Advertisment

Tamil News Highlights: விவசாயிகள் மீது இரவிலும் கண்ணீர் புகை குண்டுவீச்சு

13/02/2024- இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,506 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 764 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 490 மில்லியன் கனஅடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Feb 13, 2024 21:55 IST
  திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

  போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த கோரிக்கையை ஜாக்டோ ஜியோ நிராகரித்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது • Feb 13, 2024 21:21 IST
  வெற்றி துரைசாமியின் உடல் தகனம்

  சென்னை கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. • Feb 13, 2024 21:02 IST
  வெற்றி துரைசாமி உடலுக்கு எடப்பாடி அஞ்சலி

  வெற்றி துரைசாமி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அதிமுக ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று,விபத்தில் உயிரிழந்த அவரது மகன் வெற்றி துரைசாமியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. • Feb 13, 2024 20:42 IST
  ஐக்கிய அரபு அமீரகத்தில் யூபிஐ சேவை: மோடி தொடங்கி வைத்தார்

  ஐக்கிய அரபு அமீரகத்தில் யூபிஐ சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இருந்தார். • Feb 13, 2024 20:37 IST
  ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் நாளை தீர்மானம்

  மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் நாளை (பிப்.14) தீர்மானம் கொண்டுவருகிறார் என்ற தகவல் வெறியாகி உள்ளது. • Feb 13, 2024 20:28 IST
  சைதை துரைசாமி மகன் வெற்றி உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி


  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். • Feb 13, 2024 19:47 IST
  கமல்ஹாசன் கட்சிக்கு பேட்டரி சின்னம் ஒதுக்கீடு

  “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது”. இது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • Feb 13, 2024 19:44 IST
  கண்ணீர் புகை குண்டுகள்; ரப்பர் தோட்டக்களால் தாக்குதல்: போலீசார் மீது விவசாயிகள் புகார்

  ‘போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்களால் எங்களை தாக்கினார்கள்” என பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
  இன்றைய தினம் விவசாயிகள் போராட்டம் நடத்த இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்; போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. • Feb 13, 2024 19:26 IST
  விவசாயிகள் போலீஸ் மோதல்; ஷம்பு எல்லை மூடல்

   

  ஹரியானா- பஞ்சாப் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போலீசாருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லை மூடப்பட்டுள்ளது. • Feb 13, 2024 18:19 IST
  விவசாயிகள் போராட்டம்: ஆலோசனை கூட்டம் நடத்தும் விவசாய சங்க தலைவர்கள் 

  தற்போது விவசாய சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் தேசிய தலைநகரை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க ஹரியானா காவல்துறையால் நிறுவப்பட்ட தடுப்புகளை உடைக்க முயன்றபோது இரண்டு எல்லை பகுதிகளில் ட்ரோன் மூலம் சிலர் பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொண்டனர். • Feb 13, 2024 18:16 IST
  ஹரியானா காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பகவந்த் மானுக்கு கோரிக்கை - சுக்பால் சிங் கைரா

  அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா, ட்விட்டரில் பகவந்த் மானிடம் முறையிட்டார், ஹரியானா காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது, ரப்பர் தோட்டாக்களால் சுடுவது, பத்திரிகையாளர் நீல் பலிந்தர் சிங் உள்ளிட்டவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது குறித்து கைரா கவலை தெரிவித்தார்.

  “விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும், ரப்பர் தோட்டாக்களை வீசுவதற்கும் காரணமான ஹரியானா காவல்துறை அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று பகவந்த் மானைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் X பக்கத்தில் எழுதியுள்ளார். • Feb 13, 2024 18:09 IST
  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தது எம்.எஸ்.பி கோரிக்கை நிறைவேற்றப்படும்; காங்கிரஸ் உறுதி

  டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள் முன்னேறுவதைத் தடுக்கும் மத்திய, மாநில அளவில் பா.ஜ.க தலைமையிலான அரசுகளை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமர்சித்தது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டத்திற்கான விவசாயிகளின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. • Feb 13, 2024 18:01 IST
  விவசாயிகள் போராட்டத்தில் விரைவு அதிரடிப்படை வீரர் காயம்

  விவசாயிகளின் போராட்டத்தின் போது, விரைவு நடவடிக்கைப் படையைச் சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார், பின்னர் அவர் அம்பாலாவில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. • Feb 13, 2024 17:48 IST
  யு.ஏ.இ வரும்போதெல்லாம் எனது குடும்பத்தை சந்திப்பது போல் உணர்கிறேன் - மோடி

  ஐக்கிய அரபு அமீரக அதிபர், அமைச்சர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி: “ஐக்கிய அரபு அமீரகத்திறு வரும்போதெல்லாம் எனது குடும்பத்தை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்துள்ளோம். இது இருநாட்டு நெருங்கிய நட்புறவை பிரதிபலிக்கிறது” என்று மோடி கூறினார். • Feb 13, 2024 17:18 IST
  விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு; போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் காயம் 

  ஹரியானா காவல்துறை செவ்வாயன்று அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில் ட்ரோன்கள் மூலமாகவும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியது. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்றக் கோரி டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகளை சிதறடிப்பதே இதன் நோக்கம். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் காயமடைந்தார். • Feb 13, 2024 17:13 IST
  விவசாயிகள் போராட்டம்: ஹரியானா, பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய ராஜஸ்தான்

  விவசாயிகளின் 'டெல்லி சலோ' பேரணியைக் கருத்தில் கொண்டு, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுடனான ராஜஸ்தானின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் மொபைல் இணையம் முடக்கப்பட்டுள்ளது என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிகானேர் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஓம் பிரகாஷ் ரத்தன்புரா எல்லைக்கு சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். காவல்துறை அதிகாரிகளிடம் பேசி தேவையான அறிவுரைகளை வழங்கினார். ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் மற்றும் அனுப்கர் மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்றார். • Feb 13, 2024 16:55 IST
  3 விவசாயிகளை கைது செய்த காசியாபாத் போலீசார் 

  காஜிபூர் எல்லையை கடக்க முயன்றதாக கூறி மூன்று விவசாயிகளை காசியாபாத் போலீசார் கைது செய்தனர். 

  பாரதிய கிசான் யூனியன் (மகாத்மா திகைத் குழு) உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மூன்று விவசாயிகள், காஜிபூர் எல்லையை கடக்க முயன்றதாகக் கூறி காசியாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. • Feb 13, 2024 16:53 IST
  மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்  

  காரைக்கால் அரசு மருத்துவமனையில்  அரசு அவ்வையார் மகளிர் கல்லூரி மாணவிகள் ரத்த தானம் செய்தனர். அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தம் தேவை என்ற அறிவிப்பால் முந்தி அடித்துக்கொண்டு ரத்தம் வழங்கிய மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  • Feb 13, 2024 16:13 IST
  விவாசாயிகள் போராட்டம்: கள நிலவரம் 

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசாயிகள் ஹரியானா காவல்துறை மற்றும் சம்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படைகளுடன், காவல்துறை இரும்பு தடுப்புகளை கேடயங்களாகப் பயன்படுத்தி தள்ளுமுள்ளு செய்து வருகிறார்கள். 

  விவசாயிகள் ஷம்புவில் முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், கானௌரியிலும் இதேபோன்ற சம்பவம் தொடங்கியுள்ளது. கானௌரியில், கண்ணீர் புகை குண்டு வீச்சு தொடர்கிறது, விவசாயிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

  பஞ்சாப் விவசாயிகளும் ஹரியானா போலீசாருடன் ஜிந்த் எல்லையில் மோதினர். கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டனர். • Feb 13, 2024 16:13 IST
  விவாசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், 'குறிப்பிடப்பட்ட பகுதிகளில்' போராட்டத்தை அனுமதிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.  • Feb 13, 2024 16:07 IST
  துரை வைகோ பேச்சு 

   

  “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு முறைகேடுகள் செய்ய முயற்சி செய்து வருகிறது; ராமர் கோவில் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களவைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளையும் பாஜக அரசு மேற்கொள்கிறது;

  இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மதிமுகவுக்கு இருக்கிறது; திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு 2 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்” என்று சென்னை எழும்பூரில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். 

    • Feb 13, 2024 16:04 IST
  தடுப்புகளை உடைத்த விவசாயிகள் - ஷம்பு எல்லையில் தொடரும் பரபரப்பு

  ஹரியானா-பஞ்சாப் எல்லைப் பகுதியான ஷம்புவை கடக்கும் முயற்சியில் போராட்ட விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மூலம் சிமெண்ட் தடுப்புகளை இடித்து அகற்றி வருகிறார்கள். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசி வருகின்றனர். இதனால், தலைநகர் ஷம்பு எல்லை பகுதியில் பதற்றம் தொடர்ந்துள்ளது. 

    • Feb 13, 2024 15:41 IST
  சிதம்பரம்: சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட் 

  சிதம்பரம் அருகே சாக்காங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் சத்துணவு ஊழியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  • Feb 13, 2024 15:40 IST
  சென்னை: போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு 

  "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

  சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகள், தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை குறிப்பிட வேண்டும்" 
   என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
     • Feb 13, 2024 14:43 IST
  காவல்துறை தடுப்புகளை உடைக்க முயன்ற விவசாயிகள் : போலீசார் தடியடி

  ஹரியானா எல்லையை நோக்கிச் செல்ல முயன்ற கும்பலை போலீஸார் தடியடி நடத்தியதால், ஹரியானா எல்லையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பஞ்சாப் எல்லைப் பகுதியில், விவசாயிகள் தங்கள் வாகனங்களை முன்னோக்கி கொண்டு வந்து தடுப்புகளை உடைக்க மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர், அப்போது போலீசார் பல முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். • Feb 13, 2024 14:33 IST
  காவல் தடுப்பை நோக்கி நகரும் விவசாயிகள் பேரணி : பதற்றத்தில் ஷம்பு எல்லை

  விவசாயிகளின் டெல்லி சல்லோ பேரணி ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் தடுக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்புகளை நோக்கிச் செல்ல விவசாயிகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர், பலமுறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பலமுறை முயன்றும் தோல்வியடைந்துள்ளனர்.

  நெடுஞ்சாலையில் மூன்று லாரிகள் இணையாக நிற்கின்றன, வரிசையில் 4 கிலோமீட்டர் வரை செல்லும். விவசாயிகள் தங்கள் முழு பலத்துடன் இந்த அமைப்பில் உள்ள தடுப்புகளை நோக்கி அணிவகுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. • Feb 13, 2024 13:46 IST
  விரைவில் செயல் திட்டம் தீட்டப்படும்': விவசாயி தலைவர் பாந்தர்

  விவசாயிகளின் டில்லி சலோ அணிவகுப்பு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி வருகின்றனர். இதனிடையே பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "மற்ற டிராக்டர்கள், தள்ளுவண்டிகள் மற்றும் இன்னும் அதிகமான மக்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், விரைவில் ஷம்பு எல்லையை அடையவுள்ளோம். அவர்கள் இங்கு வந்ததும் செயல் திட்டம் தொடங்கும் என கூறியுள்ளார். • Feb 13, 2024 13:45 IST
  கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதை நிறுத்த உத்தரவு

  விவசாயிகளின் டில்லி சலோ அணிவகுப்பு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி வருகின்றனர். பாட்டியாலா துணை ஆணையர் ஷோகத் அகமது பர்ரே, அம்பாலா டிசிக்கு, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். • Feb 13, 2024 13:43 IST
  விவசாயி சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் பேட்டி

  விவசாயிகளின் டில்லி சலோ அணிவகுப்பு குறித்து செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயிட்,"இந்தப் பேரணிக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் அநியாயம் ஏற்பட்டால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இருக்கிறார்கள். டெல்லியும் வெகு தொலைவில் இல்லை.  விவசாயிகளும் தொலைவில் இல்லை. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வருகிறார்கள்.  அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை மற்றும் MSP க்கான சட்டம் போன்ற ஒரே கோரிக்கைகளை நிலைபாடாக வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். • Feb 13, 2024 13:36 IST
  போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு : விவசாயிகள் 4 பேர் காயம்

  பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இன்று போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 4 பேர் லேசான காயம் அடைந்தனர். • Feb 13, 2024 13:34 IST
  பெரியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற பேரவை கூட்டத்திலிருந்து பேராசிரியர்கள் வெளிநடப்பு

  முறையான பதில் அளிக்காத துணைவேந்தரை சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற பேரவை கூட்டத்திலிருந்து பேராசிரியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அரசு உத்தரவிட்டும் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? என பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அரசு உத்தரவிட்டால் உடனே பணி இடை நீக்கம் செய்ய முடியாது என துணை வேந்தர் கூறியுள்ளார். • Feb 13, 2024 12:55 IST
  கிளாம்பாக்கம் பே.நி: இ.பி.எஸ் Vs ஸ்டாலின்

  கிளாம்பாக்கம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை.பிரச்சினைகளை சரி செய்த பிறகே திறந்திருக்க வேண்டும். கொரோனா காலத்தில் கட்டுமான பணி நடைபெறாததால் அதிமுக ஆட்சியில் கட்டப்படவில்லை -ஈபிஎஸ் கேள்வி 

  சிறிய பிரச்சினைகள் மட்டுமில்லை பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தான் திறந்தோம்.பிரச்சினைகள் இருந்தால் சொல்லுங்கள் நேரில் அழைத்து செல்கிறோம்... பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் -முதல்வர் ஸ்டாலின் பதில் • Feb 13, 2024 12:41 IST
  கிளாம்பாக்கம் பே.நி: செல்லூர் ராஜு கேள்வி

  தென்மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே வந்து விட வேண்டும் -செல்லூர் ராஜு கேள்வி

  கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சியில் தான். பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் யாரும் புகார் கூறவில்லை. பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர்- அமைச்சர் சிவசங்கர் பதில்  • Feb 13, 2024 12:39 IST
  விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

  டெல்லியை முற்றுகையிடும் ‘டில்லி சலோ’ போராட்டதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு. பஞ்சாப்- ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில்  விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு • Feb 13, 2024 12:12 IST
  ஜூன் மாதத்திற்குப் பின் ஃபார்முலா 4 கார் பந்தயம்

  சென்னை நகரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்

  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் • Feb 13, 2024 11:50 IST
  செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பு

  செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி • Feb 13, 2024 11:44 IST
  விவசாயிகள் பேரணி தொடக்கம்

  விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி தொடக்கம். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விவசாயிகள் சங்கங்கள் 'டில்லி சலோ' அணிவகுப்பைத் தொடங்கிய உடனேயே, பஞ்சாப்-ஹரியானா (சம்பு) எல்லையில் பல விவசாயிகள் தடுத்து வைக்கப்பட்டனர் மற்றும் அவர்களது வாகனங்கள் ஹரியானா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. • Feb 13, 2024 11:17 IST
  அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்

  "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடத்தப்படும்”

  சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு • Feb 13, 2024 11:17 IST
  என்.ஜெயகுமார் மறைவுக்கு முதல்வர் அஞ்சலி

  என்.ஜெயகுமார் மறைவுக்கு முதல்வர் அஞ்சலி

  சென்னை அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவு

  நந்தனம் இல்லத்தில் வைக்கப்பட்ட என்.ஜெயகுமார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி • Feb 13, 2024 10:28 IST
  தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

   தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம். தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் மறைவுக்கு இரங்கல். • Feb 13, 2024 10:25 IST
  இடைநிலை ஆசிரியர் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

  இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு நாளை முதல் வரும் மார்ச் 15ம் தேதி வரை trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு • Feb 13, 2024 10:24 IST
  ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி

  சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது X தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் • Feb 13, 2024 10:14 IST
  சைதை துரைசாமியின் மகன் மறைவு: கமல் இரங்கல்

  சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது - மநீம தலைவர் கமல்ஹாசன் வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம் மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன், அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் - கமல் • Feb 13, 2024 10:13 IST
  வெற்றி துரைசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

   வெற்றி துரைசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு .இமாச்சலில் கின்னூர் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி கார் விபத்தில் வெற்றி துரைசாமி மரணம் வெற்றி துரைசாமி உடல் 9 நாட்களுக்கு பின் மீட்பு .சட்லஜ் நதியிலிருந்து மீட்பு வெற்றி துரைசாமி உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது. • Feb 13, 2024 10:12 IST
  அண்ணாமலை வருகிற 16ஆம் தேதியன்று டெல்லி செல்கிறார்

  பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காத சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற 16ஆம் தேதியன்று டெல்லி செல்கிறார் • Feb 13, 2024 10:12 IST
  சட்டப்பேரவையில் இன்று விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

  சட்டப்பேரவையில் இன்று விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் .முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியதற்கு வருத்தத்தை பதிவு செய்யப்படும் எனத் தகவல் ஆளுநர் மாளிகை வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ தொடர்பாக முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்றும், நாளையும் விவாதம். • Feb 13, 2024 09:59 IST
  விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டம்

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழையும் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில் டெல்லி முழுவதும் 144 தடை  குறைந்தபட்ச ஆதார  விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் • Feb 13, 2024 09:34 IST
  சாலை விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: சிவசங்கர்

  சாலை விபத்தை முற்றிலுமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக்  காப்பாற்ற ’ இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது- அமைச்சர் சிவசங்கர் • Feb 13, 2024 09:32 IST
  18 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

  இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையம் வந்த மீனவர்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். • Feb 13, 2024 08:53 IST
  கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தீனதயாளன் என்ற நபர் கைது. Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment