Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ஆளுநர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை. சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமைச்சரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், பிரதமருக்கு மட்டுமே உண்டு.
அமைச்சரவையில் யார் இருப்பது? யார் இருக்கக்கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது. அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை – 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:09 (IST) 01 Jul 2023குஜராத் கலவரம்; டீஸ்டா செடல்வாட்க்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரம் என்ற வழக்கில் இன்று குஜராத் உயர் நீதிமன்றத்தால் வழக்கமான ஜாமீன் நிராகரிக்கப்பட்ட ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை இடைக்கால பாதுகாப்பு வழங்கியது. முன்னதாக அவரை உடனடியாக சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 21:11 (IST) 01 Jul 2023முடங்கியது ட்விட்டர்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர் தளம் முடங்கியுள்ளது
- 20:50 (IST) 01 Jul 2023ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.
- 19:41 (IST) 01 Jul 2023மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி - ஸ்டாலின்
மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. மெட்ரோ பணிகளால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும் என கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்
- 19:04 (IST) 01 Jul 2023பெரம்பூரில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்ட செங்கை சிவம் மேம்பாலம்; ஸ்டாலின் திறந்து வைப்பு
பெரம்பூர் ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 18:49 (IST) 01 Jul 2023ராகுல் காந்திக்கு மணிப்பூர் மாநில பா.ஜ.க தலைவர் பாராட்டு
தற்போதைய சூழ்நிலையில், ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை மனதார வரவேற்கிறேன் என மணிப்பூர் மாநில பாஜக தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்
- 18:19 (IST) 01 Jul 2023சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பணப்பையில் 7 ரூபாய் அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டி பேருந்து நடத்துநரை பணி நீக்கம் செய்த போக்குவரத்து கழக உத்தரவு ரத்துசெய்த சென்னை உயர்நீதிமன்றம் 6 வாரங்களில் மீண்டும் பணியமர்த்த உத்தரவு
- 17:52 (IST) 01 Jul 2023கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்
தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கா, நூலக கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்
- 17:50 (IST) 01 Jul 2023நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் மீது புகார்
நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபலமான நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும் போது பாதுகாவலர்களாக 10-க்கும் மேற்பட்டோரை நியமிக்கின்றனர் பாதுகாவலர்களுக்கு சம்பள தொகையாக அதிக பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக தயாரிப்பாளர்கள் சரமாரி குற்றச்சாட்டு
- 17:49 (IST) 01 Jul 2023கிணற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 4 பேர் பலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 4 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- 17:12 (IST) 01 Jul 2023மாமன்னன் படத்தைப் பார்த்தபின் திருமாவளவன் எம்.பி பேட்டி
“சமூக நீதியே வெல்லும் என்பதனை ‘மாமன்னன்’ படம் உணர்த்துகிறது; இயக்குநர் மாரிசெல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன் என மாமன்னன் படத்தைப் பார்த்தபின் திருமாவளவன் எம்.பி பேட்டி அளித்துள்ளார்
- 17:10 (IST) 01 Jul 2023தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் : பழனி அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு. உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் அடித்து விரட்டியதால் பரபரப்பு
- 16:27 (IST) 01 Jul 2023ஆளுனர் குறித்த கேள்விக்கு ஒபிஎஸ் பதில்
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஒபிஎஸ் அது ஆளுநருக்கே தெரியாத போது எங்களிடம் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.
- 15:41 (IST) 01 Jul 2023மருத்துவர் நாள் வாழ்த்து
“மானுட சமூகம் மட்டுமின்றி, பிற உயிரினங்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும்பணி புரியும் மருத்துவர்களை நன்றியுடன் நினைவுகூரும் மருத்துவர் நாள் இன்று.
பெரும் விபத்துகள், இயற்கை பேரிடர், பெருந்தொற்று என நெருக்கடி மிகுந்த காலங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றும் தன்னலமற்ற அவர்களது சேவை மிகுந்த போற்றுதலுக்குரியது” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 15:35 (IST) 01 Jul 2023மருத்துவர் நாள் வாழ்த்து!
"தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் மருத்துவர்களின் ஏற்றத்துக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் தோளோடு தோள் நிற்கும்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 15:32 (IST) 01 Jul 2023மகாராஷ்டிரா பேருந்து விபத்து: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!
மகாராஷ்டிரா, புல்தானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 15:15 (IST) 01 Jul 2023ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்!
ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.61 லட்சம் கோடிஎன்றும், தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.6 லட்சம் கோடியை கடந்துள்ளது. தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியாக 9600.63 கோடி வசூல் ஆகியுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
- 14:51 (IST) 01 Jul 2023வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். 8 பேரும் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
- 14:42 (IST) 01 Jul 2023உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: இந்தியா தோல்வி!
குரோஷியாவில் நடைபெறும் உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் தோல்வி.
தோல்வியடைந்ததை அடுத்து இந்திய வீரர்கள் சரத் கமல், மனிகா பத்ரா தொடரில் இருந்து வெளியேறினர். ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீரர் லின்னிடம் 0 க்கு 3 கேம் கணக்கில் சரத் கமல் தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொரிய வீராங்கனை யுபினிடம் 0 க்கு 3 கணக்கில் மனிகா பத்ரா தோல்வியடைந்தார்.
- 14:40 (IST) 01 Jul 2023வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்!
விருதுநகரில் கூட்டாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
- 14:39 (IST) 01 Jul 2023கைதிகள் இடையே மோதல்: 2 பேர் காயம்!
சென்னை, புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகள் இடையே மோதல் நடந்து. இதில் சிரில்ராஜ், சதீஷ் ஆகிய கைதிகள் காயம் அடைந்தனர். மோதலை தடுக்க சென்ற சிறைகாவலர் சாம் ஆல்பர்ட்டை கைதிகள் தாக்கியுள்ளனர்.
பணி செய்ய விடாமல் சிறை கைதிகள் காவலரை கீழே தள்ளிவிட்டதாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 14:02 (IST) 01 Jul 2023சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி!
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. http://Online.Ideunom.ac.in என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பக்கலாம்.
- 13:58 (IST) 01 Jul 2023தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்!
உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக், நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை செயலாளராகக் கார்த்திகேயன் ஐஏஎஸ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 13:50 (IST) 01 Jul 2023தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:49 (IST) 01 Jul 20237 நடிகர்கள் மீது நடவடிக்கை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை!
சென்னையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத 7 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- 13:26 (IST) 01 Jul 2023காமராஜர் பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட்
மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட்
மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்
ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த மாவட்ட எஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- 12:59 (IST) 01 Jul 2023ஜூலை 20-ல் மழைக் கால கூட்டத்தொடர்
புதிய நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ல் மழைக் கால கூட்டத்தொடர்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக் கால கூட்டத்தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மழைக் கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
- 12:56 (IST) 01 Jul 2023ஜாம்பவான் ஆலன் பார்டருக்கு நடுக்குவாத நோய் பாதிப்பு
ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர், தான் பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்
2016ம் ஆண்டே நோய் பாதிப்பு பற்றி தெரியும்: யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தேன்.
இப்போது எனக்கு 68 வயதாகிறது, 80 வரை உயிரோடு இருந்தால் அதிசயம் - பார்டர்
இவரை கவுரவிக்கும் விதமாக தான் இந்தியா ஆஸி. இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
- 12:36 (IST) 01 Jul 2023கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
மதுரையில் விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு
இடிபாடுகளில் சிக்கிய மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
- 12:09 (IST) 01 Jul 2023கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கிய மொய் விருந்து
புதுக்கோட்டை, கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கிய மொய் விருந்து
கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 பேர் ஒன்றிணைந்து மொய் விருந்து அளிக்கின்றனர்
சமையல், மொய் எழுத்தர்கள், ஆடு வியாபாரிகள், மளிகைக் கடை என பல தரப்புக்கு வேலை வாய்ப்பு
எதிர்பார்த்த அளவு மொய் வசூலாகும் என மொய் விருந்து நடத்துபவர்கள் நம்பிக்கை
- 11:58 (IST) 01 Jul 2023ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு
வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது - மனுதாரர்
ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை - மனுதாரர்
- 11:24 (IST) 01 Jul 2023பிசிசிஐ புதிய ஸ்பான்சர் 'ட்ரீம் லெவன்'
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் 'ட்ரீம் லெவன்' நிறுவனம் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3 ஆண்டுகளுக்கு ட்ரீம் லெவன் நிறுவனம் ஸ்பான்சராக இருக்கும் எனவும் அறிவிப்பு
- 11:23 (IST) 01 Jul 2023டெங்கு காய்ச்சல் பரவல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்
பள்ளி, கல்லூரிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
- 10:35 (IST) 01 Jul 2023தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- 10:35 (IST) 01 Jul 2023சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,440க்கும், ஒரு சவரன் 43,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- 10:31 (IST) 01 Jul 2023தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
மருத்துவக் கல்லூரி இயக்ககம், 2023 -24 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
அதன்படி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 13 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்த ஆண்டுக் கட்டணம், 18 ஆயிரத்து 93 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பி.டி.எஸ் எனப்படும் பல்மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் 11 ஆயிரத்து 610 ரூபாயில் இருந்து 16 ஆயிரத்து 73 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 10:30 (IST) 01 Jul 2023அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மேகதாது விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 09:20 (IST) 01 Jul 2023ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்க உள்ளார்.
இந்த கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
- 08:36 (IST) 01 Jul 2023முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது; முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது;
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- 08:33 (IST) 01 Jul 2023மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் ஆகியுள்ளது. யூனிட் ஒன்று 13 முதல் 21 காசுகள் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயம், குடிசைகளுக்கான இலவச மின்சாரம் தொடரும்.
- 08:27 (IST) 01 Jul 20231 கிலோ தக்காளி 120 ரூபாய்
வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார கடையில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு தக்காளி விலை உயர்வு இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு, பண்ணை பசுமை காய்கறி ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 08:27 (IST) 01 Jul 2023சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 8 ரூபாய் அதிகரித்தது. ரூ.1937-க்கு விற்ற வணிக சிலிண்டர், இம்மாதம் 1945-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
- 08:27 (IST) 01 Jul 2023தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டைமண்ட் லீக் தொடரில்,87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா 2வது முறையாக தங்கம் வென்றார்.
நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு இதே தொடரில், 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- 08:04 (IST) 01 Jul 2023பேருந்து தீப்பிடித்து விபத்து
மகாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 08:04 (IST) 01 Jul 2023போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை இரவில் அரசுப் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவரத்து ஊழியர்களின் காத்திரிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
- 08:04 (IST) 01 Jul 2023சொலிசிட்டர் ஜெனரல் பதவிக் காலம் நீட்டிப்பு
சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தாவின் பதவி காலத்தை 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜன், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பாடி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 08:03 (IST) 01 Jul 2023ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்பு
தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இறையன்புவிடம் பேனா வாங்கி கையெழுத்திட்டு சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து இறையன்பு வாழ்த்து தெரிவித்தார்.
- 08:03 (IST) 01 Jul 2023வருமான வரித்துறை விளக்கம்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை. 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம்
- 08:02 (IST) 01 Jul 2023தமிழக பொதுத்துறை செயலாளர் நியமனம்
தமிழக பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். மனித வள மேம்பாட்டு துறை செயலாளராகவும் நந்தகுமார் செயல்படுவார். உணவுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.