scorecardresearch

Tamil news today: ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரின் காரை எரித்த சம்பவத்தில் 2 பேர் கைது

Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 27 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today: ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரின் காரை எரித்த சம்பவத்தில் 2 பேர் கைது

பெட்ரோல்- டீசல் விலை

சென்னையில் 129வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை.

தீ விபத்து

திருப்பத்தூர்,  ஆம்பூர் அருகே காலணி மூலப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.  தீயை அணைக்க சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக போராடும் தீயணைப்பு வீரர்கள் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள், கணினிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசம்.

சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

Live Updates
23:55 (IST) 27 Sep 2022
ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரின் காரை எரித்த சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரின் காரை எரித்த சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராஹிம் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரின் காரை கடந்த 23ஆம் தேதி 3 பேர் தீ வைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

23:53 (IST) 27 Sep 2022
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 9 பேர் கைது

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான வழக்கில் கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஏற்கனவே 11 வழக்குகளில் 14 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

23:51 (IST) 27 Sep 2022
இலங்கையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து

இலங்கை : தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

19:54 (IST) 27 Sep 2022
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.12 வரை காலாண்டு விடுமுறை என்றும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 9 வரை காலாண்டு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

19:53 (IST) 27 Sep 2022
கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெறும் இந்த திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.பிரம்மோற்சவ நாட்களில் மலையப்ப சுவாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் அருள்பாலிப்பார்

18:50 (IST) 27 Sep 2022
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படை நோக்கம் – மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படை நோக்கம்; அனைவருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

18:46 (IST) 27 Sep 2022
உண்மையான சிவசேனா யார்? தேர்தல் ஆணையம் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீர்மானிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. இது உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது என்று உத்தவ் தாக்கரே தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

18:25 (IST) 27 Sep 2022
பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்; ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாகவும் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில், பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். செப். 16-க்கு பிறகு முதன் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.

17:59 (IST) 27 Sep 2022
கனியாமூர் பள்ளி கலவரம் வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 12 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

17:29 (IST) 27 Sep 2022
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைக்கவில்லை; ஐகோர்ட்டில் சிபிசிஐடி புகார்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என சிபிசிஐடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

மரபணு சோதனைக்கு பெற்றோர் மாதிரிகளைத் தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:48 (IST) 27 Sep 2022
ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை – சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஐகோர்ட்டில் குற்றச்சாட்டு

ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது

16:24 (IST) 27 Sep 2022
10% இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் உள்ளிட்ட 100 பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, தலைமை நீதிபதி யு.லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது

16:02 (IST) 27 Sep 2022
ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு ஏன்? – விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டிடம் கட்டியதால் சுற்று சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியில் விலக்கு அளிக்கப்பட்டதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

15:45 (IST) 27 Sep 2022
குமரி அனந்தனுக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வீட்டுவசதி வாரிய உயர் வருவாய் குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டு ஆணையை குமரி அனந்தனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்

15:31 (IST) 27 Sep 2022
ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பதில்லை. ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். அரசு பேருத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்துக் கொண்டே முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்

15:15 (IST) 27 Sep 2022
எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 351 கோடியை விடுவித்தது தமிழக அரசு

2022-23 ஆம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 702 கோடியில் 50% ஆன ரூ.351 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.

14:33 (IST) 27 Sep 2022
கியூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:33 (IST) 27 Sep 2022
68வது தேசிய திரைப்பட விருதுகள்

டெல்லியில் செப்டம்பர் 30 ஆம் தேதி 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய விருதுகளை வழங்க உள்ளார்.

13:42 (IST) 27 Sep 2022
தாதாசாகேப் பால்கே விருது

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

13:42 (IST) 27 Sep 2022
7.5% இடஒதுக்கீடு.. 75% பேர் தேர்ச்சி

7.5% இடஒதுக்கீட்டில் கடந்தாண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 350பேரில் 75% பேர் முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

13:10 (IST) 27 Sep 2022
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுமார் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பயனடைய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12:52 (IST) 27 Sep 2022
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

சென்னை, தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதி

பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

12:05 (IST) 27 Sep 2022
தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனார் – ஸ்டாலின் புகழாரம்

உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு சென்றவர்

இதழியல் பணிக்கு வேர் அவர், பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

11:27 (IST) 27 Sep 2022
சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழிசை செளந்தரராஜன் மரியாதை

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை

சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர் : தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் தமிழர் தந்தை – தமிழிசை செளந்தரராஜன்

10:35 (IST) 27 Sep 2022
குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு 4 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு தகவல் . குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை

10:34 (IST) 27 Sep 2022
சாமானியர்களும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார்

அனைத்து தமிழர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்த பெருமை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரையே சேரும் பத்திரிகை துறையில் சி.பா.ஆதித்தனார் படைத்த வரலாற்றை, உலக தமிழர்கள் பறைசாற்றுவார்கள் சாமானியர்களும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார் – ஓபிஎஸ்

09:45 (IST) 27 Sep 2022
தவி காலத்தை நீட்டிக்க முடிவு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவி காலத்தை நீட்டிக்க முடிவு என தகவல்

09:44 (IST) 27 Sep 2022
அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு என தகவல். சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

09:44 (IST) 27 Sep 2022
அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து

திருவாரூர் வட்டம் மற்றும் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து. தேர்வு காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு.

09:43 (IST) 27 Sep 2022
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Web Title: Tamil news today live sekarbabu brother update dmk admk

Best of Express