Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:45 (IST) 08 Aug 2023தோட்டக்கலை சங்கம் மேல்முறையீடு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை, ஜெமினி மேம்பாலம் அருகே தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து 114 கிரவுண்ட் நிலம் அரசு மீட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 22:14 (IST) 08 Aug 2023திருவண்ணாமலையில் கனமழையால் மின்சாரம் துண்டிப்பு
திருவண்ணாமலை, வந்தவாசி சுற்றி உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
- 21:36 (IST) 08 Aug 2023பிரபல இயக்குநர் சித்திக் மரணம்
ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட தமிழ் படங்களையும், சில தெலுங்குப் படங்களையும் இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்
- 21:16 (IST) 08 Aug 2023நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- 20:38 (IST) 08 Aug 2023துணை ராணுவப் படை மீது மணிப்பூர் போலீசார் வழக்குப் பதிவு
ஆகஸ்ட் 6 ம் தேதி குவாக்டா நகரத்தை உலுக்கிய வன்முறையின் போது பிஷ்ணுபூர் காவல்துறை அதிகாரிகளை தடுத்ததாக குற்றம் சாட்டி, அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மீது மணிப்பூர் போலீசார் தானாக முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
- 20:21 (IST) 08 Aug 2023ஜெயின் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் அச்சம்
ஜெயின் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்புகளில் கூரைகள் இடிந்து விழுவதால் குடியிருப்பாளர்களுக்கு அச்சம் தெரிவித்துள்ளனர்
- 20:12 (IST) 08 Aug 2023என்.எல்.சி விவகாரம் - சென்னை ஐகோர்ட் யோசனை
என்.எல்.சி நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது
- 19:58 (IST) 08 Aug 2023ஆடி கிருத்திகை: ராணிப் பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகையை ஒட்டி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:52 (IST) 08 Aug 2023பாரதிய ஜனதா 9 மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது: சுப்ரியா சுலே குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 9 மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே குற்றஞ்சாட்டினார்.
- 19:46 (IST) 08 Aug 2023புதுகை அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவி: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
திருவண்ணாமலை தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்-சுமதி ஆகியோரின் மகள் S.பவானிக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களை,திருவண்ணாமலை தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த திரு.சீனிவாசன்-திருமதி.சுமதி ஆகியோரின் மகள் S.பவானி 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் புதுகை அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததையொட்டி நேரில் சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றார். pic.twitter.com/IY76RB6Dlw
— AIADMK (@AIADMKOfficial) August 7, 2023 - 19:41 (IST) 08 Aug 2023நாள் ஒன்றுக்கு 167 பேரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்!
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 167 பேரின் ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படுகின்றன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறிய 30,383 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக வேகத்தில் சென்றதாக 7057, வாகனம் இயக்கும்போது போன் பயன்படுத்திய 6748, மதுபோதையில் வாகனம் இயக்கிய 2272, சிகப்பு விளக்கை மதிக்காமல் சென்ற 8336 உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
- 19:28 (IST) 08 Aug 2023நாங்கள்தான் அடுத்த அரசாங்கம்: ஆதித்ய தாக்கரே
நாங்கள் எங்களை எதிர்க்கட்சியாக கருதவில்லை: நாங்கள்தான் அடுத்த அரசாங்கம் என உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
தொடர்ந்து, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது” என ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
- 19:19 (IST) 08 Aug 2023பழங்கனாங்குடி ஊராட்சி சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர்!
திருச்சி திருவெறும்பூர் தொகுதி பழங்கனாங்குடி ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு முகாமினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 8, 2023
அதன் தொடர்ச்சியாக #திருவெறும்பூர் தொகுதி பழங்கனாங்குடி ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு… pic.twitter.com/5rlogPHM8v - 19:11 (IST) 08 Aug 2023குடும்ப நலனுக்காக டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மு.க. ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “குடும்ப நலனுக்காக டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கிறார்” என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப நலனுக்காக டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு கடும் கண்டனம் !
— AIADMK (@AIADMKOfficial) August 8, 2023
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/Qr3pb3OWQv - 18:52 (IST) 08 Aug 2023நாடாளுமன்ற இரு அவைகளும் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை (09.08.2023) காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை தொடரும் எனவும் அறிவிப்பு
- 18:29 (IST) 08 Aug 20232014 முதல் 2023 வரை ரூ.14.56 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி; கனிமொழி கேள்விக்கு நிதி அமைச்சகம் பதில்
கடன் தள்ளுபடி குறித்து மக்களவையில் எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், 2014 முதல் 2023 வரை மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.7.4 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் தள்ளுபடி (ரிட்டர்ன் ஆஃப்) செய்திருக்கின்றன என்ற விவரம் நிதித்துறை இணையமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை.
- 18:23 (IST) 08 Aug 2023ஜனாதிபதி திரவுபதி முர்முவை வழி அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வழி அனுப்பி வைத்தார். தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு குடியரசுத் தலைவர் டெல்லி திரும்பினார். குடியரசுத் தலைவரை வழி அனுப்பும் நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பங்கேற்றார்.
- 18:21 (IST) 08 Aug 2023தஞ்சையில் ஆவின் தயிர் விலையேற்றம் குறித்து விசாரணை - அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்: “தஞ்சையில் ஆவின் தயிர் விலையேற்றம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் தான் விற்கப்படுகிறது” என்று கூறினார்.
- 17:49 (IST) 08 Aug 2023ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 17:27 (IST) 08 Aug 2023இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு
இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி வேட்பு மனு தாக்கல் ,செப். 5ம் தேதி வாக்குப்பதிவு , செப். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 17:26 (IST) 08 Aug 2023நிறத்தைக் குறிப்பிட்டு ஒருவரை இழிவுபடுத்துவது கொடுமை; விவாகரத்து வழக்கில் கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு
“யாருக்கு எதிராக இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதோ, அந்த நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்.” கருப்பாக இருப்பதால் மனைவி அவமானப்படுத்தியதாக
கணவரின் வாதத்தில் விவாகரத்து
வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:46 (IST) 08 Aug 2023பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது : திருமாவளவன்
பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது" "கார்கில் போரில் பங்கேற்ற வீரரின் மனைவியும் மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளார்" "சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது" - மக்களவையில் திருமாவளவன் எம்.பி., பேச்சு
- 16:46 (IST) 08 Aug 2023வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் விளக்கம்
அடுக்ககுமாடி குடியிருப்புகளின் ஆவணப்பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் "கடந்த 2012 - 2020 வரை இருந்த அதே நடைமுறைதான் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சொந்த வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் உயர்வு என பரவும் செய்தி தவறானது" என கூறியுள்ளார்.
- 16:44 (IST) 08 Aug 20237 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
கேரளா, ஜார்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிப்பு
- 16:01 (IST) 08 Aug 2023ஆடி கிருத்திகையை ஒட்டி விடுமுறை அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. ஆடி கிருத்திகையை ஒட்டி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
- 16:00 (IST) 08 Aug 2023நெல்லையில், தருமபுரம் ஆதீனம் பேட்டி
"கோயில்களில் குடமுழுக்கு நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது, இந்த பணியை அறநிலையத்துறை அமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி”
- 15:21 (IST) 08 Aug 2023மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
₹15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ₹2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.
சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது; இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஒவ்வோருவருக்கும் ₹15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை
- 15:21 (IST) 08 Aug 2023மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
₹15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ₹2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது;
சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது; இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஒவ்வோருவருக்கும் ₹15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை
- 15:09 (IST) 08 Aug 2023வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரைவீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு
மதுரை சிபிசிஐடி உதவி ஆணையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு, தமிழக உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரைவீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு
- 15:08 (IST) 08 Aug 2023பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? ஏன் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை?
பிரதமரும், அவை தலைவரும் தங்களது அலுவலகத்தில் என்ன பேசுகின்றனர் என்பதை கூற தயார் - காங்கிரஸ் எம்.பி. பிரதமரின் பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி., பேச மத்திய அமைச்சர் அமித்ஷா ஆட்சேபம் . பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? ஏன் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை? - காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய்
- 15:07 (IST) 08 Aug 2023தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை நில நிர்வாக ஆணையர் ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு
சென்னை, ஜெமினி மேம்பாலம் அருகே தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து 114 கிரவுண்ட் நிலம் அரசு மீட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு. தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை நில நிர்வாக ஆணையர் ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- 15:05 (IST) 08 Aug 2023ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கேரளா செல்கிறார்
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கேரளா செல்கிறார் . வரும் 12, 13ம் தேதிகளில் வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்
- 14:38 (IST) 08 Aug 2023தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம்
தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம் - திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பிரதமர் மோடி அவைக்கு வருவதில்லை, எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை பிரதமர் நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும், ஆனால் அவர் பங்கேற்பதில்லை - டி.ஆர்.பாலு எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என கூறி மதுரையில் ஒரு செங்கல்லை மட்டுமே வைத்தார்கள் - டி.ஆர்.பாலு
- 14:37 (IST) 08 Aug 2023திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் உடன் பொதுமக்களும் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
காரைக்காலில் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற திமுக எம்எல்ஏ ஆட்கள் பற்றாகுறையால் தொடர் மின்வெட்டு, மின் கட்டணம் வசூல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார். திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் உடன் பொதுமக்களும் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
- 14:11 (IST) 08 Aug 2023பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு எதிரான தீர்மானம்
பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
- 12:58 (IST) 08 Aug 2023மணிப்பூர் மாநில பெண்களுக்கு நீதி வேண்டும் கௌரவ் கோகாய் பேச்சு
மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும்
மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதாகவே அர்த்தம்
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சு
- 12:53 (IST) 08 Aug 2023செந்தில் பாலாஜி வழக்கில் டி.ஜி.பி ஆஜராக சம்மன்
டி.ஜி.பி உள்துறை செயலாளர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு. 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்த பட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான
செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு டி.ஜி.பி, உள்துறை செயலர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு.
- 12:41 (IST) 08 Aug 2023திரிணாமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை
- 12:11 (IST) 08 Aug 2023மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
- 12:11 (IST) 08 Aug 2023யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கை வெளியீடு
சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு வாரிய இலட்சினை வெளியீடு
யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கையையும் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 12:11 (IST) 08 Aug 2023யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கை வெளியீடு
சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு வாரிய இலட்சினை வெளியீடு
யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கையையும் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 11:47 (IST) 08 Aug 2023நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி
நீர்வளத்துறை சார்பில், நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி
214 கையடக்க ஜிபிஎஸ் கருவிகளை, பொறியாளர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பங்கேற்பு
- 11:46 (IST) 08 Aug 2023மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை தொடர்ந்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி குறித்து பாஜக எம்.பி.,நிஷிகாந்த் தூபே தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
- 11:45 (IST) 08 Aug 20239 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை நீதிமன்றம் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைவதால் விடுதலை
கடந்த 25ம் தேதி நெடுந்தீவு அருகே மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்
விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு
- 10:50 (IST) 08 Aug 2023நம்பிக்கையில்லா தீர்மானம்- பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம் தொடக்கம்
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில், பாஜகவின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும் பங்கேற்றுள்ளனர்.
- 10:41 (IST) 08 Aug 2023டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்
சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்-டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
- 10:41 (IST) 08 Aug 2023அதிக லாபம் ஈட்டிய நிறுவனம்- SBI சாதனை
இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது SBI
- 09:20 (IST) 08 Aug 2023மது விற்பனை நேரத்தை குறைப்பதை ஏன் அமல்படுத்தவில்லை?
மது விற்பனை நேரத்தை குறைப்பதை அமல்படுத்தாதது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
- 08:55 (IST) 08 Aug 2023கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் தாமதம்
ஆரல்வாய் - நாகர்கோவில் இடையே கேபிள் அமைக்கும் பணியால், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
ராமேஸ்வரம் - குமரி ரயில் 3 மணி நேரம், சென்னை - குமரி ரயில் 2 மணி நேரம் தாமதம்
- 08:51 (IST) 08 Aug 2023நாகை மீனவர்கள் 10 பேருக்கு சிறைக்காவல்- இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி படகை சிறைப்பிடித்தனர்.
படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும், வரும் 21-ஆம் தேதி வரை திருகோணமலை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 08:20 (IST) 08 Aug 2023திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.
உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற சிகிச்சைக்காக அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது.
- 08:08 (IST) 08 Aug 2023மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்
மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.
இத்தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராகுல்காந்தி , எதிர்க்கட்சிகள் சார்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
- 08:08 (IST) 08 Aug 2023தக்காளி விலை
சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ. 10 குறைந்தது. நேற்று ரூ.100க்கு விற்க்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 90க்கு விற்பனையாகிறது.
- 08:07 (IST) 08 Aug 2023கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 16ம் தேதிஉள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 08:07 (IST) 08 Aug 2023தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 08:07 (IST) 08 Aug 2023மணிப்பூர் வீடியோ விவகாரம்
மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் அடங்குவர். நீதிபதி கீதா மிட்டல் குழுவின் தலைவராக இருப்பார்.
மேலும், மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபியும், என்ஐஏ அதிகாரியுமான தத்தாத்ரே பட்சல்கிகரை விசாரணை அமைப்புகளின் விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
- 08:06 (IST) 08 Aug 2023டெல்லி நிர்வாக சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் நிர்வாக சட்ட மசோதா, 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானதால், இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதையடுத்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
- 08:06 (IST) 08 Aug 2023ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதேபோல் ஜப்பானை 3க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மலேசியா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.