Advertisment

Tamil News Highlights: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 05-07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2272 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 211 மில்லியன் கன அடியாக உள்ளது; 200கன அடி நீர் வெளியேற்றம். 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 395 மில்லியன் கன அடியாக உள்ளது; 17 கன அடி நீர் வெளியேற்றம்

சுவர் இடிந்து விழுந்த விபத்து

கோயம்புத்தூர்: சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:34 (IST) 05 Jul 2023
    கலங்கரை விளக்கம் பகுதியில் மெட்ரோ பணி; மெரினா சர்வீஸ் சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

    கலங்கரை விளக்கம் பகுதியில் மெட்ரோ பணி - மெரினா சர்வீஸ் சாலையில் நாளை (ஜூலை 06) முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    *லூப் ரோடு, காமராஜர் சாலையிலிருந்து வருவோர் கடற்கரை சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்லத் தடை செய்யப்படுகிறது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கிச் செல்லலாம்.

    போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வாகனங்கள் கடற்கரை சாலை வழியாக லைட் ஹவுஸ் நோக்கிச் செல்லத் தடை செய்யப்படுகிறது.

    லைட் ஹவுஸில் இருந்து சர்வீஸ் சாலை செல்வோர் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை போகலாம்.

    அதன் பிறகு, யூ டர்ன் செய்து லைட் ஹவுஸ் வந்து வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக செல்லலாம்.

    போர் நினைவுச் சின்னத்திலிருந்து சர்வீஸ் சாலை செல்வோர் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம்.

    அதன் பிறகு, யூ டர்ன் செய்து இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


  • 21:23 (IST) 05 Jul 2023
    பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு; சட்ட ஆணையத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடிதம்

    பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடிதம் எழுதியுள்ளது.


  • 20:37 (IST) 05 Jul 2023
    சென்னை மண்டலத்தில் அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு மாற்றம்

    சென்னை மண்டலத்தில் 78 சார்பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 20:36 (IST) 05 Jul 2023
    கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை

    சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் அளவில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஜூலை 10-ம் தேதி முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 20:28 (IST) 05 Jul 2023
    சென்னை மேம்பாலங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி; போக்குவரத்து காவல்துறை

    சென்னையில் உள்ள மேம்பாலங்களில் இரவு நேரத்தில் போக்குவரத்து செயல்பட சென்னை போக்குவரத்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது; அலுவலங்களை விட்டு வீடு திரும்புவோர் அதிக அளவு இரவு நேரங்களில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் மட்டும் 33 மேம்பாலங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், அவை மீண்டும் திறக்கப்படுகின்றன.


  • 20:23 (IST) 05 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு: நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை

    செந்தில் பாலாஜி வழக்கு - மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது; செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்ரவர்த்தி ஆகியோர் நேற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட நிலையில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


  • 20:17 (IST) 05 Jul 2023
    போலி மருத்துவரிடம் ஊசி போட்டுகொண்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே போலி மருத்துவரிடம் ஊசி போட்டுகொண்ட 13 வயது சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். லேப் டெக்னீசியன் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.


  • 19:16 (IST) 05 Jul 2023
    கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்து விபத்து: 2 பேர் கைது

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் பக்கவாட்டு சுவர் விழுந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சைட் என்ஜினியர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  • 19:14 (IST) 05 Jul 2023
    குழந்தையின் கை அழுகிய விவகாரத்தை அரசியலாக்குவது சங்கடமாக உள்ளது - அமைச்சர் மா.சு பேட்டி

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி: “குழந்தையின் கை அழுகிய விவகாரத்தை அரசியலாக்குவது சங்கடமாக உள்ளது. எந்தப் புரிதலும் இல்லாமல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகிறார்” என்ரு கூறினார்.


  • 18:56 (IST) 05 Jul 2023
    பொதுசிவில் சட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பா? எடப்பாடி பழனிசாமி பதில்!

    எடப்பாடி பழனிசாமியிடம் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்குப் பதிலளித்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளோம்" என்றார்.


  • 18:56 (IST) 05 Jul 2023
    பொதுசிவில் சட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பா? எடப்பாடி பழனிசாமி பதில்!

    எடப்பாடி பழனிசாமியிடம் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்குப் பதிலளித்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளோம்" என்றார்.


  • 18:51 (IST) 05 Jul 2023
    மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள்: வைகோ அறிக்கை

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, உடுமலை,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 18:42 (IST) 05 Jul 2023
    திமுக வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்துகிறது: அண்ணாமலை கண்டனம்

    திமுக வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்துகிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.

    அதில், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்று கூறி வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்துவது, தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது.

    இதற்கு எனது வன்மையான கண்டனங்கள் எனத் தெரிவித்துள்ளார்.


  • 18:37 (IST) 05 Jul 2023
    அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை: புதிய உத்தரவு பிறப்பிப்பு

    அரசு மருத்துவகல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான பொறுப்பான மருத்துவர்கள் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும். அதேபோல் 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  • 18:17 (IST) 05 Jul 2023
    நாட்டின் வளர்ச்சிக்கு 5 கொள்கைகள்: 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

    பிரதமர் நரேந்திர மோடி தன்னுடன் கலந்துரையாடிய மாணவர்களுக்கு தனது கையொப்பத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், “நாட்டின் வளர்ச்சிக்கு 5 முக்கிய கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இருக்கிறார்.

    அவை,

    வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு

    அடிமை சிந்தனையை அறவே நீக்குதல்

    நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல்

    ஒற்றுமையை உறுதி செய்தல்

    கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை ஆகும்.

    இந்தக் கடிதம் 30 லட்சம் மாணவர்களுக்கு செல்கிறது.


  • 17:55 (IST) 05 Jul 2023
    மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு

    2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவான அளவே இருந்தது. மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


  • 17:40 (IST) 05 Jul 2023
    திருநெல்வேலியில் பரவலாக மழை

    திருநெல்வேலியில் இன்று பரவலான இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தின் தென் பகுதிகளான திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவிலும் சாரல் மழை பெய்தது.

    மேலப்பாளையம், டவுண், பாளை மார்க்கெட், அம்பை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களிலு்ம கனமழை பெய்தது.

    வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.


  • 17:25 (IST) 05 Jul 2023
    அதிகார பசி இல்லை: சரத் பவார்

    எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம் என சரத் பவார் கூறினார்.

    சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா, ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.


  • 16:35 (IST) 05 Jul 2023
    சரத் பவார் அரசியலில் இருந்து விலகி எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் - அஜித் பவார்

    சரத் பவார் அரசியலில் இருந்து விலகி எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்


  • 16:21 (IST) 05 Jul 2023
    சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை; கணக்கு காட்டாத ரூ3,000 கோடி கண்டுபிடிப்பு

    சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ3,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


  • 16:05 (IST) 05 Jul 2023
    மக்களை தேடி மேயர் திட்ட நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண்; காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதி

    சென்னையில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் திட்ட நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது


  • 15:42 (IST) 05 Jul 2023
    என்.சி.பி கட்சி, சின்னத்திற்கான உரிமை; தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார், சரத் பவார் மனு

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் மனு அளித்துள்ளார். என்.சி.பி.,யில் இருந்து அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சரத்பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது


  • 15:32 (IST) 05 Jul 2023
    தென்காசி சட்டமன்ற தொகுதியில் 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு

    தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது


  • 15:21 (IST) 05 Jul 2023
    ஜி.எஸ்.டி சான்றிதழ் வழங்க லஞ்சம்; வணிக வரி அலுவலர் கைது

    திருச்சி, மணப்பாறையில் ஜி.எஸ்.டி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வணிக வரி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ2,000 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்


  • 15:01 (IST) 05 Jul 2023
    வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை

    தாலுகா, வருவாய்க் கோட்ட அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை


  • 14:42 (IST) 05 Jul 2023
    வேங்கைவயல் விவகாரம்

    டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேருக்கும் நீதிமன்ற உத்தரவின்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று டி.என்.ஏ. பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது

    சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ரத்த மாதிரியை சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைக்க உள்ளனர்.


  • 14:10 (IST) 05 Jul 2023
    துரைமுருகன் பேட்டி

    தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை; மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம் - மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்குப் பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி


  • 13:33 (IST) 05 Jul 2023
    மத்திய நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன் சந்திப்பு

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு; மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என துரைமுருகன் வலியுறுத்தல்.


  • 13:28 (IST) 05 Jul 2023
    இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:23 (IST) 05 Jul 2023
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

    நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

    ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள், ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன - அமைச்சர் ரகுபதி


  • 13:00 (IST) 05 Jul 2023
    காவிரி நீர் விவகாரம் - பாஜக துணை நிற்கும்

    காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு முறையிட்டால், தமிழக பாஜக துணை நிற்கும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

    ஒரு நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருந்தால் ஒற்றுமை இருக்காது என அம்பேத்கர் கூறியிருந்தார்

    தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை.

    அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

    மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.

    மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது,

    காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும் - அண்ணாமல


  • 12:57 (IST) 05 Jul 2023
    குழந்தை கை அகற்றம் - விசாரணை அறிக்கை வெளியீடு

    சென்னையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியீடு

    குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

    Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது

    மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது

    குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர்

    குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்

    செலுத்தப்பட்ட மருந்தாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ரத்த நாள அடைப்பு ஏற்படவில்லை

    Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டது

    குழந்தையின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - விசாரணை அறிக்கை


  • 12:36 (IST) 05 Jul 2023
    குழந்தையின் உயிரை காப்பாற்ற கை அகற்றம்

    குழந்தையின் உயிரை காப்பாற்ற கை அகற்றம் - விசாரணைக் குழு அறிக்கை

    ரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சுழல். குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதம் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அறிக்கை


  • 12:18 (IST) 05 Jul 2023
    வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு

    உயர் நீதிமன்ற மதுரை கிளை குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு

    பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் தான் தெரியவந்தது - அமைச்சர் எ.வ.வேலு

    பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - அமைச்சர் எ.வ.வேலு

    உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன் - அமைச்சர் எ.வ.வேலு

    பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் - அமைச்சர் எ.வ.வேலு


  • 12:00 (IST) 05 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு - 3வது நீதிபதி நியமனம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவு

    ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது

    வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியிருந்தது


  • 11:59 (IST) 05 Jul 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவு ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியிருந்தது


  • 11:56 (IST) 05 Jul 2023
    ககன் தீப் சிங் பேடி உத்தரவு

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்

    அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவு

    புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்

    உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்"


  • 11:55 (IST) 05 Jul 2023
    தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம்

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம்" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து

    பாஜக உடனான உறவு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம் - ஈபிஎஸ் காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம் - ஈபிஎஸ்


  • 11:07 (IST) 05 Jul 2023
    மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது

    அதிமுக ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டது அதிமுக தான். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது


  • 11:05 (IST) 05 Jul 2023
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் பேசி ஜூன் மாத நீர் பங்கீட்டை முதலமைச்சர் ஸ்டாலின் பெறாதது ஏன்? . இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் . உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட 24 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர் அதிமுக எம்பிக்கள் .


  • 11:00 (IST) 05 Jul 2023
    தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்

    பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவினர் செயல்பட்டு வருகிறோம் தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


  • 10:41 (IST) 05 Jul 2023
    வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

    கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் சிக்கிய தொழிலாளர்கள் தகவல் அறிந்து அங்கு வந்தவர்கள், இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி தொழிலாளர்களை மீட்டனர்


  • 10:14 (IST) 05 Jul 2023
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை. ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்தப்படவுள்ள மாநாடு பணி குறித்து பேசப்பட உள்ளது புதிய உறுப்பினர் சேர்ப்பு பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட உள்ளது


  • 09:37 (IST) 05 Jul 2023
    உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

    திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்


  • 09:15 (IST) 05 Jul 2023
    பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

    புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு புதுக்கோட்டை லஞ்சமேடு பகுதியில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஓட்டுநரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், காரில் பயணித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை


  • 08:36 (IST) 05 Jul 2023
    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது


  • 08:36 (IST) 05 Jul 2023
    பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

    கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உத்தரவு


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment