Advertisment

Tamil news today : வெயிலின் தாக்கத்தால் 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Tamil Nadu News, Tamil News: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
வெய்யில்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 329-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டி

ஐபிஎல்.  அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதல். மும்பையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதல்.

இருவர் சுட்டுகொலை

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை.  மருத்துவ பரிசோதனைக்காக இருவரையும் அழைத்துச் சென்ற நிலையில், பேட்டி அளித்தபோது சுட்டுக்கொலை. சுட்டுவிட்டு தப்பிய 3 பேர் கொண்ட கும்பல் கைது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil



  • 22:47 (IST) 16 Apr 2023
    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையை சேர்ந்த ஒருவர் பலியானார்.



  • 22:43 (IST) 16 Apr 2023
    கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற நீதிபதி

    கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே ஆணவக் கொலை செய்த விவகாரத்தில், படுகாயத்துடன் சிகிச்சை பெறும் இளம்பெண்ணிடம், சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி 2 மணி நேரம் வாக்குமூலம் பெற்றார்.



  • 22:00 (IST) 16 Apr 2023
    ராசிபுரத்தில் போலி மருத்துவர் கைது

    நாமக்கல், ராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் போலி மருத்துவர் காத்தமுத்து என்பவர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



  • 21:26 (IST) 16 Apr 2023
    போலியான வழக்கு; 9 மணி நேர விசாரணைக்கு பிறகு கெஜ்ரிவால் பேட்டி

    டெல்லி கலால் வரிக் கொள்கை வழக்கில் 9 மணி நேர விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ தலைமையகத்தில் இருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கலால் கொள்கை வழக்கு போலியானது என்றும் கேவலமான அரசியலால் ஏற்பட்டது என்றும் கூறினார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான ராகவ் சதா, சஞ்சய் சிங், ஜாஸ்மின் ஷா மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ விசாரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது கைது செய்யப்பட்டனர். “அமைதியாக அமர்ந்திருந்ததற்காக டெல்லி போலீசார் எங்களை கைது செய்து, தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்... இது என்ன வகையான சர்வாதிகாரம்?” ராஜ்யசபா எம்.பி ராகவ் சதா கூறினார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான பகவந்த் மான், ராகவ் சாதா, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகம் நோக்கிச் செல்ல விடாமல் போலீஸார் தடுத்ததைத் தொடர்ந்து கோல்ஃப் லிங்க் சாலையில் போராட்டம் நடத்தினர்.



  • 20:57 (IST) 16 Apr 2023
    அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: “அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க-வினர் சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும்; வருமான வரித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தி.மு.க-வின் சொத்துகள், கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையின் புகாரில் தெரிவித்ததுபோல, நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில், மன்னிப்பு கேட்காவிட்டால், அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும். குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக ரூ.500 கோடி வழங்க வேண்டும்” என்று கூறினார்.



  • 20:51 (IST) 16 Apr 2023
    அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம் - எடப்பாடி பழனிசாமி

    சென்னையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம். ஆனால், கொள்கை வேறு என்பதில் தெளிவாக உள்ளோம். கொள்கை இனிஷியல் போன்றது அதை யாராலும் மாற்ற முடியாது.” என்று கூறினார்.



  • 20:43 (IST) 16 Apr 2023
    தமிழ்நாட்டில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

    தமிழ்நாட்டில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பில் கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.



  • 20:07 (IST) 16 Apr 2023
    வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் மைசூரு மருத்துவமனையில் மரணம்

    சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது; சைமன், பிலவேந்திரன் ஆகியோர் மைசூரு சிறையிலேயே உயிரிழந்தனர். 1993ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனையானது.



  • 20:05 (IST) 16 Apr 2023
    கபடி போட்டியில் தலையில் விழுந்த அடி; 16 வயது சிறுவன் மயங்கி விழுந்து பலி

    காரைக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிய 16 வயது சிறுவன் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 18:54 (IST) 16 Apr 2023
    ரூ.500 கோடி இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்.. உச்சக் கட்ட பரபரப்பு

    ரூ.500 கோடி இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலைக்கு தி.மு.க. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



  • 18:51 (IST) 16 Apr 2023
    கொடியேறி அணையில் மக்கள் கூட்டம்

    ஈரோடு மாவட்டம் கொடியேறி அணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பத்தோடு இங்கு வந்திருந்தனர்.



  • 18:35 (IST) 16 Apr 2023
    வீரப்பன் கூட்டாளி மாதையன் உயிரிழப்பு

    சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாதையன் மைசூரு அரசு மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    31 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.

    இந்த நிலையில் மைசூரு அரசு மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.



  • 18:02 (IST) 16 Apr 2023
    சீர்காழியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    மயிலாடுதுறை, சீர்காழி சட்டநாதர் கோவிலில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது 55 பீடம் மற்றும் 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



  • 17:54 (IST) 16 Apr 2023
    ஏப்.22 விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி.சி.-55

    பி.எஸ்.எல்.வி.சி.-55 ராக்கெட் ஏப்ரல் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உ்ளளது. அப்போது, சிங்கப்பூர் செயற்கைக் கோள்களும் இதனுடன் செலுத்தப்பட உள்ளன.



  • 17:33 (IST) 16 Apr 2023
    சிவகங்கையில் இளம் கபடி வீரர் உயிரிழப்பு

    சிவகங்கையில் கபடி போட்டியின் போது 16 வயதான இளம் வீரர் பிரதீப் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவின் போது நடந்த கபடி போட்டியில் அவர் உயிர் பிரிந்தது. இளம் கபடி வீரரின் இறப்பு, அவ்வூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



  • 17:25 (IST) 16 Apr 2023
    அதிக் அகமது கொலை: குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

    உத்தரப் பிரதேசத்தில் அதிக் அகமது கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையில் திடுக் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அந்த வாக்குமூலத்தில் பத்திரிகையாளர்கள் போல் உள்ளே நுழைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



  • 17:18 (IST) 16 Apr 2023
    9 சிக்ஸர், 5 பவுண்டரி: முதல் சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை வெங்கடேஷ் ஐயர் பதிவு செய்தார்.

    கொல்கத்தா அணியை சேர்ந்த இவர் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் அடங்கும்.



  • 17:01 (IST) 16 Apr 2023
    'ஊழலின் அடையாளம் அதானி'- கர்நாடகாவில் ராகுல் காந்தி பரப்புரை

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பரப்பரையை கோலார் தங்கவயதில் இன்று தொடங்கினார்.

    அப்போது, “ஊழலின் அடையாளம் அதானி” எனப் பேசினார்.



  • 17:01 (IST) 16 Apr 2023
    குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. சுமார் 700 காளைகள் வந்த நிலையில், 587 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் போட்டியை முடிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்



  • 17:01 (IST) 16 Apr 2023
    குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. சுமார் 700 காளைகள் வந்த நிலையில், 587 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் போட்டியை முடிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்



  • 16:42 (IST) 16 Apr 2023
    தமிழ் மகன் உசேனுக்கு கார் பரிசளித்த இ.பி.எஸ்

    அ.தி.மு.க அவைதலைவர் தமிழ் மகன் உசேனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் வழங்கினார்



  • 16:32 (IST) 16 Apr 2023
    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடக்கம்

    சென்னை கொரட்டூர், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தொடங்கியது பேரணி நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்



  • 16:20 (IST) 16 Apr 2023
    சென்னை Vs ஹைதராபாத் - 18ம் தேதி டிக்கெட் விற்பனை

    சென்னையில் 21ம் தேதி நடைபெறும் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. ஆன்லைன் மூலமும், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்களிலும் நேரடியாக டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்



  • 16:01 (IST) 16 Apr 2023
    நீரில் மூழ்கி 4 சிறார்கள் பலி - முதல்வர் நிதியுதவி

    திருப்பூர், கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி இறந்த 4 சிறார்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்



  • 15:43 (IST) 16 Apr 2023
    அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இ.பி.எஸ்-க்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம்

    அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் இ.பி.எஸ் அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது



  • 15:30 (IST) 16 Apr 2023
    மக்களவை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்; செயற்குழுவில் தீர்மானம்

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும். ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும். 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன



  • 14:50 (IST) 16 Apr 2023
    பாஜக கூட்டணி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு

    அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பங்கேற்கும் முதல் செயற்குழு கூட்டம் பாஜக கூட்டணி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு * எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்பு



  • 14:05 (IST) 16 Apr 2023
    முகக்கவசம் அணிவது கட்டாயம்

    கொரோனா முன்னெச்சரிக்கையாக, தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்



  • 14:01 (IST) 16 Apr 2023
    அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது

    ஈபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது கர்நாடக தேர்தல், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை



  • 13:27 (IST) 16 Apr 2023
    20-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • 12:56 (IST) 16 Apr 2023
    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் கைது

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கு

    முதல்வரின் நெருங்கிய உறவினரான பாஸ்கர் ரெட்டியை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

    இன்று அதிகாலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரும், எம்.பி. அவிநாஸ் ரெட்டியின் தந்தையுமான பாஸ்கர் ரெட்டி கைது



  • 12:25 (IST) 16 Apr 2023
    திருமயம் அருகே விமரிசையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா

    புதுக்கோட்டை: திருமயம் அருகே விமரிசையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா

    500க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்து சென்றனர்



  • 12:01 (IST) 16 Apr 2023
    பரந்தூர் விமான நிலையம் - 264வது நாளாக மக்கள் போராட்டம்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264வது நாளாக போராட்டம்

    200க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி ஊர்வலம்



  • 12:00 (IST) 16 Apr 2023
    சூடானில் இந்தியர் ஒருவர் பலி

    கலவர பூமியான சூடானில் இந்தியர் ஒருவர் பலியானதாக இந்திய தூதரகம் தகவல்

    ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 56 பேர் பலி



  • 12:00 (IST) 16 Apr 2023
    சி.பி.ஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்



  • 11:05 (IST) 16 Apr 2023
    தெற்கு டெல்லி பகுதியில் 144 தடை

    டெல்லி முதல்வர் கெஜிரிவாலிடம் சிபிஐ விசாரணை செய்ய உள்ளதால், ஜெ.எல்.என் ஸ்டேடியும் மற்றும் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள தெற்கு டெல்லி பகுதி தடுப்புகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் டி.சி.பி சாதன் சவுதி கூறுகையில், அந்தப் பகுதியில் 144 தடை போடப்பட்டுள்ளது என்று கூறினார்.



  • 10:59 (IST) 16 Apr 2023
    அரவிந்த் கெஜிரிவாலுக்கு எதிரான போஸ்டர்களை கிழித்த ஆதரவாளர்கள்

    ராஜ்காத் பகுதியில், அரவிந்த் கெஜிரிவாலுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்களை கிழிக்கும், ஆம்.ஆத்மி ஆதரவாளர்கள்.



  • 10:57 (IST) 16 Apr 2023
    சி.பி.ஐ கேள்விகளுக்கு உண்மையான பதில் கொடுப்பேன்

    சி.பி.ஐ என்னை இன்று ஆஜராக சொல்லியிருக்கிறது. நான் சி.பி.ஐ தலைமை அலுவகத்திற்கு செல்ல உள்ளேன். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் கொடுப்பேன் - செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால்



  • 10:49 (IST) 16 Apr 2023
    அரவிந்த் கெஜிரிவாலுக்கு எதிரான போஸ்டர்களை கிழித்த ஆதரவாளர்கள்

    ராஜ்காத் பகுதியில், அரவிந்த் கெஜிரிவாலுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்களை கிழிக்கும், ஆம்.ஆத்மி ஆதரவாளர்கள்.



  • 10:35 (IST) 16 Apr 2023
    அரவிந்த் கெஜிரிவால் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்

    சி.பி.ஐ விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக அரவிந்த் கெஜிரிவால் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.



  • 10:34 (IST) 16 Apr 2023
    பணம் மற்றும் அதிகாரம் மீது உள்ள பாஜகவின் மோகத்தால் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவில்லை : அரவிந்த் கெஜ்ரிவால்

    கந்த 8 ஆண்டுகளில், டெல்லியின் மின்சார தட்டுபாட்டை சரி செய்துள்ளேன். நீங்கள் ஆட்சி செய்த 30 ஆண்டுகளில், உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை. மக்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்கு முக்கியம் இல்லை. உங்களுக்கு ஆட்சிதான் முக்கியம். நம்பர் 1 நாடாக இந்தியா மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்ற கட்சிகளும், அரசியல் வாதிகளும், இதற்கு தடையாக உள்ளீர்கள். பணம் மற்றும் அதிகாரம் மீது உள்ள மோகத்தால், இந்தியா வளர முடியவில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்



  • 10:29 (IST) 16 Apr 2023
    பணம் மற்றும் அதிகாரம் மீது உள்ள பாஜகவின் மோகத்தால் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவில்லை : அரவிந்த் கெஜ்ரிவால்

    கந்த 8 ஆண்டுகளில், டெல்லியின் மின்சார தட்டுபாட்டை சரி செய்துள்ளேன். நீங்கள் ஆட்சி செய்த 30 ஆண்டுகளில், உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை. மக்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்கு முக்கியம் இல்லை. உங்களுக்கு ஆட்சிதான் முக்கியம். நம்பர் 1 நாடாக இந்தியா மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்ற கட்சிகளும், அரசியல் வாதிகளும், இதற்கு தடையாக உள்ளீர்கள். பணம் மற்றும் அதிகாரம் மீது உள்ள மோகத்தால், இந்தியா வளர முடியவில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்



  • 10:17 (IST) 16 Apr 2023
    நீங்கள் என்னை 100 முறை சி.பி.ஐ-க்கு முன் ஆஜராக சொன்னாலும், அதை செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

    ’பிரதமர் மோடி ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி என்று நீங்கள் சொன்னால், இந்த உலகத்தில் ஒருவர் கூட நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. நான் இந்த நாட்டுக்காக உயிர் வாழ்கிறேன். அதுபோல இந்த நாட்டுக்காக உயிரை தரவும் தயாராக உள்ளேன். நீங்கள் என்னை 100 முறை சி.பி.ஐ முன் ஆஜராக சொன்னாலும், அதை செய்வேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்



  • 10:08 (IST) 16 Apr 2023
    பாஜக என்னை கைது செய்யலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

    இன்று காலை 11 மணியளவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. இந்நிலையில் முதல்வர் அலுவகத்திற்கு வெளியே கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோவில், சிபிஐ என்னை கைது செய்ய பாஜக உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறீயுள்ளார்.



  • 09:39 (IST) 16 Apr 2023
    எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்ட 128 பேர் மீது வழக்குப்பதிவு

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்ட 128 பேர் மீது வழக்குப்பதிவு.



  • 08:55 (IST) 16 Apr 2023
    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி

    கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி.



  • 08:24 (IST) 16 Apr 2023
    தமிழகம் கொரோனா தொற்று

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 502 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,048 பேராக அதிகரித்துள்ளது.



  • 08:11 (IST) 16 Apr 2023
    இன்று பிற்பகல் 2 மணிக்கு அவசர செயற்குழு கூட்டம்

    அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.



  • 08:02 (IST) 16 Apr 2023
    தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி

    தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி. குச்சி, லத்தி போன்றவற்றை கொண்டு செல்லக்கூடாது . பேரணியின் போது நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தல்.



  • 07:58 (IST) 16 Apr 2023
    அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

    பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்பு



  • 07:58 (IST) 16 Apr 2023
    சிபிஐ முன் இன்று ஆஜராகிறார் டெல்லி முதல்வர்

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ முன் இன்று ஆஜராகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் .



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment