/tamil-ie/media/media_files/uploads/2020/12/New-Project-2020-12-30T212301.108.jpg)
Income Tax Returns; ITR Filing Date Extended : வருமான வரித் தாக்கலுக்கு நாடு முழுவதும் டிசம்பர் 31, 2020 கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வந்தது. கோரிக்கைகளை ஏற்று வருமான வரித் தாக்கலுக்கான அவகாசத்தை ஜன. 10, 2021 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு. பிரிட்டனில் இருந்து திரும்பிய 20 பேருக்கு தொற்று உறுதி என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை டிச.31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி சாமுவேல் என்கிற ராஜாவுக்கு மூன்று மரண தண்டனை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ,டிச.31ஆம் தேதி உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்படும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு.
Live Blog
Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்: “விவசாயிகளுடன் நடத்திய 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் திருப்தியாக இருந்தது. விசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று கூறினார்.
திருச்சியில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது. அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும். * புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு. தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி வந்துவிட்டார். தமிழ்நாட என்ன பட்டாவா போட்டு கொடுத்திருக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.
இயக்குனர் பா.ரஞ்சித், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என்ற முடிவை எடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது; அரசியலுக்கு வருவதற்கான அத்தனை திட்டங்களையும் காலா படப்பிடிப்பின் போதே அவர் வைத்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை திட்டத்தை பெற தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பதிவு செய்தது அம்பலமாகியுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் தளத்தில் போலியாக பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகமான பெயர்களில் பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களின் யூசர் நேம் பாஸ்வேர்ட் பிரவுசிங் மையங்களுக்கு வழங்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக நாளை காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்று ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 19ம் தேதி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பாரதீப் துறைமுகத்தில், ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள் கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
என்னுடைய இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன். ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன். 2021ஆண்டையும் அதற்குப் பிறகு 2024ஆம் ஆண்டையும் நான் எதிர் நோக்குகிறேன். அவற்றில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல். ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என சு.வெங்கடேசன்.எம்.பி தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், " இது கொள்ளைநோய் காலம். மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டுமென அரசு சொல்கிறது .இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல. எனவே,தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Addressing the @BJP4TamilNadu Prashikshan Varga at Chennai.
Speaking to the Assembly Convenors, Co-convenors and Co-ordinators, I emphasized their crucial role in the upcoming Assembly Elections. pic.twitter.com/DvZr48TNmg
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) December 30, 2020
தேர்தலுக்குப் பிறகே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி. டி ரவி தெரிவித்தார்.
தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்டுப்கோப்பாக, கொள்கை சார்ந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டணியாக கம்பீரமாக பீடு நடைபோட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.திமு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கான பிரகாசமான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்தாலும், வகுப்பவாத பா.ஜ.க. வோடு இணைந்து வந்தாலும் அந்த சந்தர்ப்பவாத, கொள்கையற்ற சுயநலக் கூட்டணியை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டுவதற்கு மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் தயாராக செயல்பட்டு வருகின்றன. எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தெரிவித்தார்.
அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில், " அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்காக ஆஜரானேன். உயர்நீதிமன்றம் பல வழக்குகளை ரத்து செய்து, ரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் வழக்குகள்!திமுகவை தடுக்கவும் - மிரட்டவும் முடியாது. சட்டப்படி சந்திப்போம்! ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுகவை அம்பலப்படுத்துவோம்" என்று பதிவிட்டார்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடன் அளவுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று டாக்டர் பல்ராம் பார்கவா (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர்) தெரிவித்தார்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக நேற்று ரஜினி அறிவித்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவருடைய ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவருடைய ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறி தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்றும் தெரிவித்தார்.
ரூ.2,500 பொங்கல் பரிசு டோக்கனை ஆளுங்கட்சியினர் விநியோகிப்பதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பரிசு தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படம் இடம்பெறுவது தவறானது என்று திமுக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கட்டுள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்திருக்கிறார்.
Decision has been taken to extend the temporary suspension of flights to & from the UK till 7 January 2021.
Thereafter strictly regulated resumption will take place for which details will be announced shortly.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 30, 2020
வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.ந்த சட்டத்தில் ஜனநாயகம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, வாக்குரிமை கிடையாது என்றும் அவர் குற்றம்சாட்டினார். போராடுபவர்களை தீவரவாதிகள் என கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 12 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும் எனவும், ஜனவரி முதல் வாரத்தில் நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பியைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights