/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-26T122931.731.jpg)
Tamil News Today Updates: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்புமேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) வருகிற 14ம் தேதி வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்
லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், மற்றும் அரசியல் கட்சினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி செளந்தர்யாவை ஆஜர் படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றுவேன் என பிரபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10000-ஐ கடந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு தற்போதில் இருந்தே அனுமதி வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்துள்ள கொரானா ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்தது போல் அக்டோபர் 15 ம் தேதி முதல் இல்லாமல் உடனடியாக அனுமதி அளிக்கலாம் எனவும் அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு விசாரணை ஒன்றில், “நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருப்பது ஊழல் தான், சமூகத்தில் குறிப்பாக ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கிறது. நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறையில் உள்ள ஊழல் தடுப்புத்துறையையும் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இ-பாஸ் தொடர்பான வழக்கில், மாநிலங்களுக்கு இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை விதிக்காத நிலையில், தமிழக அரசு இ-பாஸ் பெற வலியுறுத்துவது ஏன் என சென்ன உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இ-பாஸ் தொடர்பான வழக்கில், மாநிலங்களுக்கு இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை விதிக்காத நிலையில், தமிழக அரசு இ-பாஸ் பெற வலியுறுத்துவது ஏன் என சென்ன உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஈரோடு கிரிதர், சதீஷ்குமார், ரகு, சுரேஷ், பிரபு ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி இவர்களுக்கு ஜாமீன் அளித்தால் விசாரணை தடைபடும் என்று கூறி 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொல்லியியல் படிப்புக்கான தகுதிப் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் சேருவதற்கு தகுதியான படிப்புகளில், தமிழ் மொழி சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார். அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் ராம் விலாஸை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டதற்கு மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சங்கத்தின் தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன், தனி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற 15ம்தேதி முதல் 23ம் தேதி வரை வேட்புமனுவிற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையாக வந்து பெண் கேட்டதாக கூறுவது தவறு. வழக்கு தொடுக்க வேண்டாம் என பணம் கொடுத்தும் மிரட்டினார். 15 வயதிலிருந்து காதலித்ததாக சொல்கிறார். திருமண வயதை எட்டும் வரை காத்திருந்து திருமணம் செய்துள்ளார். எனது மகளை மூளைச் சலவை செய்துள்ளனர். பிரபு எம்.எல்.ஏ. கட்டுப்பாட்டில் தான் சவுந்தர்யா இருக்கிறார். அரைமணி நேரம் பேசியும் என் முகத்தை மகள் பார்க்கவில்லை என உயர்நீதிமன்ற வளாகத்தில் செளந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் பேட்டியளித்தார்.
"கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்". அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை. அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது.
கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்!
மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். pic.twitter.com/L1CGp9jGt6
— M.K.Stalin (@mkstalin) October 9, 2020
தொல்லியல்துறை பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இந்திய தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான திரு.ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் மறைவு செய்தியறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.பட்டியலின மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்,
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #Ramvilaspaswanji pic.twitter.com/oK0VSvpxxB— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 9, 2020
நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு. நடிகர் சூரி அளித்த புகாரில் அடையாறு காவல்நிலையம் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்கிறது.
மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்விதகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொல்லியல் பட்டய படிப்பு கல்வி தகுதியில் தமிழ்மொழி இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது செம்மொழியான தமிழ் மொழியை சேர்த்துள்ளது மத்திய அரசு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights