Advertisment

Tamil news today : மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்;ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

amil Nadu News, Tamil News, Petrol price Today - 04 September 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை அணி வெற்றி

ஆசிய கோப்பை :ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி.  176 ரன்கள் இலக்குடன் ஆடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது.

மழை நிலவரம்

அடுத்த 2 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:29 (IST) 04 Sep 2022
    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே. வகுப்பறை அனுபவங்கள் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாக விளங்க வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 20:42 (IST) 04 Sep 2022
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வருகை

    தமிழகத்தில் ‘புதுமைப்பெண்’ திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வரவேற்றார்.



  • 20:37 (IST) 04 Sep 2022
    கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து கடிதம்

    தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டட்திற்கு எடுத்துச் செல்வோம் என நம்புகிறேன என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



  • 20:01 (IST) 04 Sep 2022
    பிராங்க் வீடியோ யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு; இதுபோல நடந்துகொண்டால் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

    கோவை பிராங்க் வீடியோ விவகாரத்தில், கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது கோவை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதால் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல் வேறு யாரேனும் நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.



  • 19:21 (IST) 04 Sep 2022
    புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்களை சந்திக்க சென்ற பி.ஆர்.பாண்டியன் கைது

    சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்திப்பதற்காக சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 19:16 (IST) 04 Sep 2022
    கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; திரையுலகினர் பங்கேற்பு

    சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான, திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 160 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

    சின்னத்திரை கதாநாயகன்கள், கதாநாயகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 81 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 18:58 (IST) 04 Sep 2022
    சிறந்த நடிகர் விருது பெற்ற விக்ரம்

    நடிகர் விக்ரம் ராவணன் படத்தில் நடித்ததற்காக 2010ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருதை வென்றார்.



  • 18:38 (IST) 04 Sep 2022
    அரசு தடை செய்தால், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்- சரத் குமார்

    அரசு தடை செய்தால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என சரத் குமார் கூறியுள்ளார்.



  • 17:48 (IST) 04 Sep 2022
    மீண்டும் ரஜினி-அரவிந்த் சாமி கூட்டணி

    தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி கூட்டணி அமையவிருக்கிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படத்தில் அரவிந்த் சாமி அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் ரஜினி நல்லது செய்யும் வில்லனாக நடித்திருந்தார்.

    அரவிந்த் சாமி தவறை தட்டிக் கேட்டும் மாவட்ட ஆட்சியாளராக நடித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.



  • 17:35 (IST) 04 Sep 2022
    சைரஸ் மிஸ்திரி மறைவு: பிரதமர் நநே்திர மோடி இரங்கல்

    தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி இன்று (செப்.4) மாலை நிகழ்ந்த விபத்தில் காலமாகிவிட்டார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீ சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நாட்டின் நம்பிக்கைக்குரிய ஒரு வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:34 (IST) 04 Sep 2022
    சைரஸ் மிஸ்திரி மறைவு: பிரதமர் நநே்திர மோடி இரங்கல்

    தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி இன்று (செப்.4) மாலை நிகழ்ந்த விபத்தில் காலமாகிவிட்டார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீ சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நாட்டின் நம்பிக்கைக்குரிய ஒரு வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:01 (IST) 04 Sep 2022
    'பாஜக சித்தாந்தத்தை தோற்கடிப்போம்'- ராகுல் காந்தி

    காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக மற்றும் ஆர்எஸஎஸ் சித்தாந்தத்தை தோற்கடிப்போம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



  • 16:51 (IST) 04 Sep 2022
    டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் மரணம்

    டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கார் டிவைடரில் மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மெர்சிடிஸ் கார், சரோட்டி அருகே பாலத்தில் உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் நான்கு பேர் இருந்தனர், அதில் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



  • 16:24 (IST) 04 Sep 2022
    சென்னையில் 2500 விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட 2500 விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்படுகிறது. 20000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு திருவொற்றியூர், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலையை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது



  • 16:02 (IST) 04 Sep 2022
    காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியவில்லை - குலாம்நபி ஆசாத்

    காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. ஐம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள் என குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்



  • 15:42 (IST) 04 Sep 2022
    ஆசிரியர் தினம்; ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என ஆளுனர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்



  • 15:32 (IST) 04 Sep 2022
    பொறியியல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்

    பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி வரும் 10ம் தேதி முதல் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது



  • 15:18 (IST) 04 Sep 2022
    அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் கேவியட் மனு தாக்கல்

    அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஒ.பன்னீர் செல்வம் முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பின் கருத்தைக் கேட்ட பின்பே தீர்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 14:44 (IST) 04 Sep 2022
    பள்ளி மாணவன் கொலை; ஜிப்மர் மருத்துவ குழு பிரேத பரிசோதனை நிறைவு

    பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவத்தில், மாணவன் உடலுக்கு ஜிப்மர் மருத்துவ குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. தற்போது மாணவனின் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது



  • 14:21 (IST) 04 Sep 2022
    மகளுக்கு "பக்கோடா" என பெயர் சூட்டிய பிரிட்டன் தம்பதி

    பிரிட்டன் தம்பதியர் தங்கள் மகளுக்கு "பக்கோடா" என பெயர் சூட்டியுள்ள்ளனர். இந்திய உணவான "பக்கோடா" தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் குழந்தைக்கு இப்பெயரை சூட்டியதாக தம்பதி விளக்கம் அளித்துள்ளனர்



  • 13:39 (IST) 04 Sep 2022
    2 பாகங்களாக வெளியாகிறது 'விடுதலை'

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படம் 2 பாகங்களாக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு



  • 13:21 (IST) 04 Sep 2022
    என்.எல்.சி-யை மூடுவோம்; ராணுவம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

    கடலூரில் நெல்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

    என்.எல்.சி-யை மூடுவோம். ராணுவம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் பேச்சு



  • 12:47 (IST) 04 Sep 2022
    14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்



  • 12:46 (IST) 04 Sep 2022
    சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் - முதல்வர்

    சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் - முதல்வர்

    3 மாவட்ட நீதிமன்றம் உட்பட 35 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஆணை வெளியீடு - முதல்வர் ஸ்டாலின்



  • 12:24 (IST) 04 Sep 2022
    ' ஐனநாயகம் ' என விசிக திருமாவளவன் ட்வீட்

    ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டாகி வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் ' ஐனநாயகம் ' என ட்வீட்

    முன்னதாக முதல்வர் ஸ்டாலின் ' திராவிடம் ' என்றும் பாஜக அண்ணாமலை 'தமிழன்' என்றும் ட்விட் பதிவிட்டிருந்தனர்.



  • 12:19 (IST) 04 Sep 2022
    சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள் அதிகம் - முதல்வர் ஸ்டாலின்

    சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை

    பாரம்பரிய கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது

    சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன

    நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் - முதல்வர் ஸ்டாலின்



  • 12:16 (IST) 04 Sep 2022
    நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவதில் மகிழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின்

    நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மகிழ்ச்சி

    உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • 11:34 (IST) 04 Sep 2022
    வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு முகாம்

    ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான சிறப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



  • 10:46 (IST) 04 Sep 2022
    உயர்நீதிமன்ற வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

    உயர்நீதிமன்ற வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு



  • 10:40 (IST) 04 Sep 2022
    மாணவன் கொலை - பெண் கைது

    காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது.



  • 09:48 (IST) 04 Sep 2022
    எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்

    திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.



  • 08:52 (IST) 04 Sep 2022
    பெற்றோர் கொடுத்த விஷம் - மாணவன் பலி

    காரைக்காலில் பள்ளிமாணவனுக்கு சகமாணவியின் பெற்றோர் விஷம் கொடுத்த விவகாரம் இருவருக்கிடையே படிப்பில் ஏற்பட்ட போட்டியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த கொடூரம் சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன்(13) என்ற மாணவன் உயிரிழப்பு



  • 08:52 (IST) 04 Sep 2022
    உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைப்பு - 2 பேர் கைது

    கடலூரில் உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment