Latest Tamil News Live : சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்துவந்தார். கடந்த 27-ம் தேதி இந்த வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், திடீரென்று சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளதாகவும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா, பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதிதான் தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்குக் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர் விவசாயிகள். அப்போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து 84 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும்,பொதுமக்கள் சார்பில் வன்முறை தொடர்பான 1700 மொபைல் போன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காந்தி நினைவுநாளான நேற்று, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். இதனிடையே, டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தது தொடர்பாகத் தவறான தகவல்களைப் பதிவிட்டதாகக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.82-க்கும், டீசல் ரூ.81.71-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Today's Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
அதிமுகவிற்கு தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் தேவை என்று தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வன்னியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு கோருவதில் யாருக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கடசித்தலைவர் திருமாவளவன், வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் செய்வது அரசியலுக்காக என்று தெரிவித்துள்ளார்.
கரூரில், திறப்பு விழாவின்போதே அம்மா மினி க்ளினிக் சுவர் இடிந்துவிழுந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? என்று தெரிவித்துள்ளார்.
சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது. இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என்றும் கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை எனவே உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தன் ஆதரவு உண்டு என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கட்சி கொடி ஏந்திய வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இதையடுத்து கட்சியில் இல்லாத ஒருவர் கட்சி கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் சசிகலா அதிமுக கோடியை பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 9,11 வகுப்பு மாணவர்களுக்கு 8-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம் என தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் என்றும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவிருக்கிறார். சென்னை வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் நாளை காலை 7 மணிக்கு தமிழகத்தின் 47-ஆவது தலைமை செயலாளராக பதவியேற்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் தற்போது நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
87 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. சொட்டு மருந்து வழங்கிய குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பரிசாக வழங்கினார் இபிஎஸ். பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என் அறிவிப்பு. தமிழகத்தில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights