/tamil-ie/media/media_files/uploads/2023/08/rain-1234.jpg)
மழை
petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை
உலக தடகள சாம்பியன்ஷிப் - ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டியில் 88.17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா அசத்தல் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 1906 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 154 கனஅடியாக சரிவு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 118 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 48 கனஅடியாக சரிவு. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 345 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 11 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
- 21:30 (IST) 28 Aug 2023காப்பீட்டுத் துறையில் கால் பதிக்கும் ஜியோ நிதிச்சேவை நிறுவனம்
காப்பீட்டுத் துறையில் ஜியோ நிதிச்சேவை நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்
- 21:04 (IST) 28 Aug 2023தமிழ்நாடு ஆளுநர் ரவி ஓணம் வாழ்த்து
ஓணம் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். ‘மஹாபலி’ அமைதியும், வளமும் அளிக்கட்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- 20:39 (IST) 28 Aug 2023தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 19:58 (IST) 28 Aug 2023தெலங்கானாவில் புரட்சி பாடகர் கத்தார் படம் திறப்பு: தொல். திருமாவளவன் பங்கேற்பு
தெலங்கானாவில் புரட்சி பாடகர் கத்தார் படம் திறப்பு விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது, கத்தாருக்கு அஞ்சலி செலுத்தி உரை ஆற்றினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.
#தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கானா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற புரட்சி பாடகர் #கத்தார் அவர்களுடைய படத்திறப்பு மற்றும் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அவருடைய படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய உரை...#VCK_Telunganapic.twitter.com/8eGLZarlEY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 28, 2023 - 19:57 (IST) 28 Aug 2023தெலங்கானாவில் புரட்சி பாடகர் கத்தார் படம் திறப்பு: தொல். திருமாவளவன் பங்கேற்பு
தெலங்கானாவில் புரட்சி பாடகர் கத்தார் படம் திறப்பு விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது, கத்தாருக்கு அஞ்சலி செலுத்தி உரை ஆற்றினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.
#தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கானா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற புரட்சி பாடகர் #கத்தார் அவர்களுடைய படத்திறப்பு மற்றும் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அவருடைய படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய உரை...#VCK_Telunganapic.twitter.com/8eGLZarlEY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 28, 2023 - 19:45 (IST) 28 Aug 2023விஜய் கூட்டணிக்கு வைக்க விரும்பினால் இணைந்து செயல்படுவோம்: சீமான்
நடிகர் விஜய் கூட்டணி வைக்க விரும்பினால் அவரோடு இணைந்து செயல்படுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- 19:20 (IST) 28 Aug 2023வடிவேலு சகோதரர் மரணம்: மு.க. ஸ்டாலின் இரங்கல்
வடிவேலு சகோதரர் இன்று மரணம் அடைந்தார். அவரின் மரணத்துக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
"திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 28, 2023
திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன்.
தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார் pic.twitter.com/ALp7NkqjQy - 19:10 (IST) 28 Aug 2023சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் வசூல்
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக 7.96 லட்சம் ரூபாய் மற்றும் 11.5-கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி மற்றும் சிங்கப்பூர்,கத்தார் நாட்டு கரன்சிகளையும் காணிக்கையாக வசூலாகி உள்ளது.
- 18:37 (IST) 28 Aug 2023சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல - இ.பி.எஸ் பேட்டி
சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல - இ.பி.எஸ் பேட்டி
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி: “மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல” என்று கூறினார்.
- 18:35 (IST) 28 Aug 2023நடிகர் வடிவேலுவின் தம்பி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன்(52) மறைவுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 18:34 (IST) 28 Aug 2023கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க கூண்டோடு கலைப்பு - டாக்டர் ராமதாஸ்அறிவிப்பு
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க-வுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மாநில அமைப்புக் குழு செயலாளர் தருமபுரி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுளது. இதனால், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க கூண்டோடு கலைப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- 18:16 (IST) 28 Aug 2023நெல்லை: மணிமுத்தாறு அருவியில் ஆக. 28 முதல் 4 நாட்கள் குளிக்க தடை
நெல்லை மாவட்டம்மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவிப் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
- 18:15 (IST) 28 Aug 2023ஓணம் பண்டிகை: சென்னை மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்தார் சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா. அதே போல, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 18:12 (IST) 28 Aug 2023பிரிட்டனில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை பாதிப்பு
பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- 18:11 (IST) 28 Aug 2023மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து; சுற்றுலா நிறுவனத்தின் 5 பேருக்கு செப். 11 வரை நீதிமன்ற காவல்
மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழப்பு; உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை செப்டம்பர் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 18:09 (IST) 28 Aug 2023கேபிள் இல்லாமல் அதிவேக இணையம்; ஜியோ ஏர் ஃபைபெர் திட்டம் செப். 19ல் தொடக்கம் - ஜியோ நிறுவனம் அறிவிப்பு
எந்தவித கேபிள்களும் இல்லாமல் காற்றின் மூலம் அதிவேக இணையத்தை வழங்கும் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
JioAirFiber பாக்ஸை விட்டில் வைத்து ஆன் செய்தால் மட்டுமே போதும் இதன் ஹாட்ஸ்பாட் மூலம் டிவி, மொபைல் கம்ப்யூட்டர் ஆகியவற்றை எளிமையாக இணைக்கலாம் என ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
- 17:37 (IST) 28 Aug 2023ஐகோர்ட் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ. 3 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் உரிய இடத்தை பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 16:55 (IST) 28 Aug 2023நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
டெல்லியில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு 23 ஆவது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைப்பெறுகிறது.
- 16:25 (IST) 28 Aug 2023நீரஜ் சோப்ராவுக்கு இ.பி.எஸ் வாழ்த்து!
"உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நீரஜ் சோப்ரா மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று - அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
- 16:23 (IST) 28 Aug 2023வடிவேல் பட பாணியில் ஏரியை காணோம்!
ஆரணி அருகே வடிவேல் பட பாணியில் ஏரியை காணோம் என்று கிராம மக்கள் ஓன்று திரண்டு கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- 16:00 (IST) 28 Aug 2023பொதுமக்களுக்கு இஸ்ரோ கொடுத்த சூப்பர் வாய்ப்பு!
ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதள முகவரியில், நாளை பகல் 12 மணி முதல் விருப்பமுள்ளோர் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:49 (IST) 28 Aug 2023செந்தில் பாலாஜி வழக்கு: நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு. ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும், அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை ;காணொலியில் ஆஜரானால் போதும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
- 15:43 (IST) 28 Aug 2023சுயமரியாதை திருமணம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும்" என ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
- 15:42 (IST) 28 Aug 2023இயக்குனராக அறிமுகம் ஆகிறார் நடிகர் விஜய் மகன்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்.
- 14:55 (IST) 28 Aug 2023மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம்
மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி
வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர்.
ரயில் தீ விபத்து தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது
- 14:18 (IST) 28 Aug 2023சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்;
- 14:11 (IST) 28 Aug 2023மதுரை ரயில் விபத்து-லக்னோ டிராவல்ஸ் ஊழியர்கள் கைது
மதுரை ரயில் விபத்து தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் ஊழியர்களான சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம் கஷியப் ஆகியோர் கைது.
- 13:49 (IST) 28 Aug 2023செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு;
புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் செந்தில் பாலாஜி
- 13:37 (IST) 28 Aug 2023காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த சென்னை மேயர் பிரியா
மண்ணடி: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபு
- 13:25 (IST) 28 Aug 2023தொழில்நுட்ப மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை போரூரில், யுனைட்டட் பார்சல் சர்வீஸ் (UPS) நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுக்கு UPS தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்கான கடிதங்களை ஸ்டாலின் வழங்கினார்.
உலகப் பெருமை கொண்ட நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறப்பது பெருமை தரக்கூடியதாக உள்ளது. நல்ல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதை நல்லாட்சியின் அடையாளமாகவே பார்க்கிறேன்.
இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- சென்னை போரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- 13:24 (IST) 28 Aug 2023நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள்- டிடிவி தினகரன்
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள்.
விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா, அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்- டிடிவி தினகரன் X தளத்தில் பதிவு
- 13:23 (IST) 28 Aug 2023நீரஜ் சோப்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்று தந்த வீரர் நீரஜ் சோப்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான சாதனைகள் இந்திய விளையாட்டை தொடர்ந்து உலக அரங்கில் உயர்த்தி வருகிறது- மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
- 12:59 (IST) 28 Aug 2023திறந்தவெளியில் சாக்கடை அருகே உணவுகள் தயாரிப்பு
காரைக்குடியில் பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடல்
கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
பிரிட்ஜில் இருந்த பழைய நண்டு கிரேவி, சிக்கன், மட்டன் கிரேவிகள் பினாயில் ஊற்றி அழிப்பு
திறந்தவெளியில் சாக்கடை அருகே வைத்து உணவுகள் தயார் செய்யப்பட்டதால் அதிர்ச்சி
உணவகத்தை 5 நாட்கள் மூடி பிரச்சினையை சரிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவு
- 12:49 (IST) 28 Aug 2023தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சம்
தனிநபர் ஆண்டு வருமானம் நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ.1.66 லட்சம், தேசிய அளவில் ரூ.98,374 ஆக உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது
- 12:48 (IST) 28 Aug 2023தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது இடம்
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது இடம் அமைச்சர் தங்கம் தென்னரசு
கொரோனா தொற்றுக்குப் பின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்தது
கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் மாநில பொருளாதாரம் வளர்கிறது
பணவீக்கம் தேசிய அளவை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 12:37 (IST) 28 Aug 2023கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?
இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின் எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு
- 12:35 (IST) 28 Aug 2023சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை
மதுரை ரயில் விபத்து தொடர்பாக சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை.
சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது - ரயில்வே காவல்துறை
- 12:22 (IST) 28 Aug 2023நடிகர் வடிவேலு தம்பி மரணம்
திரைப்பட நடிகர் வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன்(52) உடல்நிலை குறைவால் காலமானார்
- 11:57 (IST) 28 Aug 2023இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2016ல் அளித்த பேட்டியில் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக வழக்கு
விசாரணைக்கு ஆர்.கே.செல்வமணி ஆஜராகாததால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
- 11:30 (IST) 28 Aug 2023காலாண்டு தேர்வுக்கு பொது வினாத் தாள் முறை
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் பொது வினாத் தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
வழக்கமாக பள்ளி அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்டு காலாண்டு தேர்வு நடைபெறும்.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத் தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
- 10:46 (IST) 28 Aug 20233 பேராசிரியர்கள் பணியிடமாற்றம்
கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டி, மோதல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் பணியிடமாற்றம்
- 10:46 (IST) 28 Aug 20232 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் இருவேறு தம்பதிகளுக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது
- 09:49 (IST) 28 Aug 2023வேளச்சேரி - கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்
வேளச்சேரி - கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம் சிந்தாதிரிப்பேட்டையில் அலைமோதும் பயணிகள் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, எழும்பூர், சென்ட்ரலுக்கு சிறப்பு பேருந்துகள்.. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய வளாகத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்துகள் எழும்பூர் - கடற்கரை ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைப்பதால், ரயில் சேவையில் மாற்றம்
- 09:14 (IST) 28 Aug 2023திமுக தலைவராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2018 ஆகஸ்ட் 28ம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்
- 08:34 (IST) 28 Aug 2023திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4 வது சிறுத்தை சிக்கியது
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4 வது சிறுத்தை சிக்கியது ஏற்கனவே 3 சிறுத்தைகள் சிக்கிய நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்று கொன்றது சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திருப்பதி மலைப்பாதையில் கூண்டுகளை அமைத்தனர் இன்று அதிகாலை பிடிபட்ட சிறுத்தையை உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை
- 08:33 (IST) 28 Aug 2023அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர் ஆகிறார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.