Advertisment

Tamil News Updates: எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா - மோடி, அமித் ஷா புகழாரம்

09/02/2024: இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும், லேட்டஸ்ட் அப்டேட்களையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amit shah gujarat

IE Tamil Updates

Tamil News Live Updates : 

Advertisment

பெட்ரோல் மற்றும் டீசல் விலை: சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின் நீர் நிலவரம்

 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2562 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 768 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 491 மில்லியன் கன அடியாக உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Feb 09, 2024 22:34 IST
  டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது : அமித்ஷா தமிழில் பதிவு

  புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் பதிவிட்டுள்ளார். • Feb 09, 2024 21:59 IST
  ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்பு : சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

  ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். அதேபோல் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • Feb 09, 2024 20:43 IST
  முருகனை காப்பாற்ற நளினி கோரிக்கை

  “திருச்சி சிறப்பு முகாமில் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் 15 கிலோ வரை உடல் எடை குறைந்து காணப்படுகிறார். அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். • Feb 09, 2024 20:39 IST
  ஜிஎஸ்டி ரீ-பண்ட் தொகையை தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும்; அண்ணாமலை

  ''ஜிஎஸ்டி ரீ-பண்ட் தொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்; இது தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை பாதிக்கும் பிரச்னை ஆகும்.
  கொங்கு பகுதியில் உள்ள ஜவுளி மில்களுக்கு மட்டும் ரூ.100 கோடி ரீ-பண்ட் தொகை நிலுவையில் உள்ளது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். • Feb 09, 2024 20:03 IST
  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம்

  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பதும் நிசங்க படைத்தார்.
  இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 139 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். இதில், 8 சிக்ஸர்களும், 20 பவுண்டரிகளும் அடங்கும். • Feb 09, 2024 19:42 IST
  என் தகுதி பற்றி பேச எடப்பாடிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா காட்டம்

  என் தகுதி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. காட்டமாக தெரிவித்தார். • Feb 09, 2024 19:41 IST
  ஆஸி, நியூசி டெஸ்ட் போட்டி பிப்.29 தொடக்கம்

   

  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி, இம்மாதம் 29ம் தேதி முதல் தொடங்க உள்ளது. • Feb 09, 2024 19:04 IST
  மக்களவையில் சு. வெங்கேடேசன் பரபரப்பு கேள்வி

   

  “நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் பாபரைப் பற்றிப் பேசுகிறீர்கள் .
  நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், நீங்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுகிறீர்கள் .
  நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள்” என மக்களவையில் சு. வெங்கடேசன் கேள்வியெழுப்பினார். • Feb 09, 2024 18:32 IST
  கனிமொழி குறித்து அவதூறு; பாஜக பிரமுகர் கைது

  திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக தொழிற்சங்க உறுப்பினரான உறையூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்யப்பட்டார். • Feb 09, 2024 18:25 IST
  பாகிஸ்தான் பொதுத்தேர்தல்; இம்ரான்கான் கட்சி முன்னிலை

  இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு சுயேச்சைகள் அதிக இடங்களில் முன்னிலை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வரை 55 இடங்களில் அக்கட்சியினர் வென்றுள்ளனர். • Feb 09, 2024 17:36 IST
  போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால்...  ஜி.எஸ்.டி பதிவு முடக்கம்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பதிவுத்துறை இணை ஆணையர்களும் வரிவருவாயைப் பெருக்க செயலாற்ற வேண்டும்; அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடைய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். • Feb 09, 2024 16:46 IST
  பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; ராஜேஷ் தாஸ் வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

  பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில், அளிக்கப்பட்ட 3 அண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்க உள்ளது. • Feb 09, 2024 16:41 IST
  மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி  - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019-ஐ விட 2024 தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6% உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. • Feb 09, 2024 16:39 IST
  மயிலாப்பூரில் திறக்கப்பட்ட பா.ஜ.க தேர்தல் அலுவலகத்துக்கு சீல் வைப்பு

  மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை மயிலாப்பூரில் திறக்கபப்ட்ட பா.ஜ.க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயில் இடத்தில், ரியல் எஸ்டேட் அலுவலகம் வைப்பதாகக் கூறி நேற்று பா.ஜ.க கட்சி அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், இன்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். • Feb 09, 2024 16:36 IST
  இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி... மோடிக்கு ஸ்டாலின் கடிதம் 

  இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள், மீன்பிடிப் படகுகளை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். • Feb 09, 2024 15:57 IST
  தேர்தல் ஆணையம் தகவல்

  96.88 கோடி மக்கள் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 

    • Feb 09, 2024 15:55 IST
  எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது - ராஜ்பவன் வாழ்த்து

  "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம். கனவை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி." என்று ராஜ்பவன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  • Feb 09, 2024 15:23 IST
  ஸ்ரேயஸ் ஐயர் விலகல் 

  முதுகு வலி காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் 

    • Feb 09, 2024 15:22 IST
  மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

  டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் வழங்கினார். 

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் ஜெகன் மோகன் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. • Feb 09, 2024 14:46 IST
  அ.தி.மு.க கூட்டுறவு வங்கி தலைவர் கைது 

  செஞ்சி அருகே சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் கடந்த அதிமுக ஆட்சியின் போது ரூ. 4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

  விவசாயக் கடன், நகைக்கடன், குழுக்கடன் ஆகிய பிரிவுகளில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்யப்பட்டதை கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    • Feb 09, 2024 14:44 IST
  கோவையில் பயங்கர தீ விபத்து 

  கோவை மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் உள்ள தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

  தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது • Feb 09, 2024 14:31 IST
  'பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க தொடர்கிறது; இ.பி.எஸ் மட்டும் இல்லை'- ஓ.பன்னீர் செல்வம்

  ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் "பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார். 

  இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்குத்தான் கிடைக்கும். தேர்தல் கூட்டணிக்காக பல கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் கூட்டணியை அறிவிப்போம்" என்று கூறியுள்ளார்.  • Feb 09, 2024 13:13 IST
  புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

  பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்த நிலையில், புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. உரிய உரிமம் வழங்கப்பட்ட பிறகு விற்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   • Feb 09, 2024 12:41 IST
  நிலக்கரியை காங்.அரசு சாம்பலாக வீணடித்தது-நிர்மலா சீதாராமன்

  “கடும் நெருக்கடியிலும் போராட்டத்திற்கு மத்தியிலும் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.; காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த காமன் வெல்த் ஊழலை உலகமே அறியும்; நிலக்கரியை காங்.அரசு சாம்பலாக வீணடித்தது” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் • Feb 09, 2024 12:39 IST
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தலைமையில் நாளை ஆலோசனை

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தலைமையில் நாளை ஆலோசனை; பிப்.12ம் தேதி தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் நாளை ஆலோசனை கூட்டம் • Feb 09, 2024 12:23 IST
  எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது

  “எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது; 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது; மக்களின் 50 ஆண்டுகால போராட்டத்திற்கு மதிப்பளித்து அதிமுகவின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு • Feb 09, 2024 12:22 IST
  “மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வரும் வரை அதிமுகவினர் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்

  “மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வரும் வரை அதிமுகவினர் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்; பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு தான் அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது; பின்தங்கிய நிலையில் இருந்த மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டை விட முன்னேறிச் செல்கின்றன- வானதி சீனிவாசன் எம்எல்ஏ • Feb 09, 2024 12:20 IST
  சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். 9 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். சென்னையில் உள்ள 13 பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. • Feb 09, 2024 12:18 IST
  மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்

   மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர் 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக பதிவான வழக்கில் விசாரணைக்கு ஆஜர். • Feb 09, 2024 12:17 IST
  பிரதமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சந்திப்பு

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு. சந்திரபாபு நாயுடு சந்தித்த நிலையில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார். • Feb 09, 2024 11:35 IST
  கொடநாடு வழக்கு - பிப்.23க்கு ஒத்திவைப்பு

  கொடநாடு வழக்கு - பிப்.23க்கு ஒத்திவைப்பு .கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பிப்.23ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீலகிரி, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஒத்திவைப்பு. • Feb 09, 2024 11:06 IST
  தெருநாய்கள் தொல்லை: தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும்

  தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண, தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும்!" - கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி • Feb 09, 2024 10:29 IST
  பெரியார் பல்கலை.பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

  சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை • Feb 09, 2024 10:08 IST
  லால் சலாம் திரைப்படம் வெளியாவதை யொட்டி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து • Feb 09, 2024 09:59 IST
  லால் சலாம் திரைப்படம்: 3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு மலர் கட்அவுட்

  லால் சலாம் திரைப்படம் வெளியாவதை யொட்டி, சென்னை ரோகிணி திரையரங்கில் ரூ.3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மலர் கட்அவுட்.  • Feb 09, 2024 09:28 IST
  பின்னி மில் விவகாரம் - அமலாக்கத்துறை சோதனை

   சென்னையில் பின்னி மில் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல். தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை. • Feb 09, 2024 09:15 IST
  வெற்றி துரைசாமி - 6வது நாளாக தீவிர தேடல்

  வெற்றி துரைசாமி - 6வது நாளாக தீவிர தேடல் .இமாச்சலில், சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி 6வது நாளாக தொடர்கிறது. • Feb 09, 2024 08:51 IST
  வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் உதவியை நாட முடிவு

  வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் உதவியை நாட முடிவு. சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீஸ் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு. • Feb 09, 2024 08:05 IST
  குற்றால அருவியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

  தென்காசி: தை அமாவாசையை ஒட்டி குற்றால அருவியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யும் மக்கள் • Feb 09, 2024 08:04 IST
  அதிகாலை முதல் கடுமையான பனி மூட்டம்

  உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனி மூட்டம் • Feb 09, 2024 08:03 IST
  வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 13 பள்ளிகளும் இன்று இயங்கும்

  சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 13 தனியார் பள்ளிகளும்  இன்று வழக்கம்போல் இயங்கும். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்த நிலையில் தமிழக அரசு அறிவுப்பு  Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment