Petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கல்லூரி விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நயன் – விக்கி : இப்போ அப்பா அம்மா
நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில். வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபெறும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரதமர் மோடி பேச்சு: 2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பொறுப்பேற்கும்போது, இந்தியப் பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “எங்கள் பாரதிய ஜனதா கட்சியில் 40 ஆண்டுகளில்,அனைத்துச் சமுதாயத்திலிருந்தும் 11 புதிய தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். தி.மு.க தோன்றிய காலத்திலிருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணாவிற்கு பிறகு, 2-தலைவர்கள், அதுவும் தந்தையும் மகனும் கட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை, கொஞ்சம் வரிகளையாவது,மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே; தயவுசெய்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.” என்று கூறியுள்ளார்.
சிவசேனா கட்சியின் வில்-அம்பு சின்னத்தை முடக்கி வைத்துள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்த 3 சின்னங்களும் நிராகரிக்கப்பட்டது. நாளை புதிய சின்னங்களை விண்ணப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆபத்து இல்லாமல் எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ. 1 லட்சம் பரிசு என வேளாண் உற்பத்தி ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்கலாம்; http://www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிவசேனா கட்சி பெயரும், வில் அம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்ன, பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே கோரியிருந்தார். சிவசேனா கட்சிக்கு ‘தீபச் சுடர்” சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., அன்புவின் பூர்விக வீடு திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ளது.
இந்த வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை, சிசிடிவி ஹார்டிஸ்க் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததற்காக 67ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் பசுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிவசேனா சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ள நிலையில் அதற்க எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறும்.
தொடர்ந்து, வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.
சென்னை ராயபேட்டையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தக் கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக முனுசாமி கலந்துகொள்ளவில்லை.
எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுக்கு மேல் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் உயர் நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம், பேருந்து நிழற்குடையில் சீருடையுடன் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியான விவகாரத்தில், மாணவன், மாணவியை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்று கட்டுப்பாடுகளை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது
இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்க பெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவர் பென் எஸ். பெர்னான்கே மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யூ டயமண்ட் மற்றும் பிலிப் எச் டிப்விக் ஆகியோருக்கு “வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக” வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸில் நோபல் குழு திங்கள்கிழமை பரிசை அறிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழாவில் கலந்துகொள்பவர்கள் வரும் 21ம் தேதி மாலை 5.45க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்
சென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் 5447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் அக்டோபர் 1ம் தேதி முதல் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே சாராயம் என நினைத்து ரசாயனத்தை குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி விமான நிலையத்தில் இன்று துபாயில் இருந்த வந்த பயணிகளை சோதனையிட்ட போது 61 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி, விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா என்று பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை, கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு எங்கும் அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, தி.மலை, விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திராவிடம் என்றால் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது
தற்போது திராவிடம் என்றால் தமிழர் என கூறப்பட்டு வருகிறது
சென்னை, கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை போலீஸ்
1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தனர்
316 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்படைப்பு
தீபாவளி பண்டிகையை ஒட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அதிமுக எந்த நிலையிலும் இந்தி திணிப்பை ஆதரிக்காது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு இறுதி மரியாதை செலுத்துவார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முலயாம் சிங் யாதவ் மரணத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று உ.பி முதல்வர் தெரிவித்துள்ளார்.
: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடு விவகாரம் துணைபோன 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு
முலயாம் சிங் யாதவ் மரணச் செய்தி கேட்டு பிரதமர் ட்வீட். அவரது ஆட்சி குறித்தும், கட்சியை வழி நடத்துவது குறித்தும் பாராட்டி ட்வீட்
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலயாம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
திமுக துணைப் பொதுச் செயலாளராக வாய்ப்பளித்த தலைவருக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் நன்றி புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ட்வீட்
தஞ்சை; கும்பகோணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தல். விடுமுறை அளிக்கப்பட்ட விவரங்களை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் – முதன்மை கல்வி அலுவலர்
ஜம்மு காஷ்மீர் : அனந்த்நாக் அருகே டாங்பாவா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
கடலூர் அருகே சிறுப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு வீட்டில் துணி காய வைக்கும்போது இரும்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு