Advertisment

Tamil News Updates: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps

எடப்பாடி பழனிச்சாமி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

செந்தில்பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்கு இருந்தது.

பின்னர் இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது மோசடி பிரிவுடன் சேர்த்து ஊழல் தடுப்பு பிரிவு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 03:01 (IST) 05 Jul 2023
    கேரளாவில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

    கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக கோட்டயம், காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு


  • 02:59 (IST) 05 Jul 2023
    கோவை, தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

    கோவை, தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து தொழிலாளிகள் பலியான விவகாரத்தில் மேலும் ஒருவர் பலியானார். ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


  • 02:57 (IST) 05 Jul 2023
    டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

    டிஎன்பிஎல் - திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 161 ரன்கள் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.


  • 02:55 (IST) 05 Jul 2023
    'மாமன்னன்' படம் சமத்துவத்தை வலியுறுத்தும் படைப்பு - ரஜினிகாந்த் ட்வீட்

    'மாமன்னன்' திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

    இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


  • 21:52 (IST) 04 Jul 2023
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம்

    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


  • 21:50 (IST) 04 Jul 2023
    ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 1 பெண் பலி; 14 பேர் படுகாயம்

    ராமநாதபுரம் அருகே கழனிக்குடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென மாடு குறுக்கே வந்ததால் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


  • 21:37 (IST) 04 Jul 2023
    பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    100% பார்வையற்ற அப்பெண், வரிவிலக்கு கோரி ஒன்றிய அரசுக்கு மனு அனுப்பிய நிலையில், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை என பதில் வந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.


  • 20:53 (IST) 04 Jul 2023
    5 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

    பள்ளிக்கல்வித்துறையில் 5 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


  • 20:20 (IST) 04 Jul 2023
    பண மோசடி வழக்கு: திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் கருணாகரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை

    தொழிலதிபர் நாராயண மூர்த்தி என்பவரிடம் ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் கருணாகரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு பணத்தை தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 20:17 (IST) 04 Jul 2023
    தமிழ்நாடு முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்கள் அதிரடி மாற்றம்

    சென்னை மண்டலம் மற்றும் திருநெல்வேலி மண்டலங்களின் மாவட்ட பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 20:16 (IST) 04 Jul 2023
    கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 4 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

    கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியான விவகாரத்தில், சுவர் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 20:15 (IST) 04 Jul 2023
    கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 4 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

    கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியான விவகாரத்தில், சுவர் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 20:13 (IST) 04 Jul 2023
    தமிழ்நாடு முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்கள் அதிரடி மாற்றம்

    சென்னை மண்டலம் மற்றும் திருநெல்வேலி மண்டலங்களின் மாவட்ட பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 19:41 (IST) 04 Jul 2023
    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு; ஜூலை 6-ம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

    உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜூலை 6-ம் தேதி தீர்ப்பளிக்கிறது.


  • 19:11 (IST) 04 Jul 2023
    கோவை தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

    கோயம்புத்தூரில் சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் 4 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


  • 19:07 (IST) 04 Jul 2023
    செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு முழு விவரம்

    செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு முழு விவரம் வெளியானது.

    செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் இரு வேறு தீர்ப்பு அளித்திருந்தனர்.


  • 19:03 (IST) 04 Jul 2023
    கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்: பிரச்னையை தீர்க்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 19:02 (IST) 04 Jul 2023
    கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்: பிரச்னையை தீர்க்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 18:50 (IST) 04 Jul 2023
    திருநெல்வேலி, குமரியில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.


  • 18:46 (IST) 04 Jul 2023
    தெற்கு ஆசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை உயர்த்த உழைக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

    தெற்கு ஆசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை உயர்த்த உழைக்கிறோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ட்விட்டரில், “முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டினை உயர்த்தி, தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை ஆக்கிட உழைக்கிறோம்.

    தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்கிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 18:42 (IST) 04 Jul 2023
    குழந்தை கை அகற்றம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின் பாராமுகமான நடவடிக்கைகளுமே அந்த குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து விசாரணை குழு அமைத்திருக்கிறார்.


  • 18:42 (IST) 04 Jul 2023
    குழந்தை கை அகற்றம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின் பாராமுகமான நடவடிக்கைகளுமே அந்த குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து விசாரணை குழு அமைத்திருக்கிறார்.


  • 18:11 (IST) 04 Jul 2023
    காவிரி ஆணையம் பொறுப்பு: துரைமுருகன்

    தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் திறக்கப்படுகிறதா என்பதற்கு காவிரி ஆணையம்தான் பொறுப்பு என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.


  • 18:02 (IST) 04 Jul 2023
    மின் கட்டணம், விலைவாசி உயர்வு: ஹோட்டல் தொழிலாளர்கள் பாதிப்பு

    மின் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில், ஹோட்டலில் உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.


  • 17:49 (IST) 04 Jul 2023
    கோயம்பேடு: தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை

    கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.100க்கு மீண்டும் இன்று விற்பனையானது. தக்காளி உற்பத்தி சரிவு, நுகர்வு அதிகரிப்பு, கள்ளச் சந்தையில் பதுக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் முதல் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிவருவது குறிப்பிடத்தக்கது.


  • 17:39 (IST) 04 Jul 2023
    ஆப்கானிஸ்தானுக்கு 10000 டன் கோதுமை வழங்கிய இந்தியா

    ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 10000 டன் கோதுமையை இந்தியா வழங்கியுள்ளது.

    இந்தக் கோதுமை அந்நாட்டின் ஹெராத் நகரை இன்று அடைந்ததாக ஐநா உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது.


  • 17:29 (IST) 04 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


  • 17:04 (IST) 04 Jul 2023
    சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

    சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், AC திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், Non-AC திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


  • 16:43 (IST) 04 Jul 2023
    போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி - ஆய்வு செய்ய உத்தரவு

    கோவை மாவட்டத்தில் போலி சான்றுகள் கொடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்களா? என முழுமையாக ஆய்வு செய்து, 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


  • 16:29 (IST) 04 Jul 2023
    4 மாநிலங்களுக்கு புதிய தலைவர்; ஜே.பி. நட்டா அறிவிப்பு

    பஞ்சாப் மாநில தலைவராக சுனில் ஜாக்கர், ஆந்திரா மாநில தலைவராக முன்னாள் அமைச்சர் புரந்தேஸ்வரி, தெலங்கானா மாநில தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜார்கண்ட் மாநில தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் ஆகியோரை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்


  • 16:15 (IST) 04 Jul 2023
    கஞ்சாவை எலிகள் தின்ற விவகாரம் - இருவர் விடுதலை

    கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது


  • 15:45 (IST) 04 Jul 2023
    வேங்கைவயல் வழக்கு; 8 பேருக்கும் கண்டிப்பாக டி.என்.ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் - நீதிமன்றம்

    வேங்கைவயல் வழக்கில் பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள 8 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது


  • 15:44 (IST) 04 Jul 2023
    தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம் - டி.கே.சிவகுமார்

    தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்


  • 15:32 (IST) 04 Jul 2023
    வேங்கைவயல் வழக்கு; 8 பேருக்கும் கண்டிப்பாக டி.என்.ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் - நீதிமன்றம்

    வேங்கைவயல் வழக்கில் பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள 8 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது


  • 15:10 (IST) 04 Jul 2023
    கிரஷர் ஜல்லி - கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

    கிரஷர் ஜல்லி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது


  • 14:50 (IST) 04 Jul 2023
    அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம் - உதயநிதி ஸ்டாலின்

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்" "இனி திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை" "அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்" என நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்


  • 14:41 (IST) 04 Jul 2023
    ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது - பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் உத்தரவு

    அவதூறு வழக்கில் கைதான பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்த நிலையில், உடல்நலக்குறைவால் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு; சென்னையில் தங்கியிருந்து கையெழுத்திட அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு


  • 14:37 (IST) 04 Jul 2023
    நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கினார்

    அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கினார். மூக்கில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை


  • 14:35 (IST) 04 Jul 2023
    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : 4 பேர் கொண்ட கும்பல் கைது

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸில் 2ஆம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் வந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது அம்பலமாகியுள்ளது. தங்களை அணுகும் மாணவர்களிடம் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்த நிலையில், குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


  • 14:33 (IST) 04 Jul 2023
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 14:32 (IST) 04 Jul 2023
    ஷூ கம்பெனிக்கு ஆட்கள் எடுப்பதாக பரவிய வதந்தி

    கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள ஷூ கம்பெனிக்கு ஆட்கள் எடுப்பதாக பரவிய வதந்தி.

    வேலைக்கு விண்ணப்பிக்க திரண்டு வந்த 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களால் பரபரப்பு. ஆட் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள்


  • 13:56 (IST) 04 Jul 2023
    அன்பகம் காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது

    செங்கல்பட்டு மாவட்டம் பனங்காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அன்பகம் காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காப்பகத்தில் இருந்த 37 பெண்கள் உட்பட 59 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியபோது காப்பகத்தில் இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. மேலும் அரசு புறம்போக்கு நிலத்தில் காப்பகம் செயல்பட்டு வருவதால் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது


  • 13:47 (IST) 04 Jul 2023
    செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனைநடைபெற்று வருகிறது. செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்


  • 13:43 (IST) 04 Jul 2023
    உளுந்தூர்பேட்டையில் 2 கிலோ தக்காளி ₹100-க்கு விற்பனை

    உளுந்தூர்பேட்டையில் 2 கிலோ தக்காளியை ₹100க்கு விற்பனை செய்த வியாபாரி ராஜசேகர்! விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவதாக தகவல்


  • 13:08 (IST) 04 Jul 2023
    டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

    டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து விபத்தில் சிக்கிய காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்ற டிடிஎஃப் வாசன் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது


  • 12:55 (IST) 04 Jul 2023
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்

    சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் கர்நாடகாவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நாரயணமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் "விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும்" பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி ஏற்கனவே நியமனம் ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம்


  • 12:05 (IST) 04 Jul 2023
    ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

    நாமக்கல் சேந்தமங்கலத்தில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு உடல்நிலை பாதிப்பு கடும் வயிற்றுப்போக்கு காரணமாக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி ஓட்டலில் ஆய்வு செய்து சீல் வைத்த அதிகாரிகள் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த நாமக்கல் ஆட்சியர் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிகிச்சை அளித்ததாக மருத்துவருக்கு நோட்டீஸ்


  • 11:46 (IST) 04 Jul 2023
    மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம்

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம் மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் - அமைச்சர் துரைமுருகன்


  • 10:49 (IST) 04 Jul 2023
    செந்தில்பாலாஜி கைது, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

    அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

    அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பரதசக்கரவத்தி மனுவை தள்ளுபடி செய்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

    இதனால், ஆட்கொணர்வு வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  • 10:46 (IST) 04 Jul 2023
    செந்தில்பாலாஜி கைது, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

    அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

    அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பரதசக்கரவத்தி மனுவை தள்ளுபடி செய்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

    இதனால், ஆட்கொணர்வு வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  • 10:18 (IST) 04 Jul 2023
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 10:18 (IST) 04 Jul 2023
    சவரனுக்கு ரூ.136 உயர்ந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.5,452க்கும், ஒரு சவரன் ரூ. 43,616க்கும் விற்பனையாகிறது.


  • 10:04 (IST) 04 Jul 2023
    வீடு திரும்பினார் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.


  • 10:02 (IST) 04 Jul 2023
    ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது

    சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.

    ரேஷன் கடைகளில் ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது, ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 09:21 (IST) 04 Jul 2023
    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ .404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியானது.

    இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்!


  • 08:29 (IST) 04 Jul 2023
    நாகை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

    நாகை வட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 8ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


  • 08:28 (IST) 04 Jul 2023
    தக்காளி, பீன்ஸ், சின்ன வெங்காயம் மீண்டும் விலை உயர்வு

    சென்னையில் தக்காளி, நேற்று கிலோ ரூ.95க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கிலோ ரூ.100ஐ எட்டியது. மொத்த விற்பனையில் 5 ரூபாய் அதிகரித்ததால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.140 வரை எட்டியது

    பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.110 ஆகவும், சின்ன வெங்காயம் நேற்று ரூ.80 வரை விற்ற நிலையில் இன்று கிலோ ரூ130க்கு விற்பனையாகிறது.


  • 08:28 (IST) 04 Jul 2023
    துவரம் பருப்பு விலை உயர்வு

    தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில் , துவரம் பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.90-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது.


  • 08:28 (IST) 04 Jul 2023
    இன்று டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

    மேகதாது அணை, காவிரியில் இருந்து நீர் திறப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேச அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.


  • 08:04 (IST) 04 Jul 2023
    தமிழ்நாடு அரசு கடிதம்

    ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.


  • 08:04 (IST) 04 Jul 2023
    ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

    வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.

    பரிசோதனை முடிந்து இன்று வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


  • 08:03 (IST) 04 Jul 2023
    82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை

    சென்னையில் இன்று முதல் 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


  • 08:03 (IST) 04 Jul 2023
    காவலர்கள் செல்போனை பயன்படுத்தக்கூடாது

    பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது. பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது- சுற்றறிக்கை மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்


  • 08:03 (IST) 04 Jul 2023
    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


  • 08:02 (IST) 04 Jul 2023
    சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் மறுப்பு

    பொதுக்கூட்டத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment