Advertisment

Tamil News Highlights: எந்த அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை- ஆளுநர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Tamil Nadu News, Tamil News, Senthil balaji, RN Ravi, Rahul Gandhi, Manipur violence, Mamannan movie review – 30 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin wrote a letter to the President against the Governor

தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை. சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisment

ஆளுநருக்கான மரியாதையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது . எப்போதும் தமிழ் கலாசாரத்தின்படி தங்களை மரியாதையாகத்தான் நடத்தி வந்துள்ளோம். அமைச்சரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், பிரதமருக்கு மட்டுமே உண்டு.

அமைச்சரவையில் யார் இருப்பது? யார் இருக்கக்கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது. அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை – 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:51 (IST) 30 Jun 2023
    தமிழக பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்

    தமிழக பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மனித வள மேம்பாட்டு துறை செயலாளராகவும் நந்தகுமார் செயல்படுவார். உணவுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஐஏஎஸ், ‌அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார், இவ்வாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.


  • 22:28 (IST) 30 Jun 2023
    அமைச்சரவையில் யார் இருப்பது? யார் இருக்கக்கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது - மு.க.ஸ்டாலின்

    ஆளுநருக்கான மரியாதையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. எப்போதும் தமிழ் கலாசாரத்தின்படி தங்களை மரியாதையாகத்தான் நடத்தி வந்துள்ளோம். அமைச்சரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், பிரதமருக்கு மட்டுமே உண்டு. அமைச்சரவையில் யார் இருப்பது? யார் இருக்கக்கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது. அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


  • 21:53 (IST) 30 Jun 2023
    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவி காலம் நீட்டிப்பு

    சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தாவின் பதவி காலத்தை 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜன், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பாடி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


  • 21:44 (IST) 30 Jun 2023
    மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் கோலாகலம்

    காரைக்கால் அம்மையார் கோயிலில் நாளை மறுநாள் மாங்கனி திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முக்கிய நிகழ்வான மாப்பிள்ளை அழைப்பு கோலாகலமாக தொடங்கியது


  • 20:29 (IST) 30 Jun 2023
    தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை; வருமான வரித்துறை விளக்கம்

    தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை. 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது


  • 20:12 (IST) 30 Jun 2023
    எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை - ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வெளியானது. எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை. மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக உள்ளது சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது என 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்


  • 19:47 (IST) 30 Jun 2023
    முதல்வரின் அனுமதி இல்லாமல், அமைச்சரை நீக்க ஆளுனருக்கு எந்த அதிகாரமும் இல்லை - மு.க.ஸ்டாலின்

    செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அவர் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தின் செயல்பாடு முறிந்துவிட்டதாக ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் அனுமதி இல்லாமல், அமைச்சரை நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 19:22 (IST) 30 Jun 2023
    ஆளுநர் செயல்பாடுகள் குறித்து கவலை இல்லை - உதயநிதி ஸ்டாலின்

    ஆளுநர் எதையாவது செய்து கொண்டிருப்பார். அவரது செயல்பாடுகள் குறித்து கவலை இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பதிலளித்துவிட்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 19:05 (IST) 30 Jun 2023
    மாணவ-மாணவியருக்கு காசோலை வழங்கிய முதலமைச்சர்

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-23ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ. 15 ஆயிரத்திற்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.


  • 19:01 (IST) 30 Jun 2023
    மைதானங்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி

    மைதானங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த தலா ₹50 கோடியை பிசிசிஐ வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 18:27 (IST) 30 Jun 2023
    ஆயிரம் ஆண்டு வலி: மாமன்னன் குறித்து ஆமிர்

    ஒரு சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரைப்படம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ் என இயக்குனர் ஆமிர் கூறினார்.


  • 18:13 (IST) 30 Jun 2023
    கால்நடை இளநிலை மருத்துவ படிப்பு விண்ணப்ப பதிவு நிறைவு

    கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு

    760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும்.


  • 18:03 (IST) 30 Jun 2023
    பிரதமர் மோடி அழைப்பை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர்

    ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்கிறார்.

    ஜூலை 4ம் தேதி இந்தியா நடத்தும் இம்மாநாட்டில் ஷபாஸ் ஷெரீப், காணொலி காட்சி வழியே பங்கேற்க உள்ளார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  • 17:59 (IST) 30 Jun 2023
    டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு: எழும்பூரில் பிரிவுபசார விழா

    பணி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்களில் பிரிவு உபச்சார விழா மற்றும் காவல்துறை அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது.

    அப்போது, குதிரைப்படை, கமாண்டோ படை, பேரிடர் மீட்பு படை, உள்ளிட்ட 8 காவல்துறை அணிகளின் அணிவகுப்பு மரியாதையை சைலேந்திரபாபு ஏற்றுக்கொண்டார்.


  • 17:39 (IST) 30 Jun 2023
    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்: ஆளுனருக்கு மு.க. ஸ்டாலின்

    இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பாக என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுனர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்த நிலையில், முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.


  • 17:38 (IST) 30 Jun 2023
    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்: ஆளுனருக்கு மு.க. ஸ்டாலின்

    இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பாக என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுனர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்த நிலையில், முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.


  • 17:06 (IST) 30 Jun 2023
    கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் வெளியீடு

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி உள்ளது


  • 16:42 (IST) 30 Jun 2023
    சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டும். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் விசாரிக்க வேண்டும். 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், விசாரித்த சிபிசிஐடி அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என சிபிஐ கூறப்பட்டு 2 முதல் 3 மாதம் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு


  • 16:40 (IST) 30 Jun 2023
    முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் - பிரேன் சிங் ட்வீட்

    இந்த கடினமான சூழலில் மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் - பிரேன் சிங் ட்வீட். பிரேன் சிங் வீட்டின் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்திய நிலையில் முடிவு


  • 16:21 (IST) 30 Jun 2023
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 5ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு


  • 16:16 (IST) 30 Jun 2023
    மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய பிரேன் சிங் முடிவு

    மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்த பிரேன் சிங். வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள், ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வருக்கு கோரிக்கை


  • 15:32 (IST) 30 Jun 2023
    டிஜிபியாக பொறுப்பேற்ற பின் சங்கர் ஜிவால் பேட்டி

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் "கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள் ஒடுக்கப்படுவர்" டிஜிபியாக பொறுப்பேற்ற பின் சங்கர் ஜிவால் பேட்டி


  • 15:11 (IST) 30 Jun 2023
    திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

    குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தபோது, திருநங்கை என்ற காரணத்தை கூறி நிராகரிக்கப்பட்டதாகவும் பிரித்திகா யாஷினி வழக்கு


  • 14:43 (IST) 30 Jun 2023
    இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    ஓய்வு பெறும் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


  • 14:31 (IST) 30 Jun 2023
    புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு

    தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு . சங்கர் ஜிவாலிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார் சைலேந்திரபாபு


  • 14:30 (IST) 30 Jun 2023
    இரட்டை நிலைப்பாடு கொண்டு உள்ளார் முதல்வர் ஸ்டாலின்

    ஆளுநர் அதிகார விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டு உள்ளார் முதல்வர் ஸ்டாலின் .அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் .சென்னை விமான நிலையத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு


  • 13:38 (IST) 30 Jun 2023
    ஆளுநர் விவகாரத்தில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு

    அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது . ஆளுநர் விவகாரத்தில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு . திமுக அரசு பிரச்சினைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை . வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு


  • 13:36 (IST) 30 Jun 2023
    புதிய காவல் ஆணையரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சங்கர் ஜிவால்

    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சந்தீப் ராய் ரத்தோர் . புதிய காவல் ஆணையரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சங்கர் ஜிவால்


  • 13:36 (IST) 30 Jun 2023
    மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடிதம்

    கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் . மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடிதம் . நீதிமன்றத்தில் நேரடியாக தீர்ப்பாயம் அமைக்கிறோம் என மத்திய அரசு தெரிவிக்க கூடாது . இரு மாநில அரசுகளிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார் . ஆட்சி அமைத்து ஒரு மாத காலமே ஆவதால், கர்நாடகா மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும் . உச்சநீதிமன்றத்தில் 12 வாரம் அவகாசம் கேட்டு, அதற்குள் புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்


  • 12:56 (IST) 30 Jun 2023
    ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் - முத்தரசன்

    ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- சி.பி.ஐ முத்தரசன்


  • 12:56 (IST) 30 Jun 2023
    ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் - முத்தரசன்

    ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- சி.பி.ஐ முத்தரசன்


  • 12:51 (IST) 30 Jun 2023
    12 குவாரிகளுக்கு ரூ. 44.65 கோடி அபராதம்

    கரூரில் விதிமீறலில் ஈடுபட்ட 12 குவாரிகளுக்கு ரூ. 44.65 கோடி அபராதம்

    வருவாய் கோட்டாட்சியர் மூலமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

    42 குவாரிகளை ஆய்வு செய்ததில் 12 குவாரிகள் மீது தற்போது நடவடிக்கை

    மற்ற 30 குவாரிகள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிப்பு


  • 12:47 (IST) 30 Jun 2023
    செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு

    அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு

    அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம்

    அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும்: பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும் - ஜெயக்குமார்


  • 12:20 (IST) 30 Jun 2023
    ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் - ஜெயக்குமார்

    உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

    ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி?

    சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு


  • 12:18 (IST) 30 Jun 2023
    ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது

    ஆளுநர் கடித விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்

    அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது

    முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்


  • 11:59 (IST) 30 Jun 2023
    ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இயலாது

    சென்னை மாநகர கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இயலாது

    மாநகர கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கான சட்ட வாய்ப்பு குறைவு.

    மாமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்


  • 11:59 (IST) 30 Jun 2023
    திருக்குறள் முற்றோதல் - மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஸ்டாலின்

    திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    124 மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்


  • 11:57 (IST) 30 Jun 2023
    ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிக்க அவசியமில்லை

    அமைச்சர் நீக்கம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிக்க அவசியமில்லை

    கடந்த காலங்களில் அமைச்சரவை பரிந்துரை செய்த பின்பே பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்

    அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் செயல்பட வேண்டும் - சபாநாயகர் அப்பாவு


  • 11:57 (IST) 30 Jun 2023
    ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கை - அப்பாவு

    அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம், இல்லை என்பதை ஆளுநர் உணர்ந்து கொண்டுள்ளார்.

    ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

    அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிடுவார்கள் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி


  • 11:22 (IST) 30 Jun 2023
    வேங்கைவயல் வழக்கு - 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    வேங்கைவயல் வழக்கு - டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்


  • 11:21 (IST) 30 Jun 2023
    டெல்லி மெட்ரோவில் பிரதமர் பயணம்

    டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் புறப்பாடு

    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி மெட்ரோவில் பயணம்


  • 10:55 (IST) 30 Jun 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


  • 10:53 (IST) 30 Jun 2023
    ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக அறிவிப்பு


  • 10:52 (IST) 30 Jun 2023
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ. 5,430க்கும், ஒரு சவரன் ரூ. 43,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 10:52 (IST) 30 Jun 2023
    ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக அறிவிப்பு


  • 09:35 (IST) 30 Jun 2023
    ராகுல் செல்ல இருந்த பாதையில் தாக்குதல்

    ராகுல் காந்தி செல்ல இருந்த பாதையில் கையெறி குண்டு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டே ராகுலை போலீசார் அனுமதிக்கவில்லை எனவும் மணிப்​பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹெயிஸ்னம் பல்ராம் தெரிவித்துள்ளார்.

    மேலும், சுராசந்த்ப்பூர் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டர் மூலமாக செல்லுமாறு ராகுல் காந்தியை போ​​லீசார் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


  • 09:25 (IST) 30 Jun 2023
    திமுக எம்.பி. வில்சன் காட்டம்

    காலையில் ஒரு கடிதம் எழுதுவீர்கள், இரவில் அதை வேண்டாம் என கூறுவீர்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார். யாரிடமும் ஆலோசிக்காமல் தனக்கு தோன்றியபடி கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா? - செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் காட்டம்


  • 08:35 (IST) 30 Jun 2023
    மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்


  • 08:30 (IST) 30 Jun 2023
    செந்தில் பாலாஜி நீக்கம்; முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்

    ஜூன் 15ல் செந்தில்பாலாஜியின் இலாகா மாற்ற கோரிய போதும், உடல்நிலை மட்டுமே காரணமாக சொல்லப்பட்டது. அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிடவில்லை.

    ஜூன் 16ல் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க மீண்டும் கோரிக்கை விடுத்தேன். இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது செந்தில்பாலாஜிக்கு கூடுதல் பலம்- அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்


  • 08:09 (IST) 30 Jun 2023
    டி.என்.பி.எல்- மதுரை அணி வெற்றி

    டி.என்.பி.எல். தொடரின் 21வது லீக் போட்டியில், பால்ஸி திருச்சியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி வீழ்த்தியது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த திருச்சி, 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அடுத்து பேட் செய்த மதுரை, 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் மதுரை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.


  • 08:08 (IST) 30 Jun 2023
    செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு?

    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று (ஜூன் 29) ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வஅறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


  • 08:07 (IST) 30 Jun 2023
    இன்று வெளியாகும் ’கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக்

    ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.


Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment