/tamil-ie/media/media_files/uploads/2023/07/124-2.jpg)
Petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேகதாது அணை கட்ட தமிழகம் இடம் தராது: துரைமுருகன்
தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது . 12.213 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டியது- ஆனால் குறைந்த அளவே கிடைத்துள்ளது. இதேநிலை நீடித்தால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது . காவிரி மேலாண்மை வாரியத்திடம் வலியுறுத்தும்படி மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன் - அமைச்சர் துரைமுருகன்.
மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு
மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் புகழாரம். தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை நடிகர் வடிவேலு எட்டியுள்ளார் . தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டுவந்துள்ளார். ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரத்தை உதயநிதி கொடுத்துள்ளார் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:49 (IST) 06 Jul 2023ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதத்திற்கு அமைச்சர் ரகுபதி பதில் அறிக்கை
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு, அதற்கான ஒப்புதலும் அளித்துவிட்டு தற்போது கோப்புகளே வரவில்லை என்று மறைப்பதா? முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- 21:52 (IST) 06 Jul 2023கோப்புகள் வரவில்லை என உண்மையை மறைக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி - அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோப்புகள் அனுப்பப்பட்டன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான ஒரிஜினல் மே 15-ம் தேதி கோப்புகள் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகள் அளிக்கப்படவில்லை என்று கூறுவது ஆளுநர் உண்மையை மறைக்கிறார்.” என்று ரகுபதி தெரிவித்துள்ளார்.
- 21:28 (IST) 06 Jul 2023ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை டெல்லி பயணம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (ஜூலை 07) டெல்லி செல்கிறார். நாளை மாளை டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
- 21:26 (IST) 06 Jul 2023‘ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு எதிர்க்கட்சி போல செயல்படுகிறார் ஆர்.என். ரவி’ - அமைச்சர் ரகுபதி
ஆளுநர் மாளிகை விளக்கம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு எதிர்க்கட்சி போல செயல்படுகிறார் ஆர்.என். ரவி என்று தெரிவித்துள்ளார்.
- 21:23 (IST) 06 Jul 20232 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில் வெள்ளிக்கிழமை (ஜூலை 07) குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததையடுத்து, ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்தார்.
- 20:35 (IST) 06 Jul 2023பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் பேரணியில் ஈடுபட்டதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
- 20:25 (IST) 06 Jul 2023மின்வாரியத்தில் ரூ.397 கோடிக்கு முறைகேடு - அண்ணாமலை
மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. அதிகாரிகள் துணையுடன் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே தொகையை ஒப்பந்த புள்ளியில் கோரியுள்ளனர். ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், துறை அமைச்சர்கள் இணைந்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
- 20:07 (IST) 06 Jul 2023ஜெய்பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேலுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு
ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் த.செ. ஞானவேலுக்கு எதிரான வழக்கில், 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்பீம் படத்தின் கதை தன்னுடைய வாழ்க்கையின் உண்மை சம்பவம் எனவும் கதை திருப்பட்டதாகவும் குளஞ்சியப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- 20:04 (IST) 06 Jul 2023கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போது கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் துணை பி.டி.ஓ.க்கள் முகிலன் மற்றும் பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.
- 20:02 (IST) 06 Jul 2023திருவாரூர் புலிவலம் பகுதி அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- 19:30 (IST) 06 Jul 2023ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லாது என அறிவித்தது ஏன்? - உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை மறைத்துள்ளார்.
வட்டி தொழில், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் மறைத்துள்ளார்.
ரூ.4.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள நிலையில், ரூ. 1.35 கோடி என வேட்பு மனுவில் காட்டியுள்ளார்.
வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார்.
சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபணம் ஆகியுள்ளது என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- 19:25 (IST) 06 Jul 2023தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு; ஷரத் பவாருடன் ராகுல் காந்தி சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில், ஷரத் பவாரை அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.
- 19:05 (IST) 06 Jul 2023செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு: 3ஆவது நீதிபதி கருத்து
செந்தில் பாலாஜி கைதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன, இந்த வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்க கூடாது; வழக்கின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் 3வது நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- 18:53 (IST) 06 Jul 2023நவம்பரில் சென்னை-நெல்லை வந்தே பாரத்
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
- 18:34 (IST) 06 Jul 2023ஜூலை 14 விண்ணில் பாயும் சந்திராயன்
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு சந்திராயன்3 விண்ணில் பாய்கிறது.
இது நிலவு குறித்து ஆராய்ச்சிகள் செய்து தகவல்களை உடனுக்குடன் அனுப்புகிறது.
- 18:28 (IST) 06 Jul 2023கட்சி விதிகளை மீறினால் நடவடிக்கை: வேணுகோபால்
கட்சி விதிகளை மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 18:06 (IST) 06 Jul 2023மரக்கன்று நட்ட முதல்வர்
சிறுநீர் கழித்துத் துன்புறுத்தப்பட்ட பழங்குடியின நபரான தஷ்மத் ராவத்துடன் இணைந்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் மரக் கன்று நட்டார்.
- 17:48 (IST) 06 Jul 2023எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு: சுப்பிரமணியன் சாமி
2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என சுப்பிரமணியன் சாமி கூறினார்.
- 17:31 (IST) 06 Jul 2023குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் நேற்றிரவு வழக்கத்துக்கு மாறாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் பழைய குற்றாலம், ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு காணப்படுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- 17:14 (IST) 06 Jul 2023ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: சச்சின் பைலட்
ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என சச்சின் பைலட் கூறினார்.
- 17:01 (IST) 06 Jul 2023வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு?
சில குறுகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- 17:00 (IST) 06 Jul 20236 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது : மதுரை உயர்நீதிமன்றம்
மதுரையைச் சேர்ந்த முனீர்அகமது என்பவர் 2017ல் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு வழக்கி்ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவத்துள்ளது
- 16:58 (IST) 06 Jul 2023ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், வரும் ஆக.7ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு.
- 16:35 (IST) 06 Jul 2023சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் கடிதம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் விளக்கம் "முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது" "முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை" "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும்" "முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை தமிழக அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது" - ஆளுநர்
- 15:58 (IST) 06 Jul 2023சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு
சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு வரும் சனி, ஞாயிறுகளில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை சென்னையில் இருந்து கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது
- 15:55 (IST) 06 Jul 2023ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் உதவித்தொகை அறிவிப்பு
ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ₨2,750 உதவித்தொகை. 40 வயது முதல் 60 வயது வரை உள்ள மனைவியை இழந்த ஆண்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் மனோஹர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
- 15:50 (IST) 06 Jul 20234 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், திருச்சி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது
- 15:28 (IST) 06 Jul 2023செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு : நாளை பட்டியலிட உத்தரவு
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நாளை பட்டியலிட 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். விசாரணையை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் திங்கள் அல்லது செவ்வாய் விசாரிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்
- 15:28 (IST) 06 Jul 2023செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு : நாளை பட்டியலிட உத்தரவு
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நாளை பட்டியலிட 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். விசாரணையை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் திங்கள் அல்லது செவ்வாய் விசாரிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்
- 15:00 (IST) 06 Jul 2023ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது; 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம்
வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில், தேனி மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, தீர்ப்பை நிறுத்தி வைக்க ஓ.பி.ரவீந்திரநாத் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 14:46 (IST) 06 Jul 2023செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு
வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது - நீதிபதி கார்த்திகேயன்
- 14:44 (IST) 06 Jul 2023ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 14:15 (IST) 06 Jul 2023கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்
கோவை மாவட்டத்திற்கு, பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியை பொறுப்பு அமைச்சராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- 13:39 (IST) 06 Jul 2023நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது.
நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும். வரும் 28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
- 13:37 (IST) 06 Jul 2023ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் விரைவு ரயில்கள்
சென்னை - பாலக்காடு, நாகர்கோவில் - பெங்களூரு, ராமேஸ்வரம் - ஒஹா விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்.
- 13:35 (IST) 06 Jul 2023அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
அண்ணாமலை தலைமையில் மகனுக்கு திருமணம் செய்து வைத்த, விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் அதிமுகவில் இருந்து நீக்கம்- கட்சிக்கு அவப்பெயர் எற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை
- 13:29 (IST) 06 Jul 2023கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:29 (IST) 06 Jul 2023அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
அண்ணாமலை தலைமையில் மகனுக்கு திருமணம் செய்து வைத்த, விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் அதிமுகவில் இருந்து நீக்கம்- கட்சிக்கு அவப்பெயர் எற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை
- 12:44 (IST) 06 Jul 2023ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - மக்கள் வரவேற்பு
மக்களுக்கு தேவையான அளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
பண்ணை பசுமை அங்காடி, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
புது முயற்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்து விரிவாக்கம் செய்யப்படும் - அமைச்சர்
- 12:42 (IST) 06 Jul 2023CO-OP BAZAAR என்ற புதிய செயலி அறிமுகம்
கூட்டுறவு துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் CO-OP BAZAAR என்ற புதிய செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் .
- 12:23 (IST) 06 Jul 2023ஐ.எப்.எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் இ.டி சோதனை
வேலூரில் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள்
சத்துவாச்சாரி,காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் சுமார் 6 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக புகார்
நிதி நிறுவன இயக்குனர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவு
- 12:22 (IST) 06 Jul 2023முருகனை முகாமில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு
மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முருகனின் மனைவி நளினி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகனை விடுவித்தது உச்சநீதிமன்றம்
சிறையில் இருந்து விடுதலையான முருகன் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்
கணவர் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி மனு
- 12:12 (IST) 06 Jul 2023நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயற்சி
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சி
லோகேஷ் மீது நாட்டுவெடி குண்டு வீசி அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பல்
2 நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயற்சி
நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி லோகேஷை வெட்டிய கும்பல்
உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி
- 12:11 (IST) 06 Jul 2023பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையில்?
நாகை மீன்வள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவிப்பு
ஆளுநரின் இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும்?
அரசியல் செய்யும் சிந்தனையுடன் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்
ஆளுநர் ஆர்.என்.ரவி தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும்
"வேண்டபட்டவர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார் ஆளுநர்- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
- 12:08 (IST) 06 Jul 2023சிண்டிகேட் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்?
தமிழக ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்.
சிண்டிகேட், செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது
கொரோனா காலத்தில் ஆன்லைனில் நடந்த கூட்டம் தற்போது ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது
சிண்டிகேட், செனட் கூட்டத்தை பல்கலைக்கழகங்களில் நடத்தாமல் ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்? - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
- 11:29 (IST) 06 Jul 2023பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி பாத பூஜை செய்த ம.பி முதல்வர்
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சர்ச்சையான விவகாரம்
பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மாலை அணிவித்து கால்களை கழுவி பாத பூஜை செய்தார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
பழங்குடியின இளைஞரிடம் மன்னிப்பு கோரினார் மத்தியப்பிரதேச முதல்வர்
வீடியோவை பார்த்து வேதனை அடைந்தேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள் என உருக்கம்
- 11:25 (IST) 06 Jul 2023அமைச்சர் பொன்முடி விடுதலை
நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை
சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார்
கடந்த 1996-2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது வழக்கு
குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை- சிறப்பு நீதிமன்றம்
"அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை"
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- 11:23 (IST) 06 Jul 2023பொது சிவில் சட்டம் - ஸ்டாலின் எதிர்ப்பு
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது.. இதே போல் இந்திய நாட்டிற்கும் ஒரு ஆட்சி தேவை
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை
சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது பாஜக
பாஜக கொள்கைகள், பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்குவதே பொதுசிவில் சட்டத்தின் நோக்கம்
- 11:05 (IST) 06 Jul 2023தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம்
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம் 4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு ரூ.621 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு உயர்மட்ட பாலம் மூலம் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என விளக்கம்
- 10:42 (IST) 06 Jul 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை தங்கம் ஒரு கிராம் ரூ. 5,460க்கும், ஒரு சவரன் ரூ. 43,680க்கும் விற்பனை
- 10:41 (IST) 06 Jul 2023வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவுத்துறை திருச்சி உறையூர், திருவள்ளூர் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐ.டி ரெய்டு - உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் கோரப்பட்ட நிலையில் வழங்கப்பட்டன ஆவணம் பதிவுக்கு முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதார்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
- 10:17 (IST) 06 Jul 2023ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல் தரை
ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல் தரை தட்டி நிற்கும் நாட்டு படகுகள், அச்சத்தில் மீனவர்கள்
- 10:15 (IST) 06 Jul 2023கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு தட்சிண கன்னடா - ரெட் அலர்ட், உடுப்பி, சிக்கமகளூர், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
- 08:29 (IST) 06 Jul 202311 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
- 08:28 (IST) 06 Jul 2023செந்தில் பாலாஜி: ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரிக்கிறார் 3வது நீதிபதி
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரிக்கிறார் 3வது நீதிபதி ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளார்
- 08:28 (IST) 06 Jul 2023வால்பாறையில் இன்று மட்டும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மட்டும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- 08:27 (IST) 06 Jul 2023நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.