தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
எலான் மஸ்க் மீது வழக்கு
ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு வரும் 15 முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பாமக நிறுவனர் ராமதாஸூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை, தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது
ஃப்ளவர் ரோட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 வயது போராட்டக்காரர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அதிமுகவில் அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலர்ந்திட கடுமையாக உழைப்பேன். எப்போதும் அ.தி.மு.க மக்களுக்காகவே இயங்கும் என ஜெயலலிதா கூறியது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும் வாழ்நாள் முழுவதும் உழைப்பேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
இலங்கையின் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா புதன்கிழமையன்று, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து, ஆயுதப் படைகளும் போலீஸாரும் அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதாகவும், அமைதியைக் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.
புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் வரையில் முன்னோக்கி செல்லும் வழியை தீர்மானித்து இன்று மாலைக்குள் எமக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்குமாறு அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என சில்வா தெரிவித்தார். (ராய்ட்டர்ஸ்)
போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஷாரூக் கானின் மகன் ஆர்யன்கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆர்யன் கான் குற்றவாளி அல்ல என போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்த நிலையில், மும்பை நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது
இன்று அதிகாலை மாலதீவுக்குச் சென்ற இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, இன்று மாலை சிங்கப்பூர் செல்வார் என மாலதீவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஜனநாயகத்திற்கு பாசிச அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தனது அலுவலகத்தை முற்றுகையிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயல்புநிலை திரும்பியதாகவும், அரச சொத்துக்கள் அழிக்கப்படுவதை நிறுத்தவும் சபதம் செய்ததாகவும் கூறியுள்ளர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதன் பின்னர் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது முதல் தொலைக்காட்சி உரையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையானதைச் செய்யுமாறு இராணுவத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கட்டளையிட்டதாகக் கூறினார்.
வரும் ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்றும் மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளார்
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற வாக்கி டாக்கி ஊழல் வழக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
திகார் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறையில் பாதுகாப்பு இல்லை என்றும், கூடுதல் வசதிகளுக்காக பணம் கேட்பதாகவும் சுகேஷ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். இதில் திகார் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதா? அல்லது மிரட்டி பணம் பறிக்க பட்டதா? – உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர பிரார்த்திக்கிறேன் என ஒபிஎஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதன் துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார்
இலங்கையின் அரசு தொலைக்காட்சியான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. எட்டப்பர்களை வைத்து அதிமுகவை, திமுக வீழ்த்த நினைத்தால் நடக்காது. அதிமுக தொண்டர்களால் உழைத்து உருவாக்கப்பட்ட கட்சி” என்று தெரிவித்துள்ளார்.
ஓப்போ மொபைல் நிறுனத்திற்கு சொந்தமான இடங்களில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை நடத்தி வருகிறது. ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசி உரையாடினார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரமும் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
”திமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் திமுகவை சுரண்டிப் பார்த்திருக்கிறார். அதிமுக எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்களை நடத்திக்கொண்டு, திமுக மீது பாய்வது திசைத் திருப்புகிற வேலை” – ஆர்.எஸ்.பாரதி
இலங்கையின் தற்காலிக அதிபராக, ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டார். .
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானங்கள் தொடர்பான ஆவணங்களை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஜூலை 15ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம் முடிவு
வரும் 17ஆம் தேதி கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடபெற உள்ளது . இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மதுரையைச் சேர்ந்த லாஜி வ்ரோ என்பவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோடிய நிலையில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி. பொதுமக்களுடன் தொடர்புள்ள ஆற்றல்மிகு தலைவர் நீங்கள்: ஆரோக்கியமாக விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி
949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிவன் கோயில் மாயம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் மனு அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்தன கூறியுள்ளார்.
தகுதி தேர்வுக்கு பிறகு, வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை, டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் சென்றதாக தகவல் வெளியான நிலையில், கோத்தபய நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தரப்பில் தனித்தனியாக முறையீடு செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வருகிறது.
கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது என ஆடியோ லீக் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக வெளியான ஆடியோவில், என்னுடன் பேசியது பொன்னையன் தான். மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜூலை 9ம் தேதி இரவு பொன்னையன் என்னுடன் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என அதிமுக நிர்வாகி கோலப்பன் கூறியுள்ளார்.
அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக வெளியான ஆடியோவில், என்னுடன் பேசியது பொன்னையன் தான். மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜூலை 9ம் தேதி இரவு பொன்னையன் என்னுடன் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என அதிமுக நிர்வாகி கோலப்பன் கூறியுள்ளார்.
மாங்கனி இரைத்தல் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் நிலவுகிறது. சூறைக்காற்றும் வீசுவதால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.