பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடு விற்பனை
ரம்சான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆடு விற்பனை சந்தையில், ரூ.1 கோடி அளவிலான ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டில் இன்று
ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு இரு அணிகளும் மோதுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
புதிய சட்டமன்ற கட்டடத்தை ராஜ் பவனில் கூட கட்டலாம். ராஜ்பவன் நம்ம இடம்தான். புதிய சட்டமன்றம் கட்ட வேண்டுமென்றால் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அவை முன்னவர் துரைமுருகன் பதில் அளித்தார்.
கள்ளக்குறிச்சி, நரிமேடு பகுதியில் 8 மாத கைக்குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் 25 ஆயிரத்திலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் 12,500-ல் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிய சட்டமன்றம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் தீர்த்தமாட ரூ.50 லட்சத்தில் சிறப்பு நடைபாதை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது
ஜனநாயகத்துக்கு எதிரான ஆளுநர்களின் செயல்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவை தெரிவித்தார்.
சென்னை பிராட்வேயில் பழைய கட்டடம் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர்களை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, கட்டடத்தின் உரிமையாளர் பரத்சந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு, அதனை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பிரசுரிக்க வேண்டும். மான நஷ்ட ஈடாக ரூ. 50 கோடி வழங்க வேண்டும். அந்த பணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். 48 மணிநேரத்திற்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும்; தவறினால், தகுந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
தாய் மொழி கற்றலை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்; ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி தலைவர் ஜெகதேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகம், அதன் 2 தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டர், தங்கி இருந்த அறை உள்ளிட்டவற்றில் சோதனையிட்டதில் விதிமீறல் இல்லை. கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை அண்ணாமலை எடுத்து வந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொரகே புகார் தெரிவித்த நிலையில், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்தில் அவரது திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவில் யுனெஸ்கோ பட்டியலில் உள்ள பாரம்பரிய தலங்களில் மாமல்லபுரம் கடற்கரை கோயில்கள், 1.44 லட்சம் வெளிநாட்டு பார்வையாளர்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹெப்பால் பகுதியில் பட்டாசு குடோனில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. வெடி விபத்தில் அருகில் இருந்த மேலும் 4 குடோன்கள் சேதமடைந்துள்ளன. 16 தீயணைப்பு வாகனங்களுடன், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
2021ல் தமிழ்நாட்டிற்கு 11.65 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில், 12.30 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள். 2022ல் 22.81 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில், 4.07 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
2021ஐ ஒப்பிடுகையில் 2022ல் 10 கோடி சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு அதிகமாக வருகை தந்துள்ளனர் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே கட்டட விபத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இறங்கியுள்ளனர்.
இதற்காக 24 பேர் கொண்ட குழுவினர் அடையாறில் இருந்து வருகை தந்துள்ளனர். மேலும், அதி நவீன மீட்பு உபகரணங்களுடன் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் மனுவை தாக்கல் செய்துள்ளனர்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வருகிற மே10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக முன்னாள் முதல் அமைச்சர் சித்த ராமையா வருணா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் தனது வேட்பு மனுவை மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெல்லையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை சூதாட்ட நபர் அணுகியதாக புகார். இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது ஹைதராபாத்தை சேர்ந்த சூதாட்ட நபர் தன்னை அணுகியதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சம் இழந்த நிலையில் இந்திய அணி தொடர்பான தகவல்களை கேட்டதாகவும் சிராஜ் புகார் அளித்துள்ளார்.
சென்னை பிராட்வேயில் பழைய கட்டடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்ற போது இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. “கட்டட இடிபாடுகளில் 4 பேர் சிக்கியுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.”- என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
கர்நாடகா தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தது அதிமுக. “வேட்பு மனுவில் கையெழுத்திடும் வகையில் பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் தீர்மானங்களை உடனே அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்/இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது. சிபிஐ வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
எதிர்த்து பேசிய பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
பாஜக – திமுகவினர் இடையேயான வாக்குவாதத்தால் அவையில் சலசலப்பு
“கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்”
சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம்
சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு
சென்னை பிராட்வேயில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து
விபத்து
பழைய கட்டடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் விபத்து இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரணை
விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அதை வரவேற்பேன்.
நான் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை, விஜய் தான் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிப்பு . புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பாக அன்பரசன் போட்டி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருச்சி கம்பரசம்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல். பொதுமக்களின் போராட்டத்தால் 3 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 45,320க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,665க்கு விற்பனை
உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சாமி கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை.
நள்ளிரவில் பைக் ரேஸ் – களமிறங்கிய காவல்துறை நேற்று இரவு சென்னை முழுவதும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னை முழுவதும் 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான விசாரணை தொடங்கியது ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது காவல்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு. இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை. – நடத்துனர் மாற்றுத்திறனாளியும் நடத்துனரும் மாறி மாறி ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
“கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் .
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்.
பொருளாதார குற்ற பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் ஐஎப்எஸ் நிறுவனத்திடம் ரூ. 5 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு. துறை ரீதியான விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி
ராமேஸ்வரம்: இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை காரணமாக 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை