Advertisment

Tamil news today : ரூ.16,000 கோடி வரை வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்:நிதியமைச்சர்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : ரூ.16,000 கோடி வரை வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்:நிதியமைச்சர்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கால்பந்து இன்று

FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டம்.  பிற்பகல் 3.30 மணிக்கு சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதுகின்றனர்.  இரவு 9.30 மணிக்கு போர்ச்சுக்கல் - கானா அணிகள் மோதுகின்றனர்.

ஸ்பெயின் வெற்றி

உலக கோப்பை கால்பந்து - கோஸ்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அபார வெற்றிபெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:53 (IST) 24 Nov 2022
    பா.ஜ.க-வில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு நீக்கம் - அண்ணாமலை அறிக்கை

    பா.ஜ.க-வில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு நீக்கப்படுகிறார் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், “கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுல்ள சூர்யா சிவா, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதத்திற்கு நீக்கப்படுகிறார்; கட்சியின் ஒரு தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:05 (IST) 24 Nov 2022
    காங்கிரஸ் கட்சியில் ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்திவைப்பு

    காங்கிரசில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் இடைநீக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 20:57 (IST) 24 Nov 2022
    கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் இழக்கலாம் - மு.க. ஸ்டாலின்

    சென்னையில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் இழக்கலாம்"

    -சென்னையில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. எதையும் இழக்கலாம். ஆனால், பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது என்று கூறினார்.



  • 19:59 (IST) 24 Nov 2022
    விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு - அ.தி.மு.க புகார்; தமிழக அரசு மறுப்பு

    விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க புகார் எழுப்பிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பதாகைகள் நிறுவியது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் பெறப்பட்டது. அதன்படி, அச்சடிக்கும் பணியில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. "மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல். பதாகைகள் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது தவறானது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 19:46 (IST) 24 Nov 2022
    மங்களூர் ஆட்டோ வெடிப்பு... விசாரணையை என்ஐஏ-க்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு

    கர்நாடகா, மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் குறித்த வழக்கை என்.ஐ.ஏ.-க்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரிக்க பரிந்துரை செய்து கர்நாடக அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநில போலீசார் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



  • 19:16 (IST) 24 Nov 2022
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3-வது மாடியிலிருந்து ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் லிஃப்டில் வந்துள்ளனர். எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல் தளத்திற்கு வந்து நின்ற லிஃப்டின் கதவை உடைத்து அனைவரும் மீட்கப்பட்டனர்.



  • 18:48 (IST) 24 Nov 2022
    குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி

    தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்ட நிலையில், குளிர்சாதன மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



  • 18:18 (IST) 24 Nov 2022
    தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறினால், கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 17:32 (IST) 24 Nov 2022
    மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் - அதிகாரிகள் ஆலோசனை

    ஆதார் எண்ணை இணைக்காமல் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



  • 16:52 (IST) 24 Nov 2022
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:37 (IST) 24 Nov 2022
    தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்



  • 16:12 (IST) 24 Nov 2022
    கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம்

    கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது



  • 16:01 (IST) 24 Nov 2022
    கோகுல்ராஜ் கொலை வழக்கு - பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி நீதிமன்றத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 15:45 (IST) 24 Nov 2022
    மக்கள் நலனுக்கு விதிகளை மாற்றி செயல்படுத்தலாம் - புதுச்சேரி முதல்வர்

    மக்கள் நலனுக்காக அரசு விதிகளை மாற்றி செயல்படுத்தலாம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்



  • 15:16 (IST) 24 Nov 2022
    தி.மு.க தலைவரிடம் வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்

    திமுகவில் புதிதாக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நிர்வாகிகள் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்



  • 15:00 (IST) 24 Nov 2022
    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:54 (IST) 24 Nov 2022
    இடைநீக்கம் தவறானது

    காங்கிரஸ் தலைமை என்மீது எடுத்த நடவடிக்கை தவறானது. கட்சியில் முறையாக விசாரிக்காமல் முடிவெடுத்துள்ளார்கள். நான் தேதி மட்டுமே மாற்றிக் கேட்டேன், விளக்கம் கட்டாயம் கொடுப்பேன் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விளக்கமளித்துள்ளார்.



  • 14:36 (IST) 24 Nov 2022
    ரூபி மனோகரன் வேதனை

    கட்சியில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியிருப்பது வேதனையளிக்கிறது. காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக அவகாசம் கோரியிருந்தேன். கட்சியை பற்றியோ, தலைவர்கள் பற்றியோ நான் எந்த குறையும் சொல்ல முடியாது என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.



  • 13:55 (IST) 24 Nov 2022
    கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

    ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாக வந்த புகாரில் போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.



  • 13:35 (IST) 24 Nov 2022
    தமிழக அரசு ஆட்சேபனை

    ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் மனுதாரர்கள் முன் வைக்கும் வாதங்கள் பிரமாண பத்திரத்தில் கூறவில்லை என தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.



  • 13:08 (IST) 24 Nov 2022
    ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம்

    காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.



  • 13:03 (IST) 24 Nov 2022
    அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 13:02 (IST) 24 Nov 2022
    நடிகை சமந்தா வீட்டிலேயே ஓய்வில் உள்ளார்

    நடிகை சமந்தா வீட்டிலேயே ஓய்வில் உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு சமந்தா தரப்பு மறுப்பு



  • 12:52 (IST) 24 Nov 2022
    திருப்பத்தூர் பா.ஜ.க துணை தலைவர் வெட்டி கொலை

    திருப்பத்தூர் நகர பா.ஜ.க துணை தலைவர் கலிகண்ணன் ஊத்தங்கரையில் வெட்டி படுகொலை

    ஆள்நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் கலிகண்ணனை வெட்டி சாய்த்த கும்பல்

    கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் விசாரணை



  • 12:45 (IST) 24 Nov 2022
    அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு

    எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் செமஸ்டர் தேர்வை எழுதலாம்

    பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு



  • 12:18 (IST) 24 Nov 2022
    மலேசியாவின் புதிய பிரதமர் - அன்வார் இப்ரஹிம் தேர்வு

    மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ரஹிம் தேர்வு

    மலேசியாவில் பெரும்பான்மை கட்சிகள் ஆதரவுடன் அரசு அமைகிறது



  • 12:16 (IST) 24 Nov 2022
    இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது - ரூபி மனோகரன்

    காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது

    தவறு செய்தவர்கள் மீது நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளோம் - ரூபி மனோகரன்



  • 12:15 (IST) 24 Nov 2022
    அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்

    திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்

    பலத்த காயம் அடைந்த 7 பேர் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

    நாராயணபுரத்தில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்



  • 12:15 (IST) 24 Nov 2022
    அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்

    திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்

    பலத்த காயம் அடைந்த 7 பேர் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

    நாராயணபுரத்தில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்



  • 12:14 (IST) 24 Nov 2022
    அருண் கோயல் நியமிக்கப்பட்ட நியமனக் கோப்புகள் தாக்கல்

    தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட நியமனக் கோப்புகளை தாக்கல் செய்தது மத்திய அரசு .

    தேர்தல் ஆணையராக அருண் கோயல் அவசரகதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து



  • 12:13 (IST) 24 Nov 2022
    மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கும்

    மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க வல்லுநர் குழு அமைத்து நடவடிக்கை

    அரசின் அனைத்து சலுகைகளும் அனைவரையும் சென்றடைய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 12:13 (IST) 24 Nov 2022
    பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ விசாரிக்க தடையில்லை

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ விசாரிக்க தடையில்லை

    தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு



  • 11:29 (IST) 24 Nov 2022
    துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம்

    தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி அரசாணை

    ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம்.

    ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் - தமிழக அரசு



  • 11:28 (IST) 24 Nov 2022
    ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேர் கைது

    கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

    ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை கைது செய்தது காவல்துறை சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது காவல்துறை



  • 10:35 (IST) 24 Nov 2022
    அகோரி பூஜை செய்த கணவரால் பரபரப்பு

    திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. மனைவியின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி பூஜை செய்த கணவரால் பரபரப்பு.



  • 10:35 (IST) 24 Nov 2022
    அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் மழைக்கு வாய்ப்பு என்று தகவல்



  • 09:50 (IST) 24 Nov 2022
    சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்



  • 08:56 (IST) 24 Nov 2022
    சமந்தாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு

    நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் திடீர் உடல்நலக்குறைவு



  • 08:56 (IST) 24 Nov 2022
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்

    கமல்ஹாசன் லேசான காய்ச்சல் காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . 2 நாட்கள் ஓய்வெடுக்க கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுரை.



  • 08:55 (IST) 24 Nov 2022
    இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment