News In Tamil : மத்திய அரசை எதிர்க்கும் துணிவு அதிமுக அரசுக்கு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அரசு குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு அதிமுக அரசுக்கு இல்லை.
நாளிதழ்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றனர். ஜன.27-ம் தேதி மற்றொரு சம்பவம் நடக்கவுள்ளது. அதன்பின் இவர்களுக்கிடையே போட்டி இன்னும் சூடு பிடிக்கும். அதிமுக அரசியலானது சினிமா போல நடக்கவுள்ளது நவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமெனச் சென்னையில் அறப்போராட்டம் நடத்த, ரசிகர்கள் கோரியதனால், சில நிபந்தனைகளோடு காவல் துறை அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரும் ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளருமான ராமதாஸ் தலைமையில் இந்த அறப்போராட்டம் இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. 36 நிபந்தனைகளுடன் இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் புதிய கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் முதல் கட்டமாக முன்கள வீரர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடிய 1 கோடியே 50 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்குப் போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.96-க்கும் டீசல் ரூ.79.82-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
அண்மையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட தமிழ் இன மக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இலங்கை ராணுவத்தினர் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவுகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் நிற்கும் ராயபுரம் தொகுதியில் எதிர்த்து போட்டியிடத் தயாரா?” என்று சவால் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழாவின் போது வீட்டின் மேற்கூரை கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்தியதாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
திமுக சட்டத்துறை கருத்தரங்கில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு தடை போட்டது தமிழக அரசு, அந்த தடையை உடைத்து எறிந்தது சட்டத்துறை. ”வாசல் இல்லாமல் வீடு கட்ட முடியாது, அதேபோல், வழக்கறிஞர்கள் இல்லாமல்
அரசியல் கட்சி நடத்த முடியாது” என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,26,261 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு 7,164 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?” என்று பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், “ அதிமுக அரசு மோடியின் பெயரைக் கேட்டால் நடுக்கமடைகிறது; அமித்ஷாவின் பெயரைக் கேட்டால் மயக்கம் அடைகிறது. அந்த அளவிற்கு அஞ்சி நடுங்கி, அடக்கம் ஒடுக்கமாக உள்ளார்கள்” என்று கூறினார்.
கொரோனா கால ஊரடங்கு காலத்தில் வர்த்தகம் செய்ய வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 2.62 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து கடன் வழங்க 44 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கத் திட்டமிட்டுள்ள தொகையே பத்தாயிரம் ரூபாய்தான் என்கிற நிலையில் கடந்த 5 மாதங்களில் 27,055 பேருக்குதான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது
கொரானாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிறு பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கடன் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலலாளர் தினகரன் தெரிவித்தார்.
முதுநிலை சட்டப் படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை, இந்திய பார் கவுன்சில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய வீரர்கள் மீதான இனவெறித் தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் நடந்த விமான விமானத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். டிவிட்டரில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இந்தோனேஷியாவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகமான நேரத்தில், இந்தோனேசியாவுடன், இந்தியா துணை நிற்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம், இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்ட முதுமலை புலிகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் சரணாலயத்தில் அனுமதிக்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து கட்டணம் இன்றி அனைவருக்கும் இலவசமாக நடத்தப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
20 லட்சம் கோவிஷீல்ட் மருந்துகளை பிரேசில் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தங்களது நாட்டில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ‘எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்க வா, உலகை அச்சுறுத்தவா ‘ போன்ற கோஷங்களைத் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ‘எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்க வா, உலகை அச்சுறுத்தவா ‘ போன்ற கோஷங்களைத் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள்.
தமிழகத்தில் 2 கட்டமாகத் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்.
வருகிற 16-ம் தேதி மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி இன்று போராட்டம் அறிவித்திருந்த திமுக, ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தமிழகமெங்கிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏற்றதாக இருக்க நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்” என்றும் இதனால் அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இந்த இலவச டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.