Tamil News Today: வெள்ள நிவாரணம்: அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு இன்று டெல்லியில் சந்திப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha passes Bill to replace Delhi services ordinance

IE Tamil Update

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 600-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விஷவாயு கசிவு: 13 ஊழியர்கள் மயக்கம்

சென்னை ஓ.எம்.ஆர் பிரபல தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன  இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 12, 2024 21:42 IST

    ஆம்னி பேருந்துகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து முதலாவதாக பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் சிறுபிரச்னைகள், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும், அவை விரைவில் தீர்க்கப்படும், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை தெரிவித்தார்.



  • Jan 12, 2024 21:17 IST

    கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

    பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
    ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



  • Jan 12, 2024 20:21 IST

    பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

     
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13, 14-ம் தேதி சென்னை எழுப்பூரில் இருந்து காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் (06081) மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்; மறுமார்க்கமாக ஜனவரி 13, 14-ம் தேதிகளில் மதியம் 2.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் (06082) இரவு 11.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Jan 12, 2024 20:13 IST

    இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டம்

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாளை காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பளார் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர்.



  • Jan 12, 2024 19:59 IST

    ஆட்டோ வழங்கிய பாலா!

    முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இலவசமாக ஆட்டோவை KPY பாலா வழங்கினார்.



  • Jan 12, 2024 19:44 IST

    கமல் படத்தை இயக்கும் அன்பறிவு!


    நடிகர் கமல்ஹாசனின் 237வது படத்தை சண்டைப் பயிற்சியாளர்கள் 'அன்பறிவு' இயக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 12, 2024 19:17 IST

    பொங்கல் பண்டிகை: சென்னையில் அலைமோதிய கூட்டம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கூடியதால் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.



  • Jan 12, 2024 18:44 IST

    ஆபாச படங்கள் பதிவிறக்கம் குற்றமல்ல.. ஆனால், செக் வைத்த ஐகோர்ட்!

    ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும் 90ஸ் கிட்ஸ் மது, புகையிலைக்கு அடிமையானது போல், 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்க அடிமையாகி உள்ளனர். ஆபாச படங்களை பகிர்வது குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.



  • Jan 12, 2024 18:05 IST

    ஜன.15 சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்


    ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவனைப்படி இயக்கப்படும்.
    சென்னை - அரக்கோணம், சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி மார்கங்களில் ஞாயிறு அட்டவனைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Jan 12, 2024 17:35 IST

    புகையில்லா போகி; மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை

    புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    மேலும், சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jan 12, 2024 17:02 IST

    சமூகநீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிப்பு

    2023-ம் ஆண்டுக்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு, சமூக நீதி கண்கானிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன், டாக்டர் அம்பேத்கர் விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, 5லட்சம் பரிசுத்தொகையுடன், தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்பட உள்ளது.



  • Jan 12, 2024 16:46 IST

    ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர்

    சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.04க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது



  • Jan 12, 2024 15:57 IST

    பொங்கல் பண்டிகை விடுமுறை : மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு

    பொங்கல் பண்டிகை விடுமுறையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஞாயிறு அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு 



  • Jan 12, 2024 15:44 IST

    மத்திய அரசு மறுப்பு - அள்ளிக் கொடுத்த தமிழக அரசு 

    பிரேசிலில் நடக்கும் செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள தமிழ்நாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சத்தை அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் 



  • Jan 12, 2024 15:43 IST

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு 

     

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ஜல்லிக்கட்டின் போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ பிரச்னையும், இடையூறும் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 



  • Jan 12, 2024 14:54 IST

    விரைவில் விலகும் பருவமழை 

    வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வரும் 15ம் தேதி விலக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Jan 12, 2024 14:38 IST

    பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

    சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 



  • Jan 12, 2024 14:18 IST

    பறிமுதல் 

     

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வின்னமங்கலம் வனப்பகுதியில் போலி ஆவணங்கள் வைத்து அனுமதியின்றி மண் அள்ளி வந்த 5 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 



  • Jan 12, 2024 14:11 IST

    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு இன்று ஆய்வு செய்தனர். 

     



  • Jan 12, 2024 14:00 IST

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டுப்பயிற்சி

    2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டுப்பயிற்சி நடைபெற்றது. கூட்டு பயிற்சியில் பங்கேற்க  ஜப்பான் கப்பல் 'யாஷிமா' சென்னை துறைமுகம் வந்தது. 

    இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் பங்கேற்றது. 

     



  • Jan 12, 2024 13:58 IST

    நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு 

    நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி முதல் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 



  • Jan 12, 2024 13:22 IST

    மழைக்கு வாய்ப்பு

    தென்தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    வடதமிழகம்புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 12, 2024 13:01 IST

    கே.பி.முனுசாமி விமர்சனம்

    பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம்

    குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    நாட்டின் பிரதமராக இருப்பவர் சிறிய வட்டத்திற்குள் இருக்கிறார். பிரதமர் மோடியை காமராஜர் உடன் ஒப்பீடு செய்து அண்ணாமலை பேசியதற்கும் கே.பி.முனுசாமி கண்டனம்



  • Jan 12, 2024 12:57 IST

    சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற கோரி வழக்கு

    ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

    பயணிகளை அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது

    நாட்களில் முற்றிலும் சுங்கச்சாவடி அகற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி



  • Jan 12, 2024 12:57 IST

    அங்கிட் திவாரிக்கு ED விசாரணை மறுப்பு

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரிய மனு

     தள்ளுபடிதிண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு



  • Jan 12, 2024 12:31 IST

    மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை

    Non service முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்வு

    2 ஆண்டுகள் என்பதை 1  ஆண்டாக குறைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை

     



  • Jan 12, 2024 11:54 IST

    நெல்லை மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி;

    வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு



  • Jan 12, 2024 11:48 IST

    நெல்லை மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி;

    வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு



  • Jan 12, 2024 11:47 IST

    தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கு என்ன குறை?

    வெள்ள நிவாரணம்மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து அயலக தமிழர் தின விழாவை கொண்டாடுவதில் பெருமை

    வெளிநாட்டில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கப்படுகிறது- அயலகத் தமிழர் தின கொண்டாட்ட விழாவில் மு.க.ஸ்டாலின் உரை



  • Jan 12, 2024 11:29 IST

    முன்பதிவு 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பயணிக்க லட்சம் பேர் முன்பதிவு 



  • Jan 12, 2024 11:29 IST

    பள்ளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது

    சென்னை சாந்தோம் சாலையில் தொல்காப்பியப் பூங்கா அருகே ஏற்பட்ட பள்ளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது



  • Jan 12, 2024 11:28 IST

    விஜயகாந்தின் X தள பக்கத்தை தனது பெயருக்கு மாற்றினார் பிரேமலதா விஜயகாந்த்



  • Jan 12, 2024 10:48 IST

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக 10,000க்கும் மேற்பட்ட ஆடுகள்

    கிருஷ்ணகிரி: புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக 10,000க்கும் மேற்பட்ட ஆடுகள் குவிப்பு; ரூ.8 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்ப்பு



  • Jan 12, 2024 10:39 IST

    சற்று நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம்

    சற்று நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் .நெல்லை மேயருக்கு எதிராக சற்று நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம்.



  • Jan 12, 2024 10:34 IST

    சென்னை சந்தோம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

    சென்னை சந்தோம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக, சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு



  • Jan 12, 2024 10:33 IST

    இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை - பிரதமர் மோடி

    அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை .இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை கருவியாக ஆக்கி உள்ளான். ராமர் கோயில் திறக்கப்பட இன்றிலிருந்து சரியாக 11 நாட்கள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகார்.



  • Jan 12, 2024 09:49 IST

    தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 12, 2024 09:29 IST

    மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியது

    தொடர் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உதகை மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியது; 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி மலை ரயில் புறப்பட்டது



  • Jan 12, 2024 08:58 IST

    ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

    ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு ஆப்கனில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது 



  • Jan 12, 2024 08:15 IST

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 3வது முறையாக ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.



  • Jan 12, 2024 08:04 IST

    இன்று முதல் 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களுக்காக, இன்று முதல் 11 ஆயிரம் பொங்கல் பேருந்துகள் இயக்கம் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்பட 6 இடங்களில் இருந்து புறப்படும் என அறிவிப்பு



  • Jan 12, 2024 08:04 IST

    அடல் சேது' கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    அடல் சேது' பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர் இந்தியாவின் மிக நீள 'அடல் சேது' கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி .ரூ.17,840 கோடி செலவில், சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப்பாலமாக கட்டப்பட்டுள்ளது.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: