Advertisment

Tamil News Updates: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது

Tamil News LIVE, Lok Sabha Elections 2024 Date Live Updates – 16 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fisherman boat

Tamil News

Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.

Advertisment

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Mar 17, 2024 00:10 IST
    உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால் பயணிகள் மகிழ்ச்சி

    உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது. சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றதை, அனைத்து கட்சிகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Mar 17, 2024 00:09 IST
    துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட்!

    இயக்குநராக வேண்டும் என்ற தனது கனவு 25 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியுள்ளதாக வீடியோ வெளியிட்டு நடிகர் விஷால் நெகிழ்ச்சி!



  • Mar 16, 2024 21:33 IST
    பாதாள சாக்கடை பணியின் போது விபத்து ; தொழிலாளி பலி

    பாதாள சாக்கடை பணியின் போது விபத்து - தொழிலாளி உயிரிழப்பு தாம்பரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் திடீரென மண் சரிந்து விபத்து உள்ளே விழுந்ததில் தொழிலாளி முருகானந்தம் உயிரிழப்பு



  • Mar 16, 2024 20:59 IST
    காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் நாளை மறுநாள் இறுதியாவதாக தகவல்

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 10 தொகுதிகளின் பட்டியல் நாளை மறுநாள் (மார்ச் 18) இறுதியாகிறது! தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



  • Mar 16, 2024 20:24 IST
    தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை : திருமாவளவன் கருத்து

    பிரதமர் மோடி அவரது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, அவருக்கு ஏதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 39 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்போது, வட இந்தியாவில் ஏன் நடத்த முடியாது? தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்று விசிக தலைவர் திருமாளவன் கூறியுள்ளார்.



  • Mar 16, 2024 20:20 IST
    பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : செல்வப்பெருந்தகை

    "சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.."  செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்



  • Mar 16, 2024 19:21 IST
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

    மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்த பிறகே அமலுக்கு வரும். நிதி உதவிகள் அறிவிப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தடை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளை தனியாகவோ, குழுவாகவோ அழைத்து பேசக் கூடாது. காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்த‌க் கூடாது. அரசு சாரா பணிகள், பொதுத்துறையில் பணி நியமனங்கள் செய்யக் கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்



  • Mar 16, 2024 19:19 IST
    கூட்டணி குறித்து அ.தி.மு.க - தே.மு.தி.க ரகசிய பேச்சுவார்த்தை

    மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க - தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அ.தி.மு.க தலைவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால், கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 16, 2024 18:56 IST
    கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது : அமித் ஷா விளக்கம்

    கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் அளித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவே அதிக பலன் பெற்றதாக ஒரு பார்வை உள்ளது



  • Mar 16, 2024 18:56 IST
    கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது : அமித் ஷா விளக்கம்

    கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் அளித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவே அதிக பலன் பெற்றதாக ஒரு பார்வை உள்ளது



  • Mar 16, 2024 18:49 IST
    அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : அரசியல் பேனர்கள் அகற்றம்

    மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.



  • Mar 16, 2024 18:17 IST
    18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாகப் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு

    “ஏப்.1ம் தேதி வரையில் 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாகப் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். நாளை கடைசி நாள்” -சத்யபிரதா சாகு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி



  • Mar 16, 2024 18:06 IST
    விளவங்கோடுக்கு மட்டுமே இடைத்தேர்தல் திருக்கோவிலூருக்கு இல்லை : தேர்தல் அதிகாரி தகவல்

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 50 ஆயிரம் வரை மட்டுமே கையில் பணம் எடுத்து செல்லலாம். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம் என கூறியுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு "விளவங்கோடுக்கு மட்டுமே இடைத்தேர்தல் திருக்கோவிலூருக்கு இல்லை. சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்கிறார் என்று அறிவித்துள்ளார்.



  • Mar 16, 2024 18:04 IST
    சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவு

    சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு



  • Mar 16, 2024 17:17 IST
    தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும் : தேர்தல் ஆணையம் மீது தி.மு.க விமர்சனம்

    பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது. இதன் காரணமாகத்தான் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில், பல்லடம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார கூட்டங்களை முன்பே நடத்தி முடித்துள்ளார். இது ஒரு ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.



  • Mar 16, 2024 14:38 IST
    பா.ஜ.க-வில் இணைந்த மாற்று கட்சியினர்

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார். இதேபோல், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் பா.ஜ.க-வில் இணைந்தார்

    அ.தி.மு.க முன்னாள் எம்.பி., விஜயகுமார் பா.ஜ.க-வில் இணைந்தார். இவர்கள் அனைவரும் சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தனர்



  • Mar 16, 2024 13:56 IST
    விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.கவுக்கு கோபம்: செல்லூர் ராஜூ 

    விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள், 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்கு தான் ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.  அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம்- செல்லூர் ராஜூ 



  • Mar 16, 2024 13:37 IST
    தே.மு.தி.க அறிக்கை

    "மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை" -தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்



  • Mar 16, 2024 13:16 IST
    கஞ்சாசெடி வளர்த்து பசுமாட்டிற்கு தீணியாக போட்ட நபர் கைது

    திருப்பத்தூரில் வீட்டின் பின்புறம் 7 அடி நீளமுள்ள கஞ்சாசெடி வளர்த்து பசுமாட்டிற்கு தீணியாக வைத்து வந்த நபர் கைது



  • Mar 16, 2024 13:04 IST
    தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

    தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம். தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்



  • Mar 16, 2024 12:33 IST
    விஷ்வகுருவா மவுனகுருவா?: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

     "பிரதமர் மெளனகுருவாக இருப்பது ஏன்?". மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மெளனகுருவாக இருப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி



  • Mar 16, 2024 12:30 IST
    தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பி.எஸ் கடிதம்

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம். தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வலியுறுத்தல்

    2024 தேர்தலில் படிவம் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்

    "நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம்"

    "தேர்தல் ஆணையம் தலையிட்டு, பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும்"



  • Mar 16, 2024 12:23 IST
    சேலை விற்பனையில் மருத்துவர்கள்: மதுரை அரசு மருத்துவமனையின் அவலம்

    மதுரை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  நோயாளிகளை காக்கவைத்துவிட்டு சேலை விற்பனையில் மூழ்கிய பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள். 



  • Mar 16, 2024 12:21 IST
    பரந்தூர்: நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை

    பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை

    காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியீடு. பெரும்பதூர் அருகே அக்கமாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு  வெளியீடு. 



  • Mar 16, 2024 12:11 IST
    நீங்கள் நலமா?: மக்களிடம் பேசிய ஸ்டாலின்

    நீங்கள் நலமா? புதிய திட்டத்தின் கீழ் மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்



  • Mar 16, 2024 11:47 IST
    மக்களவை தேர்தல் பணி - வழிகாட்டு நெறிமுறைகள்

    மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை.

    தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும். 



  • Mar 16, 2024 11:44 IST
    அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை

    அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை 3ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை. தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

    இரு கட்சிகள் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு. 3 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் கேட்கும் தே.மு.தி.க



  • Mar 16, 2024 11:29 IST
    2-வது உலக தமிழ் செம்மொழி மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு

    `2ஆம் உலக தமிழ் செம்மொழி மாநாடு' 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

    5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும். 



  • Mar 16, 2024 10:48 IST
    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

    வயது அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிப்பது காலாவதியான அணுகுமுறை. சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, அவரைவிட 6 வயது மூத்தவர் - மரங்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து



  • Mar 16, 2024 10:35 IST
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்

    மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரில் ஆஜரான நிலையில் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு



  • Mar 16, 2024 10:10 IST
    அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

    நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்

    தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது

    மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது

    கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம்

    - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • Mar 16, 2024 10:08 IST
    புதுமைப்பெண் திட்டம்- புதிய அரசாணை

    புதுமைப்பெண்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது

    இதன்மூலம் 49,664 மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவர்



  • Mar 16, 2024 09:42 IST
    அமைச்சர் ரகுபதி விளக்கம்

    தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க எந்த தடையுமில்லை

    - சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்



  • Mar 16, 2024 09:42 IST
    எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதில்

    அமலாக்கத்துறை விசாரணைகளுக்கும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

    ED விசாரணைகளுக்கு பிறகு பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி அளித்துள்ளத்தாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதில்



  • Mar 16, 2024 09:19 IST
    வெப்பநிலை அதிகரிக்கும்

    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச  வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

    இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 16, 2024 09:01 IST
    மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்

    மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்தியா கூட்டணி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் மு.க.ஸ்டாலின்



  • Mar 16, 2024 09:01 IST
    பாஜக ஆட்சி நிச்சயமாக மாறும்

    தேர்தல் பத்திர ஊழலில் தொடர்புடையவர்கள் மனதில் கொள்ளவேண்டியது, என்றாவது ஒரு நாள் பாஜக ஆட்சி நிச்சயமாக மாறும்

    -ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.



  • Mar 16, 2024 09:00 IST
    செல்வப்பெருந்தகை அறிக்கை

    காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு

    -தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை



  • Mar 16, 2024 08:31 IST
    தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு

    பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது



  • Mar 16, 2024 08:24 IST
    ஓ.எம்.ஆர். சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

    மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஓ.எம்.ஆர். சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்



  • Mar 16, 2024 07:41 IST
    மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

    மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

    மக்களவைத் தேர்தல் தேதியுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது



  • Mar 16, 2024 07:41 IST
    OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்

    சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்

    வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள், துர்யா ஓட்டல் முன் U டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லலாம்

    அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், உலக வர்த்தக மையத்தின் முன் U டர்ன் செய்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்

    இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்



  • Mar 16, 2024 07:40 IST
    தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள் உதயம்

    புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • Mar 16, 2024 07:40 IST
    பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி

    கோவையில் வருகிற 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்குஅனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

    பாதுகாப்புக் காரணங்களுக்காக பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்திருந்தது காவல்துறை. அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.



  • Mar 16, 2024 07:39 IST
    ரயில்கள் ரத்து

    பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம், வழித்தடத்தில் இரு மார்கத்திலும் வரும் ஞாயிற்றுக் கிழமை (மார்ச்.17) 44 புறநகர் ரயில்களின் சேவை ரத்து;

    மார்ச் 17ம் தேதி காலை 11 முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் ரத்து

    - ரயில்வே நிர்வாகம்



  • Mar 16, 2024 07:39 IST
    இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று உத்தரவு

    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.



  • Mar 16, 2024 07:38 IST
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

    மக்களவைத் தேர்தல் 2024, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன் போட்டி;

    திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம்  போட்டி



  • Mar 16, 2024 07:38 IST
    பயணிகளின் கவனத்திற்கு

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம்;

    பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற நடைமுறை, இன்று முதல் 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது

    - போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்          



  • Mar 16, 2024 07:38 IST
    மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Mar 16, 2024 07:37 IST
    சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்-ன் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது;

    ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இன்று சோதனை நடத்திய நிலையில், திடீர் கைது



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment