செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு முன்னரே ஆளுநர் கடிதம் எழுதுகிறார் என்றால் இதற்கு பின்னணி என்ன? செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரை நீக்க ஆளுநர் கோரியிருந்தார். ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு 1ம் தேதியே முதல்வர் பதில் அனுப்பிவிட்டார்.
வழக்கு இருப்பதால் மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியாது, அமைச்சரவையில் யார் இருக்க வேண்டுமென முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மத்திய அமைச்சரவையில் அமித்ஷா உட்பட 33 பேர் மீது வழக்கு உள்ளது அப்படி பார்த்தால் ஆளுநர் பாஜகவுக்கு தான் கடிதம் எழுத வேண்டும் என்று சென்னையில் அமைச்சர் பொன்முடி கூறினார்.
Tamil News Updates
13 ஜூன் காலையிலிருந்து சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடுகள், மற்றும் கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி காலையில் ,நடை பயிற்சியில் இருந்தபோது, இந்த சோதனை தொடர்பான விவரங்கள் தெரிந்து வீடுக்கு சென்றார். இந்நிலையில் இந்த சோதனை தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறைவை சென்றது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்காக அவரை அழைத்து சென்றபோது, 13-ஜூன் நள்ளிரவில் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உதவி வேண்டி, ஓமந்தூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இதயத்தில் மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஓமந்தூர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:50 (IST) 15 Jun 2023காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில் நெஞ்சு வலியால் அலறித் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் சென்னை காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- 21:07 (IST) 15 Jun 2023முதல்வர் ஸ்டாலின் பேச்சு
2015ல் அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா குழந்தைகள் நல பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்கள் நல பெட்டக திட்டங்களை எவ்வித அரசியல் காழ்ப்பும் இன்றி இப்போதும் நம் அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
- 20:22 (IST) 15 Jun 2023மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை. 15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்
- 20:21 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவ குழு ஆலோசனை
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ஆலோசனைநடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனை முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
எந்தெந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை.
மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்
- 20:20 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவ குழு ஆலோசனை
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ஆலோசனைநடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனை முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
எந்தெந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை.
மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்
- 20:17 (IST) 15 Jun 2023பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசனுக்கு உதகை போலீசார் அபராதம்
இரு சக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கியதாக பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசனை மடக்கிப்பிடித்த உதகை புதுமந்து காவல்துறையினர் ₹1000 அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்தனர்
- 20:16 (IST) 15 Jun 2023மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். பதினைந்தே மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்
- 19:14 (IST) 15 Jun 2023கரையை கடக்க தொடங்கிய பிபோர்ஜாய் புயல்
குஜராத் ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது மிக தீவிர புயலான பிபோர்ஜாய்.
துறைமுகம் அருகே உள்ள பகுதிகளில் உள்ள 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!
பிபோர்ஜாய் புயல் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
- 19:11 (IST) 15 Jun 2023அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்ல விருப்பம் இல்லை - செந்தில் பாலாஜி பதில்
அமலாக்கத்துறை காவல் கோரிய மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவு. அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்ல விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பிய நிலையில், அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்ல விருப்பம் இல்லை என செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
- 19:02 (IST) 15 Jun 2023அமலாக்கத்துறை மனு: உத்தரவு சற்று நேரத்துக்கு தள்ளிவைப்பு
அமலாக்கத்துறையின் மனு மீதான உத்தரவு சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- 18:44 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்டவிரோதம்: சி.வி சண்முகம்
“செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது . செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காப்பது தவறான செயல். கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட வருத்தப்படாத முதல்வர், ஏன் செந்தில் பாலாஜிக்காக இறங்கி செல்கிறார்” என முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், அதிமுக மூத்தத் தலைவருமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
- 18:29 (IST) 15 Jun 2023முதல்வர் இயல்பானதாக இல்லை: அண்ணாமலை
செந்தில் பாலாஜி கைதுக்கு பின் முதல்வர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை இயல்பானதாக இல்லை. பாஜக தொண்டர்களை நேரடியாக மிரட்டி உள்ளார். நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம்"
தமிழகத்தில் பழைய பாஜக போல் தற்போது உள்ள பாஜக இல்லை” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்தார்.
- 18:17 (IST) 15 Jun 2023ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆக.31 தொடக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்குகிறது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
4 லீக் போட்டிகள் பாகிஸ்தானிலும், மற்ற 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்பட உள்ளன.
- 17:56 (IST) 15 Jun 2023நீதிமன்ற காவல் தொடரும்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடரும். அதேநேரத்தில் அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 17:24 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணை ஜூன் 22ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- 17:08 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேநேரம், அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழு ஆராயவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 17:01 (IST) 15 Jun 2023அதிமுக பொதுக்குழு தீர்மானம்: பழனிசாமிக்கு எதிரான வழக்கில் வாதங்கள் நிறைவு
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீர் அமர்வில் 7ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது.
எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் வழங்கி, ஜூன் 28ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- 16:58 (IST) 15 Jun 2023ஆளுநருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். அப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்து மனு அளித்தனர்.
- 16:23 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் கோரிய மனு ஆகிய 2 மனுக்கள் மீதான விசாரணை, ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்தவுடன் நடைபெறும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்
- 15:48 (IST) 15 Jun 2023எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது – துரை வைகோ
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என கூறிய பிறகும் தீவிரவாதியை போல் நடத்துவது ஏன்? செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை துன்புறுத்தி உள்ளது என துரை வைகோ கூறியுள்ளார்
- 15:20 (IST) 15 Jun 2023வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை
முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி உடன் விசாரணை நடத்த உள்ளார். செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி கேட்டறிய உள்ளார். அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க உள்ளார்
- 14:54 (IST) 15 Jun 2023ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்
ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று மாலை சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளிக்க உள்ளனர்.
- 14:51 (IST) 15 Jun 2023துணைத் தேர்வு ஹால் டிக்கெட்
10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
- 14:51 (IST) 15 Jun 2023இன்னும் ஒரு மணி நேரத்தில் உத்தரவு
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதும், தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த கோரிக்கை மீதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலை எங்கள் பொறுப்பு என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாக்குறுத்தி அளித்துள்ளது.
- 14:20 (IST) 15 Jun 2023தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- 14:19 (IST) 15 Jun 2023தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- 13:52 (IST) 15 Jun 20234 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:24 (IST) 15 Jun 2023விசாரணை தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை தொடங்கியது; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதசக்ரவத்தி அமர்வு விசாரித்து வருகின்றனர்.
- 13:16 (IST) 15 Jun 2023திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்
செந்தில் பாலாஜியை ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்களை தருகிறோம், அவர்கள் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்த தயாரா?
திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை. அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய பாஜக தலைமை நினைக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 13:15 (IST) 15 Jun 2023அண்ணாமலைக்கு சம்மன்
திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
- 13:15 (IST) 15 Jun 2023அமைச்சர் ரகுபதி பேட்டி
ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. சிறைத்துறை விதிப்படி ஒரு நாளுக்கு 3 பேர் மட்டும் தான் மனு அளித்து சந்திக்க முடியும். செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
- 13:15 (IST) 15 Jun 2023மா.சுப்பிரமணியன் பேட்டி
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட விருப்பம், அதில் நாம் தலையிட முடியாது. ஜெயக்குமாரை கைது செய்தது ஏன் என்பதை அனைவரும் அறிவர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- 12:21 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி புழல் சிறை கைதி எண்: 001440
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது 001440 என்ற பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது
- 12:06 (IST) 15 Jun 2023தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக புகார்
தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்.
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது.
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார் - மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்
- 12:05 (IST) 15 Jun 2023அதிகாரிகள் இழுத்ததால் தலையில் காயம் - செந்தில் பாலாஜி
தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார்.
தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன் - மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்
- 11:33 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி கைது: மனித உரிமை ஆணையம் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் வருகை
அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் மற்றும் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிகிறார்
- 11:25 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு
நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம் - அமைச்சர் சேகர்பாபு
- 11:23 (IST) 15 Jun 2023ஆட்கொணர்வு மனு இன்று விசாரணை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது ஆட்கொணர்வு மனு
நீதிபதி நிஷா பானுவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டதை அடுத்து வழக்கு இன்று விசாரணை
- 10:59 (IST) 15 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல - நீதிமன்றம் ஜாமின் மனு, அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீது சற்று நேரத்தில் விசாரணை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது
- 10:40 (IST) 15 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜியின் 3 மனுக்கள் மீதான வழக்கு காலை 11 மணியளவில் விசாரிக்க வாய்ப்பு;
அமைச்சர் செந்தில் பாலாஜியின் 3 மனுக்கள் மீதான வழக்கு காலை 11 மணியளவில் விசாரிக்க வாய்ப்பு; சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 19வது வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளன
- 10:30 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா; குற்றச்சாட்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- 10:02 (IST) 15 Jun 2023இருதய ரத்த நாளங்களில் வலதுபுறத்தில் 90%, இடதுபுறத்தில் 80% அடைப்பு உள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாளங்களில் வலதுபுறத்தில் 90%, இடதுபுறத்தில் 80% அடைப்பு உள்ளது நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றமுடியுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்
- 09:53 (IST) 15 Jun 202330% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான்
30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
- 09:33 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது . புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது . சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் . அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்
- 09:04 (IST) 15 Jun 2023நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்டாயம் விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுபாட்டில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
- 09:03 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருகிறார்
அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல். உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல்
- 09:00 (IST) 15 Jun 2023செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைக்க விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.