Tamil news Highlights: ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் இன்று தொடக்கம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 12 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 12 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News

Tamil News Updates

சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த தொடரில் 8 நாடுகளைச் சேர்ந்த 32 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 387-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மெட்ரோ பார்கிங் கட்டணம் உயர்வு

Advertisment
Advertisements

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்வு.
வரும் ஜூன்14-ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்வு. பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.30 ஆகவும், அதற்கு மேல் ரூ.40 ஆகவும் உயர்வு. மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு முந்தைய கட்டணமே தொடரும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

கருணாநிதி பெயரில் பாக்சிங் அகாடமி

சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்திலான பாக்சிங் அகாடமி தொடங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாக்சிங் அகாடமி அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:33 (IST) 12 Jun 2023
    சென்னை, கே.கே. நகர் வட்டார போக்குவரத்து மைதானத்தில் பயங்கர தீ விபத்து

    சென்னை, கே.கே. நகர் வட்டார போக்குவரத்து மைதானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேருந்துகள், 1 லாரி, 2 ஆட்டோக்கள், 1 வேன் உள்ளிட்ட வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது


  • 20:06 (IST) 12 Jun 2023
    ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா; உள்ளூர் விடுமுறை

    இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வரும் நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஜூன்13) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூன் 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது


  • 19:40 (IST) 12 Jun 2023
    அண்ணாமலையின் பேச்சுக்கு ஓபிஎஸ் கண்டனம்

    ஜெயலலிதா தொடர்பான அண்ணாமலையின் பேச்சு, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்


  • 19:10 (IST) 12 Jun 2023
    டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சு தேர்வு; கோவை முதலில் பேட்டிங்

    டிஎன்பிஎல் போட்டிகளின் முதல் போட்டியில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது


  • 19:00 (IST) 12 Jun 2023
    இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு ஒன்று உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்து இதழான லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில், இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.


  • 18:53 (IST) 12 Jun 2023
    அண்ணாமலையை கண்டித்து அதிமுக போராட்டம்

    புதுச்சேரியில் தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலையை கண்டித்து உப்பளம் அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


  • 18:39 (IST) 12 Jun 2023
    தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும்.. கனிமொழி ட்வீட்

    தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்!" என திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.


  • 18:09 (IST) 12 Jun 2023
    கோவின் செயலி பாதுகாப்பானது: மத்திய அரசு விளக்கம்

    கோவின் செயலி பாதுகாப்பானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து, கோவின் குறித்து ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளது.


  • 17:40 (IST) 12 Jun 2023
    குருத்திகா பட்டேலின் தந்தைக்கு ஜாமின்

    தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கில், குருத்திகா பட்டேலின் தந்தைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமின் வழங்கியது. சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபட கூடாது என நவீன் பட்டேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது


  • 17:31 (IST) 12 Jun 2023
    மணல் கடத்தல்: திமுக எம்எல்ஏ மிரட்டல்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில், விதிமுறைகளை மீறி, குளங்களில் இருந்து மணல் அள்ளுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், 4 பேரை கைது செய்தனர்.

    மேலும், மணல் அள்ளுவதற்கு அவர்கள் பயன்படுத்திய இயந்திரங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை அறிந்த பட்டுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை, டி.எஸ்.பி. பாலாஜியை தொடர்பு கொண்டு, கைது செய்த 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.


  • 17:28 (IST) 12 Jun 2023
    தி.மலை விவகாரம்: டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு மனு

    திருவண்ணாமலையில், ராணுவ வீரரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனு அளித்துள்ளார்


  • 16:30 (IST) 12 Jun 2023
    அமித் ஷா வருகை, மின்வெட்டு தற்செயலானது- செந்தில் பாலாஜி

    அமித்ஷாவின் வருகையின் போது மின்வெட்டு ஏற்பட்டது தற்செயலானது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


  • 16:02 (IST) 12 Jun 2023
    அதிமுகவோடு இருந்தால்தான் பாஜகவுக்கு பலம்: டி. ஜெயக்குமார்

    பாரதிய ஜனதா அதிமுகவோடு கூட்டணி வைத்தால்தான் அக்கட்சிக்கு பலம் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறினார்.


  • 15:53 (IST) 12 Jun 2023
    கூட்டணி தர்மத்தை மீறும் அண்ணாமலை

    அண்ணாமலை தனிகாட்டு ராஜா போல் செயல்படுகிறார். அண்ணாமலை மீது அமித்ஷா. நட்டா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவுடன் இருந்தால் பாஜகவுக்கு பலம். அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்பது போல் அவரின் பேச்சு உள்ளது. அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லை இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார்.


  • 15:44 (IST) 12 Jun 2023
    ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை

    சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது ரயில் லூப் லைனுக்கு மாறியபோது, பின் சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிர்ச்சி ஊழியர்கள் உடனே சரிசெய்ததால், ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை


  • 15:42 (IST) 12 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து 3 பேர் கைது

    ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பஹானகா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை. உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்


  • 15:41 (IST) 12 Jun 2023
    வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் - வானிலை மையம்


  • 14:51 (IST) 12 Jun 2023
    தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு

    தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு . பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்துள்ளது . வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்தது மத்திய அரசு


  • 13:52 (IST) 12 Jun 2023
    பிபாரஜாய் புயல்: பிரதமர் மோடி ஆலோசனை

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயல் 'பிபார்ஜாய்' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை


  • 13:36 (IST) 12 Jun 2023
    வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை

    செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு சாலையோரம் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 பேர் வெறிச்செயல் தொழில் போட்டி காரணமாக கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை


  • 13:33 (IST) 12 Jun 2023
    இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்

    மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர். பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் அதிகளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில், தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர் பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


  • 13:29 (IST) 12 Jun 2023
    தூய்மை காவலர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு

    கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு . ரூ. 3600ல் இருந்து ரூ. 5000ஆக மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு இதற்காக அரசு கூடுதலாக ரூ. 396 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை


  • 12:59 (IST) 12 Jun 2023
    மா.சுப்பிரமணியன் பேட்டி

    இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு; நீட் தேர்வில் எப்படியாவது விலக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது - சென்னை மருத்துவக் கல்லூரியின் 187 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


  • 12:21 (IST) 12 Jun 2023
    எடப்பாடி பழனிசாமி அறிக்கை

    கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை- எடப்பாடி பழனிசாமி அறிக்கை


  • 12:20 (IST) 12 Jun 2023
    ராமதாஸ் வலியுறுத்தல்

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி; 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


  • 12:17 (IST) 12 Jun 2023
    பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்?

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிள்ளார்.

    பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது.


  • 12:13 (IST) 12 Jun 2023
    மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

    பட்டமளிப்பை தாமதப்படுத்தி வருவதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் 16ஆம் தேதி, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


  • 12:13 (IST) 12 Jun 2023
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு எப்போது?

    ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின், ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார்.


  • 11:39 (IST) 12 Jun 2023
    முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


    http://upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்


  • 11:28 (IST) 12 Jun 2023
    மின்தடை தற்செயலாக நடந்தது

    சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலாக நடந்தது; அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது- அமைச்சர் செந்தில்பாலாஜி


  • 11:27 (IST) 12 Jun 2023
    செந்தில் பாலாஜி பேட்டி

    வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி


  • 11:26 (IST) 12 Jun 2023
    தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டங்களும் வழங்கப்படவில்லை

    நாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா வெளிப்படையாக பதில் கூறவில்லை.

    பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டங்களும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தற்போது வரை நிறைவேற்றம். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் தமிழக அரசுக்கு சிறப்பு திட்டங்கள் வரவில்லை. அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்குகிறது.

    திமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை தேவைப்படாத அளவுக்கு மருத்துவ கட்டமைப்பு இருந்தது- முதல்வர் ஸ்டாலின்


  • 11:25 (IST) 12 Jun 2023
    பள்ளி வந்த மாணவர்கள் ஏமாற்றம்

    சீல் வைக்கப்பட்ட பள்ளியை திறக்க கோரி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 2 பள்ளிகளுக்கு நேற்றைய தினம் சீல் வைக்கப்பட்டது.


  • 10:58 (IST) 12 Jun 2023
    திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர்

    முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர் பெற்றது

    திமுக அரசு ஆட்சிக்கு வந்து தற்போது வரை அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சில திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன - முதல்வர் ஸ்டாலின்


  • 10:56 (IST) 12 Jun 2023
    விமானநிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்வெட்டு

    சென்னை விமானநிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்வெட்டு ஏற்பட்டது.

    மின்வெட்டு விவகாரத்தில் அரசியல் செய்யும் பாஜகவின் முயற்சி எடுபடாது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டிற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்


  • 10:46 (IST) 12 Jun 2023
    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரிப்பு - ஸ்டாலின்

    கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    உரிய நேரத்தில் நீர் திறப்பதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரிப்பு- முதல்வர் ஸ்டாலின்


  • 10:42 (IST) 12 Jun 2023
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

    12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

    3வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்


  • 09:57 (IST) 12 Jun 2023
    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு

    கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு.

    புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

    பள்ளி சீருடையில் இருந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்


  • 09:41 (IST) 12 Jun 2023
    அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.31 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

    அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்க நிர்ணயிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அன்பில் மகேஷ் பொய்யா மொழி


  • 08:15 (IST) 12 Jun 2023
    சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து

    சென்னை மிண்ட் பகுதியில், ஜவுளி கடையில் தீ விபத்து

    6 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன

    வளாகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் ஆடைகள் எரிந்தன

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்


  • 08:14 (IST) 12 Jun 2023
    மேட்டூர் அணை திறப்பு

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

    அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் குறிப்பாக ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது 19-வது முறையாகும்.

    இதன் மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கம் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.


  • 08:13 (IST) 12 Jun 2023
    இன்று பள்ளிகள் திறப்பு

    கோடை விடுமுறை முடிந்து 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.


Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: