Tamil News Updates: அவதூறு வழக்கு: தமிழக பா.ஜ.க செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது

Tamil Nadu News, Tamil News Senthil Balaji, TNPL 2023, Biporjoy cyclone, Ashes 2023 – 16 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News Senthil Balaji, TNPL 2023, Biporjoy cyclone, Ashes 2023 – 16 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry

Arrest

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

கரையை கடந்த பிபோர்ஜாய் புயல்

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் - சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே நள்ளிரவில் கரையைக் கடந்தது.

Advertisment
Advertisements

இதனால், கடலோரப் பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 125 கி.மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது. பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால் 940 கிராமங்கள் இருளில் மூழ்கின.

சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:16 (IST) 16 Jun 2023
    செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறைக்கு நிபந்தனை

    சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக்கூடாது உடல்நிலை, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று விசாரிக்க வேண்டும். மூன்றாம் தர விசாரணை, எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது. போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் என அமலாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குநருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது


  • 22:14 (IST) 16 Jun 2023
    நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


  • 20:38 (IST) 16 Jun 2023
    டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூபிளஸ்ஸி

    அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூபிளஸ்ஸி நியமனம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு


  • 19:54 (IST) 16 Jun 2023
    செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் பேட்டி

    மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை வெளியில் கொண்டு செல்ல கூடாது என கோரிக்கை வைத்தோம் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையிலேயே விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணை அதிகாரிக்கு மட்டுமே உள்ளே அனுமதி என சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.


  • 19:53 (IST) 16 Jun 2023
    என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல - சபாநாயகர் அப்பாவு

    2010ல் அமித்ஷா சிறையில் இருந்த போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர். எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என கூறியுள்ள சபாநாயகர் அப்பாவு, முதல்வர் சொல்லியோ அல்லது செந்தில்பாலாஜி தாமாகவோ பதவி விலகலாம், இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உள்ளது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது குறித்து நெல்லையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்


  • 19:52 (IST) 16 Jun 2023
    என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல - சபாநாயகர் அப்பாவு

    2010ல் அமித்ஷா சிறையில் இருந்த போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர். எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என கூறியுள்ள சபாநாயகர் அப்பாவு, முதல்வர் சொல்லியோ அல்லது செந்தில்பாலாஜி தாமாகவோ பதவி விலகலாம், இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உள்ளது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது குறித்து நெல்லையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்


  • 19:13 (IST) 16 Jun 2023
    செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை விசாரிக்க அனுமதி

    அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு


  • 19:00 (IST) 16 Jun 2023
    மாமன்னன் டிரெய்லர் வெளியீடு

    'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

    தற்போது, 'மாமன்னன்' படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.


  • 18:57 (IST) 16 Jun 2023
    செந்தில் பாலாஜி சகோதரருக்கு சம்மன்

    செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மனில் விசரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.


  • 18:45 (IST) 16 Jun 2023
    தனுஷ் ரசிகர்கள் வழங்கும் இலவச உணவு

    சென்னை சாலிக்கிரமத்தில், நடிகர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வரை, பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவுகளை வழங்க தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  • 17:53 (IST) 16 Jun 2023
    செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஆளுனர் ஏற்றுக்கொள்ளவில்லை: ராஜ்பவன்

    நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொள்ளவில்லை என ராஜ்பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:25 (IST) 16 Jun 2023
    வெட்டப்படும் ஒரு மரத்துக்கு 12 மரங்கள் நட உத்தரவு

    சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மரக்கன்றுகளை நடுவதிலும், மரங்களை இடமாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரிய பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தொடர்ந்த வழக்கு முடித்திவைக்கப்பட்டது.


  • 16:46 (IST) 16 Jun 2023
    1000 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டம்: ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

    ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு திட்டம்

    போக்குவரத்துத்துறைக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு


  • 16:40 (IST) 16 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு டுவீட்: சவுக்கு சங்கருக்கு அபராதம்

    அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக டுவீட் செய்ததாக சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு.

    இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


  • 16:25 (IST) 16 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு டுவீட்: சவுக்கு சங்கருக்கு அபராதம்

    அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக டுவீட் செய்ததாக சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு.

    இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


  • 15:51 (IST) 16 Jun 2023
    விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

    விருதுநகர் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர் கருப்பசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


  • 15:17 (IST) 16 Jun 2023
    பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

    திருச்சி : தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் நடந்த சம்பவம் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி


  • 15:00 (IST) 16 Jun 2023
    அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவு

    அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவு. அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். பல நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை கண்காணித்து வருகிறது அரசு" முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு


  • 14:35 (IST) 16 Jun 2023
    தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்ற போது இ.பி. எஸ் என்ன செய்தார்

    தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்ற போது இ.பி. எஸ் என்ன செய்தார் பாஜக மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்பி பதவியை விட்டுக்கொடுத்தவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் செந்தில்பாலாஜியை முதல்வர் நேரில் சென்று பார்த்ததை ஈபிஎஸ் கொச்சைபடுத்தி பேசுகிறார் எந்தவித விசாரணைக்கும் தயார் என முதல்வரும் தெரிவித்திருந்தார் செந்தில்பாலாஜியிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி


  • 13:40 (IST) 16 Jun 2023
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின். ராஜேஷ் தாஸ் மனுவை பரிசீலனை செய்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு கெடுவுக்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதி புஷ்பராணி நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் .


  • 13:12 (IST) 16 Jun 2023
    அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் 21ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்-இபிஎஸ்


  • 12:57 (IST) 16 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை. ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 - 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் - காவேரி மருத்துவமனை


  • 12:30 (IST) 16 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில்

    அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை வழக்கில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்


  • 12:16 (IST) 16 Jun 2023
    முந்தைய ரெய்டுகளின் போது முதலமைச்சர் மெளனம் காத்தது ஏன் ?

    வழக்குகளை திமுகவினர் துணிச்சலோடு சந்திக்க வேண்டும் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதல்வர் முந்தைய ரெய்டுகளின் போது முதலமைச்சர் மெளனம் காத்தது ஏன் ? முறைகேடாக செயல்படும் டாஸ்மாக் பார்களை தடுக்க வேண்டியது காவல்துறை கடமை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


  • 12:10 (IST) 16 Jun 2023
    என் மீதான வழக்கை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் நாடகமாடுகிறார் செந்தில்பாலாஜி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி என் மீதான வழக்கை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


  • 12:04 (IST) 16 Jun 2023
    ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும்

    "முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும். அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவு செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை இலாகாக்களை மாற்றி அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனை தருகிறது- தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்


  • 12:02 (IST) 16 Jun 2023
    புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசனை

    சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை . பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசனை அரசின் முன்னெடுப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து ஏற்கனவே 3 முறை ஆலோசனை நடைபெற்றது


  • 11:58 (IST) 16 Jun 2023
    ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

    செந்தில்பாலாஜி விவகாரத்தில் அதிமுகவையும், என்னையும் விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற உத்தரவின்படியே அமலாக்கத்துறை விசாரணை. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்


  • 11:48 (IST) 16 Jun 2023
    ஆளுநர் ஆர்.என்.ரவியை கடித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சின்னமலையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை ஆளுநர் முடக்குவதாக குற்றச்சாட்டு


  • 11:34 (IST) 16 Jun 2023
    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

    பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம்


  • 11:15 (IST) 16 Jun 2023
    செந்தில்பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


  • 10:59 (IST) 16 Jun 2023
    கனிமொழி ட்வீட்

    அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும்


  • 10:57 (IST) 16 Jun 2023
    3 ஆண்டு சிறை தண்டனை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 10:39 (IST) 16 Jun 2023
    கல்லணை திறப்பு

    டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த காவிரி நீரை மலர்தூவி விவசாயிகள் வரவேற்றனர்.


  • 10:38 (IST) 16 Jun 2023
    கல்லணை திறப்பு

    டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த காவிரி நீரை மலர்தூவி விவசாயிகள் வரவேற்றனர்.


  • 10:37 (IST) 16 Jun 2023
    சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.


  • 09:25 (IST) 16 Jun 2023
    தடையில்லா மின்சாரம்

    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது, பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட, நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


  • 08:43 (IST) 16 Jun 2023
    அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

    சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஜப்பானை 5-1 என வீழ்த்தி அரையிறுதியில் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா மலேசியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.


  • 08:27 (IST) 16 Jun 2023
    இலாகா மாற்றம், ஆளுநர் மறுப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க இருக்கிறோம் என முதல்வர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    ஆனால் ஆளுநர், ‘முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது’ எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறோம். பாஜகவின் முகவராக ஆளுநர் செயல்படுகிறார் என்பது கடிதங்கள் மூலமாக தெரிகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.


  • 08:22 (IST) 16 Jun 2023
    கண்டன பொதுக்கூட்டம்

    மத்திய பாஜக அரசை கண்டித்து, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இன்று மாலை கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


  • 08:22 (IST) 16 Jun 2023
    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பில் உள்ளன.


  • 08:21 (IST) 16 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

    செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும், ஜாமின் வழங்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீதும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


  • 08:21 (IST) 16 Jun 2023
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

    டிஎன்பிஎல், வியாழக்கிழமை திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி பெற்றது.

    முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.4 ஓவர்களில், 121 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது


Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: