01, 2024 16:38 IST
    3 மணி நிலவரப்படி, ஜம்மு காஷ்மீரில் 56% வாக்குப் பதிவு

    ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன



  • Oct 01, 2024 16:31 IST
    ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற விரும்புகிறேன் - செல்வபெருந்தகை

    உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர். ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்



  • Oct 01, 2024 16:20 IST
    சேலத்தில் சரக்கு லாரி மோதி 3 பேர் மரணம்

    சேலம் மல்லூர் பகுதியில் சரக்கு லாரி மோதி 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து நேர்ந்தது



  • Oct 01, 2024 15:54 IST
    அரசு மருத்துவமனை பணியாளர் உயிரிழப்பு

    கடந்த செப்.21ம் தேதி பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த மதுரை அரசு ராசாசி மருத்துவமனை பணியாளர் விஜயகுமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 



  • Oct 01, 2024 15:49 IST
    இ.பி.எஸ் மீது பறந்து வந்து விழுந்த செல்போன் - பரபரப்பு

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எல்.இ.டி திரையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது எடப்பாடி பழனிசாமி மீது பறந்து வந்து செல்போன் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் செல்போன் தவறுதலாக விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Oct 01, 2024 15:47 IST
    லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு 

    சேலம் மல்லூர் பகுதியில் சரக்கு லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. 



  • Oct 01, 2024 15:30 IST
     வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றம் கருத்து

    வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் விவகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. “பெரிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாலேயே, அவர்களது வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது. ஒருவர் மீது கிரிமினல் புகாரோ அல்லது குற்றச்சாட்டு  எழுந்தாலே அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்று உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். 

    "பாலியல் வன்கொடுமை , தீவிரவாத செயல் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பானவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது. மேலும் ஒரே நாளில் நோட்டீஸ் கொடுத்து வீடுகள் இடிக்கப்படுவதில்லை,பல நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளித்து உரிய நேரம் வழங்கியப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது

    எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரும் குறிவைக்க படுவதில்லை, மாறாக குற்றம் செய்த நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீடுகள், கட்டடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 10 நாட்களாவது அவகாசம் கொடுக்கப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    “ஆக்கிரமிப்பு எந்த வகையில் இருந்தாலும் அனுமதிக்க முடியாது. கோயில், குருத்வாரா, தர்கா என எதுவாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ, சாலைகள் அல்லது நீர்நிலைகளை ஆக்கிரமித்து, பொது சொத்தை ஆக்கிரமித்து இருப்பதையோ ஏற்க முடியாது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை, கட்டுமானங்களை அகற்ற சட்டம் உள்ளது, அவை மதம், சமயம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு பொதுவானது." என்று குறிப்பிட்டு அனுமதியின்றி குடியிருப்புகளை இடிப்பதற்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

     

     



  • Oct 01, 2024 15:25 IST
    சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!

    உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக என்.எஸ் ரேவதி தேர்வு. துணை தலைவராக ராஜலட்சுமி, செயலாளராக பர்வீன், பொருளாளர் மாரியம்மாள், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். புதிய நிர்வாகிகள் அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பர்.

     



  • Oct 01, 2024 15:21 IST
    'உச்சநீதிமன்றம் அப்படி சொல்லவில்லை'- பவன் கல்யாண் பேட்டி

    விஜயவாடாவில், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசுகையில், “திருப்பதி லட்டில் கலப்படம் இல்லை என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டுமே இந்த கருத்தை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 

    இந்த விவகாரத்தை ஆந்திர அரசு அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். கடந்த 5 ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு விவகாரத்தை போல், வேறு விதிமீறல்களும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறியுள்ளார். 



  • Oct 01, 2024 15:16 IST
     4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Oct 01, 2024 14:01 IST
    2026 தேர்தலுக்குத் தயாராகும் அ.தி.மு.க

    சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 



  • Oct 01, 2024 13:26 IST
    மஞ்சள் வீரன் படத்தில் இருந்து யூடியூபர் டி.டி.எஃப் வாசன் நீக்கம்

    மஞ்சள் வீரன் படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும், பிரபல யூடியூபருமான டிடிஎஃப் வாசன் நீக்கம் என்று மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். 

     



  • Oct 01, 2024 13:25 IST
    '100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க உள்ளோம்' - - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ‘https://tnchampions.sdat.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

    வறுமை ஒழிப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசின் புள்ளியியல் துறையின் ஆய்வு சொல்லுகிறது” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

     



  • Oct 01, 2024 13:23 IST
    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

    "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க கூடாது" என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

     



  • Oct 01, 2024 13:09 IST
    'விரைவில் வீடு திரும்புவார் ரஜினி' - அமைச்சர் மா.சு பேச்சு 

    "ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், விரைவில் வீடு திரும்புவார். வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால், நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 



  • Oct 01, 2024 12:44 IST
    சென்னையில் 2 மணி நேரம் விமான நிலையம் மூடல்

    சென்னை விமான நிலையத்தில் இன்று 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியையொட்டி, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை தினமும் சுமார் 2 மணி நேரம் சென்னை விமான நிலையம் மூடல் மூடப்படும் என்றும்,  முதல் நாளான இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகளின் நேரம் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 



  • Oct 01, 2024 12:08 IST
    ரஜினி சாதாரண வார்டுக்கு மாற்றம்

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் சற்று நேரத்தில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 01, 2024 11:51 IST
    ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை குழு ஈஷா யோகா மையத்திற்குள் நுழைந்தனர். 



  • Oct 01, 2024 11:15 IST
    ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்- ஆளுநர் ரவி

    நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும். உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன் - ஆளுநர் ரவி



  • Oct 01, 2024 11:12 IST
    இஸ்ரேல்- ஹெஸ்பொல்லா தாக்குதல்

    இஸ்ரேல் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக லெபனானில் சில குறிப்பிட்ட இடங்களை குறிவைத்து தரைத் தளத் தாக்குதல்களைத் தொடங்கியது. 



  • Oct 01, 2024 11:10 IST
    ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நிலவரம்

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.

     



  • Oct 01, 2024 10:42 IST
    சிவாஜி பிறந்தநாள்- ஸ்டாலின் மரியாதை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 



  • Oct 01, 2024 10:25 IST
    சாதாரண பரிசோதனைக்காகவே ரஜினி அனுமதி

    நடிகர் ரஜினிகாந்த் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தந்தி டிவிக்கு தகவல் கூறியுள்ளார். 



  • Oct 01, 2024 10:19 IST
    விசிகவின் மதுவிலக்கு மாநாட்டுக்கு 100% ஆதரவு

    விசிகவின் மதுவிலக்கு மாநாட்டுக்கு 100% ஆதரவு. அரசியல் இயக்கங்களால் பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியாது, மக்கள் மனதில் மட்டுமே பூரண மதுவிலக்கு சாத்தியம் என துரை வைகோ பேசியுள்ளார். 



  • Oct 01, 2024 09:14 IST
    நேற்று மாலையே தயாரான அப்போலோ

    நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை எனத் தகவல், நேற்று மாலையே தயாரான அப்போலோ மருத்துவமனை - விஐபி வருகிறார் என மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செரிமான பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Oct 01, 2024 08:27 IST
    வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

    வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1903க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் ரூ.1,855க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.48 அதிகரித்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் வணிக சிலிண்டர் விலை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.818.5 என எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment