Advertisment

Tamil News: எதிர்க்கட்சிகளை வழிநடத்த காங்கிரஸ் தவறிவிட்டது - மோடி

05/02/2024: இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம் .

author-image
WebDesk
New Update
modi

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை: 624-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

 நெல்லை, வாஞ்சி மணியாச்சி அருகே சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு 9 பெட்டிகள் சேதம். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் இருப்பு பாதை போலீசார் விசாரணை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 • Feb 05, 2024 22:44 IST
  ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

  ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்தப் படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது • Feb 05, 2024 21:48 IST
  இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு – ஓ.பி.எஸ்

  வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் • Feb 05, 2024 21:30 IST
  எதிர்க்கட்சிகளை வழிநடத்த காங்கிரஸ் தவறிவிட்டது - மோடி

  எதிர்க்கட்சிகளை வழிநடத்த காங்கிரஸ் தவறிவிட்டது. நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தும், காங்கிரஸ் மேலே வரவில்லை, சில நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார் • Feb 05, 2024 21:06 IST
  12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை; தமிழக அரசு அறிவிப்பு

  அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி, நீண்டகாலமாக சிறையில் உள்ள 12 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆளுநர் ஒப்புதலை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை - 6, கடலூர் - 4, வேலூர் மற்றும் புழலில் தலா ஒரு சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுகின்றனர் • Feb 05, 2024 21:03 IST
  அஸ்ஸாமில் 1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

  அஸ்ஸாம் ரயில் நிலையத்தில் 1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது • Feb 05, 2024 20:26 IST
  பிப்.25 தமிழ்நாடு வருகிறார் நரேந்திர மோடி

  பிரதமர் நரேந்திர மோடி பிப். 25 ஆம் தேதி பல்லடம் வருகிறார்; 10 லட்சம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். • Feb 05, 2024 19:30 IST
  பழங்குடியினரை பாஜகவுக்கு பிடிக்கவில்லை; ஹேமந்த் சோரன்

  ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உரையாற்றினார்.
  அப்போது, “எங்களைப் போன்ற பழங்குடிகள் காட்டை விட்டு நாங்கள் வெளியே வந்து அருகில் அமர்ந்ததும் அவர்களின் உடைகள் அழுக்காகத் தொடங்கியதாக உணர்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். • Feb 05, 2024 19:16 IST
  சென்னை எம்சி- சிமெட்ரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

   

  சென்னை எம்.சி. சாலை - சிமெட்ரி சாலை சந்திப்பு பகுதியில் முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி தொடங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. • Feb 05, 2024 18:59 IST
  டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை: நரேந்திர மோடி

   

  “விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது; டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது.
  இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். • Feb 05, 2024 18:48 IST
  அதிமுக சின்னத்தில் போட்டி: ஓபிஎஸ் அதிரடி


  நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். • Feb 05, 2024 17:58 IST
  மக்களவையில் பேசிய மோடி; எதிர்க்கட்சிகள் அமளி

  மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில், அவரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. • Feb 05, 2024 17:19 IST
  எம்ஜிஆர் மீது விமர்சனம்: பிப்.9 அதிமுக போராட்டம் அறிவிப்பு

  நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • Feb 05, 2024 16:59 IST
  வாக்குச் சீட்டுகளை திருத்தினாரா அதிகாரி? பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தியுள்ளார் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
  இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. • Feb 05, 2024 15:53 IST
  தாமாக முன்வந்து எடுத்த வழக்குகள் - ஐகோர்ட்க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

  முடித்து வைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து தனி நீதிபதி விசாரிப்பு தொடர்பான இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே விசாரிக்கலாம். அல்லது வேறு நீதிபதி முன்பு பட்டியலிடலாம்  என்றும் வழக்கை யார் விசாரிப்பது என்பதில் தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  • Feb 05, 2024 14:52 IST
  பெரும்பான்மையை நிரூபித்த சாம்பாய் சோரன்

  ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார் சாம்பாய் சோரன்.  • Feb 05, 2024 14:42 IST
  மை வி3 ஆட்ஸ் நிறுவனர் காவல் நிலையத்தில் ஆஜர்

  மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். 

  விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  ஜனவரி 19ம் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.  • Feb 05, 2024 14:14 IST
  பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்கா அமைக்க எதிர்ப்பு

  சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்கா அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குப்பை கழிவுகளை அகற்றி விட்டு பூங்கா அமைத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்கள். சதுப்பு நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளார்கள்  • Feb 05, 2024 14:13 IST
  மீண்டும் தூத்துக்குடியில் போட்டியா? - கனிமொழி பதில்

  "மீண்டும் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம். பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.  • Feb 05, 2024 13:42 IST
  ஓ.பி.எஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

  "நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது: என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

    • Feb 05, 2024 13:12 IST
  என் மண், என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு

  பல்லடத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற உள்ளது

  என் மண், என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு

  தென் மாவட்டங்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருவார் - அண்ணாமலை • Feb 05, 2024 13:10 IST
  ஸ்பெயினில் தமிழ் கலாச்சார நிகழ்ச்சியில் ஸ்டாலின் உரை

  ஸ்பெயினில் நடைபெற்ற தமிழ் கலாச்சார நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் உரை. முதல்முறை ஸ்பெயின் வந்துள்ளேன், ஆனால் பல முறை வந்துள்ளது போல் உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கிறேனா, அல்லது வெளிநாட்டில் இருக்கிறேனா என்ற சந்தேகம் உள்ளது.

  கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்-தமிழ் கலாச்சார நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு • Feb 05, 2024 13:07 IST
  மாநிலத்திற்கு நிதி வழங்குவதை தீர்மானிப்பது நான் அல்ல: நிர்மலா சீதாராமன்

  ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான். மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

  நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை - நிர்மலா சீதாராமன். அனைத்து மாநிலங்களுக்கும் நிதி குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர் - நிர்மலா சீதாராமன்

  நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதி குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை - நிர்மலா சீதாராமன்

  பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங். மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பதில் • Feb 05, 2024 12:45 IST
  பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து போட்டியிட தே.மு.தி.க முடிவு

  மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட தே.மு.தி.க முடிவு எனத் தகவல். வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  

  கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு வருகிறது தே.மு.தி.க  • Feb 05, 2024 12:26 IST
  கரூர் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை

  கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என, தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கரூர் நிர்வாகிகள் கோரிக்கை

  காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் கரூர் தொகுதியை வழங்க கூடாது என வலியுறுத்தல் 

  அண்ணா அறிவாலயம், சென்னை கரூர் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை • Feb 05, 2024 11:59 IST
  தோனி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு தடை

  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

  மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக தோனி வழக்கு • Feb 05, 2024 11:58 IST
  ஆலய திறப்பு விழாவிற்கு டிராக்டர் ஓட்டி வந்த ஈபிஎஸ்

  அரூரில், கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழா. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு. கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவிற்கு டிராக்டர் ஓட்டி வந்த ஈபிஎஸ் • Feb 05, 2024 11:57 IST
  பாஜக கூட்டணியில் பாமக?

  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை டெல்லியில் இன்று சந்திக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

  பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டும் என்பது குறித்து அன்புமணியிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்

  பாஜக கூட்டணியில் இடம்பெற்றால், கணிசமான தொகுதிகள் கிடைப்பதோடு, மாநிலங்களவை இடமும் கிடைக்கும் என்பதால் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு

  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் • Feb 05, 2024 11:43 IST
  திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

  திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பயணத்தை தொடங்கியது. முதற்கட்டமாக தூத்துக்குடி தொகுதியில் இருந்து பயணத்தை தொடங்கி உள்ளது திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 

  நாளை கன்னியாகுமரியிலும், பிப்.7ல் மதுரையிலும், பிப்.8ல் தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் 

  பிப்.9ல் சேலத்திலும், பிப்.10ல் கோவையிலும் பிப்.11ல் திருப்பூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் 

  தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் சந்திக்க ஏற்பாடு

  தூத்துக்குடி திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்  • Feb 05, 2024 10:37 IST
  மேட்ரிட்டில் காலை நேரத்தில் புகைப்படம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்

  ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் காலை நேரத்தில் புகைப்படம் எடுத்த முதல்வர் ஸ்டாலின் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் விடியல் கனவுகள்.. மேட்ரிட் நகரத்தில் சூரிய உதயம் என பதிவு.  • Feb 05, 2024 10:35 IST
  புதிய திட்டங்கள் - அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி

  குடிநீர் வழங்கல் துறை சார்பில் 11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகள் திறப்பு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டங்கள் - அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி • Feb 05, 2024 09:57 IST
  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்

  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்துக்கு அடிக்கல் .கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்"- அமைச்சர் சேகர் பாபு  • Feb 05, 2024 09:10 IST
  மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க செல்போன் செயலி

  மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க செல்போன் செயலி மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்காக செல்போன் செயலி - மின்வாரியம் தகவல் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலி நுகர்வோர் புகார் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும் செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவி பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும் நுகர்வோரின் புகார்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு செயலி மூலம் நேரடியாக சென்று சேரும் • Feb 05, 2024 09:02 IST
  மக்களவை இன்று பேசுகிறார் பிரதமர் மோடி

  மக்களவைக்கு இன்று அனைத்து பாஜக எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தல்.  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார் பிரதமர் மோடி • Feb 05, 2024 08:02 IST
  விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா

  விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா பிரேமலதா கையில் சிரித்த முகத்துடன் விஜயகாந்த் உருவம் இணையத்தில் பரவி வரும் வீடியோ - ரசிகர்கள் நெகிழ்ச்சி • Feb 05, 2024 08:00 IST
  முதலீட்டாளர்களுடன் முதல்வர் இன்றும் ஆலோசனை

  ஸ்பெயின் நாட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை ampo valves, ingeteam, gorlan உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்களுடன் சந்திப்பு தொழிலதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்ளுடன் சந்திப்பு - தமிழகத்தில் தொழில தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து • Feb 05, 2024 07:59 IST
  அதிமுக இன்று முதல் கருத்துக் கேட்பு

  அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று முதல் கருத்துக் கேட்பு. தமிழ்நாடு முழுவதும் வரும் 10ம் தேதி வரை பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு பரிசீலிக்க ஏற்பாடு.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment