Advertisment

Tamil news Today: எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

amil Nadu News, Tamil News, Petrol price Today - 12 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Today: எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

Advertisment

கோவையில் எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர் சந்திரசேகர் வீட்டிலும், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் கொண்டாடிய வெற்றி

நடப்பு ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இலங்கை அணி. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி. அதனை கொழும்பு நகர வீதிகளில் கொண்டாடி தீர்த்துள்ளனர் இலங்கை நாட்டு மக்கள்.அந்த நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நாட்டு மக்கள் சொல்லி மாளாத துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் வலிகளை மறக்க செய்யும் மருந்தாக கிரிக்கெட் விளையாட்டு அமைந்துள்ளது. இப்போது அந்த அணி ஆசிய கோப்பையையும் வென்றுள்ளது.

அதிமுக அலுவலக சாவி: மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக தலைமைக் கழக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மேல் முறையீடு செய்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil



  • 22:10 (IST) 12 Sep 2022
    கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்



  • 21:30 (IST) 12 Sep 2022
    லம்பி வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி - பிரதமர் மோடி

    கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி வைரஸை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



  • 20:32 (IST) 12 Sep 2022
    அனைத்துத்துறை செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

    அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • 20:11 (IST) 12 Sep 2022
    அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் – இ.பி.எஸ்

    அ.தி.மு.க.,வில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்



  • 20:00 (IST) 12 Sep 2022
    ராகுல் யாத்திரை: மார்க்சிஸ்ட் கேள்வி

    “ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளத்தில் 18 நாள்களும், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் 2 நாள்களும் நடைபெறுகிறது.

    இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் வித்தியாசமான முயற்சியாக உள்ளது. இது என்ன வித்தியாசமான யுத்தம்” என சிபிஎம் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டு உள்ளது.



  • 19:57 (IST) 12 Sep 2022
    தமிழ்நாட்டில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



  • 19:34 (IST) 12 Sep 2022
    உதய நிதிக்கு ஊட்டி விட்ட வடிவேல்!

    வைகை புயல் வடிவேலு தனது பிறந்தநாளை மாமன்னன் படக்குழுவினரோடு கொண்டாடினார். அப்போது உதயநிதிக்கு அவர் கேக் ஊட்டிவிட்டார்.



  • 19:17 (IST) 12 Sep 2022
    ஆட்டோவை முட்டித் தூக்கிய காட்டெருமை

    கேரளத்தில் காட்டெருமை ஒன்று ஆட்டோவை முட்டித் தூக்கி வீசும் காணொலி ஒன்று வைரலாகிவருகிறது.



  • 19:09 (IST) 12 Sep 2022
    குடிசைகளை மறைப்பது அல்ல திராவிட மாடல்: மு.க. ஸ்டாலின்

    'நமது நாட்டில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வந்தால் குடிசைகளை மறைக்கும் நிகழ்வுகள் நடந்தன. ஆனால் திராவிட மாடல் அப்படியல்ல' என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 17:50 (IST) 12 Sep 2022
    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது:

    அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்) கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்) விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், சஹால், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர், ஹ்ர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி, பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் பெஞ்ச் வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.



  • 17:46 (IST) 12 Sep 2022
    மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு

    எடப்பாடி பழனிசாமி: “மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக அரசை எதிர்த்து வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வறண்ட ஏரிகளை நிரப்புவதற்காக போடப்பட்ட திட்டத்தை திமுக அரசு முழுவதுமாக முடிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த திட்டத்தில் அரசு அக்கறை காட்டாததால், பல்வேறு ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:43 (IST) 12 Sep 2022
    ஞானவாபி மசூதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது வாரணாசி நீதிமன்றம்

    ஞானவாபி மசூதியின் உரிமையையும் அதைச் சுற்றியுள்ள நிலத்தின் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கிய உரிமையியல் வழக்குகளுக்கு எதிரான அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் வழக்கை வாரணாசி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.



  • 17:42 (IST) 12 Sep 2022
    விஜய் படத்தில் கேஜிஎஃப் வில்லன்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கேஜிஎஃப் வில்லன் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபும் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.



  • 17:38 (IST) 12 Sep 2022
    ஞானவாபி மசூதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது வாரணாசி நீதிமன்றம்

    ஞானவாபி மசூதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வாரணாசி நீதிமன்றம் அஞ்சுமன் இந்தேஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், அவற்றை சிவில் வழக்குகளாகத் தொடரலாம் என்று கூறியுள்ளது.



  • 17:32 (IST) 12 Sep 2022
    சென்னை உயர் நீதிமன்றத்தின் (பொறுப்பு) தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்கிறார்..!

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றார். தனது பிரிவுபசார விழாவில், “தமிழ் மக்கள் காட்டிய அன்பு, பாசம், விருந்தோம்பல் ஆகியவற்றை என்றென்றும் மறவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, முனீஷ்வர்நாத் பண்டாரி அந்நிய செலாவணி மோசடி தடுப்பு சட்ட தீர்பாயத்தின் தலைவராக சட்டப் பணியை தொடர்வார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம். துரைசாமி நாளை (செப்.13) முதல் பொறுப்பேற்கிறார்.



  • 17:29 (IST) 12 Sep 2022
    ஞானவாபி மசூதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது வாரணாசி நீதிமன்றம்

    ஞானவாபி மசூதியின் உரிமையையும் அதைச் சுற்றியுள்ள நிலத்தின் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கிய உரிமையியல் வழக்குகளுக்கு எதிரான அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் வழக்கை வாரணாசி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.



  • 17:21 (IST) 12 Sep 2022
    விஜய் படத்தில் கேஜிஎஃப் வில்லன்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கேஜிஎஃப் வில்லன் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபும் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.



  • 17:13 (IST) 12 Sep 2022
    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு!

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி பிரிவு உபச்சார நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பேசிய தலைமை நீதிபதி பண்டாரி, “தமிழ்நாடு மக்கள் காட்டிய அன்பு, பாசம் விருந்தோம்பலை என்றைக்கும் மறந்துவிட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 16:29 (IST) 12 Sep 2022
    ஞானவாபி மசூதி விவகாரம் - விசாரணைக்கு ஏற்பு

    ஞானவாபி மசூதி விவகாரத்தில் உரிமையியல் மனுக்களை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 16:28 (IST) 12 Sep 2022
    தேசிய கல்வி கொள்கையை அரசியலாக்க வேண்டாம் - தமிழிசை செளந்தரராஜன்

    தேசிய கல்வி கொள்கையை அரசியலாக்க வேண்டாம் அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.



  • 16:27 (IST) 12 Sep 2022
    மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

    மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ள எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.



  • 15:27 (IST) 12 Sep 2022
    தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு"- ஓபிஎஸ் தரப்பு வாதம்

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்,"அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு"என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.

    மேலும் அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொட்ர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என- நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



  • 15:25 (IST) 12 Sep 2022
    தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு"- ஓபிஎஸ் தரப்பு வாதம்

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்,"அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு"என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.

    மேலும் அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொட்ர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என- நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



  • 14:58 (IST) 12 Sep 2022
    செப். 15 முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படும்

    11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அசல் சான்றிதழ்களை, பள்ளி வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்கள் வாயிலாக, அசல் சான்றிதழ்களை பெறலாம்.



  • 14:55 (IST) 12 Sep 2022
    கேரளா புதிய சபாநாயகர் தேர்வு

    கேரள சட்டப்பேரவையின் 24வது புதிய சபாநாயகராக தலைச்சேரி எம்.எல்.ஏ. சம்ஷீர் தேர்வானார்.



  • 14:38 (IST) 12 Sep 2022
    கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி, கோவையில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:05 (IST) 12 Sep 2022
    ராஜேந்திர பாலாஜி தமிழகம் முழுவதும் பயணிக்க அனுமதி

    பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்கி, அவர் தமிழ்நாட்டில் எந்த இடங்களுக்கும் செல்ல்லாம் என அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:36 (IST) 12 Sep 2022
    உச்சநீதிமன்றம் உத்தரவு

    தமிழகத்தில் பெரியார் சிலைகளின் கீழ் 'கடவுள் இல்லை' என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனுவில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:19 (IST) 12 Sep 2022
    அதிமுக உட்கட்சி தேர்தல் வழக்கு

    அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:16 (IST) 12 Sep 2022
    கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:02 (IST) 12 Sep 2022
    ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு

    பண மோசடி வழக்கில் ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு

    காவல் நிலைய எல்லையைத் தாண்டி செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் - ராஜேந்திர பாலாஜி தரப்பு

    நிபந்தனையை தளர்த்தி விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    காவல்துறையிடம் தெரிவித்து தமிழ்நாட்டுக்குள் பயணம் செய்யலாம் - உச்சநீதிமன்றம்

    ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்



  • 12:30 (IST) 12 Sep 2022
    20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல்

    புதுச்சேரி, ஆரோவில்லில் இருந்து 20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல்

    பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்



  • 12:30 (IST) 12 Sep 2022
    ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் பட்டியலில் இந்தியா முதலிடம்

    ஆபாச படங்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இடையில் உள்ளதை காவல் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தைக் ஆய்வு செய்யக்கோரிய வழக்கு

    உலகிலேயே ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது - மனுதாரர்

    உலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான் என கூறி விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு



  • 11:57 (IST) 12 Sep 2022
    டானியாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் - அமைச்சர் நாசர்

    முகச்சிதைவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் கல்விச் செலவு முழுவதும் அரசே ஏற்கும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.



  • 11:56 (IST) 12 Sep 2022
    'உலக பால்வள உச்சிமாநாடு 2022' : மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    உத்தர பிரதேசம், நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் 'உலக பால்வள உச்சிமாநாடு 2022' தொடக்கம்

    இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • 11:47 (IST) 12 Sep 2022
    சிறுமி டானியா டிஸ்சார்ஜ்

    காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் முகச்சிதைவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    டானியாவின் முகத்தையும் உயிரையும் காப்பாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்



  • 11:46 (IST) 12 Sep 2022
    விருத்தாச்சலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

    கடலூர்: விருத்தாச்சலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - போலீசார் விசாரணை



  • 11:45 (IST) 12 Sep 2022
    தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

    கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் இளவியண்(10) உயிரிழப்பு. தாய் ரம்யா மருத்துவமனையில் அனுமதி



  • 11:34 (IST) 12 Sep 2022
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9வது நாளாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

    கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9வது நாளாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

    கடந்த 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    கோவிலில் உள்ள ஆபரணங்கள், காணிக்கையாக வந்த நகைகள் குறித்து ஆய்வு



  • 10:58 (IST) 12 Sep 2022
    விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது- ஸ்டாலின்

    மூன்று மாதத்தில் மூன்றாவது முறையாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்துள்ளேன். விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது ; செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது. சென்னை, பெரியமேட்டில் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு



  • 10:48 (IST) 12 Sep 2022
    கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு



  • 10:47 (IST) 12 Sep 2022
    கொரோனா நிலவரம் : இந்தியா

    இந்தியாவில் மேலும் 5,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த 24 மணி நேரத்தில் 5,975 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர் - மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 47,176 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 10:46 (IST) 12 Sep 2022
    விபத்து: 7 பேர் உயிரிழப்பு

    சத்தீஸ்கர் :கோர்பா மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்



  • 10:45 (IST) 12 Sep 2022
    ஜி.கே.வாசன் கோரிக்கை

    மக்கள் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி



  • 10:08 (IST) 12 Sep 2022
    முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நாளை பொறுப்பேற்ப.



  • 10:05 (IST) 12 Sep 2022
    34 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள்; 2 பேர் கைது

    புதுக்கோட்டை நகர் பகுதியில் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது - 1,300 கிலோ குட்கா பறிமுதல்



  • 10:04 (IST) 12 Sep 2022
    பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு

    பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம். ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே நிர்வாகம்



  • 10:03 (IST) 12 Sep 2022
    100 சவரன் நகை கொள்ளை

    சென்னை : தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை



  • 10:03 (IST) 12 Sep 2022
    பொதுமக்கள் போராட்டம் கூடாரங்களை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

    சென்னை, ரிப்பன் மாளிகை அருகே கே.பி.பார்க்கில் வீடு வழங்க வலியுறுத்தி சாலையில் கூடாரம் போட்டு பொதுமக்கள் போராட்டம் கூடாரங்களை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். போராட்டத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment